
யோகதா சத்சங்க கிளை ஆசிரமம் – நொய்டா ஜனவரி 2010 ல், முதல் கட்ட கட்டுமான நிறைவிற்கு பின் திறக்கப்பட்டது. டெல்லி-உ.பி எல்லையிலிருந்து வெறும் நாலு கிலோ மீட்டர் தொலைவிலே உள்ள ஐந்து ஏக்கர் நிலப் பரப்பில் கட்டப்பட்டுள்ள இந்த வளாகம், ஒரு நிர்வாகக் கட்டிடத்தொகுப்பையும் இரண்டு ஏகாந்த வாச கட்டிடத் தொகுப்புகளையும் கொண்டுள்ளது. நிர்வாகக் கட்டிடத் தொகுப்பு, ஒரு முழு நிலவறைப் பகுதி கொண்ட மூன்று மாடி கட்டிடமாகும். இது ஒரு தியானைக் கூடம், வரவேற்பறை, புத்தக விற்பனை மற்றும் நூல் நிலையம், ஆலோசனை வழங்கும் அறைகள், சமையல் மற்றும் உணவருந்தும் அறைகள், அலுவலகங்கள், சன்னியாசிகளுக்கான அறைகள் மற்றும் தேசிய தலைநகர் பகுதி ஊடே பிரயாணம் செய்யும் பக்தர்களுக்கு மூன்று நாட்கள் வரை முன்பதிவுடன் தங்குவதற்கான அறைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
தனிப்பட்ட மற்றும் வழிநடத்தப்படும் ஆன்மீக சாதனாவைக் கருத்தில் கொண்டு, ஆடவருக்கும் மகளிருக்கும் தனித்தனியாக ஒதுக்கப்பட்டுள்ள ஒருவர்-தங்கும் முப்பது அறைகளைக் கொண்டுள்ள இரண்டு ஏகாந்தவாசக் கட்டிடத் தொகுப்புகள் இந்த ஆசிரமத்தின் சிறப்பு அம்சம் ஆகும். பக்தர்கள் இங்கே வந்து 3-5 நாட்கள் வரை தங்கி, மௌனம், படிப்பு மற்றும் சாதனாவுடன் கூடிய ஏகாந்த வாசத்தை அனுபவிக்கவும், ஆசிரமத்தில் தங்கியுள்ள சன்னியாசிகளின் ஆலோசனை பெற்றுப் பயனடையவும் அன்புடன் அழைக்கப் படுகின்றனர். இத்துடன் கூட சன்னியாசிகளால் பெரும்பாலும் வார இறுதியில் வழிநடத்தப்படும் வழக்கமான சாதனா வகுப்புகளும் உண்டு. இவை 3-5 நாட்கள் வரை நீடிக்கலாம் மற்றும் இவை நமது தெய்வீகக் குருதேவரின் போதனைகளிலிருந்து எடுக்கப்பட்ட குறிப்பிட்ட தலைப்புகள், எப்படி-வாழ-வேண்டும் கோட்பாடுகள் மேலும் ஒருமுகப்பாடு மற்றும் தியான உத்திகளின் அடிப்படையில் அமைக்கப்படுகின்றன. இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் முன்பதிவுகள் தேவை.
சிறிய சங்கம், பெரிய சங்கம் ஆகிய இரண்டுமே கூட ஆசிரமத்தில் நடத்தப்படுகின்றன.
உங்கள் வருகையைத் திட்டமிடுங்கள்
YSS மற்றும் SRF பாட மாணவர்கள் ஐந்து நாட்கள் வரை ஆசிரமத்தில் தங்க வரவேற்கப்படுகிறார்கள். தனிப்பட்ட ஏகாந்தவாசத்திலோ அல்லது ஒரு வழிகாட்டப்பட்ட ஏகாந்தவாசத்திலோ உத்வேகமுற்று புத்துணர்ச்சி பெற எங்களுடன் சேருமாறு பக்தர்களை ஊக்குவிக்கிறோம். இந்த ஏகாந்தவசங்களின் போது, நீங்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை YSS சன்னியாசிகள் நடத்தும் கூட்டு தியானங்களில் பங்கேற்கலாம், மேலும் யோகதா சத்சங்க போதனைகளின் ஆய்வு மற்றும் பயிற்சியில் ஆன்மீக ஆலோசனையும், வழிகாட்டுதலையும் பெறலாம்.
ஆசிரமத்தில் தங்குமிட வசதி கோர கீழே உள்ள பட்டனைக் கிளிக் செய்யுங்கள்.