வீட்டிலிருந்து கற்பதற்கான பாடத் திட்டங்கள்

தியானம் மற்றும் ஆன்மீக வாழ்வு பற்றிய விரிவான பாடத் தொடர்

Couple Meditating 2222

YSS பாடங்கள் என்றால் என்ன ?

கிரியா யோக தியானத்தின் மூலம் உங்கள் ஆன்மாவின் எல்லையற்ற உள்ளார்ந்த ஆற்றலை அறிந்து கொள்ளுங்கள்

ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளின் மூலம் வாழ்க்கையை மாற்றி அமைக்க கூடிய அமைதி, ஆனந்தம் மற்றும் ஆன்மாவை பற்றிய ஞானத்தை தேடும் பயணத்திற்கு எங்களுடன் பயணிக்க உங்களை அழைக்கிறோம்

பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளின் மிகவும் ஆற்றல்மிக்க முறையான தியான உத்திகளைக் கொண்டதாகும்: கிரியா யோக தியான விஞ்ஞானம். ஆன்மாவின் இந்த பழமையான விஞ்ஞானம் மிகவும் செறிவு மிக்க விழிப்பூட்டத்தக்க உயர் ஆன்மீக உணர்வுநிலை மற்றும் அக பேரின்பத்தையுடைய இறை அனுபூதியை அளிக்கும்.

கிரியா யோக விஞ்ஞானத்தின் உண்மையான உத்திகள் பரமஹம்ஸ யோகானந்தரால் யோகதா சத்சங்க பாடங்களின் வாயிலாக கற்பிக்கப்படுகின்றன. இந்த பாடங்கள் அவருடைய வெளியிடப்பட்ட படைப்புகளில் தனித்தன்மை வாய்ந்தவை அதில் தியானதிற்கான அவருடைய படிப்படியான வழிமுறைகள், ஒருமுகப்படுத்தல், சக்தியூட்டும் மேலும் எவ்வாறு சமரீதியான ஆன்மீக மற்றும் வளமான வாழ்க்கை வாழ்வது என்பதை குறித்தும் அறியலாம்.

உங்களின் வேகத்திற்கு தகுந்தாற்போல் விருப்பத்துடன் உங்கள் வாழ்நாள் வரை நீடிக்கும்படி படிக்கவும்

உங்களுக்குள் இறைவனை எழுச்சியூட்ட செய்வதே என்னுடைய ஒரே குறிக்கோள். நீங்கள் எவ்வளவு தூரம் இந்த ஆன்மீக பாதையில் செல்ல விரும்புகிறீர்களோ, என்னால் உங்களுக்கு காண்பிக்க இயலும்; மேலும் நீங்கள் இந்த பாடங்களில் உள்ள உத்திகளை பயிற்சி செய்தால் எப்பொழுதும் உங்கள் வளர்ச்சியில் எந்த தேக்கமும் நீங்கள் உணர மாட்டீர்கள்.

— பரமஹம்ஸ யோகானந்தர்

YSS பாடங்கள் ( அடிப்படைத் தொடர்)

எல்லா மாணவர்களும் இங்கிருந்து தொடங்குகிறார்கள்: தியானத்திற்கான YSS உத்திகள், ஒருமுகப்படுதல், மற்றும் சக்தியூட்டும், மேலும் சமரீதியான ஆன்மீக வாழ்க்கைக்கு தேவையான அடிப்படைக் கொள்கைகளை கற்பது.

உங்கள் கற்றலை தொடருங்கள்

கிரியா யோக தீட்சை தொடர் 

கிரியா யோக உத்தி தீட்சை மற்றும் அறிவுறுத்தல்கள் மற்றும்
பரமஹம்ஸ யோகானந்தருடன் குரு-சிஷ்ய உறவை நிறுவுதல்

துணைப் பாட தொடர்

இந்தப் பாடங்கள் அடிப்படைத் தொடரில் கற்பிக்கப்படும்
எப்படி-வாழ-வேண்டும் கோட்பாடுகள் மற்றும் தியான
உத்திகளை விரிவுபடுத்துகின்றன.

பாடங்களின் தொடர் வரிசைமுறை/வரிசை

நோக்கமும் வரலாறும்

பாடங்களின் நோக்கம்: கிரியா யோக விஞ்ஞானத்தை கற்பித்தல்

ஒரு யோகியின் சுயசரிதம் என்ற அவருடைய இந்த நூலில், பரமஹம்ஸ யோகானந்தர் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்திய வின் பணிக்குப் பின்னணியில் வழி மரபாக வந்த ஒளிபெற்ற குருமார்களை அறிமுகப்படுத்தியுள்ளார்: மகாவதார பாபாஜி, லாஹிரிமகாசயர்,மற்றும் சுவாமி ஸ்ரீ யுக்தேஸ்வர். எவ்வாறு இந்த முழுமையாக இறை-அனுபூதியை பெற்றகுருதேவர்கள் இவரை தேர்ந்தெடுத்து, தொலைந்து போன பழமையான கிரியா யோக தியான விஞ்ஞானம் மூலம் இறை-அனுபூதியை மேற்கு மற்றும் உலகம் முழுவதும் பரப்புவதற்காக ஆயத்தம் செய்தார்கள் என்பதை விளக்குகிறார்

ஒரு யோகியின் சுயசரிதத்தில் பரமஹம்ஸ யோகானந்தரால் விவரிக்கப்பட்டுள்ள யோகதா சத்சங்க ஸெல்ஃப்-ரியலைசேஷனில் உள்ள  பாடங்கள் எவர் விருப்பத்துடன் முறையான கிரியா யோக தியான பயிற்சியை மேற்கொள்ள விரும்புகிறார்களோ அத்தகைய நோக்கம் உடையவர்களுக்கே உரித்தானது. அதைப்பற்றி விவரிக்கையில்: “பொது மக்களுக்கு உரித்தான ஒரு புத்தகத்தில் என்னால் வெறும் உத்திகளை மற்றும் அளிக்க இயலாது; ஏனெனில் அவை மிகவும் புனிதமானவை, அதுமட்டுமில்லாமல் சில பழமையான ஆன்மீக விதிமுறைகள் முதலில் பின்பற்றப்பட வேண்டும், அது இந்த உத்திகள் உரிய மரியாதையுடனும், இரகசியமாகவும் பெறப்பட்டதை ஊர்ஜிதபடுத்தும் அதன் பின்னரே அவை சரியான முறையில் பயிற்சி செய்யப்பட வேண்டும்.”

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்திய (ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்) என்ற ஸ்தாபனம் பரமஹம்ஸ யோகானந்தர் அவர்களால் நிருவப்பட்டது. இந்த ஸ்தாபனத்தின் நோக்கமானது அவரது போதனைகளை உலகளவில் பரப்புவதற்கும் அந்த பணியை தொடர்ந்து மேற்கொள்வதற்கும் ஆகும். இந்தபாடங்களுக்கு பதிவு செய்வதன் மூலம் இந்த பாதையை பின்பற்ற விழைவோர்க்கு உகந்த பலன்களும் அவர் இந்த உலகத்திற்கு கொண்டு வந்த அந்த புனிதமான தியான உத்திகளை அனுஷ்டிப்பதற்கு ஒரு சரியான வழிகாட்டுதலும், அனைவருக்கும் உறுதியாக  கிடைக்க ஏதுவாக இருக்கும்.

பாடங்களே பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளுக்கு அடிப்படை

பரமஹம்ஸ யோகானந்தரின் பார்வையில் ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்/யோகதா சத்சங்க பாடங்களை அவரின் போதனைகளின் அடிப்படையாகவும் இந்த உலகிற்கு சிறப்பு ஆன்மீக இறைமையின் அருள்முறை வகுப்பாட்சியை வரவிருக்கிற உலகளாவிய நாகரிகத்திற்கு கொண்டு சேர்ப்பதே தனக்கு நியமிக்கப்பட்ட பணி என்றும் கருதினார்.

பொது மக்களுக்காக அவர் ஆற்றிய சொற்பொழிவுகளிலும், படைப்புகளிலும், பெரிதும் போற்றப்பட்ட பல புத்தகங்களிலும், பரமஹம்ஸர் ஆன்மீக வாழ்விற்கான நடைமுறை வழிகாட்டுதல்கள் என்ற செல்வத்தை வழங்கி இந்த மாறிக்கொண்டிருக்கும் உலகத்தில் இடைவிடாத சவால்கள் மற்றும் வாய்ப்புகளுக்கு நடுவில் ஆனந்தமாகவும், வெற்றிகரமாகவும் எவ்வாறு வாழ்வது என்பதை எடுத்தியம்பியுள்ளார்.

அந்த உத்வேகத்தை தினசரி அனுஷ்டிக்க கூடிய ஆன்மீக பயிற்சியாக எவர் ஒருவர் மாற்ற விழைகிறாரோ அவர்களுக்கே இந்த யோகதா சத்சங்க பாடங்கள்.

பரமஹம்ஸ யோகானந்தரின் வெளியிடப்பட்ட படைப்புகளில் அவருடைய பாடங்கள் தனித்தன்மை வாய்ந்தவை, அதில் அவருடைய தியான உத்திகளுக்கான படிப்படியான வழிமுறைகள், ஒருமுகப்படுத்தல், அவர் கற்றுக்கொடுத்த சக்தியூட்டும் பயிற்சி அத்துடன்  கிரியா யோகமும் அடங்கியுள்ளது.

இந்த எளிய ஆனால் மிகுந்த பயனுள்ள யோக உத்திகள் உயிர்ச் சக்தி மற்றும் உணர்வுநிலை மீது நேரடியாக செயல்பட்டு, உங்கள் உடம்பிற்கு சக்தியூட்டி உற்சாகப்படுத்தும், மனதின் எல்லையற்ற சக்தியை எழுச்சியூட்டி, தெய்வீகத்தின் மிக ஆழ்ந்த விழிப்புநிலையை உங்கள் வாழ்வில் உணர்வதற்கும், உச்சநிலையான ஆன்மீக உணர்வுநிலையின் உயர்ந்த நிலை மற்றும் கடவுளுடன் ஐக்கியம் ஆவதற்கும் வழி வகுக்கும்.

யோகம் என்பது பயிற்சி மற்றும் அனுபவம் சார்ந்ததே தவிர ஒரு குறிப்பிட்ட நம்பிக்கையின் கூட்டிணைவு அல்ல. அது மட்டுமல்லாமால் எந்த ஒரு மத பாதையையும் பின்பற்றாதவர்கள் கூட இந்த ஆன்மீக பாடங்களின் அடிப்படை தொடரின் போதனைகள் மற்றும் இங்கு கற்பிக்கப்படும் உத்திகளின் மூலம் மிகுந்த பலனை அடையலாம். இந்தவழிகளை தொடர்ந்து பயிற்சி செய்தால் தவறாமல் ஆழ்ந்த ஆன்மீக விழிப்புநிலையும், புரிதலும் கிட்டும்

யோகதா சத்சங்கத்தின் பாடங்கள் இணக்கமான உடல், மனம், மற்றும் ஆன்ம வளர்ச்சியை அளிக்கின்றன. நான் ஒரு மதப்பிரிவில் புதிய உட்குழுவினர்களை கொண்டு வரவில்லை, ஆனால் மிக மேன்மையான ஒரு உத்தியை கொண்டு வந்துள்ளேன் ஒத்திசைவதன் மூலம் உங்களுடைய உடல், மனம் மற்றும் ஆன்ம இவற்றை இறைவனின் மிக உயர்ந்த தொடர்புக்கு இட்டு செல்லலாம் .

— பரமஹம்ஸ யோகானந்தர்

பாடங்களின் தோற்றமும் பரிணாமமும்

பரமஹம்ஸ யோகானந்தரின் வீட்டிலிருந்தபடியே கற்பதற்கான பாடங்கள் யோகதா சத்சங்க சொஸைடி வாயிலாக பிரத்யேகமாக இந்தியாவில் அளிக்கப்படுகிறது, இவை முதன்முறையாக அமெரிக்காவிற்கு பயணிக்கும் சகாப்தத்திற்கான பணி துவங்கும் போது குருவால் உருவாக்கப்பட்டது. 1920 மற்றும் 1930 ல் பரமஹம்ஸர் அமெரிக்கா முழுவதும் சுற்று பயணம் செய்து, பொது கூட்டங்களில் YSS/SRF -ன் போதனைகளை பெரிய நகரங்களில் கரைக்கு கரை சென்று சொற்பொழிவாற்றினார், இதில் பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.

அவருடைய பொது சொற்பொழிவுகளின் தொடர் ஒவ்வொரு நகரத்திலும் ஓரிரு வாரங்களுக்கு நீடித்தன, இதன் தொடர்ச்சியாக ஆழமாக பாடத்தை பயிலவும், தொடர் சாதனைகளை செய்ய விருப்பமுள்ளவர்களையும் ஸெல்ஃப்-ரியலைசேஷன் (யோகதா சத்சங்க) போதனைகள் மற்றும் தியான உத்திகளை தானே ஒவ்வொரு இரவும் பயிற்றுவிக்கும் கூடுதல் பாடத் தொடரில் அடுத்த பல வாரங்களுக்கு பதிவு செய்ய அழைப்பு விடுத்தார். ஆரம்ப காலத்தில், மாணவர்களுக்கு சுருக்கமான அச்சிடப்பட்ட பாடத்தை பற்றிய முக்கிய கூறுகளை ஒவ்வொரு வகுப்பின் போதும் அளித்தார்.

1934-ம் ஆண்டு அவர் விரிவான முதல் அச்சிடப்பட்ட வீட்டிலிருந்தபடியே கற்பதற்கான பாடங்களின் தொகுப்பின் பதிப்பை அறிவித்தார்.

“பதினான்கு வருடங்களாக இரவும் பகலும் என் மாணவர்களுக்கு எப்படி தொடர் வெள்ளமாக அந்த ஆன்மீக எழுச்சியை கொடுத்து அதன் வாயிலாக அவர்கள் மறுபடியும் உறங்க போக மாட்டார்கள் என்ற உறுதியை அளிப்பது என்று ஆலோசித்துக் கொண்டிருந்தேன். ஆகையால் அவர்களுக்கு வாராந்திர பாடங்களை அனுப்ப திட்டமிட்டேன். அடுத்த வாரம் அவர்கள் ஆரம்பிப்பார்கள் அதன் பின் ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து வருவார்கள். இதை துவக்குவதற்காக நாங்கள் இரவும் பகலும் வேலை செய்துக்கொண்டிருந்தோம். நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளில் உள்ள மாணவர்களும், ‘நீங்கள் ஏன் வாராந்திர பாடங்களை எங்களுக்கு தர கூடாது?’ என்று கேட்கத் தொடங்கினர். நான் கடைசியாக ஒரு திட்டத்தை வகுத்தேன் அதன் வாயிலாக பல்லாயிரக்கணக்கான ஆன்மாக்களை விடுவிக்க இயலும் என்பதை அறிந்திருந்தேன்”.

இவ்வாறாக ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் பாடங்கள் பிறந்தன- அவை யோகதா சத்சங்க பாடங்களாக இந்தியாவில் குறுகிய காலத்திலேயே தொடங்கி வைக்கப்பட்டன. இந்த தொடர் 1934 தொடங்கி கிட்டத்தட்ட 1938 வரை பல வருடங்களாக தொகுக்கப்பட்டு வந்தது. பரமஹம்ஸர் 1935-36 யில் இந்தியாவிற்கு விஜயம் செய்த போது ஒய் எஸ் எஸ் பதிப்பின் பாடங்களை இந்தியாவில் உள்ள பக்தர்களுக்கு அளிக்க ஏற்பாடுகள் செய்தார். அவருடைய வழிகாட்டுதலின் பேரில் பாடங்களில் உள்ள சில சொற்றொடர்கள் இந்திய பக்தர்களுக்கு ஏற்றாற்போல் லேசாக மாற்றி அமைக்கப்பட்டது, இருப்பினும் போதனைகள், சாதனா – பயிற்சி மற்றும் தியான உத்திகள் எல்லாம் ஒரே மாதிரியாக இருக்கும். இந்த பாடங்களின் சுற்றோட்டம் சில மேம்பாடுகளுடனும் மாற்றங்களுடனும் 2019 வரை அப்படியே இருந்தன.

பாடங்களின் முக்கிய விரிவாக்கம்

குரு தன்னுடைய வாழ்க்கையின் இறுதி ஆண்டுகளை புதிய பொருள் மற்றும் முன்பு வெளியிடப்பட்ட படைப்புகளை மறுசீராய்வு செய்வதில் மிக மும்முரமாக நேரத்தை செலவிட்டார். மற்ற திட்டபணிகளுக்கு இடையில் அவர் தனிப்பட்ட முறையில் பாடங்களின் பணியை ஸ்ரீ மிருணாளினி மாதாவுடன் சேர்ந்து செய்தார். (அப்போது அவர் ஒரு இளம் சிஷ்யை, பிற்காலத்தில் ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்/யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா வின் நான்காவது தலைவராக தொண்டு புரிந்தார்). பரமஹம்ஸர் பாடங்களை அறிமுகம் செய்யும் முறையை அவருடன் மறு ஆய்வு செய்து, மிக முழுமையான முறையில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தி அதுவே தன்னுடைய விருப்பமாக கூறி, தான் தெரிவிக்க விரும்பிய குறைபாடுகளையும் பிரச்சனைகளையும் குறிப்பிட்டு காட்டினார். அவர் முதன் முறையாக பாடங்களை தொகுத்ததில் இருந்து இந்த இடைப்பட்ட காலம் வரை தான் எழுதிய பெருவாரியான படைப்புகளில் இருந்தும் ஆற்றிய சொற்பொழிவுகளில் இருந்தும் போதனைகளை சேகரிக்குமாறு கூறினார். “பாடங்களே உன்னுடைய வாழ்க்கையின் பணி” என்று அவரிடம் சொன்னார்.

“வாழ்க்கையின் வேலை” அதன் பலனே இப்பொழுது இருக்கும் தொடர், இது அவருடைய மறைவுக்கு 2017 க்கு சிறுது காலம் முன்பே நிறைவடைந்தது. தனிச்சிறப்புடன் பெருவாரியாக மேம்படுத்தப்பட்ட அமைப்பு முறை மற்றும் முதன்முறையாக ஆரம்பத்தில் 1931 ல் தொகுக்கப்பட்ட போது கிடைக்கப்பெறாத புதிய பொருள் செல்வம் பரமஹம்ஸரிடம் இருந்து இப்பொழுது பெறப்பட்டுள்ளது. YSS-ன் இந்த புதிய பதிப்பின் பாடங்கள் இதுவரை அளிக்கப்பட்டவற்றை காட்டிலும் மிகவும் விரிவானவை, இவற்றை போன்ற மிகவும் எழுச்சியூட்டும் போதனைகள் அடங்கிய பாடங்கள் இதற்கு முன்பு பிரசுரிக்கப்படவில்லை.

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்திய/ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் பாடங்களின் புதிய பதிப்பின் துவக்க நிகழ்ச்சி

YSS/SRF-ன் பாடங்களின் புதிய பதிப்பின் துவக்க நிகழ்ச்சியை யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்திய/ ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் பின் தலைவர் மற்றும் ஆன்மீகவாதியுமான ஸ்வாமி சிதானந்த கிரி தலைமையில், SRF-ன் சர்வதேச தலைமையகத்தில் ஜனவரி 31, 2019 அன்று நடந்தது. அதில் இருந்து சில துளிகள். இந்த நிகழ்ச்சி உலகம் முழுவதிலும் உள்ள YSS/SRF-ன் உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்வின் முழுமையான காணொளியும் கிடைக்கப் பெறுகிறது.

ஒய் எஸ் எஸ் பாடங்கள் செயலி — கற்றல், தியானம் மற்றும் உத்வேகத்திற்கான உங்கள் டிஜிட்டல் ஆன்மீக துணை

YSS-SRF-App-Responsive-Devices-July29-2022 (1)

உங்கள் ஆன்மீகப் பயணத்திற்கு உதவிடும் ஒரு மின்னியல் வடிவ ஆதாரம்.

ஆன்மீக உன்னத இலக்கியமான ஒரு யோகியின் சுயசரிதம் அருளிய பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகள் மூலம் ஆன்மாவின் அமைதி, ஆனந்தம் மற்றும் ஞானத்தின், வாழ்க்கையை மாற்றும் விழிப்புணர்வை உணரப் பெறுங்கள்

SRF/YSS செயலி அனைவருக்குமானது —நீங்கள் பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளுக்கு புதியவராக இருந்தாலும் சரி அல்லது பல வருடங்களாக இந்த மகத்தான ஆசானின் ஞானத்தில் மூழ்கி இருப்பவராக இருந்தாலும் சரி. தியானம், கிரியா யோக விஞ்ஞானம் மற்றும் ஆன்மீக ரீதியில் சமநிலை வாழ்க்கையை வாழ்வதற்கான நடைமுறை வழிகளைப் பற்றி மேலும் அறிய விரும்பும் எவருக்கும் இது பொருந்தும்.

இடம்பெறுபவை:

  • அமைதி, அச்சமின்றி வாழ்தல், ஒளியே இறைவன், உணர்வுநிலை விரிவாக்கம் மற்றும் பலவற்றைப் பற்றிய வழிகாட்டப்படும் தியானங்கள் – 15 முதல் 45 நிமிடங்கள் வரை தனிப்பயனாக்கக்கூடிய இடையீட்டு வழிகாட்டும் காலங்களுடன்
  • நேரடி ஆன்லைன் தியானங்களுக்கு கட்டணமின்றிய அணுகல்
  • எஸ் ஆர் எஃப்/ஒய் எஸ் எஸ் செய்திகள் மற்றும் நிகழ்வுகள் பற்றிய தகவல்கள்

எஸ் ஆர் எஃப்/ஒய் எஸ் எஸ் பாட மாணவர்களுக்கு...

உங்கள் அன்றாட வாழ்க்கையில் எஸ் ஆர் எஃப்/ஒய் எஸ் எஸ் கிரியா யோக போதனைகளை பயன்படுத்த உங்களுக்கு உதவ, உங்கள் பாடங்களின் டிஜிட்டல் பதிப்புகள் மற்றும் பல தரப்பட்ட மல்டிமீடியா உள்ளடக்கம் ஆகியவை இந்த செயலியில் உள்ளது.

இவைகள் உட்பட:

  • பரமஹம்ஸ யோகானந்தரின் ஆடியோ பதிவுகள்
  • எஸ் ஆர் எஃப்/ஒய் எஸ் எஸ் சன்னியாசிகள் நடத்தும் வழிகாட்டப்படும் தியானங்கள் மற்றும் காட்சிப்படுத்தல்கள்
  • எஸ் ஆர் எஃப்/ஒய் எஸ் எஸ் தியான உத்திகள் குறித்த வகுப்புகள்
  • எஸ் ஆர் எஃப்/ஒய் எஸ் எஸ் சக்தியூட்டும் உடற்பயிற்சிகளில் படிப்படியான வீடியோ வழிமுறை

நீங்கள் ஒரு எஸ் ஆர் எஃப் அல்லது ஒய் எஸ் எஸ் பாட மாணவராக இருந்தால், செயலியில் உள்ள பாடங்களை அணுக உங்கள் சரிபார்க்கப்பட்ட கணக்குத் தகவலைப் பயன்படுத்தவும்.

நான் எவ்வாறு ஒய் எஸ் எஸ் பாடச் செயலியைப் பெறுவது?

  • இன்னும் ஒரு பாட மாணவர் ஆகவில்லையா? முதலில் ஒய் எஸ் எஸ் பாடங்களுக்கு சந்தா செலுத்துங்கள். பிறகு உங்களுக்கு செயலியை எவ்வாறு பதிவிறக்கம் செய்து உள் நுழைதல் பற்றிய விவரங்கள் உங்களுக்கு மின் அஞ்சலில் அனுப்பப்படும்.
  • ஒய் எஸ் எஸ் அடிப்படை பாடங்களுக்கு தற்போது சந்தா செலுத்தப்பட்டுள்ளதா? செயலியை கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோர் அமைப்பிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். உங்களது ஒய் எஸ் எஸ் பக்தர் இணைய முகப்பு உபயோகிப்பவரின் பெயரும் கடவிச்செய்தியும் உள் நுழைதலுக்குத் தேவைப்படும்

ஒய் எஸ் எஸ் பாட மாணவர்கள் டெஸ்க்டாப் செயலியில் ஒய் எஸ் எஸ் பாடங்கள் மற்றும் துணை சாதனங்களை காணலாம்:

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

செயலி தொடர்பான அடிக்கடி கேட்கப்படும் சில கேள்விகளைப் படிக்க கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.