ஒரு யோகியின் சுயசரிதம் ஒலிநூல் பதிப்பு (எம்பி3)

ஒலிவளம் குறையாத ஒலிநூல் பதிப்பு (எம்பி3)

ஓர் ஆன்மீகப் பொக்கிஷமாக உலகம் முழுவதும் போற்றப்பட்டு, மிகவும் சிறப்பாக விற்பனையாகும் இந்த இலக்கியம், இலட்சக்கணக்கானோரை, ஒரு புதிய மற்றும் மிக ஆழ்ந்து முழுமையாக்கும் வாழ்க்கை முறையை நோக்கி, அவர்களையே மாற்றுகின்ற பயணத்தை மேற்கொள்ள எழுச்சியூட்டியுள்ளது. பரமஹம்ஸ யோகானந்தரது வியக்கத்தக்க வாழ்க்கை வரலாற்றிலுள்ள அனைத்து ஞானமும் நகைச்சுவையும் அகவெழுச்சியும் பேசும் வார்த்தையின் அருகாமையில் கட்டவிழ்க்கப்படுகின்றன.

இந்நூலுக்குப் புதியவர்களும், இதை ஒரு நீண்டகால பொக்கிஷத் தோழனாக கொண்டுள்ளவர்களும் புகழ் பெற்ற பின்னணிக்குரல் கலைஞர் முரளிகுமாரின் இந்த உணர்ச்சிமிக்க, வசீகரிக்கும் வாசிப்பை வரவேற்பார்கள். அவரது நுட்பமான நாடகபாணியில் அமைந்துள்ள வாசிப்பானது, யோகானந்தரது பல சுவையான நிகழ்ச்சிகளின் அழகைப் படம் பிடித்து மக்கள், அனுபவங்கள், நிகழ்ச்சிகள், வாழ்க்கையின் இறுதியான புதிர்களைக் குறித்த ஆசிரியரின் அறிவொளியூட்டும் தேடல்கள் ஆகியவற்றைப் பற்றிய அவரது அலங்காரமான சித்திரத்திரைக்கு ஒளிமிக்க உயிர்த்துடிப்பைக் கொடுக்கிறது.

ஒரு யோகியின் சுயசரிதம் ஒலிநூல் பதிப்பு (எம்பி3)

ஓடும் கால அளவு: 23 மணி நேரம் ( தோராயமாக)

திரு முரளிகுமாரைப் பற்றி

முரளிகுமார்

சிறந்த திரைப்படப் பின்னணிக்குரல் கலைஞர் என்ற பட்டத்தைத் தமிழக அரசிடமிருந்து பெற்ற திரு முரளிகுமார் பல தமிழ்ப்பட நடிகர்களுக்கும், மொழிமாற்றம் செய்யப்பட்ட ஆங்கிலப்படங்களில் நடிகர்களுக்கும் புகழ்பெற்ற கார்ட்டூன் படப் பாத்திரங்களுக்கும் பின்னணிக்குரல் கொடுப்பது மட்டுமல்லாது பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தும் வருகிறார். இவருடைய குரல்வளம் தனித்தன்மைவாய்ந்தது என்றால் மிகையாகாது.

Share this on

Share on facebook
Share on twitter
Share on whatsapp