குருவின் பங்கு
ஒரு உண்மையான குரு சாதாரண ஆன்மீக ஆசான் அல்ல, ஆனால் இறைவனுடன் ஐக்கியத்தை அடைந்தவர்; ஆகவே மற்றவர்களை அந்த இலக்கை நோக்கி அழைத்துச் செல்ல தகுதியுடையவர்.
சமஸ்கிருத வேதங்கள் குருவை “இருளை விரட்டுபவர்”(கு, “இருள்” மற்றும் ரு, “விரட்டுபவர்”). குருவின் பங்கானது, குருவிற்கும் சீடனுக்கும் இடையில் உருவான மிகவும் தனிப்பட்ட ஆன்மீகப் பிணைப்பின், அதாவது சீடரின் பங்கிற்கு ஒரு விசுவாசமான ஆன்மீக முயற்சியும் குரு வழங்கிய தெய்வீக ஆசீர்வாதங்களும் சேர்ந்த ஐக்கியத்தின், வாயிலாக இறைவனில் விடுதலையைக் காண அவரது சீடர்களுக்கு உதவுவதாகும். பகவத் கீதையில், அர்ஜுனன் இலட்சிய பக்தனின் அடையாளமாக, சரியான சீடனாக விளங்குகிறான்.
யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் பாடங்களின் மாணவர்கள் கிரியா யோகம் தீட்சை பெறும் போது, அவர்கள் பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் அவரது குரு பரம்பரையின் சீடர்களாக ஆகிறார்கள்.
ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர் – ஒய் எஸ் எஸ் குரு பரம்பரையின் இறுதி வாரிசு
பரமஹம்ஸ யோகானந்தர், தமது மறைவிற்கு முன், தான் ஒய் எஸ் எஸ் குரு பரம்பரையின் இறுதி வாரிசாக இருக்கட்டும் என்பது இறைவனின் விருப்பம் என்று கூறினார். அவரது சங்கத்தில் அடுத்தடுத்து வரும் எந்த ஒரு சீடரோ அல்லது தலைவரோ ஒருபோதும் குரு என்ற பட்டத்தை ஏற்க மாட்டார்கள்.
இந்த தெய்வீகக் கட்டளை மத வரலாற்றில் தனித்துவமானது அல்ல. சீக்கிய மதத்தை ஸ்தாபித்த மாபெரும் துறவி குருநானக் காலமான பிறகு, குருக்களின் மரபுவழித்தொடர் வழக்கமாக இருந்தது. அந்த வரிசையில் பத்தாவது குரு, அவர் அந்த குரு பரம்பரையில் இறுதி வாரிசாக இருக்க வேண்டும் என்றும், இனிமேல் போதனைகள்தான் குருவாக கருதப்பட வேண்டும் என்றும் அறிவித்தார்.
பரமஹம்ஸர், தான் காலமான பிறகு, தான் நிறுவிய சங்கங்களான யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ஸெல்ஃப் ரியலைசேஷன் ஃபெலோஷிப் மூலம் தொடர்ந்து பணியாற்றப் போவதாக உறுதியளித்தார். அவர் கூறினார், “நான் சென்ற பின்னர் போதனைகளே குருவாக இருக்கும்…. போதனைகளின் வாயிலாக நீங்கள் என்னுடனும் என்னை அனுப்பிய குருமகான்களுடனும் ஒத்திசைவாய் இருப்பீர்கள்”
பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் அவரது குருநாதரைப் பற்றி ஒரு யோகியின் சுயசரிதத்தில்.
குரு-சீடர் உறவு குறித்த ஒலிப்பதிவு உரைகள்: