உங்கள் பகுதியில் தியான நிகழ்ச்சிகள்

தியான நிகழ்ச்சிகள்

ராஞ்சி ஆசிரமத்தில் நிர்வாக கட்டிடம்

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 180 -க்கும் மேற்பட்ட  ஏகாந்தவாச மையங்கள்ஆசிரமங்கள், மற்றும் தியான மையங்களைக்  கொண்டுள்ளது — ஆர்வமுள்ள அனைத்து சாதகர்களும் கூட்டுத் தியானங்களின் சக்தியை அனுபவிப்பதற்காக ஒன்றுகூடும் வாய்ப்பை அளிக்கிறது. வாராந்திர உத்வேகம் தரும் சேவைகளில் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரது படைப்புகளின் வாசிப்புகள், அத்துடன் பக்தியுடன் கீதம் இசைக்கும், மௌனமாக தியானம் செய்யும் மற்றும் பிரார்த்தனை செய்யும் வேளைகள் ஆகியவை அடங்கும்.

பரமஹம்ஸ யோகானந்தர் கற்பித்த தியான உத்திகளில் போதனைகளைப் பெற,  யோகதா சத்சங்க பாடங்களின்மாணவர்களாகச் சேருங்கள்.

விரிவுரைச் சுற்றுப்பயணங்கள்

சத்சங்கம் கேட்கும் பக்தர்கள்.

ஒவ்வொரு ஆண்டும் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா சன்னியாசிகள் நாடு முழுவதும் உள்ள நகரங்களுக்குச் சென்று பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகள் மற்றும் தியான உத்திகள், கூட்டுத் தியானங்கள், பொதுச் சொற்பொழிவுகள் மற்றும் பிராந்திய ஏகாந்தவாசங்கள் குறித்து வகுப்புகள் நடத்துகின்றனர்:

இந்த சன்னியாச வருகைகள் பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளுக்கு புதியவர்களுக்கான ஓர் அறிமுகத்தையும், பாட மாணவர்களுக்கான ஒய்எஸ்எஸ் தியான உத்திகளில் ஆழமான வழிகாட்டலையும் வழங்குகின்றன.

ஏகாந்தவாச நிகழ்ச்சிகளில் தியான உத்திகள் பற்றிய வகுப்புகள் அடங்கும் மற்றும் கூட்டுத் தியானம் மற்றும் தனிமுறையான பேச்சுகளுக்கான வாய்ப்புகளை அவை வழங்குகின்றன.

இடங்கள் மற்றும் தேதிகளின் முழுமையான பட்டியலுக்காக  சுற்றுப்பயண அட்டவணையைப்  பாருங்கள்.

உங்களுக்கு அருகேயுள்ள மையத்தில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகளைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் உள்ளூர் மையம், ஆசிரமம் அல்லது தியானக் குழுவைத் தொடர்பு கொள்ளுங்கள்.

பரமஹம்ஸ யோகானந்தரால் போதிக்கப்பட்ட தியான உத்திகளை உங்கள் சொந்த வீட்டின் தனிமையில் பயில விரும்பினால், எங்கள்   வீட்டுக் கல்விப் பாடங்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

இதைப் பகிர