உலகளாவிய பிரார்த்தனைக் குழு

பரமஹம்ஸ யோகானந்தர்

ஸ்ரீ ஸ்ரீ தயா மாதாவிடமிருந்து ஓர் அழைப்பு

Daya Mata — third president of YSS/SRF.
யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் உலகளாவிய பிரார்த்தனைக் குழு பற்றிய இந்த அறிமுகத்துடன், பிரார்த்தனையின் செயல்திறன்வாய்ந்த ஆற்றலின் வாயிலாக மற்றவர்களுக்குச் சேவை செய்வதில் எங்களுடன் இணைய நான் உங்களுக்கு அழைப்பு விடுக்க விரும்புகிறேன்.

நாள்தோறும் ஏதேனும் புதிய நோயைப் பற்றி அல்லது பேரிடரைப் பற்றி—அல்லது உலகைப் போருக்கு அருகாமையில் கொண்டுவரும் மற்றொரு சர்வதேச நெருக்கடியைப் பற்றி—பத்திரிக்கைகளில் படித்தவாறு, எத்தனையோ பேர் தமது மற்றும் தமது அன்பிற்குரியவர்களின் வாழ்க்கைகளைப் பற்றிய ஓர் ஆழ்ந்த பாதுகாப்பின்மையை உணர்கின்றனர். “ இவ்வுலகில் நான் நம்பிக்கை வைக்கும்படியான ஏதேனும் இருக்கிறதா? நான் எனக்காகவும் மனிதகுலம் முழுவதற்காகவும் விரும்பும் அமைதியையும் பாதுகாப்பையும் குலைக்கும் இந்த ஆபத்துகளுக்கு எதிரிடையாகச் செய்ய என்னால் ஆற்றக்கூடிய ஏதேனும் இருக்கிறதா?” என்று பலரும் வியக்கும் ஒரு நிலைக்கு நாம் வந்திருக்கிறோம்.

நமது தேவைகளின் தன்மைக்கேற்ப மிகச் சரியாக எப்படி மற்றும் எப்போது பிரார்த்தனை செய்வது என்று அறிந்துகொள்வதே விரும்பிய முடிவுகளைக் கொண்டு வருகிறது. சரியான வழிமுறை பயன்படுத்தப்படும் போது, அது இறைவனின் முறையான விதிமுறைகளை இயங்க வைக்கிறது; இந்த விதிமுறைகளின் இயக்கம் பலன்களை அறிவியல்பூர்வமாக விளைவிக்கிறது.

நாம் எல்லோரும் அத்தகைய கேள்விகளுக்கு ஆழமாக மறுமொழியளிக்கிறோம் — மற்றும் நமது இதயங்களை மிகவும் தொல்லைப்படுத்தும் இந்தப் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு உள்ளது. ஏன் தனிமனிதர்கள் உடல்ரீதியான மற்றும் உணர்ச்சிரீதியான இணக்கமின்மைகளால் துன்புறுகின்றனர்—ஏன் நாடுகள், சமூக மற்றும் சர்வதேச சச்சரவுகளைச் சந்திக்கின்றன—என்பதற்கான ஒரு காரணம், தமது சொந்தத் தவறான எண்ணங்களாலும் செயல்களாலும் தெய்வீக சக்தி மற்றும் அருளாசியின் ஆதாரத்திலிருந்து தம்மை துண்டித்து கொண்டுள்ளனர் என்பதாகும்.

இன்று, ஒருவேளை முன் எப்போதையும் விட அதிமாக, நாம் அந்த எதிர்மறைத் தன்மைக்கு எதிரிடையாகச் செய்ய வேண்டும் என்பது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. நாம் இந்த பூமியில் அமைதிக்குலைவான வாழ்க்கையை விட மேலான வாழ்க்கை வாழ வேண்டுமென ஆர்வம் கொண்டால், நாம் தெய்வீகப் பேராதாரத்துடனான நமது இணைப்பைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அதுதான் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்-ன் உலகளாவிய பிரார்த்தனைக் குழுவின் நோக்கம் ஆகும். மேலும் அதனால்தான் இங்கே கொடுக்கப்பட்டுள்ள செய்தியை ஆழமாக எண்ணிப்பார்க்கும்படி நான் உங்களைத் தூண்டுகிறேன். எப்படி எல்லா இனங்கள் மற்றும் மதங்களின் ஒவ்வோர் ஆண், பெண், குழந்தை ஆகியோரால் தமக்கும் தமது அன்பிற்குரியவர்களுக்கும் குணமாக்குதல், பாதுகாப்பு ஆகியவற்றுக்காக திறம்பட செயல்பட முடியும் என்று அது விவரிக்கிறது. மேலும் பிரார்த்தனையின் சக்தியின் மீது—நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் இறைவனின் வரையறையற்ற சக்தியின் மீது—கவனத்தைக் குவிக்கும் உங்களுடைய தனிப்பட்ட முயற்சிகளால் உலகின் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு இடையே அதிக நல்லிணக்கத்தைக் கொண்டுவர முடியும்.

நீங்கள் இந்த உலகளாவிய பிரார்த்தனைக் குழுவில் இணைவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம், அதன் மூலம் எல்லா இடங்களிலும் உள்ள ஆண்களும் பெண்களும் அகத்தே உள்ள தெய்வீகச் சக்தியை பெருமளவு உணர்ந்தறிவதற்கு விழிப்பூட்டப் படலாம், அத்துடன் அது புறத்தே எல்லா மக்களுக்கும் இடையே அமைதி மற்றும் தோழமையாக வெளிப்படுத்தப்படலாம்.

— ஸ்ரீ ஸ்ரீ தயா மாதா

மூன்றாவது தலைவி, யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்

உலகளாவிய பிரார்த்தனை வட்டத்தில் ஒய்.எஸ்.எஸ்.-ல் பக்தர்கள் குணமளிக்கும் பிரார்த்தனை செய்கிறார்கள்

இதைப் பகிர