எட்டடுக்கு (அட்டாங்க) யோகப்பாதை

பகவத் கீதையும் பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரங்களும்

Krishna With Arjuna in chariot appearing from spiritual eye

எல்லா உண்மையான சமயங்களுக்கும் பின்னணியில் உள்ள காலத்தை வென்ற அறிவியலான யோகம் பரம்பொருளுடனான ஆன்மாவின் ஐக்கியத்தை உணர்ந்தறியும் முறையான மற்றும் திட்டவட்டமான படிநிலைகளைக் கொண்டது.

காட் டாக்ஸ் வித் அர்ஜுனா: தி பகவத் கீதா—ராயல் சயின்ஸ் ஆஃப் காட்-ரியலைசேஷன் என்ற பரமஹம்ஸ யோகானந்தரின் திட்டவட்டமான இரண்டு பகுதிகள் கொண்ட மொழிபெயர்ப்பு மற்றும் விளக்கவுரையில் விளக்கப்பட்டது போல, தெய்வீக ஆசான் கிருஷ்ணனுக்கும் அவனுடைய சீடர் அர்ஜுனனுக்கும் இடையே நடந்த புனித உரையாடலான பகவத் கீதை இந்தியாவின் மிகவும் பிரியமான யோக மறைநூல் ஆகும்.

யோகப் பாதையின் சாரம் முறைப்படுத்தப்பட்ட வடிவில் பண்டைக்கால பதஞ்சலி முனிவரால் யோக சூத்திரங்கள் என்ற தனது சிறிய ஆனால் தேர்ச்சிமிகு படைப்பில் அமைக்கப்பட்டது. பரமஹம்ஸ யோகானந்தர் எழுதியிருக்கிறார்:

“பதஞ்சலி முனிவரின் காலத்தைப் பல அறிஞர்கள் கி. மு. இரண்டாம் நூற்றாண்டு என்று குறிப்பிட்ட போதிலும், அது அறியப்படாத ஒன்றுதான். அவருடைய புகழ்பெற்ற யோக சூத்திரங்கள் அளவிலாமல் பரந்து விரிந்த மற்றும் பெரும் புதிரான இறை-ஐக்கிய அறிவியலின் சுருக்கப்பட்ட சாராம்சத்தை சுருக்கமான நூற்பாக்களில் வழங்கியிருக்கிறார்—வேறுபடுத்தப்படாத பரம்பொருளுடனான ஐக்கியத்தின் வழிமுறையை, பல தலமுறைசார்ந்த அறிஞர்களும் யோக சூத்திரங்களை யோகத்தின் மீதான மிகவும் முன்னோடியான பழங்கால நூல் என்று ஏற்றுக் கொண்டிருக்கும் படியாக அத்துணை ஓர் எளிய, தெளிவான மற்றும் சுருக்கமான வகையில் அமைத்தவாறு வழங்கியிருக்கிறார்.”

பதஞ்சலி முனிவரின் யோக அமைப்பு எட்டடுக்குப் பாதை என்று அறியப்படுகிறது; அது இறை-அனுபூதி எனும் இறுதி இலக்கிற்கு வழிநடத்திச் செல்கிறது.

பதஞ்சலி முனிவரின் எட்டடுக்கு யோகப் பாதை

இதைப் பகிர

Share on facebook
Share on twitter
Share on whatsapp