கிரியா யோகப் பாடங்கள்

கிரியா யோகப் பாடங்களின்
புதிய பதிப்பிற்கு
விண்ணப்பிப்பது எவ்வாறு

Blog-Header-Hands-Petals (1)

புதிய மாணவர்கள்: கிரியா யோக தீட்சைக்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்

படி 1: பரமஹம்ஸ யோகானந்தரின் வீட்டுக் கல்விக்கான YSS அடிப்படைப் பாடத் தொடரை முடித்து விடுங்கள்

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா மேம்பட்ட ஆன்மீக உத்திகளை YSS பாடங்களின் மாணவர்களுக்கு மட்டுமே கற்றுக் கொடுக்கிறது; இந்த வீட்டுக் கல்விப் பயிற்சியில் சேர அனைத்து ஆர்வமுள்ள நபர்களும் விண்ணப்பிக்கலாம். ஞானோபதேசங்களைப் பெறுவதற்கு, முதலில் உண்மையான ஆவலுடன் ஓர் ஆன்மீக ஆசிரியரை நாடிச் செல்வது இந்தியாவின் ஒரு பழங்காலப் பாரம்பரியம்; மற்றும் YSS பாடங்களுக்கு விண்ணப்பிப்பதன் மூலம், மெய்ப்பொருளை தேடுபவர், பரமஹம்ஸ யோகானந்தர் போதித்த கிரியா யோக தியான விஞ்ஞானத்தைக் கற்றுக்கொள்வதற்கான முதல் படியை உண்மையாகவே எடுக்க விரும்புவதை வெளிப்படுத்துகிறார்.

இந்தப் பாடங்கள் தியானம் செய்யக் கற்றுக்கொள்வதற்கான படிப்படியான அறிவுறுத்தல்களை, அத்துடன் ஆன்மீகமய சமநிலை மற்றும் வெற்றிகரமான வாழ்க்கைக்கு வழிகாட்டுதலையும் வழங்குகின்றன. பாடங்களின் அடிப்படைத் தொடர் 18 பாடங்களைக் கொண்டுள்ளது, அவை இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை மாணவர்களுக்கு அனுப்பப்படுகின்றன. அடிப்படைத் தொடரில் கிரியா யோகத்தின் விரிவான ஆன்மீக அறிவியலின் முக்கியமான அம்சங்களாக பரமஹம்ஸ யோகானந்தர் கற்பித்த மூன்று சக்தி வாய்ந்த உத்திகளின் அறிவுறுத்தல் – ஒருமுகப்பாட்டு ஹாங்- ஸா உத்தி, சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் மற்றும் ஓம் தியான உத்தி – அடங்கும்.

இந்தப் படிப்படியான அறிமுகத்திற்கு ஒரு காரணம் உள்ளது. எப்படி இமயமலை மீது ஏற விரும்பும் ஒரு மலையேறி, முதலில் தேவையான சூழலுக்கான தகுதியமைப்பிற்கும் பழக்கத்திற்கும் உட்படுத்தப்பட வேண்டுமோ, அதேபோல, சாதகர் தனது பழக்கவழக்கங்களையும் எண்ணங்களையும் பழக்கப்படுத்திக்கொள்ள, ஒருமுகப்பாட்டாலும் பக்தியாலும் மனத்தை நெறிப்படுத்த, மற்றும் உடலின் உயிர்சக்தியைச் செலுத்துவதற்குப் பயிற்சி செய்ய, இந்த ஆரம்ப காலம் தேவை.

சுமார் எட்டுமாத கால ஆயத்தத்திற்கும் பயிற்சிக்கும் பிறகு, 18 அடிப்படைப் பாடங்களைப் பயின்று முடித்த மாணவர்கள் கிரியா யோக தீட்சைக்கு விண்ணப்பிக்கவும் பரமஹம்ஸ யோகானந்தர், ஆன்ம அனுபூதி அடைந்த அவரது குருமார்களின் பரம்பரை ஆகியோருடன் காலங்காலமாகப் போற்றப்படும் குரு-சிஷ்ய உறவை முறைப்படி ஏற்படுத்தவும் தகுதியுடையவர்கள் ஆகிறார்கள்.

படி 2: கிரியா யோக தீட்சைக்கு விண்ணப்பியுங்கள்

18 பாடங்களின் அடிப்படைத் தொடரை முடித்த YSS பாடங்களின் மாணவர்களே (அவற்றைப் பயில ஏறக்குறைய எட்டு மாதங்கள் ஆகும்), நீங்கள் இப்போது கிரியா யோக தீட்சைக்கு விண்ணப்பிக்கt தகுதி பெறுவீர்கள், அதற்கான அழைப்பு பாடம் 17 உடன் சேர்க்கப்பட்டுள்ளது.

நீங்கள் அகத்தே இதுதான் இறைவனை அடைவதற்கான உங்களது பாதை என்று உணர்ந்து பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் ஆன்ம அனுபூதி அடைந்த அவரது குருமார்கள் பரம்பரையுடன் புனித குரு-சிஷ்ய உறவை ஏற்படுத்த விரும்பினால், 17ம் பாடத்தின் அச்சிடப்பட்ட பதிப்புடன் சேர்ந்து அனுப்பப்பட்டுள்ள தகவல் ஏட்டைப் படிக்குமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுரை கூறுகிறோம்; இது கிரியா யோகத்திற்காக இந்தச் சமயத்தில் நீங்கள் விண்ணப்பிக்கலாமா அல்லது இதுவரை நீங்கள் பெற்ற பாடங்களிலுள்ள அடிப்படை உத்திகள் மற்றும் போதனைகளின் கல்வி மற்றும் பயிற்சியையே தற்போது தொடர விரும்புகிறீர்களா என்பது பற்றி முடிவெடுக்க உங்களுக்கு உதவும்.

கிரியா யோகம் பற்றி பாடம் -17ல் கற்றுக்கொள்வதோடு கூடுதலாக, இந்த ஆன்ம விஞ்ஞானத்தால் எவ்வாறு ஆன்ம-அனுபூதி அடைய உங்களுக்கு உதவ முடியும் என்பது பற்றி நீங்கள் சிந்திக்கும் போது, ஒரு யோகியின் சுயசரிதத்தின் 26வது அத்தியாயத்தில் கிரியா யோகம் எனும் புனித உத்தி பற்றிய பரமஹம்ஸ யோகானந்தரின் விளக்கத்தை மீண்டும் படிப்பது உதவிகரமாக இருப்பதை நீங்கள் மேலும் காணலாம்.

கிரியா யோகத்திற்கு விண்ணப்பிக்க விரும்பாதவர்கள் யோகதா சத்சங்கப் பாடங்களை இன்னும் தொடர்ந்து பயிலலாம்.

இறுதியில் ஒருவர் கிரியா யோக தீட்சைக்கு விண்ணப்பிக்க முடிவு செய்கிறாரோ அல்லது இல்லையோ, தமது பயிற்சியில் உண்மையாக இருக்கும் அனைவரும், கிரியா யோகம் மிகவும் வேகமான மற்றும் பயனளிக்கும் முறை என்றாலும் கூட, மற்ற யோகதா சத்சங்க அடிப்படை உத்திகளின் (மேலே படி-1ல் கொடுக்கப்பட்டுள்ளது) வாயிலாகவே மிக உயர்ந்த இறை உணர்வுநிலையை அடைய முடியும் என்ற பரமஹம்ஸ யோகானந்தரின் வாக்குறுதியில் உள்ள உண்மையைத் தாமே உணர்ந்து கொள்வார்கள்.

“கிரியா யோகம் என்பது சாதாரண மூச்சுப் பயிற்சி அல்ல: இது பிராணாயாமத்தின் மிக உயர்ந்ததாக அறியப்படும் உத்தியாகும், இதன் மூலம் உங்களால் உடலில் உள்ள உயிர்ச்சக்தியை உணர்வுபூர்வமாக கட்டுப்படுத்தி அதன் மூலம் பிரபஞ்ச உணர்வுநிலையை அடைய முடியும்.”

— பரமஹம்ஸ யோகானந்தர்

நீங்கள் யோகதா சத்சங்கப் பாடங்களுக்குப் பதிவு செய்யாவிட்டாலும் கூட, தியானத்தின் அடிப்படைத் தத்துவங்களை எங்கள் வலைத்தளத்தில் உள்ள ஆரம்ப அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டப்பட்ட தியானங்கள் வாயிலாக கற்றுக்கொள்ளலாம் – தியானம் தரும் பன்முக நன்மைகளை அனுபவிக்கத் துவங்க நீங்கள் இப்போதே பயன்படுத்தக்கூடிய கருவிகள்.

கிரியாபான்கள்: கிரியா யோக பாடங்களின் புதிய பதிப்பிற்கு விண்ணப்பியுங்கள்

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியாவின் கிரியா யோகப் பாடங்களின் புதிய, மேம்படுத்தப்பட்ட பதிப்பு இப்போது கிடைக்கிறது. இந்தப் பதிப்பில், “குருவுடன் இணக்கம்” மற்றும் “கிரியா யோகியின் வாழ்க்கை முறைக்கான திட்டம்” பற்றிய புதிய பாடங்களில், இது வரை வெளியிடப்படாத விஷயங்கள் அடங்கியுள்ளது – ஏழு-படிநிலை பாடங்களின் முழுமையான மறுசீராய்வையும் மற்றும் மிகவும் உயர்ந்த பாடங்களை உருவாக்கும் பணியையும் பரமஹம்ஸர் எதிர்பார்த்திருந்த பொழுது, அவரது பூவுலக அவதாரத்தின் இறுதிக் காலத்தில் அவரால் கூறப்பட்ட விஷயங்கள்.

தற்போதுள்ள YSS கிரியாபான்கள் இப்போது கிரியா யோக பாடங்களின் புதிய பதிப்பிற்கு பக்தர் போர்ட்டலில் ஆன்லைனில் பதிவு செய்யலாம். நீங்கள் இன்னும் ஒரு பக்தர் போர்ட்டல் கணக்கை உருவாக்கவில்லை என்றால் (அல்லது உங்கள் பாட மாணவர் நிலையை முன்பே சரிபார்க்கவில்லை என்றால்) நீங்கள் கிரியா பதிவு செய்வதற்கான செயல்முறையின் ஒரு பகுதியாக அதைச் செய்ய வேண்டும். உங்கள்பாட மாணவர் நிலையை சரிபார்க்க உங்கள் YSS பாடம் எண் உங்களுக்குத் தேவைப்படும்.

குறிப்பு: கிரியா பாடங்கள் அச்சு வடிவத்தில் மட்டுமே கிடைக்கும் (SRF/YSS பாட தளத்தில் கிடைக்காது) மற்றும் அவை அச்சிடுதல், அஞ்சல் மற்றும் பிற தொடர்புடைய செலவுகளை ஈடுசெய்ய பரிந்துரைக்கப்பட்ட கட்டணத்திற்கு வழங்கப்படுகிறது.

ஏற்கனவே உள்ள YSS கிரியாபான்கள் புதிய பாடங்களின் அடிப்படைத் தொடருக்கு நீங்கள் பதிவு செய்யவில்லை என்றால், புதிய கிரியா பாடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு நீங்கள் அவ்வாறு செய்யுமாறு நாங்கள் வலுவாகப் பரிந்துரைக்கிறோம், ஏனெனில் இப்பாடங்கள் மறுசீரமைக்கப்பட்டு முறையாக வழங்கப்படுகின்றன. அடிப்படைத் தொடரில் கிரியா பயிற்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும் விலைமதிப்பற்ற விஷயங்கள் உள்ளன, ஏனெனில் இந்த விஷயங்களின் குறிப்பிடத்தக்க பகுதி பாடங்களின் முந்தைய பதிப்புகளில் சேர்க்கப்படவில்லை. நீங்கள் அடிப்படை பாடங்கள், மற்றும் கிரியா யோக பாடங்களின் புதிய பதிப்பு இரண்டிற்கும் பதிவு செய்ய முடிவு செய்தால், நீங்கள் முதலில் கிரியா

கிரியா யோக தீட்சைக்கு விண்ணப்பிக்க நான் தகுதியானவனா?

உங்கள் கிரியா யோக தீட்சைக்கான தகுதியைத் தீர்மானிக்க கீழ்கண்டதிலிருந்து உங்களுக்குப் பொருத்தமானதைத் தேர்ந்தெடுக்கவும்.

நான் YSS பாட மாணவன் இல்லை (பழைய அல்லது புதிய பதிப்பு). கிரியா யோகத்திற்கு நான் விண்ணப்பிக்கலாமா?

கிரியா யோகாவுக்கு விண்ணப்பிக்கும் முன், நீங்கள் ஒரு பாட மாணவராக இருக்க வேண்டும் மற்றும் 18 பாடங்களின் அடிப்படை தொடரை முடித்திருக்க வேண்டும்.

யோகதா சத்சங்க பாடங்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளவும் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்க.

நான் ஒரு YSS பாட மாணவன் ஆனால் நான் அடிப்படை தொடரை முடிக்கவில்லை. கிரியா யோகத்திற்கு நான் விண்ணப்பிக்கலாமா?

நீங்கள் இன்னும் தகுதி பெறவில்லை. விண்ணப்பிக்க பாடம்-17 உடன் ஓர் அழைப்பைப் பெறுவீர்கள்.

பாடம்-17 உடன் இணைத்துள்ள விண்ணப்ப அழைப்பிதழைப் பார்க்கவும்.

நான் ஒரு YSS பாட மாணவர் மற்றும் நான் அடிப்படை தொடரை முடித்துவிட்டேன். கிரியா யோகத்திற்கு நான் விண்ணப்பிக்கலாமா?

பாடங்களின் முந்தைய பதிப்பை நான் சில ஆண்டுகளுக்கு முன்பு படித்திருக்கிறேன். கிரியா யோகத்திற்கு நான் விண்ணப்பிக்கலாமா?

YSS பாடங்களின் முந்தைய பதிப்பின் படி-2 (பாடம் 52 வரை) முடித்திருந்தால், நீங்கள் கிரியா யோகத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்.

இருப்பினும், புதிய அடிப்படை பாடங்களையும் படிக்குமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். புதிய பதிப்பு முன்னர் வெளியிடப்படாத விஷயங்களை வழங்குகிறது மற்றும் தெளிவாக மற்றும் எளிமையாக கற்கும் வகையில் முற்றிலும் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க தயவுசெய்து ஒரு கணக்கை உருவாக்கவும் அல்லது பக்தர் போர்ட்டலில் உள்நுழைய.

நான் முந்தைய பாடங்கள் பதிப்பின் கிரியாபான். கிரியா யோகப் பாடங்களின் புதிய பதிப்பை நான் கோரலாமா?

ஆம், கிரியா யோக பாடங்களின் புதிய பதிப்பிற்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

இருப்பினும், அடிப்படை பாடங்களின் புதிய தொடரை நீங்கள் படிக்க பரிந்துரைக்கிறோம். புதிய பதிப்பு முன்னர் வெளியிடப்படாத விஷயங்களை வழங்குகிறது மற்றும் தெளிவாக மற்றும் எளிமையாக கற்கும் வகையில் முற்றிலும் மறு சீரமைக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்ய பக்தர் போர்ட்டலில் ஒரு கணக்கை உருவாக்கவும் அல்லது உள்நுழையவும்.