கூட்டுத் தியானம் புதிய ஆன்மீக சாதகர்களை, அத்துடன் அனுபவம் வாய்ந்த தியானம் செய்பவர்களையும் பாதுகாக்கும் ஓர் அரண் ஆகும். சேர்ந்து தியானம் செய்வது குழுவில் உள்ள ஒவ்வோர் உறுப்பினரின் ஆன்ம-அனுபூதியின் அளவையும் கூட்டுக் காந்த சக்தியின் கட்புலனாகா அதிர்வுப் பரிமாற்ற விதியின் மூலம் அதிகரிக்கிறது. 

பரமஹம்ஸ யோகானந்தர்

நிறுவனர் பரமஹம்ஸ யோகானந்தர்
Play Video

ஒய் எஸ் எஸ்/ எஸ் ஆர் எஃப் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ சுவாமி சிதானந்த கிரி ஒய் எஸ் எஸ் ஆன்லைன் தியான மையத்தை ஜனவர் 31, 2021 அன்று திறந்து வைக்கிறார்.

நல்வரவு

நமது பெருமதிப்பிற்குரிய குருதேவரும் நிறுவனருமான ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் மெய்யுருவின் பேரில், நான் உங்களை யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா ஆன்லைன் தியான மையத்திற்கு ஆனந்தத்துடன் வரவேற்கிறேன். எல்லா ஒய் எஸ் எஸ் கேந்திரங்களையும் மண்டலிகளையும் போலவே, இந்த ஆன்லைன் மையம் இந்தியாவில் உள்ள நமது ஒய் எஸ் எஸ் ஆசிரமங்களில் சேவை செய்யும் ஒய் எஸ் எஸ் சன்னியாசிகளால் கண்காணிக்கப்படுகின்றது மற்றும் சாதகத் தொண்டர்களின் உதவியால் நடத்தப்படுகிறது.

இந்த ஆன்லைன் மையத்தின் வாயிலாக, கூட்டுத் தியானத்தை அனுபவிக்கும் அருளாசிகளையும் பரமஹம்ஸரின் போதனைகளின் கல்வியையும், உலகெங்கிலும் உள்ள மற்ற பல ஒய் எஸ் எஸ் சாதகர்களுடனும் நண்பர்களுடனும் சேர்ந்த கூட்டுறவில், உங்களுடன் பகிர்ந்து கொள்வதை ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.

தெய்வீக நட்பில்,
சுவாமி சிதானந்த கிரி

தலைவர், யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப்

ஆன்லைன் தியான மையத்திலிருந்து புதிய தகவல்களையும் நிகழ்ச்சி அறிவிப்புகளையும் பெற ஒய் எஸ் எஸ் மின்செய்திக்குப் பதிவு செய்யுங்கள்

ஆன்லைன் தியான மையம் எதற்காக?

யோகதா சத்சங்க ஆசிரமம், கேந்திரம் அல்லது மண்டலி ஆகியவற்றில் நேரடியாகப் பங்கு பெறுவதில் பல உணரத்தக்க மற்றும் உணரமுடியாத பலன்கள் உள்ளன, மற்றும் அது சாத்தியமென்றால் ஒவ்வொருவரும் நேரடியாகப் பங்கு பெறுவதை நாங்கள் விரும்புகிறோம். ஆயினும், பல சாதகர்கள் ஓர் ஒய் எஸ் எஸ் மண்டலியிலிருந்து அல்லது கேந்திரத்திலிருந்து வெகு தொலைவில் வசிக்கிறார்கள்—அல்லது மற்ற காரணங்களுக்காக அவர்களால் நேரடியாகப் பங்குகொள்ள முடிவதில்லை. இப்போது எல்லா சாதகர்களுக்கும், அவர்களுடைய இடம் அல்லது சூழ்நிலையைப் பற்றிய கவலையின்றி, கூட்டுத் தியானம், ஏகாந்தவாச நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்காக ஆன்மீகக் கூட்டுறவில் மற்ற உண்மை-நாடும் ஆன்மாக்களுடன் சேர்ந்து இணையும் வாய்ப்பு உள்ளது.

Play Video
ஆன்லைன் தியான யோகா கேந்திரா

ஆன்லைன் கூட்டுத் தியானங்கள்

தன் வாழ்நாள் முழுவதும் பரமஹம்ஸ யோகானந்தர், கூட்டுத் தியானம் ஒருவருடைய சாதனாவை ஆழப்படுத்துவதற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று விவரித்தார். இப்போது உங்களுடைய இடத்தைப் பற்றியோ அல்லது சூழ்நிலையைப் பற்றியோ கவலையின்றி, கூட்டுத் தியானங்களில் இணையும் வாய்ப்பை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள்.

ஓர் ஆன்லைன் தியானத்தில் பங்கெடுப்பதன் மூலம், நீங்கள் இந்தியா முழுவதிலும் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள பரமஹம்ஸ யோகானந்தரைப் பின்பற்றுபவர்களுடன் தியானம், தெய்வீகக் கூட்டுறவு ஆகியவற்றின் ஒரு மேம்படுத்தும் நிகழ்வில் இணைவீர்கள்.

எதிர்காலத்தில், கூட்டுத் தியான நிகழ்ச்சிகள் பல்வேறு தியான வடிவங்களை உள்ளடக்க விரிவாக்கப்படும்: குறுகிய, நீண்ட, கீர்த்தனைகளுடன், முதலியன. சாத்தியப்பட்டவுடன், நாங்கள் பல இந்திய மொழிகளில் நிகழ்ச்சிகளை வழங்கவும் ஆரம்பிப்போம்.

வரும் மாதங்களில் ஆன்லைன் மறைநூல் மற்றும் ஒய் எஸ் எஸ் பாட ஆய்வுக் குழுக்களை முன்னெடுக்கத் திட்டமிடுகிறோம்.

நிகழ்ச்சி அட்டவணையைப் பாருங்கள்

எவ்வாறு பங்கேற்பது என்பது பற்றிய விவரங்கள்

ஓர் ஆன்லைன் தியானத்தில் இணைய பின்வரும் படிகளைப் பின்பற்றுங்கள்:

1.  1. இலவச ஜூம் (Zoom) செயலியைப் பதிவிறக்கம் செய்து கைபேசியிலோ அல்லது கணிணியிலோ உள்ளீடு செய்யுங்கள் (நீங்கள் ஒரு கணக்கை ஆரம்பிக்க வேண்டிய தேவை இல்லை).

2.  2. ஆன்லைன் தியான மற்றும் சிறப்பு நிகழ்ச்சி அட்டவணையை நோட்டமிடுங்கள்..

3.  அட்டவணையில் நீங்கள் விரும்பும் நிகழ்ச்சியில் க்ளிக் செய்து, பின் ஜூம் -ஐத் திறந்து தியான அறையில் நுழைய நிகழ்ச்சி விவரத்தில் உள்ள நீல நிற ஜூம் இணைப்பை க்ளிக் செய்யுங்கள்.

உங்களுக்குக் கூடுதல் உதவி தேவையென்றால், எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்

சேவை செய்வதில் ஆர்வமா

நீங்கள் ஓர் ஒய் எஸ் எஸ்/ எஸ் ஆர் எஃப் கிரியாபானாக இருந்து ஓர் ஆன்லைன் தியான வழிநடத்துபவராகவோ அல்லது ஆன்லைன் ஏவலராகவோ ஆவதில் ஆர்வம் கொண்டிருந்தால், தன்னார்வத் தொண்டர் வலைதளத்தில் பதிவு செய்யுங்கள். நாங்கள் உங்களுடன் குருதேவருக்குச் சேவை செய்ய ஆர்வமாக இருக்கிறோம்.

எங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட அனுபவங்கள்

“அது ஒரு கூட்டுத் தியானத்தின் மெய்யுருவை உண்மையாகப் படம்பிடித்துக் காட்டியது. அது அற்புதமாக இருந்தது. அது நேரடியான கூட்டுத் தியானத்தைப் போலவே இருந்ததைக் கண்டு நான் வியப்புற்றேன்!”

“நான் நம் ஆன்லைன் தியானத்தில் ஒரு சிறந்த அனுபவத்தைப் பெற்றேன். அது நாங்கள் ஒரு குழுவின் ஒரு பகுதியாக இருப்பதைப் போன்ற உணர்வாக மெய்யாகவே இருக்கிறது!”

“வைகறையில் எழுந்து சாதகர்களுடன் அமர்ந்து தியானம் செய்யவும் நேரலைக் கீர்த்தனையைக் கேட்கவும் முடிகின்ற அத்தகைய ஒரு நல்ல உணர்வாக இருந்தது!”

“நான் தியானத்தை நேசித்தேன் மற்றும் என்னால் அவற்றை நாள்தோறும் செய்ய முடிந்தது. நேரம் சிட்டாகப் பறந்தது மற்றும் அது மிகவும் இனிமையாக இருந்தது!”

“நான் அதை மெய்யாகவே அனுபவித்து மகிழ்ந்தேன். என்னால் குழுவின் வலிமையையும் இணைப்பையும் உணர முடிந்தது.”

இதைப் பகிர