சாதனா சங்கங்கள் 2026

(ராஞ்சி, நொய்டா, தட்சிணேஸ்வர் மற்றும் இகத்புரி)

ஜனவரி – ஜூலை 2026 வரை நடைபெறவுள்ள சங்கங்களுக்கு பதிவு செய்யும் முறை தற்போது திறந்துள்ளது!

தங்கள் கவனத்திற்கு: ராஞ்சி ஆசிரமத்திற்குள் திட்டமிடப்பட்டுள்ள பல்வேறு கட்டுமானத் திட்டங்கள் காரணமாக — மண் சாலைகளை சீரமைத்தல், தோட்டப் பாதைகளை புதுப்பித்தல் மற்றும் நீண்டகாலமாக இருந்து வரும் வடிகால் பிரச்சனைகளைச் சரிசெய்வதற்கான விரிவான மண் வேலைப்பாடுகள் உள்ளிட்ட காரணங்களினால் — 2026ஆம் ஆண்டில் ராஞ்சியில் சாதனா சங்கங்கள் நடத்தப்படமாட்டாது. இவ்விஷயத்தில் தங்களது பொறுமையையும், புரிதலையும் பணிவுடன் வேண்டுகிறோம்.

நிகழ்வு பற்றி

நீங்கள் எவ்வளவு அதிகமாகத் தியானிக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாகச் சாதாரண உணர்வுநிலைக்கு அப்பால் ஒரு பேரமைதியும் மகிழ்ச்சியும் ஆட்சி செய்யும் உலகம் இருப்பதை உணர்வீர்கள்…. தியானத்தின் மூலம் பிறக்கும் அந்த அக அமைதியையும் மகிழ்ச்சியையும் அதிகரிக்கத் தீவிர முயற்சியை மேற்கொள்வது மட்டுமே இறைவனை உணர்வதற்கான ஒரே வழியாகும்.

— ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர்

ஜனவரி முதல் டிசம்பர் 2026 வரை நடைபெறவுள்ள சாதனா சங்கங்களில் கலந்துகொள்ள அனைத்து YSS/SRF பக்தர்களையும் அன்புடன் வரவேற்கிறோம்.

இந்தச் சங்கங்கள் YSS நொய்டா ஆசிரமம், YSS தட்சிணேஸ்வர் ஆசிரமம், YSS சென்னை ஆசிரமம் மற்றும் இகத்புரியில் உள்ள பரமஹம்ஸ யோகானந்தா சாதனாலயா ஆகிய அனைத்து இடங்களிலோ அல்லது ஒருசில இடங்களிலோ ஒரே நேரத்தில் நடைபெறும். பக்தர்கள் தங்களுக்கு வசதியான ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து, இந்தச் சங்கங்களில் ஏதேனும் ஒன்றில் கலந்து கொள்ளலாம்.

இந்த நிகழ்ச்சிகள் YSS பக்தர்களுக்குத் தங்களை ஆன்மீக ரீதியாகப் புதுப்பித்துக் கொள்ளவும், குருதேவரின் போதனைகளை ஆழமாகப் புரிந்து கொள்ளவும், தியான உத்திகளின் பயிற்சியை மேம்படுத்தவும் ஒரு வாய்ப்பை வழங்குகின்றன. அந்தந்த இடங்களில் உள்ள வசதிகளைப் பொறுத்து பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், ஒவ்வொரு பக்தரும் தமது ஆன்மீகப் பயணத்தில் மிகவும் தனிப்பட்ட மற்றும் ஆழமான வழிகாட்டுதலைப் பெறமுடியும். ஒரு முழுமையான ஆன்மீக அனுபவத்தை வழங்குவதற்காக, ஒவ்வொரு சங்கமும் 5 நாட்கள் நடைபெறும். முழுமையான நோக்கில், இந்தச் சாதனா சங்கங்கள் ஒரு மறக்க முடியாத ஆன்மீக அனுபவமாக அமையும்.

ஜனவரி முதல் ஜூலை 2026 வரை நடைபெறவுள்ள சங்கங்களுக்கான YSS மற்றும் SRF பக்தர்களுக்கான பதிவு செய்யும்முறை தற்போது தொடங்கியுள்ளது! இது குறித்து மேலும் அறியவும், பதிவு செய்யவும் இங்கே கிளிக் செய்யவும்.

பதிவு, முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையிலானது. ஒரு பக்தர் ஒரே ஒரு சங்கத்தில் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்.

உங்கள் ஆன்மீக ஆர்வத்தை மீண்டும் தூண்டுவது மட்டுமல்லாமல், பிற உண்மையான தேடலுடையவர்களுடன் இணைந்து தியானிப்பதன் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியையும் ஆசிகளை உணர்ந்து அனுபவிக்கவும் இந்தத் தனித்துவமான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு உங்களை ஊக்குவிக்கிறோம்.


தங்கள் கவனத்திற்கு:

  • YSS/SRF பக்தர்கள் மட்டுமே இந்த சங்கங்களில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
  • 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இல்லை.
  • இந்தச் சங்கங்களில் கலந்துகொள்ள SRF பக்தர்கள் வரவேற்கப்பட்டாலும், தங்களுக்கான தங்குமிடத்தை அருகிலுள்ள ஹோட்டல்களில் அவர்களே ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். அத்தகைய ஹோட்டல்களின் பட்டியல் இங்கே உள்ளது.
  • இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் ஓய்விற்கான நேரம் குறைவு என்பதால், பலவீனமான ஆரோக்கியம் அல்லது ஆரோக்கியத்திற்கான சிறப்புத் தேவைகள் வேண்டும் பக்தர்கள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
YSS நொய்டா ஆசிரமம்
YSS தட்சிணேஸ்வர் ஆசிரமம்
YSS-சென்னை-ஏகாந்தவாச-மையத்தின்-முதன்மை-கட்டிடம்
YSS சென்னை ஆசிரமம்
YSS இகத்புரி சாதனாலயா

சாதனா சங்கங்களின் காலண்டர்

இந்தச் சங்கங்களின் போது உத்திகளுக்கான வகுப்புகளும் ஆன்மீகச் சொற்பொழிவுகளும் எந்தெந்த மொழிகளில் நடத்தப்படும் என்பது ஒவ்வொரு நிகழ்விற்கும் கீழே உள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்கள் கவனத்திற்கு: ராஞ்சி ஆசிரமத்திற்குள் திட்டமிடப்பட்டுள்ள பல்வேறு கட்டுமானத் திட்டங்கள் காரணமாக — மண் சாலைகளை சீரமைத்தல், தோட்டப் பாதைகளை புதுப்பித்தல் மற்றும் நீண்டகாலமாக இருந்து வரும் வடிகால் பிரச்சனைகளைச் சரிசெய்வதற்கான விரிவான மண் வேலைப்பாடுகள் உள்ளிட்ட காரணங்களினால் — நாங்கள் 2026 ஆம் ஆண்டில் ராஞ்சியில் சாதனா சங்கங்களை நடத்தவில்லை. இவ்விஷயத்தில் தங்களது பொறுமையையும், புரிதலையும் பணிவுடன் வேண்டுகிறோம்.


நொய்டா

தட்சிணேஸ்வர்

சென்னை

இகத்புரி

பிப்ரவரி 4–8

ஆங்கிலம்

(கிரியா யோக தீட்சை)

ஆங்கிலம்

(கிரியா யோக தீட்சை)

ஹிந்தி

மார்ச் 11–15

ஹிந்தி

(கிரியா யோக தீட்சை)

ஆங்கிலம்

(கிரியா யோக தீட்சை)

தமிழ்

(கிரியா யோக தீட்சை)

ஆங்கிலம்

(கிரியா யோக தீட்சை)

ஏப்ரல் 1–5

தெலுங்கு*

(கிரியா யோக தீட்சை)

செப்டம்பர் 9–13

ஆங்கிலம்

அக்டோபர் 7–11

இளம் சாதகர் சங்கம்**

(ஆங்கிலம்)

நவம்பர் 18–22

ஆங்கிலம்/ஹிந்தி

(கிரியா யோக தீட்சை)

ஹிந்தி

(கிரியா யோக தீட்சை)

* YSS சென்னை ஆசிரமத்தில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள சங்கத்தில், தியான உத்திகள் குறித்த மறுஆய்வு வகுப்புகளும் ஆன்மீகச் சொற்பொழிவுகளும் தெலுங்கு மொழியில் இடம்பெறும்; அதேவேளையில், கிரியா யோக தீட்சை நிகழ்ச்சி ஆங்கிலத்தில் நடத்தப்படும்.

**இளம் சாதகர் சங்கம் என்பது 23–35 வயதுக்குட்பட்ட YSS/SRF பக்தர்களுக்காகத் திட்டமிடப்பட்ட ஒரு தனித்துவமான நிகழ்ச்சியாகும். இது பரமஹம்ச யோகானந்தரின் போதனைகளிலிருந்து அகத் தெளிவுவையும், வலிமையையும் தேடும் இளம் பக்தர்களுக்காகவே சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஓர் ஆழ்ந்த ஆன்மீக அனுபவத்தை வழங்குகிறது.

கூடுதல் தகவல்

நிகழ்ச்சி நிரல்

வழக்கமான சங்கத்தின் உத்தேச நிகழ்ச்சி நிரல் கீழே பகிரப்பட்டுள்ளது. அக்டோபர் 2026-ல் நடத்தப்படவுள்ள இளம் சாதகர் சங்கத்திற்கான நிகழ்ச்சி நிரலை அறிந்துகொள்ள, நிகழ்ச்சி நடைபெறும் சில நாட்களுக்கு முன்பாக இந்த வலைப்பக்கத்தைப் பார்வையிடவும்.

புதன்கிழமை

காலை 07:00 – 08:30 மணி வரை

சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் மற்றும் தியானம்

காலை 10:00 – 11:30 மணி வரை

கீர்த்தனை & தொடக்க சத்சங்கம்

மதியம் 02:30 – 04:00 மணி வரை

சக்தியூட்டும் உடற் பயிற்சிகள் பற்றிய மறு ஆய்வு

மாலை 05:30 – 07:30 மணி வரை

சக்தியூட்டும் உடற் பயிற்சிகள் மற்றும் தியானம்

இரவு 08:15 – 09:15 மணி வரை

வீடியோக் காட்சி

வியாழக்கிழமை

காலை 07:00 – 08:30 மணி வரை

சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் மற்றும் தியானம்

காலை 09:30 – 10:30 மணிவரை

ஹாங்–ஸா உத்தி பற்றிய மறுஆய்வு

காலை 11:00 – நண்பகல் 12:00 மணிவரை

ஆன்மீகச் சொற்பொழிவு

மதியம் 03:00 – 04:00 மணி வரை

ஓம் உத்தி மறு ஆய்வு

மாலை 05:30 – இரவு 08:30 மணி வரை

சக்தியூட்டும் உடற் பயிற்சிகள் மற்றும் தியானம்

வெள்ளிக்கிழமை

காலை 07:00 – 08:30 மணி வரை

சக்தியூட்டும் உடற் பயிற்சிகள் மற்றும் தியானம்

காலை 09:30 – 10:30 மணி வரை

ஆன்மீகச் சொற்பொழிவு

காலை 11:00 – நண்பகல் 12:00 மணி வரை

ஆன்மீகச் சொற்பொழிவு / கேள்வி பதில் நிகழ்ச்சி

மதியம் 03:00 – மாலை 04:00 மணி வரை

பிரபஞ்ச கீதங்கள்

மாலை 05:30 – இரவு 08:00 மணி வரை

சக்தியூட்டும் உடற் பயிற்சிகள் மற்றும் தியானம்

சனிக்கிழமை

காலை 07:00 – 08:30 மணி வரை

சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் மற்றும் தியானம்

காலை 10:00 – நண்பகல் 12:00 மணி வரை

கிரியாபான் அல்லாதவர்களுக்கான சத்சங்கம் மற்றும் கிரியா யோகா மறு ஆய்வு மற்றும் சரிபார்த்தல்.

மதியம் 03:00 – மாலை 04:00 மணி வரை

ஆன்மீகச் சொற்பொழிவு

மாலை 05:30 – இரவு 08:00 மணி வரை

சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் மற்றும் தியானம்

கவனத்திற்கு: கிரியா யோக தீட்சை இடம்பெறும் நிகழ்ச்சிகளுக்கு, சனிக்கிழமை நிகழ்ச்சி நிரலில் செய்யப்பட்டுள்ள பின்வரும் மாற்றத்தைக் கவனத்தில் கொள்ளவும்:

காலை 08:30 – 11:30 மணி வரை

கிரியா யோக தீட்சை

காலை 10:00 – 11:30 மணி வரை

கிரியாபான் அல்லாதவர்களுக்கான சத்சங்கம்

மதியம் 02:30 – மாலை 04:00 வரை

கிரியா யோகா மறு ஆய்வு மற்றும் சரிபார்த்தல்

மாலை 05:30 – இரவு 07:30 மணி வரை

சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் மற்றும் தியானம்

ஞாயிற்றுக்கிழமை

காலை 07:00 – 08:30 மணி வரை

சக்தியூட்டும் உடற் பயிற்சிகள் மற்றும் தியானம்

காலை 10:30 – 11:00 மணி வரை

கீதமிசைத்தல் / கீர்த்தனை மற்றும் தியானம்

காலை 11:00 – நண்பகல் 12:00 வரை

நிறைவு சத்சங்கம்

நண்பகல் 12:00 – 12:15 மணி வரை

நிறைவு உரை மற்றும் பிரசாதம்

மாலை 04:00 – இரவு 07:30 மணி வரை

சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் மற்றும் தியானம்

தியான உத்தி வகுப்புகள் மற்றும் ஆன்மீகச் சொற்பொழிவுகள்:

  • YSS தியான உத்திகள் — சக்தியூட்டும் உடற்பயிற்சிகள், ஹாங்–ஸா உத்தி மற்றும் ஓம் உத்தி ஆகியவை — விளக்கப்படும் மற்றும் செய்து காண்பிக்கப்படும். மேலே உள்ள சாதனா சங்க நாட்காட்டியில் குறிப்பிட்டுள்ளபடி, இந்த வகுப்புகள் வெவ்வேறு மொழிகளில் நடத்தப்படும்.
  • குருதேவரின் “எப்படி வாழ்வது” என்ற தத்துவங்கள் குறித்த ஆன்மீகச் சொற்பொழிவுகளும் இந்த நிகழ்ச்சி நிரலில் இடம்பெறும். இச்சொற்பொழிவுகள் ஆங்கிலம், இந்தி, பெங்காலி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் நடத்தப்படலாம்.
கிரியா யோகம் பெறுவதற்கான தகுதி

இந்தச் சங்கங்களில் கலந்துகொள்ளும் அனைத்து கிரியாபான்களுக்கும், புதிதாக கிரியா யோக தீட்சை பெறும் பக்தர்களுடன் இணைந்து கிரியா யோக தீட்சை நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்படும்.

கிரியா யோகம் பெறுவதற்கான தகுதி

  • YSS பாடங்களுடன் இணைக்கப்பட்டுள்ள கேள்விகளுக்குத் திருப்திகரமான பதில்களைச் சமர்ப்பிப்பதைப் பொறுத்தே, கிரியா யோக தீட்சை பெறுவதற்கான தகுதி அமையும்.
  • இந்தக் கேள்விகளில் நீங்கள் கவனித்தது போல, கிரியா யோகம் பெறுவதற்குத் தகுதி பெற, ஒரு பக்தர் முதல் மூன்று அடிப்படை யோகதா உத்திகளை பல மாதங்களாகத் தொடர்ந்து பயிற்சி செய்து வந்திருக்க வேண்டும்.
  • YSS குருமார்களின் பரம்பரைக்கும், யோகதா சத்சங்க வழிமுறைக்கும் உங்கள் பக்தியையும் விசுவாசத்தையும் உறுதிப்படுத்தும் வகையில், கையொப்பமிடப்பட்ட கிரியா யோக உறுதிமொழியை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

தயவுசெய்து கவனிக்கவும்: நீங்கள் கிரியா யோக தீட்சைக்கு விண்ணப்பிக்க விரும்பினால், கேள்விகளுக்கான உங்கள் பதில்களை இதுவரை சமர்ப்பிக்கவில்லை என்றால், நீங்கள் எந்த இடத்தில் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறீர்களோ அங்கேயே அவற்றைச் சமர்ப்பிக்கலாம்; அவை சந்நியாசிகளால் சரிபார்க்கப்படும்.

 

கிரியா யோக தீட்சை நிகழ்ச்சியில் பங்கேற்றல்:

  • இந்த நிகழ்ச்சியில் கிரியா யோக தீட்சை பெற விரும்புபவர்கள், கிரியா யோக பாடங்களைப் பெற்றிருந்தும் இதுவரை தீட்சை பெறாதவர்கள் மற்றும் ஏற்கனவே முறைப்படி தீட்சை பெற்று தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்பும் கிரியாபான்கள் என அனைவரும், சம்பந்தப்பட்ட இடத்தில் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு முன்னதாகவே பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும் நிகழ்ச்சிக்குத் தேவையான அனுமதி அட்டையை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.
  • கிரியா யோக தீட்சைக்காகப் பதிவு செய்யும்போதும், அத்துடன் (கிரியா) மறுஆய்வு வகுப்புகளில் கலந்து கொள்ளும்போதும், உங்கள் கிரியாபான் அடையாள அட்டையை கொண்டு வந்து காண்பிக்கவும்.
பதிவு

நிகழ்ச்சி:

  • ஒவ்வொரு இடத்திலும் இந்த நிகழ்ச்சி, புதன்கிழமை காலையில் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை மாலையில் நிறைவடையும்.
  • அனைத்து பக்தர்களுக்கும் கூடுதலாக நான்கு நாட்கள் தங்கும் வாய்ப்பு உள்ளது – அவர்கள் நிகழ்ச்சி தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே (திங்கட்கிழமை காலையில்) வரலாம், அதே போல் நிகழ்ச்சி முடிந்த பிறகு கூடுதலாக இரண்டு நாட்கள் (அடுத்த செவ்வாய்க்கிழமை இரவு வரை) தங்கிச் செல்லலாம்.
  • குருஜியின் ஆசிரமம்/ ஏகாந்தவாச மையத்தில் ஒன்பது நாட்கள் வரை தொடர்ந்து தங்கியிருப்பதன் மூலம், பக்தர்களுக்கு ஓய்வு எடுக்கவும், மன அமைதி பெறவும் மற்றும் ஆன்மீகப் புத்துணர்ச்சி அடையவும் போதிய நேரம் கிடைக்கும். இதற்கேற்ப உங்கள் வருகையையும் புறப்பாட்டையும் நீங்கள் திட்டமிட்டுக் கொள்ளலாம்.

தங்குமிடம்:

  • பகிரப்பட்ட/பல படுக்கைகள் கொண்ட தங்குமிடம், பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனித்தனியாகப் வழங்கப்படும். இதற்கேற்ப, குடும்ப உறுப்பினர்கள் தங்கள் உடமைகளைத் திட்டமிட்டுக் கொண்டு வரவும்.
  • தங்குவதற்கோ அல்லது உணவிற்கோ உங்களுக்குத் தனிப்பட்ட தேவைகள் இருந்தால், தயவுசெய்து உங்களுக்கான ஏற்பாடுகளை நீங்களே செய்து கொள்ளவும். அருகிலுள்ள ஹோட்டல்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முதலில் வருபவருக்கு முன்னுரிமை:

  • ஐந்து இடங்களிலும் தங்குமிட வசதிகள் குறைவாக இருப்பதால், முதலில் பதிவு செய்பவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் பதிவுகள் உறுதி செய்யப்படும்.
  • தயவுசெய்து கவனிக்கவும்: உங்கள் பதிவு உறுதி செய்யப்பட்ட பிறகு உங்களால் கலந்துகொள்ள இயலவில்லை என்றால், பதிவுக்கட்டணம் திருப்பித் தரப்படவோ அல்லது வேறொரு நபருக்கு மாற்றப்படவோ மாட்டாது.

பணம் செலுத்துதல்: ஒரு நபருக்கான பதிவுக்கட்டணம் ₹2500 ஆகும். இந்தக் கட்டணத்தில் உணவுச் செலவுகளும் அடங்கும். உங்களுக்குப் பதிவுக்கட்டணம் செலுத்துவதில் சிரமம் இருந்தால், தயவுசெய்து எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

பதிவு பற்றிய தகவல்கள்

ஜனவரி-ஜூலை 2026 வரை நடைபெறவுள்ள சங்கங்களுக்கு பதிவு செய்யும் முறை தற்போது திறந்துள்ளது!

ஆண்டின் மீதமுள்ள மாதங்களில் நடைபெறவுள்ள சங்கங்களுக்கான முன்பதிவு ஜூன் மாதத்தில் தொடங்கும்.

பக்தர் இணையதளம் வாயிலாக ஆன்லைனில் பதிவு செய்ய:

ஆன்லைனில் வேகமாகவும் எளிதாகவும் பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யவும்.

உதவி மையத்தைத் தொடர்பு கொண்டு பதிவு செய்ய:

தயவுசெய்து (0651) 6655 555 என்ற எண்ணிற்கு அழைத்து அல்லது ராஞ்சி ஆசிரம உதவி மையத்திற்கு மின்னஞ்சல் அனுப்பி, பின்வரும் விவரங்களை வழங்கவும்:

  • உங்கள் முழுப் பெயர்
  • வயது
  • YSS பாடங்கள் பதிவு எண் (அல்லது SRF உறுப்பினர் எண்)
  • முகவரி
  • மின்னஞ்சல்
  • தொலைபேசி எண்
  • நீங்கள் உத்தேசித்துள்ள வருகை மற்றும் புறப்பாட்டுத் தேதிகள்

உங்கள் மொபைல் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் கட்டண இணைப்பை கிளிக் செய்து பணத்தை நீங்கள் செலுத்தலாம்.

SRF பக்தர்களுக்கான பதிவு:

  • SRF பக்தர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள மிகவும் வரவேற்கப்படுகிறார்கள், அத்துடன் அவர்கள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திலேயே உணவருந்தலாம், இருந்தாலும் தங்களுக்கான தங்குமிட ஏற்பாடுகளை அருகிலுள்ள ஹோட்டல்களில் அவர்களே செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
  • ஆர்வமுள்ள SRF பக்தர்கள் மேலே குறிப்பிட்டுள்ள தங்களின் அனைத்து விவரங்களையும் மின்னஞ்சல் மூலம் YSS உதவி மையத்திற்கு அனுப்பித் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தயவுசெய்து கவனிக்கவும்:

  • ஒரு பக்தர் ஒரு சங்கத்தில் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்.
  • ஒரு குறிப்பிட்ட இடத்திற்கான பதிவுகள் அதன் முழு கொள்ளளவை எட்டினால், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்னதாகவே அந்த இடத்திற்கான முன்பதிவு நிறுத்தப்படலாம்.
  • பதிவு வெற்றிகரமாக முடிந்தவுடன், மின்னஞ்சல் அல்லது வாட்ஸ்அப் அல்லது SMS மூலம் உங்களுக்கு உறுதிப்படுத்தல் தகவல் அனுப்பப்படும். அத்தகைய அறிவிப்பு எதுவும் உங்களுக்கு வரவில்லை என்றால், தயவுசெய்து YSS ராஞ்சி உதவி மையத்தை (0651) 6655 555 என்ற எண்ணிலோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளவும்.
  • YSS/SRF பக்தர்கள் மட்டுமே இந்தச் சங்கத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
  • 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
தன்னார்வலர்கள்

எப்போதும் போல், பதிவு மேசை, தங்குமிடம், ஒலி-ஒளி அமைப்பு, உணவகம், சுகாதாரம், வழிகாட்டுதல் மற்றும் பிற துறைகளில் சேவை செய்ய பக்த-தன்னார்வலர்கள் தேவைப்படுவர். இதில் சில துறைகளில், நிகழ்ச்சி தொடங்குவதற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே சில தன்னார்வலர்கள் தேவைப்படுவார்கள். நீங்கள் தன்னார்வலராகச் சேவை செய்ய விரும்பினால், தயவுசெய்து பதிவுப் படிவத்தில் அதற்கேற்ப குறிப்பிடவும்.

உங்கள் நன்கொடைகள் தேவைப்படுகின்றன

இந்த விழாக்களின் ஏற்பாட்டிற்காக ஆகும் பல்வேறு செலவுகளை ஈடுகட்ட உங்களின் நிதிப் பங்களிப்பை வேண்டுகிறோம். குறைவான வசதியுள்ள பக்தர்களும் இதில் பங்கேற்கும் வகையில், பதிவுக்கட்டணம் குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தாராளமாக நிதி வழங்கக்கூடிய பக்தர்களுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்; உங்களின் இத்தகைய பங்களிப்பு சலுகை வழங்கவும், அதன் மூலம் குருதேவரின் விருந்தோம்பலை அனைத்து உண்மையான சாதகர்களுக்கும் விரிவுபடுத்தவும் எங்களுக்கு உதவுகிறது.

பதிவு செய்யவும் விவரங்களுக்கும் தொடர்பு கொள்ளவும்

யோகதா சத்சங்க சகா ஆசிரமம் — ராஞ்சி
பரமஹம்ஸ யோகானந்தா் பாதை
ராஞ்சி – 834 001

தொலைபேசி: (0651) 6655 555 (திங்கள்-சனிக்கிழமை, காலை 9:00 – மாலை 4:30 மணி வரை)
மின்னஞ்சல்: [email protected]

para-ornament

புதிய வருகையாளர்

நீங்கள் YSS மற்றும் பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளுக்கு புதியவர் என்றால், பின்வரும் இணைப்புகளை நீங்கள் படிக்க விரும்பலாம்:

ஒரு யோகியின் சுயசரிதம்

உலகளவில் ஆன்மீக தலைசிறந்த படைப்பாகக் போற்றப்படும் இந்நூலை பரமஹம்ஸர் அடிக்கடி, “நான் மறைந்துவிட்ட பிறகு, இந்தப் புத்தகம் எனது தூதுவனாக இருக்கும்.” என்று குறிப்பிட்டு வந்தார்.

YSS பாடங்கள்

நீங்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத வகையில் உங்கள் வாழ்க்கையை மாற்றும் மற்றும் ஒரு சமநிலையுடனும் வெற்றிகரமாகவும் வாழ உதவும் ஒரு வீட்டுக் கல்வித் தொடர்.

இதைப் பகிர