கிரியா யோகம் 150 வது ஆண்டு

கிரியா யோக மறுமலர்ச்சியின் 150 வது ஆண்டு விழா

மகாவதர் பாபாஜி
மகாவதார் பாபாஜி
லஹிரி மஹாசயா
லாஹிரி மகாசயர்
சுவாமி ஸ்ரீ யுக்தேஸ்வர்
சுவாமி ஸ்ரீ யுக்தேஸ்வர்
பரமஹம்ஸ யோகானந்தர்
பரமஹம்ஸ யோகானந்தர்

கடவுளை அறிவதற்கு வேண்டிய விஞ்ஞான உத்தியான கிரியா யோகம், இறுதியாக எல்லா நாடுகளிலும் பரவும். மேலும் மனிதனின் தனிப்பட்ட, அறிவெல்லைக் கடந்த இறை ஞானத்தின் மூலமாக தேசங்களை இணக்கமாக்க உதவும்.

—மகாவதார் பாபாஜி

தற்போதைய உலகிற்கான ஓர் ஆன்மீக அருளாசி

2011-வது ஆண்டு, இமயத்தில் இராணிகேத் நகரின் அருகே இறவா குருதேவர் மகாவதார் பாபாஜியுடன் லாஹிரி மகாசயர் பெற்ற முதல் சந்திப்பு, கிரியா யோகம் எனும் புனித அறிவியலில் அவர் பெற்ற தீட்சை ஆகியவற்றின் குறியீடாக விளங்குகிறது.

ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் -ன் நிறுவனரான பரமஹம்ஸ யோகானந்தர் இந்த விண்ணுலக அருளாசியை முதன் முறையாக தன் ஒரு யோகியின் சுயசரிதம் என்ற நூலின் வாயிலாக உலகின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்; அதில் அவர் கூறினார்:

“இந்த மங்கலகரமான நிகழ்வு லாஹிரி மகாசயருக்கு மட்டுமே நிகழவில்லை; மனித இனம் முழுவதிற்கும் இது ஒரு நற்பேறான தருணம் ஆகும். தொலைக்கப்பட்ட அல்லது எப்போதோ-மறைந்துபோன மிக உயர்ந்த யோகக்கலை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டுக் கொண்டிருந்தது.”

“இந்தப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் நான் உன் வாயிலாக உலகிற்கு வழங்கிக் கொண்டிருக்கும் கிரியா யோகம், “பாபாஜி லாஹிரி மகாசயரிடம் கூறினார், “ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் வழங்கிய அதே அறிவியலின் ஒரு புத்தாக்கமே ஆகும்; மற்றும் அது பிந்தைய காலத்தில் பதஞ்சலி முனிவருக்கும் கிறிஸ்துவிற்கும் தெரிந்திருந்தது.”

“பொதுவாக சமூகத்திற்குத் தெரியாமல்,“ பரமஹம்ஸ யோகானந்தர் எழுதினார், “ஒரு பெரிய ஆன்மீக மறுமலர்ச்சி 1861ல் பனாரஸ் நகரின் ஓர் ஒதுக்குப்புறமான மூலையில் ஆரம்பித்தது. மலர்களின் நறுமணம் மட்டுப்படுத்தப்பட முடியாது என்பதைப் போல ஓர் இலட்சிய இல்லறத்தானாக அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்த லாஹிரி மகாசயராலும் தன் உள்ளார்ந்த மகிமையை மறைக்க முடியவில்லை. இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் பக்த-தேனீக்கள் முக்தியடைந்த மகான் எனும் தெய்வீகத் தேனைத் தேடி வர ஆரம்பித்தனர்.”

“புராணக் கதையில் கங்கை நதி வாடிய பக்தன் பகீரதனுக்கு ஒரு தெய்வீக நீரை வழங்கியவாறு விண்ணுலகிலிருந்து மண்ணுலகிற்கு வந்ததைப் போல, 1861ல் கிரியா யோகம் எனும் விண்ணுலக நதி இமயத்தின் இரகசிய அரண்களிலிருந்து தூசு படிந்த மனிதர்களின் இருப்பிடங்களுக்குப் பாயத் தொடங்கியது.”

இந்த விண்ணுலக நதி இன்றும் தொடர்ந்து பாய்கிறது; அது பரமஹம்ஸ யோகானந்தரின் முயற்சிகளின் வாயிலாகவும் மகாவதார் பாபாஜி, சுவாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் ஆகியோரின் ஆணையால் துவக்கப்பட்ட நிறுவனத்தின் வாயிலாகவும் தொடர்கிறது. பரமஹம்ஸ யோகானந்தர் தாமே நேரடியாக 100,000 சீடர்களுக்கு கிரியா யோகம் எனும் புனித அறிவியலில் தீட்சை அளித்தார், மற்றும் மேற்கொண்டு பல்லாயிரக் கணக்கானோர், கிரியா யோக போதனையைப் பரப்ப அவர் நிறுவிய யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் (ஒய் எஸ் எஸ்/ எஸ் ஆர் எஃப்) எனும் இடைச்சாதனத்தின் வாயிலாக அப்போதிருந்து இதுவரை பெற்றிருக்கின்றனர். மகாவதார் பாபாஜியால் அவரிடம் ஒப்படைக்கப்பட்ட ஆன்மீகப்பணி, கிரியா யோகப் பயிற்சியின் வாயிலாக எல்லா மதங்களுக்கும் அடிநாதமாக விளங்கும் ஒரே இறைவனின் நேரடியான தனிப்பட்ட அனுபவத்தை எல்லோரும் அடைய உதவி செய்வதும் இவ்வாறு ஒத்த தன்மை, தெய்வீக உறவு ஆகியவற்றின் ஆன்மீகப் பிணைப்புகளில் உள்ள உலகக் குடும்பத்தை ஐக்கியமாக்குவதும் ஆகும்.

1861ல் ஆசீர்வதிக்கப்பட்ட அந்தத் தருணம் மனிதகுலத்தில் ஆன்மாவின் எல்லையற்ற திறன் எனும் தரிசனத்தை விழித்தெழச் செய்யும் ஓர் ஆன்மீக மறுமலர்ச்சியை ஆரம்பித்தது. இன்று உலகெங்கிலும் உள்ள உண்மை-நாடிகள் தமது கிரியா யோகத்தின் விசுவாசமிக்க பயிற்சியின் வாயிலாக இறை-தொடர்பு மற்றும் இறை-பேரின்பம் எனும் தெய்வீக அமிழ்தத்தைப் பருகிக் கொண்டிருக்கின்றனர். பாபாஜி வெகுகாலம் முன்பே தீர்க்கதரிசனமாகக் கூறியிருந்தபடி, கிரியா யோகம் ஒய் எஸ் எஸ்/ எஸ் ஆர் எஃப் எனும் இடைச்சாதனத்தின் வாயிலாக எல்லா நாடுகளிலும் பரவிக் கொண்டிருக்கிறது.

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் இந்த நிகழ்ச்சியை (கிரியா யோகத்தின் 150வது ஆண்டு நிறைவு விழாவை) உலகம் முழுவதும் சன்னியாசப் பயணங்கள், கிரியா யோக தீட்சைகள், மாநாடு (அமெரிக்கா), சரத் சங்கம் (இந்தியா) ஆகியவற்றின் வாயிலாகவும் உலகம் முழுவதிலும் உள்ள நமது பல மையங்களிலும் ஆலயங்களிலும் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிகள், நடவடிக்கைகள் ஆகியவற்றின் வாயிலாகவும் கொண்டாடியது. மேலும் விவரங்களுக்கு உங்களுடைய உள்ளூர் மையங்களையோ அல்லது ஆலயங்களையோ தொடர்பு கொள்ளுங்கள்.

பரமஹம்ஸ யோகானந்தர் தன் சுயசரிதத்தை தீர்க்கதரிசன அருளாசியைக் கொண்ட இந்த நம்பிக்கைமிக்க வார்த்தைகளுடன் முடித்தார்: “கிழக்கிலும் மேற்கிலும் கிரியா யோகத்தின் ஆசீர்வதிக்கப்பட்ட பங்கு இப்போது தான் துவங்கியுள்ளது. மனிதகுலத் துன்பங்கள் அனைத்தையும் வெற்றிகொள்வதற்காக ஆன்ம-அனுபூதியின் ஒரு திட்டவட்டமான, அறிவியல்பூர்வ உத்தி ஒன்று இருக்கிறது என்பதை எல்லா மனிதர்களும் அறிவார்களாக!”

ஒரு யோகியின் சுயசரிதம் கிரியா யோகத்தை உலகம் முழுவதும் பரப்பிய புத்தகத்தைப் படியுங்கள்

இப்போதே வாங்க

பல மொழிகளில் கிடைக்கிறது

இதைப் பகிர