எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாசிரியர்கள்

"நான் பரமஹம்ஸ யோகானந்தரிடம் பல வருடங்களுக்கு முன்பு, ஒரு சாதகராக அல்ல, ஆனால் ஒத்துணர்வு கொண்ட, அதேநேரம் பகுத்தாயும் மற்றும் விமர்சிக்கும் அணுகுமுறை கொண்ட ஒரு எழுத்தாளராக வந்தேன். அவரிடம் ஒரு அரிய இணைவுப் பொருத்தத்தை நான் கண்டேன். அவரது ஆழ்ந்த நம்பிக்கை சார்ந்த பண்டைய கொள்கைகளில் அவர் உறுதியாக இருந்தபோதிலும், தாராளமான நெகிழ்வுத்திறன் என்ற கொடையை அவர் பெற்றிருந்தார், அதனால் அவர் இந்து மற்றும் இந்தியராக இருந்து கொண்டே கிறிஸ்தவராகவும் அமெரிக்கராகவும் ஆனார். அவருடைய கூரிய அறிவாற்றல் மற்றும் மிகுந்த மன எழுச்சியின் காரணத்தால் உலகில் சமயத்தை நாடுபவர்களிடையே நல்லிணக்கத்தையும் உண்மையையும் ஊக்குவிக்க மிகுந்த பொருத்தமானவராக இருந்தார். அவர் திரளான மக்களுக்கு அமைதியையும் ஆனந்தத்தையும் கொண்டுவந்தார்."

— டாக்டர் வென்டெல் தாமஸ், ஆசிரியர் மற்றும் முன்னாள் பேராசிரியர், நியூயார்க் நகர கல்லூரி

"மனித சகோதரத்துவத்தின் சார்பாகவும், உலகின் பெரிய சமயங்களுக்கிடையில், கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே, நெருக்கமான புரிதலின் சார்பாகவும் குருதேவர் யோகானந்தரின் பணியை அறிந்தவர்கள், மற்றும் அவரது எழுத்துக்கள் மூலம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அவருடன் தொடர்பு கொண்டவர்கள், அவர் ஒரு தனித்துவமான ஆன்மீக சக்தி உள்ளவர் என்று அறிந்திருந்தார்கள்....

"மகாத்மா காந்தி ஒரு முறை யோகானந்தரைப் பற்றி என்னிடம் மிகவும் பாராட்டிப் பேசியது எனக்கு நினைவிருக்கிறது. யோகானந்தர் போன்ற ஆன்மீக மனிதர்கள்தான் அனைத்து அரசியல்வாதிகளின் ஒட்டு மொத்த பங்கை விட, இந்தியா மற்றும் மேற்கு நாடுகளுக்கு இடையே ஓர் ஆழமான புரிதலுக்கான அதிக உண்மையான நம்பிக்கைச் செய்தியைக் கொண்டு வந்தனர். " என்று கூறினார்.

— டாக்டர் கமில் ஹானிக், இலக்கிய பதிப்பாசிரியர், கலிபோர்னியா ஜியூயிஷ் வாய்ஸ்

"எதிர்காலம் முழுவதற்கும், இப்போது நம்மிடையே மனித உருவில் இல்லாத பரமஹம்ஸ யோகானந்தர், புதிய உலகத்திற்கான உயர் கலாச்சாரத்தின் மிகச்சிறந்த இந்தியத் தூதர்களில் ஒருவராகக் கருதப்படுவார். அமெரிக்காவில் மட்டுமல்லாமல் அனைத்துக் கண்டங்களிலும் உள்ள ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்பின் எண்ணற்ற மையங்கள், இப்பூவுலகில் அவரது பணியின் குறிப்பிடத்தக்க வெற்றிக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற ஆதாரமாக உள்ளன."

— டாக்டர் டபிள்யூ ஒய். இவான்ஸ்-வென்ட்ஸ், எம்.ஏ., டி. லிட்., டி.எஸ்.சி., ஜீசஸ் கல்லூரி, ஆக்ஸ்போர்டு

"பரமஹம்ஸ யோகானந்தர் இந்த தலைமுறை கண்ட ஞானமும் மனிதாபிமானமும் மிக்க விழுமிய நபர்களில் ஒருவர்."

— டாக்டர். பிரான்சிஸ் ரோல்ட்-வீலர், மெய்யியல் அறிஞர்எல்'ஆஸ்ட்ரோசோஃபி, நைஸ், பிரான்ஸ் -இன் ஆசிரியர்

"அவர் மனவெழுச்சியூட்டப்பட்டார்.... மகத்தானவர்களில் ஒருவர். அவர் எல்லா விதத்திலும் ஒரு சிறப்பானவர். அவர் கூறிய அனைத்தும் மக்களுக்கு உதவியாக இருந்தது. அவர், ஒரு கலப்படமில்லா கலப்படமற்ற நம்பிக்கையை, ஒரு உலகளாவிய வகை நம்பிக்கையை, நோக்கி மக்களுக்கு வழி காட்டினார்....

"ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் [எஸ்ஆர் எஃப்] என்ற பெயரே அவரது பணியை நன்றாக விளக்கக்கூடியதாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்—இது தம்மையே, தம் சொந்த திறனை, தானே உணர்ந்தறியும் மக்களின் கூட்டுறவு... பசிபிக் பாலிசேட்ஸிலுள்ள ஏரி கோவிலோ, அல்லது மவுண்ட் வாஷிங்டனோ [எஸ்ஆர்எஃப் தலைமையகம்] அல்லது வேறு இடங்களிலோ, எஸ்ஆர்எஃப் மையம் எங்கிருந்தாலும் சரி, நான் அவ்வழியாக சென்றபோது, அனைத்திலும் என்னைப் பெரிதும் கவர்ந்த அம்சம் அமைதியாகும். அவர்கள் அமைதி பற்றி பேசுவது மற்றும் வெளிப்படுத்துவது மட்டுமல்ல, உண்மையில் அவர்கள் அமைதியில் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் மெய்யாகவே ஒரு அமைதியான வாழ்க்கை வாழ்ந்தனர்.... ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப், அதன் நிறுவனர் யோகானந்தரின் ஒரு பிரதிபலிப்பாகும்.

— - டான் திராப், முன்னாள் சமய பதிப்பாசிரியர், லாஸ் ஏஞ்சலீஸ் டைம்ஸ்

"முன்னோடியாக இருப்பது பற்றி நான் அனைத்தும் அறிவேன், நானே ஒரு முன்னோடியாக இருந்தேன். வாக்குரிமைக்காகப் போராட வேண்டிய பெண்களாக இருந்த நாங்கள் பாரபட்சத்தையும் நிலையான கருத்துக்களையும் எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தோம்…. அமெரிக்காவின் பொருளியல் அடித்தளத்தை அமைத்தவர்களைப் போலவே நாங்களும் முன்னோடிகளாக இருந்தோம்.பல ஆண்டுகளாக கிழக்கத்திய ரிஷிகளின் தத்துவ மாணவியாக இருந்த நான், சுவாமி யோகானந்தரின் காலடியில் எனது சிறிய அஞ்சலிகளை செலுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்....

"அவர் ஒரு அற்புதமான உலக ஆசான், இந்த நூற்றாண்டு அவருடைய போதனைகளை ஏற்பதற்கான பக்குவத்துடனுள்ளது. அவர் இந்த நாட்டின் செயல்திறனுக்கும் கிழக்கின் ஆன்மீகத்திற்கும் இடையே ஒரு தொடர்பு அலுவலராக எனக்குத் தோன்றுகிறார். இரண்டில் ஒவ்வொன்றுக்கும் மற்றொன்று தேவை, ஒவ்வொன்றும் இரண்டின் சங்கமத்தைப் பெற்றிருக்க வேண்டும்....சுவாமி யோகானந்தர் போன்ற ஒரு வழி நடத்துபவர் மிகவும் தேவை.... அவருடைய தத்துவம், சிந்தனையாளரை, பொருள்முதல்வாதத்தால் திருப்தியடையாதவர்களை,சத்திய ஒளிக்கு முன்னால் தப்பி ஓடும் நிழல்களைப் போன்ற நிலையற்றவற்றால், உண்மையற்றவற்றால் சோர்வடைந்தவர்களை ஈர்க்கிறது."

— ஹெஸ்டர் எம். பூல், பெண் வாக்குரிமை இயக்கத்தில் எழுத்தாளர் மற்றும் முன்னோடி

"அவர் நிறுவிய கூட்டுறவுச் சங்கம் இரண்டு விஷயங்களை இலக்காகக் கொண்டது: இறைவனின் ஒரு தெய்வீகத் தீப்பொறியாக சுயத்தை அறிவதன் வாயிலாக இறைவனுடன் தொடர்பு கொள்ளுதல், மற்றும் அனைத்து மனிதகுலத்துடனான கூட்டுறவு. உண்மையில், யோகானந்தர் ஆன்மீகத்திற்கும் பொருள்சார் தளத்திற்கும் இடையே துரதிர்ஷ்டவசமாகத் தேவைப்படும் ஒரு மறுசீரமைப்பை, விஞ்ஞானத்தையும் சமயத்தையும், அவற்றின் அடிப்படை ஒற்றுமையை உணர்ந்தறிவதன் வாயிலாக, இசைவிப்பதன் மூலம் முயற்சி செய்துகொண்டிருந்தார். பரமஹம்ஸ யோகானந்தர் அற்புதங்களைச் செய்தார். அவரது காந்தசக்திவாய்ந்த ஆளுமை அவரது கண்களின் மற்றும் உரைகளின் வழியாகப் பிரகாசித்தது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. நான் அவரை மேற்கிற்கான கிழக்கின் தூதர் என்று அழைத்தேன். உண்மையில், அவர் தனது சக மனிதர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சிக்கான வழியைக் காட்டினார். இந்தியா, மிகவும் உன்னதமான, அன்பான, தெய்வீக மனிதத்தன்மை கொண்ட மற்றும் பரந்த நோக்குடைய தனது புதல்வனைப் பற்றிப் பெருமைப்படுகிறது.”

— - ஸ்ரீ பூபிந்திர நாத் சர்க்கார், இந்திய கல்வியாளர் & எழுத்தாளர், கல்கத்தா ஹிந்துஸ்தான் ஸ்டாண்டர்ட்.

இதைப் பகிர

Facebook
X
WhatsApp