Paramahansaji praying with lotus on sides.

“பிரார்த்தனை என்பது ஆன்மாவின் கோரிக்கை. இறைவன் நம்மை பிச்சைக்காரர்களாகப் படைக்கவில்லை; அவன் நம்மை அவனுடைய சாயலில் படைத்தான். . . .ஒரு பணக்கார வீட்டிற்குச் சென்று பிச்சைக் கேட்கும் ஒரு பிச்சைக்காரன், ஒரு பிச்சைக்காரனின் பங்கைத்தான் பெறுகிறான்; ஆனால் மகன் தனது பணக்கார தந்தையிடம் கேட்கும் எதையும் பெற முடியும்…

“எனவே நாம் பிச்சைக்காரர்களைப் போல நடந்து கொள்ளக் கூடாது. கிருஷ்ணர், கிறிஸ்து, புத்தர் போன்ற தெய்வீகமானவர்கள் நாம் இறைவனின் பிரதிபிம்பத்தில் படைக்கப்பட்டுள்ளோம் என்று கூறியபோது பொய் சொல்லவில்லை. “

—பரமஹம்ஸ யோகானந்தர்

ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் நூல்களிலிருந்து சில பகுதிகள்

இந்தியாவின் புராதன விஞ்ஞானி-ஞானிகள், நேசிக்கும் இறைவனுடன் ஆனந்தத்தில் ஆழ்த்தும் தொடர்பை எவ்வாறு அனுபவிப்பது என்பதைக் கண்டறிந்தனர். பரமஹம்ஸ யோகானந்தர், தியானத்தின் யோக அறிவியல் மற்றும் பிரார்த்தனை செய்வதற்கான ஒரு புதிய வழி மூலம், இறைவனின் அதே நேரடி அனுபவத்தை நாம் எப்படிப் பெற முடியும் என்பதை நமக்குக் கற்பிக்கிறார். அவர் எழுதினார்:

“பிரார்த்தனை” என்பதற்குப் பதிலாக நான் ‘வேண்டுதல்’ எனும் வார்த்தையை விரும்புகிறேன், ஏனென்றால் பிந்தையது, இறைவன் ஓர் அரச கொடுங்கோலன், அவனிடம் நாம் பிச்சைக்காரர்களைப் போன்று கெஞ்சி கேட்டு, முகஸ்துதி செய்ய வேண்டும் என்ற பழமையான மற்றும் இடைக்கால கருத்து இல்லாதது. சாதாரண பிரார்த்தனையில் ஒரு பெரும் பிச்சைக்காரத்தனமும் அறியாமையும் உள்ளது…எவ்வாறு பிரார்த்தனை செய்வது மற்றும் தங்கள் பிரார்த்தனையால் இறைவனைத் தொடுவது என்பதை வெகு சிலரே அறிவர்.”

“அவனிடம் கோருவதற்கு இறைவனிடமிருந்து மரபுரிமையாகப் பெற்ற தெய்வீக உரிமை உங்களுக்கு உள்ளது; நீங்கள் அவனுக்கே சொந்தமானதால் அவன் உங்களுக்கு பதிலளிப்பான். நீங்கள் அவனை இடையறாது அழைத்தால், அவன் உங்கள் பக்தியின் வலையிலிருந்து தப்ப முடியாது. உங்கள் பிரார்த்தனையின் ஒளியுடன் ஆகாயம் கடையப்படும் வரை நீங்கள் பிரார்த்தனை செய்தால், நீங்கள் கடவுளைக் காண்பீர்கள்.”

எனது பிரார்த்தனைகள் மற்றவர்களுக்கு எப்படி உதவ முடியும்?
ஸ்ரீ தயா மாதா
நேரம்: 4:26 நிமிடங்கள்

இந்த சவாலான காலங்களில், பிரார்த்தனையின் சக்தியால் நாம் நிறைய செய்ய முடியும் — நமக்காக மட்டுமல்ல, நம் குடும்பங்களுக்கும், நம் நண்பர்களுக்கும், நம் அண்டை அயலாருக்கும், உலகத்திற்கும் சேவை செய்ய முடியும்.

யோகதா சத்சங்க பாடங்கள் மூலம் யோகத்தின் பயன் விளைவிக்கும் பிரார்த்தனை உத்திகளை நீங்கள் கற்றுக் கொள்ளவும் இறைவனுடனான உங்கள் சொந்த தனிப்பட்ட உறவை வளர்த்துக் கொள்ளவும் முடியும்.

இந்த ஆன்லைன் உதவியாதாரங்களை ஆய்வு செய்யுங்கள்:

பிற பிரார்த்தனை உதவியாதாரங்கள்:

In the Sanctuary of the Soul book cover.

இன் தி சாங்க்சுவரி ஆஃப் தி ஸோல்

How you can talk with God book cover.

இறைவனுடன் நீங்கள் பேசுவது எப்படி

Answered prayers by Yogananda.

பதிலளிக்கப்பட்ட பிரார்த்தனைகள்

இதைப் பகிர