சன்னியாசப் பரம்பரை

பரமஹம்ஸ  யோகானந்தர்:  ஒய்.எஸ்.எஸ்./எஸ்.ஆர்.எஃப் - ன் சன்னியாச ஒழுங்கின் அமைப்பாளர்.

பகவான் கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு விடுத்த இந்த அன்பான வேண்டுகோள், அவரது குழந்தைகளாகிய நம் ஒவ்வொருவருக்குமான, இறைவனின் விருப்பத்தைப் பிரதிபலிக்கிறது. நமக்கு விருப்பச் சுதந்திரத்தை வழங்கிய பிறகு, நாம் விருப்பத்துடனும் தயக்கமின்றியும் நம் இதயங்களை அவனுக்குக் கொடுக்கத் தீர்மானிக்கும் வரை அவன் நம் இதயங்களின் முழு அன்பையும் பக்தியையும் பெற முடியாது.

உண்மையான அன்பு, மகிழ்ச்சி மற்றும் நிறைவை அறியும் அனைவரும் இந்த தெய்வீக இரகசியத்தை கற்றுக்கொள்ள வேண்டும், ஏனென்றால் அனைவரும் அவரிடமிருந்து வருகிறார்கள், அவர் இல்லாமல் மகிழ்ச்சி இல்லை. இது சன்னியாசிக்கு மட்டுமல்ல, இல்லறத்தாருக்கும் பொருந்தும்.

ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் யோகதா சத்சங்க போதனைகளைப் படித்து, பயிற்சி செய்து, தங்கள் வாழ்நாள் முழுவதும் நமது குருதேவரையும் அவரது பணியையும் பின்பற்றுவதற்கும் சேவை செய்வதற்கும் மட்டுமே என்று உணர்ந்த எந்த இளைஞர்களும், தங்கள் இதயங்களை இறைவனிடம் அர்ப்பணிப்பதற்கான அவனுடைய இந்த அழைப்பை ஆழமாகக் கருத்தில் கொள்ள விரும்பலாம், மற்றும் அவர்கள் அவ்வாறு செய்ய மிகவும் முழுமையாக இயலச் செய்வது எது என்று ஆழ்ந்த தியானத்தில் கேட்கலாம். இப்பிறவியில் இல்வாழ்க்கையில் நாட்டம் இல்லாதவர்கள், குடும்ப கடமைகள் அல்லது பொறுப்புகள் அனைத்திலிருந்தும் விடுபட்டவர்கள், நல்ல ஆரோக்கியத்தில் இருப்பவர்கள், இறைவனை அறிய வேண்டும் என்ற மகத்தான விருப்பம் கொண்டவர்கள், யோகதா சத்சங்க சன்னியாசப் பரம்பரையில் சன்னியாச வாழ்க்கையைப் பரிசீலிக்க விரும்பலாம்.

ஒய்.எஸ்.எஸ். சன்னியாசிகள் கீதங்கள் இசைத்தல்
இந்த வாழ்க்கை முறைக்கு நீங்கள் ஆழமாக ஈர்க்கப்படுவதாக உணர்ந்தால், மேலும் மேற்கண்ட நிபந்தனைகளை நிறைவேற்றினால், உங்கள் எண்ணங்களையும் உணர்வுகளையும் எங்களுக்கு, யோகதா சத்சங்க சாகா மடம், பரமஹம்ஸ யோகானந்தர் பாதை, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி 834001, என்ற இந்த விலாசத்திற்கு எழுதுமாறு உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

Share this on

Share on facebook
Share on twitter
Share on whatsapp