ஸ்ரீ ஸ்ரீ ராஜரிஷி ஜனகானந்தர்

ஒரு சுருக்கமான வாழ்க்கை வரலாற்று ஓவியம்

ராஜரிஷி ஜனகானந்தர் (ஜேம்ஸ் ஜே. லின்) பரமஹம்ஸ யோகானந்தரின் அன்புக்குரிய சீடராக இருந்தார், மேலும் பிப்ரவரி 20, 1955 அன்று அவர் இறக்கும் வரை, யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ஸெல்ஃப் ரியலைசேஷன் ஃபெலோஷிப்பின் தலைவராகவும், ஆன்மீக முதல்வராகவும் அவருடைய முதல் வாரிசாக இருந்தார். திரு. லின் முதன்முதலில் 1932-ல் பரமஹம்ஸரிடமிருந்து கிரியா யோக தீட்சை பெற்றார்; குருதேவர் 1951 -ல் ராஜரிஷி ஜனகானந்தர் என்ற சன்னியாசப் பட்டத்தை அவருக்கு வழங்கும் வரை, அவரை “செயிண்ட் லின்” என்று அன்புடன் குறிப்பிடும் அளவிற்கு அவரது ஆன்மீக முன்னேற்றம் அத்துணை விரைவாக இருந்தது.
ஸ்ரீ ஸ்ரீ ராஜரிஷி ஜனகானந்தரின் வாழ்க்கை வரலாற்று ஓவியம்

பரமஹம்ஸ யோகானந்தருடன் அவர் இருந்த ஆண்டுகளைப் பற்றிய ஓர் அழகான விளக்கத்தையும், பல புகைப்படங்களையும் இங்கே காணலாம்

வாழ்க்கை வரலாற்று ஓவியம் ராஜரிஷி ஜனகானந்தர்: எ கிரேட் வெஸ்டர்ன் யோகி, என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் வெளியிட்ட இந்த புத்தகத்தில் இன்னும் விரிவான வாழ்க்கை வரலாறும் அவரது பேச்சுக்களில் இருந்து சில பகுதிகளும் உள்ளன. பரமஹம்ஸர் அவருடன் தனிப்பட்ட முறையில் கடிதப் பரிமாற்றம் செய்த அறுபது பக்கங்களுக்கும் மேலாக இதில் இடம்பெற்றுள்ளன — அவர்கள் பகிர்ந்து கொண்ட நெருக்கமான ஆன்மீக இசைவின் மின்னல் காட்சிகளை வழங்கும், மற்றும் குரு-சீடர் உறவின் ஆழத்தைச் சக்திவாய்ந்த முறையில் வெளிப்படுத்தும் வழிகாட்டலும் அன்பும் நிறைந்த வார்த்தைகள்.

ராஜரிஷியின் சுருக்கமான பேச்சுக்களின் ஒலிப்பதிவுகள், பரமஹம்ஸ யோகானந்தரின் அரிதாகப் பதிவு செய்யப்பட்ட சொற்பொழிவுகள் கொண்ட யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெல்லோஷிப்பின் “அரிய தொகுப்பு தொடர்”-ல் உள்ள குறுந்தகடுகள் இரண்டில் சேர்க்கப்பட்டுள்ளன:

ஸெல்ஃப்-ரியலைசேஷன்: தி இன்னர் அன்ட் அவுட்டர் பாத்

இன் தி க்லோரி ஆஃப் தி ஸ்பிரிட்

இதைப் பகிர

Facebook
X
WhatsApp