ஏகாந்த வாச நிகழ்ச்சிகள்

அன்றாட வேலைகளில் இருந்த விலகி, மௌனத்தில் உங்களை புத்துணர்ச்சியடையச் செய்து, தெய்வீகத்தைப் பற்றிய உங்கள் விழிப்புணர்வை ஆழப்படுத்துங்கள்.

டெஸ்ட் 3

இறைவனுடனான தனிமை, உங்களுடைய மனம்‌, உடல்‌, ஆன்மா ஆகியவற்றிற்கு செய்யப்‌
போவதைக்‌ கண்டு நீங்கள்‌ ஆச்சரியப்படுவீர்கள்‌…. மெளனத்தின்‌ நுழை வாயிலின்‌ ஊடாக அறிவு மற்றும்‌ அமைதி ஆகிய குணப்படுத்தும்‌ சூரியன்‌
உங்கள்‌ மேல்‌ பிரகாசிப்பான்‌.

— ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர்

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியாவின் எப்படி-வாழ-வேண்டும் ஏகாந்த வாச நிகழ்ச்சிகள் ஆன்மீக புதுப்பித்தலைத் தேடும் மற்றும் அன்றாட வாழ்க்கையின் அழுத்தங்களிலிருந்து, ஒரு சில நாட்களுக்கு மட்டுமே என்றாலும் கூட, விட்டு விலகி தெய்வீகத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஆழப்படுத்த விரும்பும் எவருக்கும் திறந்திருக்கும். இந்த நிகழ்ச்சிகள், பரமஹம்ஸ யோகானந்தரின் வார்த்தைகளில், “எல்லையற்ற பரம்பொருளால் மறுவூட்டம் பெறும் பிரத்தியேக நோக்கத்திற்காக [நீங்கள்] செல்லக்கூடிய மௌனத்தின் டைனமோ” வை வழங்குகின்றன.

அன்றாட வாழ்க்கையின் இடைவிடாத செயல்பாடுகளிலிருந்து விலகி, உள்ளார்ந்த மௌனத்தில் கவனம் செலுத்தி, இறைவனின் அமைதி மற்றும் ஆனந்தம் எனும் அமிர்தத்தை அருந்த நேர்மையான சாதகர்களுக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைக்கிறது. அவர்கள் ஓய்வெடுக்கவும், உத்வேகம் பெறவும், ஆன்மீக ரீதியில் புத்துணர்ச்சியடையவும் இந்த இடத்திற்கு வரலாம். அல்லது ஆழ்ந்த சிந்தனை, புரிதல், உள்ளார்ந்த வழிகாட்டுதல் ஆகியவற்றால் மட்டுமே தீர்க்கப்படக்கூடிய கேள்விகளுக்கான பதில்களைத் தேடவோ அல்லது பிரச்சினைகளுக்கான தீர்வுகளைத் தேடவோ இந்த தியான இடத்திற்கு வரலாம்.

ஒருவர் தனிப்பட்ட ரிட்ரீட்க்கு வரலாம் அல்லது பரமஹம்ஸ யோகானந்தரின் எப்படி-வாழ-வேண்டும் ஞானத்தை அடிப்படையாகக் கொண்ட தினசரி தியானங்கள் மற்றும் உத்வேகம் தரும் அமர்வுகளின் ஒருமுனைப்புடனான நிகழ்ச்சியை வழங்கும் நடத்தப்படும் ரிட்ரீட் நிகழ்விலும் சேரலாம். இந்த ஏகாந்த வாச நிகழ்வுகள் ஆண்டு முழுவதும் YSS ஆசிரமங்களிலும் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு YSS ஏகாந்த வாச மையங்களிலும் திட்டமிடப்பட்டுள்ளன.

YSS ஏகாந்த வாச இடங்கள்

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா நாடு முழுவதும் ஏகாந்த வாசங்களுக்காகவே பிரத்தியேகமாக பல இடங்களைக் கொண்டுள்ளது. நகர வாழ்க்கையின் சலசலப்புகளிலிருந்து விலகி, இயற்கை மற்றும் அமைதியான சூழலில் அமைந்துள்ள இந்த இடங்கள், ரிட்ரீட் இல் கலந்து கொள்பவர்கள் ஓய்வெடுக்கவும், பயிற்சிகளில் அவர்கள் ஆழந்து செல்லவும், அவர்களின் உண்மையான ஆன்மாவுடன் நெருங்கி இருக்கவும் ஒரு சிறந்த சூழலை வழங்குகிறது.

இந்த இடங்களுக்குக் கூடுதலாக, பல்வேறு YSS ஆசிரமங்களிலும் ஏகாந்த வாச நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு YSS ஆசிரமங்களைப் பற்றி மேலும் அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.

ஏகாந்த வாச நிகழ்வுகளின் கேலண்டர்

ஜூலை – செப்டம்பர் 2025

ஆண்டின் மூன்றாவது காலாண்டில் YSS ஆசிரமங்கள் மற்றும் ஏகாந்த வாச மையங்களில் நடைபெறவுள்ள ஏகாந்த வாச நிகழ்வுகளை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஆண்டின் மீதமுள்ள மாதங்களுக்கான ஏகாந்த வாச நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்.


ஜூன்

ஜூலை

ஆகஸ்ட்

செப்டம்பர்

YSS நொய்டா ஆசிரமம்

ஜூலை 18-20*

செப்டம்பர் 12-14*

YSS துவாராஹாட் ஆசிரமம்

செப்டம்பர் 28-30*

இகத்புரி

ஜூன் 14-15

ஜூலை 9-11

ஜூலை 25-27

ஆகஸ்ட் 14-17

செப்டம்பர் 26-28

சிம்லா

ஜூன் 6-8

ஜூன் 20-22

ஆகஸ்ட் 15-17

செப்டம்பர் 5-7

செப்டம்பர் 19-21

பூனா

ஜூன் 28-29

ஜூலை 26-27

ஆகஸ்ட் 30-31

செப்டம்பர் 27-28

கோயம்புத்தூர்

ஜூலை 18-20*

செப்டம்பர் 27-28

ராஜமுந்திரி

ஜூலை 18-20*

செப்டம்பர் 12-14*

கவனிக்க:

  • * இது YSS சன்னியாசிகள் வழிநடத்தும் ஏகாந்த வாச நிகழ்வைக் குறிக்கிறது. மீதமுள்ள ஏகாந்த வாச நிகழ்வுகள் YSS பக்தர்களால் வழிநடத்தப்படும்.
  • ஒரு குறிப்பிட்ட ஏகாந்த வாச நிகழ்வு பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, சம்பந்தப்பட்ட ஆசிரமம்/ ஏகாந்த வாச இடத்தைத் தொடர்பு கொள்ளவும்.

விசேஷ சிறப்பம்சங்கள்

  • நொய்டா ஆசிரமத்தில் சன்னியாசிகள் நடத்தும் ஏகாந்த வாச நிகழ்வுகள்: YSS சன்னியாசிகள் இந்த காலகட்டத்தில் ஏகாந்த வாச நிகழ்வுகளை நடத்துவார்கள்.
  • நேரடி ஒளிபரப்பு ஏகாந்த வாச நிகழ்வுகள்: நொய்டா ஆசிரம ஏகாந்த வாச நிகழ்ச்சிகளை எளிதில் அணுகும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட மையங்களாகிய கோயம்புத்தூர், இகத்புரி, சிம்லா, புனே மற்றும் ராஜமுந்திரி ஆகிய மையங்களிலும் அவை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும், இதனால் பக்தர்கள் தங்கள் வீடுகளுக்கு அருகிலேயே சன்னியாசிகளின் எழுச்சியூட்டும் வழிகாட்டுதலை அனுபவிக்க முடியும்.
  • பக்தர் வழிநடத்தும் ஏகாந்த வாச நிகழ்வுகள்: மேற்கண்ட மையங்களிலும், சிம்லாவிலும் சில ஏகாந்த வாச நிகழ்ச்சிகள் அனுபவம் வாய்ந்த பக்தர்களால் நடத்தப்படும், இது ஆன்மீக வளர்ச்சிக்கு கூடுதல் வாய்ப்புகளை வழங்குகிறது.
பதிவு

YSS மற்றும் SRF பாட மாணவர்கள் இந்த திட்டமிடப்பட்ட ஏகாந்த வாச நிகழ்ச்சிகள் ஒன்றில் பங்கேற்கலாம் அல்லது அவர்களுக்கு வசதியான நேரத்தில் தனிப்பட்ட ஏகாந்த வாசத்திற்கும் திட்டமிடலாம். இந்த ஏகாந்த வாச நிகழ்ச்சிகள் ஏதேனும் ஒன்றில் நீங்கள் பங்கேற்க விரும்பினால், கீழே உள்ள விவரங்களைப் பூர்த்தி செய்து குறைந்தது ஒரு மாதத்திற்கு முன்பே சம்பந்தப்பட்ட ஆசிரமம்/ ஏகாந்த வாச இடத்திற்கு தெரிவிக்கவும்:

  • முழுப் பெயர்
  • வயது
  • முகவரி
  • மின்னஞ்சல் முகவரி
  • தொடர்பு தொலைபேசி
  • YSS பாடங்கள் பதிவு எண் (அல்லது SRF உறுப்பினர் எண்)
  • உங்கள் திட்டமிடப்பட்ட வருகை மற்றும் புறப்படும் தேதி

கவனிக்கவும்:

  • ஆண்களும் பெண்களும் தனித்தனியாக தங்க வைக்கப்படுவார்கள். இருப்பினும், 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட திருமணமான தம்பதிகளுக்கு சில விதிவிலக்குகள் இருக்கலாம். குடும்ப உறுப்பினர்கள் தயவுசெய்து அதற்கேற்ப திட்டமிட்டு பேக் செய்து கொள்ளுங்கள்.
  • 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இல்லை.
  • வானிலை, தங்குமிடம் அல்லது ரிட்ரீட் தொடர்பான உங்கள் பயணம் மற்றும் தங்குவது குறித்த தகவல்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள, சம்பந்தப்பட்ட ஆசிரமம் / ஏகாந்த வாச இருப்பிடத்தை நேரடியாகத் தொடர்பு கொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

இந்த ஏகாந்த வாச நிகழ்ச்சிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் எதுவும் இல்லை. நிதி ரீதியாக பங்களிக்கும் உங்கள் திறனுக்கு அப்பாற்பட்டு, குருதேவரின் ஏகாந்த வாச நிகழ்ச்சிகள் அனைவருக்கும் திறந்திருக்கும். உணவு, தங்குமிடம், பராமரிப்பு மற்றும் பேணுதல் செலவுகளை ஈடுசெய்யும் உங்கள் நன்கொடைகளால் இந்த ஏகாந்த வாச வசதிகள் பராமரிக்கப்படுவதால், எங்கள் செலவுகளை பூர்த்தி செய்யவும், அனைத்து நேர்மையான தேடுபவர்களுக்கும் குருதேவரின் உபசரிப்பை விரிவுபடுத்தவும் உதவும் பெரிய பங்களிப்புகளை வழங்க முடிந்தவர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

‘கேந்திரா நிதி’ ஐத் தேர்வு செய்து, பின்னர் ‘கேந்திரா பெயர்’ என்ற பட்டியலில் இருந்து ஏகாந்த வாச இடத்தின் பெயரைத் தேர்ந்தெடுத்து ஆன்லைனில் நன்கொடைகளை அளிக்கலாம். ஏகாந்த வாச இடத்திற்கு ஒரு காசோலையை அனுப்புவதன் மூலமும் ஒருவர் நன்கொடை அளிக்கலாம்.

ஏகாந்த வாச நிகழ்வின் செயல்பாடுகள்

ஏகாந்த வாசத்தின் போது, ​​உங்கள் பங்கு ஓய்வெடுத்து, இறைவனின் எங்கும் நிறைந்த அருளாசிகளை ஏற்கும் திறன் கொண்டவராக மாறுவதாகும். சுத்தமான காற்றை சுவாசிப்பதன் மூலமும், உடற்பயிற்சி செய்வதன் மூலமும், ஓய்வெடுப்பதன் மூலமும் உடல் ரீதியாக தளர்த்தி இருங்கள். அன்றாட வாழ்க்கையின் கவலைகள் மற்றும் சுமைகளை ஒதுக்கிவிட்டு மனதளவில் ஓய்வெடுங்கள். உங்கள் வெளிப்புற செயல்பாடுகளை விட்டுவிடுங்கள்; இறைவனுக்கு உணர்திறன் உடையவர்களாக இருங்கள், அவன் உங்கள் மனதில் உச்ச சிந்தனையாகவும், உங்கள் இதயத்தின் எரியும் விருப்பமாகவும் இருக்கட்டும். அவனுடைய இருப்பைப் பற்றிய உங்கள் உள்ளார்ந்த உணர்வு மற்றவைகளைப் பார்த்துக் கொள்ளும். இறைவனைப் பற்றிய ஆழமான விழிப்புணர்வை வளர்ப்பதற்காக இடைவிடாத செயல்களிலிருந்து விலகும் அனுபவமானது, அவன் உங்கள் வல்லமையைப் புதுப்பிக்கவும், உங்களுக்கு நீடித்த அமைதியையும் மகிழ்ச்சியையும் அருளவும் அனுமதிக்கும்.

அழகிய ஏகாந்த வாச இடங்களில், ஓய்வெடுக்கவும் இறை இருப்பை உணர்ந்து மகிழவும், போதுமான ஓய்வு நேரம் கிடைக்கிறது. உடல் தளர்வைத் தூண்ட சுத்தமான காற்றில் நடைபயிற்சியும் உடற்பயிற்சியும் பக்தர்கள் மேற்கொள்ளலாம். காலை மற்றும் மாலை கூட்டு தியானங்களுக்குக் கூடுதலாக, பக்தர்கள் தனிப்பட்ட தியானமும் செய்ய விரும்பலாம்.

வெற்றிகரமானதோர் ஏகாந்த வாசத்திற்குரிய வழிகாட்டுதல்கள்

பலனளிக்கும் ஏகாந்த வாசத்தின் பொறுப்பு முதன்மையாக தனிநபரைச் சார்ந்தது. நீங்கள் உங்கள் சித்தத்தைப் புதுப்பிக்க வந்திருந்தாலும் அல்லது சிக்கலான கேள்விகள் மற்றும் பிரச்சினைகளுக்கு உள்முகமாக தீர்வுகளைத் தேடினாலும், உங்கள் முயற்சியின் வெற்றி இறுதியில் உயிர்ப்பு, ஞானம், ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்கு ஆதாரமான தெய்வீகப் பரம்பொருளாகிய இறைவனுடனான உங்கள் தனிப்பட்ட உறவைச் சார்ந்துள்ளது. அவனுடைய உள்ளார்ந்த இருப்பைப் பற்றிய விழிப்புணர்வை நீங்கள் எந்த அளவிற்கு வளர்த்துக் கொள்கிறீர்களோ, அந்த அளவிற்கு, வாழ்க்கையின் ஒவ்வொரு பிரச்சினையையும் தீர்ப்பதற்கான உத்வேகம், உறுதிப்பாடு மற்றும் வழிகாட்டுதலைப் பெறுவீர்கள்.

பின்வரும் குறிப்புகளை கவனத்தில் கொள்வது அந்த விழிப்புணர்வை வளர்க்க பெரிதும் உதவும்:

  • முழு ஏகாந்த வாச நிகழ்ச்சியில் (முடிந்தவரை) பங்கேற்கவும், நீங்கள் தங்கியிருக்கும் சமயத்தில் வேறு எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம்.
  • உங்கள் அகச் சூழலை உருவாக்கவும், இறைவன் மற்றும் குருமார்களுடன் உங்கள் ஒத்திசைவை ஆழப்படுத்துவதற்கும் ஏகாந்த வாசத்தின் போது மௌனத்தைக் கடைப்பிடியுங்கள்.
  • குழு நடவடிக்கைகளில் பங்கேற்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள், ஏனெனில் அவை உங்களை ஒத்த எண்ணம் கொண்ட மற்றவர்களுடன் இணைக்கின்றன, இதன் மூலம் உங்கள் நல்ல முயற்சிகள் மற்றும் நாட்டங்களை வலுப்படுத்துகின்றன.
  • இறை இருப்பைப் பயிற்சி செய்யுங்கள். ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு அனுபவத்திலும் இறைவன் உங்கள் பக்கத்தில் இருக்கிறான் என்று உணர கற்றுக்கொள்ளுங்கள்.
  • உங்கள் ஏகாந்த வாசத்தின் போது செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகள், போன்ற உலகியல் விஷயங்கள் வாசிப்பதைத் தவிர்த்து விடுங்கள், அப்படி ஏதேனும் ஒன்றை நீங்கள் எடுத்துச் சென்றிருந்தால்.
  • நீங்கள் தனிமையான ரிட்ரீட் சூழலில் இருந்தால், உங்கள் ஓய்வு நேரத்தில் மௌனத்தைக் கடைப்பிடிப்பதும் இறைவனைப் பற்றி சிந்திப்பதும் எளிதாக இருக்கும் ஆகையால், ஏகாந்த வாச இடத்தின் வளாகத்திலேயே இருங்கள்.
  • நீங்கள் மொபைல் போன்களை வைத்திருந்தால், அவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அவசர காலங்களில் தவிர, தொலைபேசி அழைப்புகளைச் செய்யவோ அல்லது பெறவோ வேண்டாம்.
  • கடைசியாக ஆனால் மிக முக்கியமாக, உங்கள் ஏகாந்த வாசத்தின் போது ஆழ்ந்து தியானிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தியானம் என்பது இறைவனுடனான உங்கள் உறவின் அடித்தளமாகும்.
para-ornament

புதிய வருகையாளர்

நீங்கள் YSS மற்றும் பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளுக்கு புதியவர் என்றால், பின்வரும் இணைப்புகளை நீங்கள் படிக்க விரும்பலாம்:

இதைப் பகிர