ஆன்லைன் தியானங்களில் பங்கெடுப்பது எப்படி

உங்களுடைய சுற்றுப்புறத்தைத் தயார் செய்யுங்கள்

தியான வேளையில் அமர்வதற்கு ஓர் அமைதியான இடத்தைக் கண்டுபிடியுங்கள். நீங்கள் பயன்படுத்தும் அறை குறிப்பிடும்படியான சத்தமோ அல்லது கட்புலனாகும் கவனச் சிதறலோ இல்லாமல் இருக்க வேண்டும். உங்களிடம் தியானத்திற்காக நியமிக்கப்பட்ட இடம் இருக்குமானால், பின் அங்கிருந்தபடியே இணைவது விரும்பத்தக்கது. உங்களுடைய பின்பகுதி ஒழுங்கீனமில்லாமலும் எளிமையாகவும் இருப்பது விரும்பத்தக்கதாகும். எந்த ஒரு ஒய் எஸ் எஸ் கூட்டுத் தியானத்தையும் போல, சௌகரியமான மற்றும் எளிமையான ஆடைகளை அணியுங்கள்.

நம்பகத் தன்மை வாய்ந்த இணையதள இணைப்புடன் கூடிய ஒரு சாதனத்தைத் தேர்ந்தெடுங்கள்

நீங்கள் நம்பகத்தன்மைவாய்ந்த இணையதள இணைப்புடன் கூடிய ஒரு கணினி (தனிக்கணினி அல்லது ஆப்பிள் மேக் கணினி), பலகைக் கணினி, அல்லது திறன்பேசி (ஐ ஓ எஸ் அல்லது அன்ட்ராய்ட்) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம். ஆன்லைன் தியானத்தில் பங்கெடுக்கும் போது மற்ற எல்லா கணினி நிரல்களும் செயலிகளும் மூடப்பட வேண்டும். உங்களுடைய சாதனத்தின் பேட்டரி சார்ஜ் முழுமையாக இறங்கிவிடாமல் இருக்க ஒரு மின் இணைப்புடன் பொருத்திக்கொள்ள மறந்துவிடாதீர்கள்.

ஜூம் செயலியைப் பதிவிறக்கம் செய்து உள்ளீடு செய்யுங்கள்

ஒரு கணினியிலோ அல்லது மடிக்கணினியிலோ, https://zoom.us/support/download என்ற இணையதள முகவரிக்குச் சென்று ஜூம் செயலியைப் பதிவிறக்கம் செய்யுங்கள். கணினி உங்களுக்கு எடுத்துச் சொல்வதைப் படிப்படியாகப் பின்பற்றி அச்செயலியை உள்ளீடு செய்யுங்கள்.
ஒரு கையடக்க சாதனத்திலோ அல்லது பலகைக் கணினியிலோ,, கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் -க்குச் சென்று ஜூம் செயலியைத் தேடி ஜூம் க்ளௌட் மீட்டிங்ஸ் (ஜூம்.யுஎஸ்) -ஐ உள்ளீடு செய்யுங்கள்.

ஆன்லைன் தியானங்களில் பங்கெடுக்க நீங்கள் ஒரு ஜூம் அக்கௌண்ட் வைத்திருக்கத் தேவையில்லை.

Play Video
Play Video

ஒய் எஸ் எஸ் ஆன்லைன் தியான கேந்திர அட்டவணையைப் பார்க்கச் செல்லுங்கள்

இனிவரும் தியானங்களுக்கான ஜூம் இணைப்புகளை எமது நிகழ்ச்சி அட்டவணைப் பக்கத்தில் உள்ள அட்டவணை நிகழ்ச்சி விவரங்களில் காணலாம். நீங்கள் பங்கெடுக்க விரும்பும் தியான வேளையை (எல்லாத் தியானங்களும் உங்களுடைய உள்ளூர் நேரத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன) க்ளிக் செய்யுங்கள் மற்றும் பின் திறக்கும் அட்டவணைப் பக்கத்தில் உள்ள நீலநிற ஜூம் இணைப்பின் மீது க்ளிக் செய்யுங்கள். அப்படிச் செய்யும் போது நீங்கள் பதிவிறக்கம் செய்துள்ள ஜூம் செயலி தானாகவே செயல்பட ஆரம்பித்து உங்களைத் தியான அறைக்குள் இட்டுச் செல்லும்.

Play Video
Play Video

உங்கள் ஒலிவாங்கி தானாகவே அணைக்கப்படும்

நீங்கள் தியான அறைக்குள் நுழையும் போது, நீங்கள் தாமதமாக வந்தாலும் கூட, உங்கள் பக்கத்திலிருந்து எழும் சத்தம் மற்றவர்களுக்குக் கேட்காவண்ணம் உங்களுடைய ஒலிவாங்கி தானாகவே அணைக்கப்படும்.

"கணினி அல்லது சாதன ஆடியோவுடன் சேர்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்

தியான ஒலியைக் கேட்க கணினி அல்லது சாதன ஆடியோவுடன் சேர விருப்பத்தை தேர்வு செய்யவும்.

"உங்கள் வீடியோவை இயக்கு" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்

உங்களால் வழிநடத்துபவரையும் மற்ற பங்கேற்பாளர்களையும் காண முடியும், மற்றும் உங்களுடைய சொந்த காமிராவை இயங்க வைக்கும் விருப்பத்தேர்வு உங்களிடம் உள்ளது, அது இந்த மின்னியல் வடிவத்தில் கூட்டுத் தியான அனுபவத்தை மேம்படுத்துவதாக நீங்கள் காணலாம்.

தியானத்தில் பங்குபெறுங்கள்

தியான வேளை முழுவதுமே உங்களுடைய ஒலிவாங்கி அணைக்கப்பட்டிருந்தாலும், அழைப்பு மற்றும் மறுமொழியளிப்பு என்ற வடிவத்தில் வழிநடத்துபவரைப் பின்பற்றி பிரார்த்தனைகளைத் திரும்பத் திரும்பக் கூறுவதன் மூலமும் வழிநடத்துபவர் ஆர்மோனியத்தை வாசிக்கும் போது ஒன்றாக கீதங்களை இசைப்பதின் மூலமும் தியானத்தில் பங்குபெறுங்கள். வெகுவிரைவில் உங்களுடன் ஆன்லைனில் தியானம் செய்வதை நாங்கள் எதிர்நோக்குகிறோம்.

அடிக்கடி கேட்கப்பட்ட கேள்வி-பதில்கள்

ஜூம் என்பது நாங்கள் பயன்படுத்தும் காணொலிக் கூட்ட மென்பொருளின் பெயர் ஆகும். உங்களுடைய கருவியில் அதைப் பதிவிறக்கம் செய்து இயக்கும் அறிவுறுத்தல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

உங்களுடைய கணினியில் பதிவிறக்கம் செய்ய https://zoom.us/support/downloadஎன்ற முகவரிக்குச் செல்லுங்கள்.

ஒரு கையடக்க சாதனத்திலோ அல்லது பலகைக் கணினியிலோ கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் -க்குச் சென்று ஜூம் செயலியைத் தேடி  App Store (iOS) and search for “zoom”. Install ஜூம் க்ளௌட் மீட்டிங்ஸ் -ஐ உள்ளீடு செய்யுங்கள்.

ஜூம் பயன்படுத்த எளிதானது ஆனால் நீங்கள் அதை முன்னெப்போதும் பயன்படுத்தியிருக்கவில்லை மற்றும் அதைப் பற்றி அதிகத் தகவல் தேவை என்றால், ஜூம் தமது தொடங்குகிறது பக்கத்தில் வழங்கும் பல பயிற்சிக் காணொலிகளையும் மற்ற ஆதரவையும் பயன்படுத்துங்கள்.

ஓர் ஆன்லைன் சேவையில் இணைய ஒரு ஜூம் அகௌண்ட் -க்கு பதிவு செய்யத் தேவையில்லை, ஆனால் நாங்கள் அதைப் பெரிந்துரை செய்கிறோம். ஓர் அடிப்படை கணக்கு இலவசமாகக் கிடைக்கிறது மற்றும் அது திரையில் உங்களுடைய பெயர் மற்றவர்களுக்கு எப்படித் தெரிய வேண்டும் என்பது போன்ற விருப்பத்திற்கேற்ற சில மாறுதல்களைச் செய்ய உங்களுக்கு அனுமதியளிக்கிறது. (உங்களுடைய உண்மையான பெயர் மற்றும்/ அல்லது ஊர் ஆகியவற்றை மாற்ற வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.)

இலவச அகௌண்ட் -க்கு 40 நிமிட கால வரையறை என்று குறிப்பிட்டிருந்தாலும் கூட, ஆன்லைன் தியான கேந்திரம் அதை நடத்துவதால், உங்களால் எமது தியானங்களின் முழுமையான கால அளவு வரை தடையின்றி பங்குபெற முடியும்.

இது பெரும்பாலும் ஒரு தனிப்பட்ட விருப்பத்தைப் பொருத்த மற்றும் உங்களிடம் இருப்பதைப் பொருத்த விஷயம் ஆகும். ஜூம் தனிக்கணினி, ஆப்பிள் மேக், அல்லது ஐஓஎஸ்/ அன்ட்ராய்ட் திறன்பேசி, அல்லது பலகைக்கணினி போன்ற எந்த சாதனத்திலும் உள்ளீடு செய்யப்பட முடியும். ஒரு நல்ல இணையதள இணைப்புடன் கூடிய ஒரு சமீபத்திய தனிக்கணினி அல்லது மேக் கணினி மிகச்சிறந்த ஒலி-ஒளி அனுபவத்தை உங்களுக்குப் பெரும்பாலும் அளிக்கும். ஆனால் நீங்கள் திறன்பேசியின் மூலமோ அல்லது பலகைக் கணினியின் மூலமோ இணைய விரும்பினால் அதுவும் சரியே.

குறிப்பு: ஒலிவாங்கி-ஒலிபெருக்கி நெருக்கமாக இருப்பதால் ஏற்படும் சத்தத்தைத் தவிர்க்க, ஒரே ஒரு கணினியுடன் அல்லது கருவியுடன் மட்டுமே தியானத்தில் பங்குபெறுங்கள்.

உங்கள் மொபைல் சாதனத்தில் சேர, “Wi-Fi or Cellular Data” or “Dial in.” அல்லது “டயல் இன்” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். “Wi-Fi or Cellular Data” விருப்பம் உங்கள் இணைய இணைப்பு அல்லது தரவைப் பயன்படுத்தி ஆடியோ மற்றும் வீடியோ ஜூம் மீட்டிங்கில் இணைக்கப்படும். “Dial in” விருப்பம் உங்கள் மொபைல் டேட்டா அல்லது இணைய இணைப்பைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, உங்கள் ஃபோன் லைன் வழியாக அழைக்கும். ஜூம் ஆடியோவைக் கேட்க உங்களுக்கு ஃபோன் எண்ணை வழங்குகிறது. உங்களிடம் இணைய இணைப்பு இல்லையெனில் “Dial in” விருப்பம் பயன்படுத்தப்படும். “Wi-Fi or Cellular Data” என்பது பரிந்துரைக்கப்படும் விருப்பமாகும். ஃபோன் மூலம் ஆடியோவைக் கேட்க ஃபோன் எண்ணை டயல் செய்வதற்கு கட்டணம் விதிக்கப்படலாம் என்பதை தயவுசெய்து கவனிக்கவும்; உங்கள் சேவை வழங்குனருடன் சரிபார்க்கவும்.

ஒரு தியானத்தில் இணையும் போது, எந்த ஊடகத்தின் மூலம் ஒலியைக் கேட்க வேண்டும் என்று தேர்ந்தெடுக்க வேண்டும், இல்லாவிடில் உங்களுக்கு ஒலி கேட்கவே கேட்காது. உங்களுடைய விருப்பத்தேர்வுகள்: “Join with computer audio” or “call in”. பொதுவாக நீங்கள் “Join with computer audio” ஐ தேர்ந்தெடுக்க விரும்புவீர்கள். இது உங்களுடைய இணையதள இணைப்பை அல்லது தரவைப் பயன்படுத்தும். உங்களுடைய தொலைபேசி அழைப்பின் மூலம் ஒலியைக் கேட்க விரும்பினால் (கைபேசி தரவின் அல்லது இணையதள இணைப்பின் மூலமாக அல்லாமல்), “Dial in” ஐ தேர்வு செய்யுங்கள். அதை நீங்கள் தேர்ந்தெடுத்தால், ஒலியை டயல் செய்து கேட்கும் பொருட்டு ஜூம் உங்களுக்கு ஒரு தொலைபேசி எண்ணைக் கொடுக்கும். தியானத்தில் இணைவதற்கு நீங்கள் பயன்படுத்தும் கருவியில் ஏதேனும் ஒரு காரணத்தால் ஒலிபெருக்கி வேலைசெய்யவில்லை மற்றும் அதற்கு மாற்றாக வேறு ஒரு தொலைபேசி எண்ணைப் பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்றால் இதைப் பயன்படுத்தலாம். ஆயினும் நாங்கள் குறிப்பிட்டது போல, “Join with computer audio” தான் பரிந்துரைக்கப்படுகிறது. தொலைபேசி அழைப்பின் மூலம் ஒலியைக் கேட்க தொலைபேசி எண்ணை டயல் செய்தால் அதற்கான தொலைபேசிக் கட்டணத்தைக் கட்ட வேண்டியிருக்கும், எனவே உங்களுடைய சேவை வழங்குபவரிடம் அது பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டுகிறோம்.

கணினித் திரையை மட்டுமே ஒரே ஒளி ஆதாரமாகப் பயன்படுத்துவது பொருத்தமானதல்ல. மற்றவர்கள் உங்களைப் பார்க்க ஏதுவாக உங்களுடைய அறை நன்றாக ஒளிமிகுந்ததாக இருக்க வேண்டும். உங்களுடைய முகத்தின் மற்றும் மேற்பகுதி உடலின் மீது சீரான ஒளி படுவது மிகச் சிறந்தது. தியானத்தின் போது இயற்கை ஒளி போதுமானதாக இல்லையென்றால், தலைக்கு மேல் ஒரு விளக்கும் மேஜை விளக்கும் போதுமானதாக இருக்கும். நீங்கள் இயற்கை ஒளியைச் சார்ந்திருக்கிறீர்கள் மற்றும் தியானத்தின் போது ஆதவன் மறையப் போகிறான் என்றால், நீங்கள் இருட்டில் மறைந்துவிடா வண்ணம், அறை விளக்குகளையும் போட்டு வைத்திருப்பது நல்லது. ஓர் அதிக ஒளிமிகுந்த சாளரத்திற்கு மிகவும் அருகில் இருந்தால், அதன் பிரதிபலிப்பால் உங்களுடைய உருவம் சரியாகத் தெரியாமல் போகலாம்.

ஒளியைப் பற்றிய முக்கியத்துவத்துடன் கூடுதலாக, ஆன்லைன் தியானத்திற்கேற்ற ஒரு பின்னணிச் சூழல் கொண்ட ஓர் அறையையோ அல்லது இடத்தையோ உங்கள் வீட்டில் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இது உங்களுடைய வழக்கமான தியான அறையாக இருக்க வேண்டிய அவசியமில்லை (அது வழக்கமாக விரும்பத்தக்கது என்றாலும் கூட), ஆனால் சாத்தியமானால், அது குறிப்பிடும்படியான சத்தமோ மற்ற பங்கேற்பாளர்களுக்கு கட்புலனாகும் கவனச்சிதறல்களோ இல்லாமல் இருக்க வேண்டும். உங்களுக்குப் பின்னால் சுற்றும் காத்தாடிகள், அல்லது மக்கள், வளர்ப்பு மிருகங்கள், அல்லது போக்குவரவு ஆகியவை கடந்து செல்வது போன்ற நடமாட்டம் உள்ள பின்னணிச் சூழலைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.

பொதுவாக, ஒரு கூட்டுத் தியானத்தில் பங்கெடுப்பதின் அனுபவத்தைப் பெற ஏதுவாக உங்களுடைய காமிராவை ஆன் செய்து வைத்திருப்பதை நாங்கள் ஊக்குவிக்கிறோம், ஆனால் நிச்சயமாக நீங்கள் உங்களுடைய காணொலியை அணைத்தும் வைத்திருக்கலாம். நீங்கள் உங்களுடைய காணொலியை ஆன் செய்வதைத் தேர்ந்தெடுத்தால், ஒரு பொதுவெளி தியானத்திற்கேற்றவாறு நீங்கள் உடையணிந்திருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.

ஆன்லைன் தியானங்களின் போது எல்லாப் பங்கேற்பாளர்களின் ஒலிவாங்கிகளும் தானாகவே அணைக்கப்பட்டுவிடும், ஆகவே மற்ற பங்கேற்பாளர்களுக்கு எந்த சத்தத் தொந்திரவுகளும் இருக்காது.

தியானம் ஆரம்பிக்குமுன் வழிநடத்துபவரின் ஒலியளவு கேட்கும்படியாக இருக்குமாறு சரிபார்த்து உறுதிசெய்யப்படுகிறது. அதன்பின், ஒலியளவு பங்கேற்பாளரின் கருவியைச் சார்ந்தது. தியானங்களின் போது ஏற்படும் ஒலிசார்ந்த பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண, தனிப்பட்ட ஒலியளவைக் கட்டுப்படுத்தும் வசதி கொண்ட, தனியாக மின்னூட்டம் செய்யப்பட்ட வேறு ஓர் ஒலிபெருக்கியை இணைப்பதையோ, அல்லது தியானங்களில் பங்கேற்க மற்றொரு கருவியை முயற்சி செய்வதையோ நாங்கள் பரிந்துரை செய்கிறோம். அல்லது நீங்கள் காதொலிப்பானைப் (Headphone) பயன்படுத்த விரும்பினால், ஒரு வெளிப்புற காதொலிப்பான் அலைபெருக்கி (Headphone amplifier) இதற்குத் தீர்வாக அமையும்.

ஆன்லைன் தியானத்தில் தாமதமாக இணைவது, ஆசிரமம், கேந்திரம் அல்லது மண்டலி ஆகியவற்றில் நடப்பதைவிட வேறுபட்டது: நீங்கள் ஜூம் கூட்டத்தில் நுழையும் போது மற்ற பங்கேற்பாளர்களுக்கு அது இடையூறாக இராது, ஆகவே தியானம் ஆரம்பமாகி விட்டிருந்தால் கூட, நீங்கள் எந்த நேரத்திலும் ஆன்லைன் தியானத்தில் இணைவதை வரவேற்கிறோம். நிச்சயமாக, நீங்கள் சரியான நேரத்தில் இணைய முடிந்தால், அப்படிச் செய்யுமாறு உங்களை ஊக்குவிக்கிறோம்; ஆயினும் நீங்கள் கலந்துகொள்ள வசதியான எந்த தியானப் பகுதியிலும் பங்கேற்பது முழுமையாக ஏற்றுக்கொள்ளத்தக்கதே.

“Host has Another Meeting in Progress” என்ற பிழைச்செய்தி வந்தால், பொதுவாக இது நீங்கள் தவறான ஜூம் இணைப்பிலிருந்து தியானத்தில் இணைய முயற்சி செய்துகொண்டிருக்கிறீர்கள் என்று பொருள்; ஒருவேளை நிகழ்ச்சி அட்டவணையிலிருந்து தவறான அட்டவணை நிகழ்ச்சியின் மீது தெரியாமல் க்ளிக் செய்திருக்ககூடும். நீங்கள் அட்டவணையில் சரியான நிகழ்ச்சியின் சரியான நேரத்தின் மீது க்ளிக் செய்கிறீர்களா என்பதை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்ளுங்கள் (எடுத்துகாட்டாக, சிலசமயங்களில் சாதகர்கள் அட்டவணையில் மாலை 9 மணி என்பதை காலை 9 மணி என்பதாக நினைத்துக்கொள்ளக் கூடும்).

ஆன்லைன் தியானங்களில் நுழையுமுன் ஒரு காணொலி முன்னோட்டப் பெட்டி (a video preview box) உங்களுக்குக் காட்டப்பட வேண்டும் என நீங்கள் விரும்பினால் “Always Show Video preview” என்ற ஒன்று உங்கள் ஜூம் செட்டிங்ஸ் -ல் உள்ள தேர்வுப்பட்டியலில் உள்ளது. அது ஆன் -ல் இருக்கும்படி டிக் செய்யப்பட்டால், ஒரு காணொலி முன்னோட்டப் பெட்டி திறக்கும் மற்றும் கூட்டத்தில் நுழையுமுன் உங்கள் காணொலியை ஆன் அல்லது ஆஃப் செய்யும் வாய்ப்பை உங்களுக்குக் கொடுக்கும். கூடுதலாக, உங்களுடைய ஜூம் செட்டிங்ஸ் -ல் “Always turn my video off”என்பதை நீங்கள் ஆன் செய்து கொள்ளலாம். இதன் பொருள் உங்களுடைய காணொலி அணைக்கப்பட்ட நிலையில் நீங்கள் எப்போதும் உள்ளே நுழைவீர்கள் என்பதாகும்.

நீங்கள் ஒரே அறையில் உங்களுடைய கணவர்/ மனைவி/ நண்பர்/ குடும்பம் ஆகியோருடன் தியானம் செய்யும் போது ஒரே கருவியையும் ஜூம் அகௌண்டையும் பயன்படுத்தி அவர்களுடன் ஆன்லைன் தியானங்களில் இணைவது முற்றிலும் சரியே.

தியானங்களுக்கு ஏற்றவாறும் எளிமையாகவும் இருக்கும் உடைகளை அணியுங்கள். ஆசிரமம், கேந்திரம், அல்லது மண்டலி ஆகியவற்றில் நேரடியாகப் பங்கெடுக்கும் போது நீங்கள் அணியும் அதே உடைகள் ஆன்லைன் தியானங்களுக்கும் பொருந்தும். அதே மரியாதையுடனும் பயபக்தியுடனும் இந்தத் தியான வேளைகளிலும் நடந்துகொள்ளுங்கள்.

எமது ஒருமணி நேர ஆன்லைன் தியானம் குழுவுடன் செய்யும் ஒய் எஸ் எஸ் சக்தியூட்டும் உடற்பயிற்சிகளுடன் துவங்குகிறது, அதையடுத்து ஒரு துவக்கப் பிரார்த்தனை, ஒரு கீதம் இசைத்தல், ஓர் அமைதியான தியான வேளை, மற்றும் பரமஹம்ஸ யோகானந்தரின் குணமளிக்கும் உத்தியுடனும் நிறைவுப் பிரார்த்தனையுடனும் நிறைவுபெறுகிறது

ஆன்லைன் தியானத்தில் பங்கெடுக்கும் போது நீங்கள் பார்க்கும் வழிபாட்டுப் பீடப் படங்கள் ஒய் எஸ் எஸ் ஆசிரமங்களில் அல்லது கேந்திரங்களில் ஒன்றிலிருந்து வருகின்றன.

எங்களால் முடியும் போது எமது அட்டவணையில் புதிய தியான வேளைகளை நாங்கள் தொடர்ந்து சேர்ப்போம். நீங்கள் எதிர்காலத்தில் அட்டவணையில் பார்க்க விரும்பும் தியானங்களையும் நேரங்களையும் பற்றி, மற்றும் கூடுதலாக எந்தத் தியானங்களுக்கும் நேரங்களுக்கும் உங்களால் வழிநடத்தவும் ஆதரவு அளிக்கவும் உதவ தொண்டு செய்ய முடியும் என்பதையும் எல்லோரிடமிருந்தும் கேட்க ஆர்வத்துடன் இருக்கிறோம்.

போற்றத்தக்கது! குருதேவரின் ஆன்லைன் தியானங்களுக்காக சேவை செய்யவும் முன்னோடியாக இருக்கவும் நீங்கள் விரும்புவதைக் கேட்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்! உங்கள் விருப்பத்தைப் பதிவுசெய்ய, YSS/SRF Online Meditation Center Program -ல் YSO program page for OMC/ODK க்கு விஜயம் செய்யுங்கள். நீங்கள் தொண்டர் வலைதளத்தில் ஒரு கணக்கைத் தொடங்கப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுவீர்கள். உங்களுடைய சுய-விவரங்களை நிறைவுசெய்த பிறகு, எமது நிகழ்ச்சிப் பக்கத்திற்குச் (இணைப்பு மேலே உள்ளது) சென்று ஒய் எஸ் எஸ் வழிநடத்துபவருக்கான அல்லது வரவேற்பாளருக்கான சேவை வாய்ப்புகளைப் பாருங்கள். எந்தப் பொறுப்பு உங்களுக்குப் பொருத்தமானதோ அதற்கான ‘I want to volunteer’ என்பதை க்ளிக் செய்யுங்கள். விரைவில் உங்களுடன் தொடர்புகொள்ள ஆர்வத்துடன் இருக்கிறோம்.

ஒய் எஸ் எஸ் ஆன்லைன் தியான மையம் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா -விற்கு அளிக்கப்படும் நன்கொடைகள் வாயிலாக மட்டுமே ஆதரவளிக்கப்படுகிறது. எமது ஆன்லைன் நன்கொடைப் பக்கத்தின் வாயிலாக நீங்கள் ஆதரவளிப்பதை நாங்கள் வரவேற்கிறோம்.

ஒய் எஸ் எஸ் ஆன்லைன் தியான மையம் பயன்படுத்தும் டீம்அப் (TeamUp) என்ற காலண்டர் மென்பொருள் பயனாளிகள் அன்றாட நிகழ்ச்சிகளை அறிவிக்கும் மின்னஞ்சல்களுக்காகப் பதிவுசெய்வதை அனுமதிக்கிறது. இந்தத் தானியங்கி மின்னஞ்சல்களுக்காக நீங்கள் எமது இணையதளத்தில் உள்ள காலண்டர் வழியாக இங்கே பதிவு செய்யலாம்: yssofindia.org/online-meditation/calendar.
காலண்டரின் மேல்-வலது பக்கத்தில் உள்ள காலண்டர் > Preferences > Daily Agenda என்ற பகுதிக்குச் சென்று உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை உள்ளீடு செய்யுங்கள்.

உங்களுக்கு மேலும் ஏதேனும் உதவி தேவைப்பட்டால், எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்

இதைப் பகிர