
பகவத் கீதை: ஒரு உலகளாவிய மறை நூல்
கீதையின் காலத்தை வென்ற உலகளாவிய செய்தி, சத்தியத்தைப் பற்றிய அதன் வெளிப்பாட்டில் அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது.
பகவத்கீதை என்றால் “பரம்பொருளின் கீதம்”, என்று பொருள்படுகிறது, அதாவது மனிதனுக்கும் அவன் படைப்பாளிக்கும் இடையே இறையனுபூதி பற்றிய தெய்வீக கருத்து பரிமாற்றம், ஆன்மாவின் மூலமாக பரம்பொருளின் போதனைகள், இது இடைவிடாமல் துதிக்கப்பட வேண்டும். . . . உலகின் அனைத்து உயர் மறை நூல்களின் அடிப்படையாய் உள்ள முக்கிய உண்மைகள், கீதையின் வெறும் 700 சுருக்கமான பாக்களிலுள்ள எல்லையற்ற ஞானத்தில்.

கீதையின் யோக ரீதியான குறியீட்டியல் மற்றும் உருவகக் கதை சார்ந்த இரகசிய சொற்கோவையின், சிக்கல் களைதல்.

எனவே, உவமை, உருவகம், உருவகக் கதை நிறைந்த ஒரு மொழியில் பகவத் கீதை மிகவும் புத்திசாலித்தனமாக, வரலாற்று உண்மைகளை உளவியல் மற்றும் ஆன்மீக உண்மைகளுடன் இணைத்துப் பின்னி வியாச முனிவரால் எழுதப்பட்டுள்ளது. இது லெளகீக மனிதன் மற்றும் ஆன்மீக மனிதன் இருவரும் ஈடுபட வேண்டியுள்ள அமளி நிறைந்த அகப் போராட்டங்களின் ஒரு வார்த்தை-சித்திரத்தை வழங்குகிறது. அவர், குறியீட்டியல் எனும் கடினமான ஓட்டினுள் மிக ஆழ்ந்த ஆன்மீக உண்மைகளை, பூமியில் ஸ்ரீ கிருஷ்ணரது அவதாரத்தின் முடிவு நிகழ்ந்த காலத்தில், சமூக பண்பாடு வீழ்ந்து கொண்டிருந்த கலியுகத்து அறியாமையின் அழிவிலிருந்து பாதுகாப்பதற்காக ஒளித்து வைத்தார்.


தினசரி வாழ்க்கையில் ஆன்மீக போராட்டம் மற்றும் இறுதி வெற்றி
சாதகர், தனது வாழ்க்கை எந்த அளவு அகந்தையின் அறியாமை (மாயை) மற்றும் தேக உணர்வு நிலையினால் ஆளப்படுகிறது, மற்றும் ஆன்மாவின் ஞானம் மற்றும் தெய்வீக இயல்பை தன்னால் எந்த அளவு வெளிப்படுத்த முடிகிறது என்பதை தீர்மானிப்பதற்காக, தினசரி தனது மனம் மற்றும் தேக செயல்பாடுகளை ஆய்வு செய்ய வேண்டும்.


புனித பகவத் கீதையில் அந்த வெற்றியின் மிக விரைவான பேறானது, தடை செய்யப்பட முடியாத யோக தியானத்தின் தெய்வீக விஞ்ஞான பயிற்சியின் மூலம் அர்ஜுனனைப் போன்று பரம்பொருளின் அகஞானக் கீதத்தை கவனத்துடன் கேட்கக் கற்றுக் கொள்ளும் சாதகருக்கு உறுதிப் படுத்தப்படுகிறது.
கீதையின் சம சீரான பாதை: தியானத்துடன் கூடவே சரியான செயல்பாடு
பகவத் கீதையிலுள்ள ஸ்ரீ கிருஷ்ணரின் செய்திதான் நவீன காலத்திற்கும் மற்றும் எந்த காலத்திற்கும் உரிய முழுநிறைவான விடையாகும்: அதாவது கடமையுணர்ச்சி மிக்க செயல், பற்றின்மை மற்றும் இறை அனுபூதிக்கான தியானம் ஆகியவற்றிற்கான யோகம். இறைவனது அக அமைதியின்றி பணிபுரிவது நரகமாகும்; மாறாக ஆன்மாவின் ஊடாக என்றும் பொங்கிக் கொண்டிருக்கும் இறை ஆனந்தத்துடன் பணிபுரிவது, எங்கு ஒருவர் சென்றாலும் எடுத்துச் செல்லக்கூடிய அக சொர்க்கத்திற்கொப்பாகும்.
பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணரால் பரிந்துரைக்கப்படும் பாதை, உலகத்தில் மும்முரமாக உள்ள மனிதன் மிக உயர்ந்த ஆன்மீக சாதகர் என்ற இருவருக்கும் ஏற்ற ஒரு மிதமான இடைப்பட்ட பொற்பாதையாகும். பகவத் கீதையால் பரிந்துரைக்கப்படும் பாதையை பின்பற்றுவது அவர்களது முக்திக்கு வழிகோலும், ஏனெனில் அது உலகளாவிய ஆன்ம அனுபூதியின் ஒரு புத்தகம், மனிதனை ஆன்மாவெனும் அவனது சொந்த மெய்ப்பொருளிற்கு அறிமுகப்படுத்தி, அவன் எவ்வாறு பரம் பொருளிலிருந்து வெளிப்பட்டான், எவ்வாறு அவனது நியாயமான கடமைகளை பூமியில் நிறைவேற்ற வேண்டும் மேலும் அவன் எவ்வாறு இறைவனிடம் திரும்ப முடியும் என்பதை அவனுக்கு காண்பிக்கிறது. கீதையின் ஞானமானது, கொள்கைப் பிடிவாதக் காரர்களை மகிழ்விப்பதற்காக வறட்டு அறிவு ஜீவிகள் கீதையின் கூற்றுகளை மனப்பாடம் செய்யும் பயிற்சிக்கானது அல்ல, மாறாக உலகத்திலுள்ள ஓர்ஆண் அல்லது பெண்ணிற்கு, ஓர் இல்லறவாசி அல்லது துறவிக்கு, யோகத்தின் படிப்படியான வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் எவ்வாறு இறைவனுடனான உண்மைத் தொடர்பைக் கொண்ட ஒரு சமச்சீரான வாழ்க்கை வாழ்வது என்பதைக் காண்பதற்கானது.
இராஜயோகத்தின் சாசுவத விஞ்ஞானம்
படைப்பின் ஆதியில் மற்றும் மனிதனின் வருகையின் போது, எல்லையற்ற பரம்பொருளானது அறிவுத்திறன் மிக்க, படைக்கும் பிரபஞ்ச சக்திக்கு (மகா பிரக்ருதி அல்லது தூய ஆவி) பேரண்ட உணர்வு நிலையை ஆன்மாக்கள் மற்றும் பருப் பொருள் பிரபஞ்சம் என தனிப் படுத்தப்படுமாறு செய்யும் விலக்கு சக்தியோடு மட்டுமின்றி, ஆன்மாக்களை பருப்பொருளினுள் அவற்றின் கெட்டழிந்து சுற்றும் அலைச்சல்களிலிருந்து மீண்டும் தன்னிடம் அழைக்கும் சக்தியோடும் கூட செறிவூட்டியது. அனைத்துப் பொருள்களும் இந்த அறிவுத் திறன் மிக்க பிரபஞ்ச சக்தியிலிருந்து தோன்றி, அந்த சக்தியில் உருவாக்கப்பட்டு, பேணிப் பாதுகாக்கப்பட்டு இறுதியில் அதனுள் கரைவதன் மூலம் பரம்பொருளினுள் கரைகின்றன. ஆன்ம ஏற்றம், அதன் இறக்கத்தின் எதிர் நேர்வழியைப் பின்பற்றுகிறது. மனிதனுள் அந்தப் பாதை எல்லையற்றவனுக்கான அக பெருவழியாகும்; அதுதான் அனைத்து மத அனுசரிப்பாளர்களுக்கும், அனைத்து யுகங்களிலும் தெய்வீக ஐக்கியத்திற்கான ஒரே மார்க்கம்.
எந்தவித கிளைவழி நம்பிக்கைகள் அல்லது பயிற்சிகள் மூலம் ஒரு மனிதன் அந்த ஒப்பற்ற பாதையை அடைந்தாலும், தேக உணர்வு நிலையிலிருந்து பரம்பொருளுக்கான அந்த இறுதி ஆன்ம ஏற்றம் அனைவருக்கும் ஒன்றேதான்: அதாவது, புலன்களிலிருந்து உயிர் சக்தியையும் உணர்வு நிலையையும் மேல்முகமாக நுட்பமான மூளை முதுகுத்தண்டு மையங்களிலுள்ள ஒளிர்கின்ற வாயில்களின் மூலம் பின்னுழுத்தல், பின்பு பருப்பொருள் உணர்வு நிலையை உயிர்சக்தியினுள்ளும், உயிர்சக்தியை மனதினுள்ளும், மனத்தை ஆன்மாவினுள்ளும் அத்துடன் ஆன்மாவை பரம்பொருளினுள்ளும் கரைத்தல். ஆன்ம ஏற்றத்தின் இந்த வழிமுறை, படைப்பினுள் அதன் தொடக்கத்திலிருந்து ஒருங்கிணைந்துள்ள சாசுவத விஞ்ஞானமான இராஜயோகம் ஆகும்.

இலட்சிய சீடரின் மாதிரியாக இருந்த, அர்ஜுனனின் எடுத்துக்காட்டை பின்பற்றி, தன்னுடைய நியாயமான கடமையைப் பற்றின்றி ஆற்றி, தன் யோக தியானப் பயிற்சியை கிரியா யோகம் போன்ற ஒரு உத்தியின் மூலம் முழு நிறைவாக்கும் எந்த சாதகரும், இறைவனின் அருளாசிகளையும் வழிகாட்டுதலையும் அதே மாதிரி ஈர்த்து ஆன்ம அனுபூதி எனும் வெற்றியை அடைவார்.
இறைவன் அர்ஜுனனிடம் உரையாடியது போல் உங்களிடமும் உரையாடுவான். அர்ஜுனனின் ஆன்மாவையும் உணர்வு நிலையையும் அவன் மேம்படுத்தியதுபோல் உங்களையும் மேம்படுத்துவான். அர்ஜுனனுக்கு ஒப்புயர்வற்ற விஸ்வரூப தரிசனத்தை அளித்தது போல் உங்கள் மீதும் அவன் ஞானத்தை வழங்குவான்.
பகவத் கீதையில், இறைவனிடம் திரும்பச் செல்லும் ஆன்மாவின் பயணக் கதையைப் பார்த்தோம் – அது ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டிய பயணம். ஓ தெய்வீக ஆன்மாவே, “அர்ஜுனனைப் போன்று இந்த சிறிய அதைரிய மனப்பான்மையைக் (மானுட உணர்வு நிலையை) கைவிட்டு, எழுவாயாக!” உன் முன்னால் உள்ளது இராஜ மார்க்கம்.

காலத்தால் அழியாத இந்த மறை நூலின் உங்கள் பிரதியைப் பெற: