யோகதா சத்சங்க கிளை ஆசிரமம் – துவாராஹாட்

யோகதா சத்சங்க கிளை ஆசிரமம், துவாராஹாட், உத்தராகண்ட்

துவாராஹாட் என்பது உத்தராகாண்ட் மாநிலத்தில் குமான் பிரதேசத்திலுள்ள அல்மோரா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம். அது பூமியிலிருந்து சராசரி 5,000 அடி (1500 மீ) உயரத்தில் உள்ளது. இங்கு தட்பவெப்ப நிலை வருடம் முழுவதும் குளிர்ச்சியாகவும் குளிர் காலங்களில் (நவம்பர் – பிப்ரவரி) குறிப்பாக மிகவும் குளிராகவும் இருக்கும்.
ஒய்.எஸ்.எஸ் ஆசிரமம் துவாராஹாட் நகரத்திலிருந்து சுமார் 1.5 கிலோ மீட்டர் தொலைவில் அமையப் பெற்று, அனைத்து பக்கங்களிலும் பைன் மரக் காடுகளால் சூழப்பட்டுள்ளது. நகரத்திலிருந்து ஆசிரமத்திற்கு வரும் வழியில், வலது பக்கத்தில் அரசினர் ஓய்வு இல்லம் உள்ளது. ஸ்ரீ தயா மாதாஜி அவர்கள் 1963 – 64 ல் பாபாஜி குகைக்கு விஜயம் செய்தபோது, ஒய் எஸ்.எஸ் ஆசிரமம் அப்பொழுது கட்டப்படவில்லை யாதலால், இங்கே தான் தங்கினார்.

YSS க்கு புதியவரா? எவ்வாறு உங்கள் வாழ்க்கையை YSS பாடங்கள் மாற்றி வாழ்வில் சமநிலையை கொண்டு வரும் என்பதைப் பற்றி மேலும் அறிக.

மகாவதார் பாபாஜியின் குகை

இந்த குகையின் சரித்திர முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வதற்கு பக்தர்கள் “இமயத்தில் ஒரு அரண்மனையைத் தோற்றுவித்தல்” என தலைப்பிடப்பட்ட அத்தியாயம் 34 -ல்  ஒரு யோகியின் சுயசரிதத்தையும், “மகாவதார பாபாஜியிடமிருந்து ஓர் அருளாசி” என்ற அத்தியாயத்தையும்  அன்பு மட்டுமே என்ற நூலில் ஶ்ரீ ஶ்ரீ தயா மாதாஜி எழுதியதைப் படிக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

பாபாஜியின் குகைப் பகுதி இருக்கும் இடத்தில்தான் அவர் 1861ல் லாஹிரி மகாசயருக்குத் தீட்சை அளித்தார் மற்றும் இவ்விடம் தான் இந்த துவாபரயுகத்தில் கிரியா யோகத்தின் பிறப்பிடமாக திகழ்கிறது. உலகில் உள்ள கிரியா தீட்சை- அருளப்பெற்ற அனைவரும் தமது கிரியா வம்சாவளியை இந்நிகழ்வின் சுவடுகளைப் பின்பற்றி அறிந்துகொள்ளலாம்.  (2011 கிரியா யோகத்தின் 150 ஆவது ஆண்டு நிறைவு)

இந்தக் குகை குகுசீனா (துவாராஹாட்டில் இருந்து 25 கி.மீ) என்ற கிராமத்திற்கு அப்பால் பாண்டுகோலி என்ற மலையின் மேல் உள்ளது.

குகைக்கு செல்லும் மலைப்பாதை புதுப்பிக்கப்பட்டுள்ளது. மலை மேல் ஏறுவதற்கு, சராசரி மனிதனுக்கு சுமார் ஒரு மணி நேரம் ஆகிறது. மழைக்காலங்களில், ஒரு யோகியின் சுய சரிதம் -ல். குறிப்பிடப்பட்டுள்ள கோகாஷ் நதியில் கலக்கும் சில நீரோடைகள் மலைப் பாதையின் ஊடாக பாய்கின்றன.

ஆசிரமத்திலிருந்து குகைக்குப் போய் வரும் பயண நேரம் சுமார் ஆறு மணியிலிருந்து எட்டு மணி நேரங்கள் ஆகும்.

கூடுதல் தகவல்களுக்கு துவாராஹாட் ஆசிரமத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.

மகாவதார் பாபாஜியின் குகை, உத்தராகண்ட்

நிகழ்ச்சிகளும் செயல்பாடுகளும்

ஒவ்வொரு வருடமும் ஆசிரமம் இரண்டு மருத்துவ முகாம்களையும் (ஏப்ரல் மற்றும் நவம்பர் மாதங்களில்), மார்ச் மாதத்தில் சன்னியாசிகளால் வழிநடத்தப்படும் ஏகாந்த ஆன்மீக பயிற்சிகளையும் மற்றும் செப்டம்பர் 26 லிருந்து 30 வரை கிரியா யோக தீட்சையுடன் கூடிய ஒரு சாதனா சங்கத்தையும் நடத்துகிறது. தவிரவும் ஜூலை 25ஆம் தேதி பாபாஜி குகையை நோக்கி மகாவதார பாபாஜியின் ஸ்மிருதி திவஸ் ஊர்வலமும், குருதேவருடைய அவதார திருநாளில் காலையில் ஒய்.எஸ்.எஸ் துவாராஹாட் பள்ளி மாணவர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொள்ளும் துவாராஹாட் நகரை நோக்கிய ஊர்வலமும், மாலையில் ஆசிரமத்தில் உள்ளூர் மக்களது பஜனை நிகழ்ச்சியும் மற்றும் இரவில் (ஜனவரி 5ஆம் நாள்) நினைவு வழிபாடு சேவையும் நடைபெறும்.

மருத்துவர்களும் தன்னார்வத் தொண்டர்களும் மருத்துவ முகாமில் கலந்து கொள்ள வரவேற்கப்படுகிறார்கள். ஆர்வமுள்ள பக்தர்கள், துவாராஹாட் ஆசிரமப் பொறுப்பிலிருக்கும் சுவாமிஜியைத் தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் வருகையைத் திட்டமிடுங்கள்

YSS மற்றும் SRF பாட மாணவர்கள் ஐந்து நாட்கள் வரை ஆசிரமத்தில் தங்க வரவேற்கப்படுகிறார்கள். தனிப்பட்ட ஏகாந்தவாசத்திலோ அல்லது ஒரு வழிகாட்டப்பட்ட ஏகாந்தவாசத்திலோ உத்வேகமுற்று புத்துணர்ச்சி பெற எங்களுடன் சேருமாறு பக்தர்களை ஊக்குவிக்கிறோம். இந்த ஏகாந்தவசங்களின் போது, ​​நீங்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறை YSS சன்னியாசிகள் நடத்தும் கூட்டு தியானங்களில் பங்கேற்கலாம், மேலும் யோகதா சத்சங்க போதனைகளின் ஆய்வு மற்றும் பயிற்சியில் ஆன்மீக ஆலோசனையும், வழிகாட்டுதலையும் பெறலாம்.

ஆசிரமத்தில் தங்குமிட வசதி கோர கீழே உள்ள பட்டனைக் கிளிக் செய்யுங்கள்.

எங்களை தொடர்பு கொள்ளவும்

யோகதா சத்சங்க கிளை ஆசிரமம் – துவாராஹாட்
Dwarahat - 263653
Almora
Uttarakhand

இதைப் பகிர