ஆன்மீகமயமாக வாழும் கலை

தியானம் மற்றும் ஆன்மீக வாழ்க்கை பற்றிய பரமஹம்ச யோகானந்தரின் பாடங்கள்

பூமியில் நமது வாழ்வின் மெய்யான நோக்கம் என்ன?

யுக யுகங்களாக மறை-ஞானிகள், மகான்கள், துறவிகள் மற்றும் யோகிகள் அனைவரும் ஒரே பதிலைத்தான் வழங்கியுள்ளனர்: இறைவனுடன் ஒரு தனிப்பட்ட உறவை வளர்ப்பது—நம் அன்றாட வாழ்க்கைகளில் பரம்பொருளுடன் நம்மை இணைக்கும் ஒன்று. ஆன்மீக வாழ்க்கை அந்த உறவை வளர்ப்பதற்கான ஒரு நடைமுறைக்கேற்ற அணுகுமுறை ஆகும்.

ஆன்ம-அனுபூதி என்பது நாம் இறைவனின் சர்வவியாபகத்துடன் ஒன்றாக இருக்கிறோம் என்பதை; அது நம்மிடம் வர வேண்டும் என பிரார்த்தனை செய்ய வேண்டியதில்லை என்பதை; நாம் எப்போதும், இப்போதும் அவனில் ஒரு பகுதியே என்பதை உடலில், மனத்தில் மற்றும் ஆன்மாவில் அறிவதாகும். நாம் செய்ய வேண்டியதெல்லாம் நமது அறிதலை மேம்படுத்துவதே ஆகும். —ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர்

நாம் தேடிக் கொண்டிருக்கும் எல்லா அறிவும், படைப்புத்திறனும், மகிழ்ச்சியும், மற்றும் பாதுகாப்பும் நம் அகத்தேயே, நமது இருப்பின் சாரத்திலேயே உள்ளன.

இதை முழுமையாக உணர்ந்தறிவதே—வெறும் ஓர் அறிவார்ந்த தத்துவமாக அல்லாமல், ஆனால் நமது வாழ்க்கைகளின் ஒவ்வொரு பகுதிக்குள்ளும் வலிமையையும் புரிதலையும் கொண்டுவரும் ஓர் உண்மையான அனுபவமாக—யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்ன் கிரியா போதனைகளின் சாரம்.

உடல், மனம், ஆன்மா ஆகியவற்றில் சமநிலையும் இணக்கமும்

Devotees praying and meditatingநாங்கள் போதிக்கும் சமச்சீர் வாழ்க்கை-முறையும் தியானப் பயிற்சியும் உடல், மனம், ஆன்மா ஆகியவற்றின் இடை இணைப்பு பற்றிய ஒரு புரிதலை அடிப்படையாகக் கொண்டது. அவை நமது இயல்பின் அம்சங்கள் அனைத்தையும் வலுப்படுத்த, சமச்சீராக்க மற்றும் நலமாக வைத்திருக்க வடிவமைக்கப்பட்ட ஒரு முழுமையான அமைப்பு ஆகும்.

போதனைகள் ஒருவருக்கு வாழ்க்கைப் பயணத்தில் வருவது எதிலும் வெற்றி பெறுவதற்கான ஆதாரங்களை வழங்குகின்றன மற்றும் ஒருவருடைய பயிற்சியின் ஆழத்திற்கேற்ப முடிவான மாபெரும் மெய்ம்மை பற்றிய ஓர் ஆழ்ந்த புரிதலை அளிக்கின்றன.

இந்தியத் துணைக்கண்ட (மற்றும் உலகின் ஏனைய பகுதிகளில் எஸ் ஆர் எஃப் -ன் வாயிலாக) தியானம் செய்வோரின் மற்றும் ஆன்மீக சாதகர்களின் சமூகத்தில் ஆதரவையும் கூட்டுறவையும் காணுங்கள்.

ஆன்ம-அனுபூதியை நாடிக் கொண்டிருக்கும் அனைவருக்குமாக பரமஹம்ஸ யோகானந்தர் வழங்கிய உத்வேகத்தையும் சாதனாக்களையும் (ஆன்மீகப் பயிற்சியின் மற்றும் ஒழுக்கத்தின் பாதை) நாடியறிய கீழ்க்கண்ட பட்டியலிலிருந்து தேர்வு செய்யுங்கள், அல்லது…

பின்வரும் ஆதாரங்களைப் பார்வையிடுங்கள்:

Share this on

Share on facebook
Share on twitter
Share on whatsapp