தெய்வீக கலையாகிய கீர்த்தனை

கீதம் இசைத்தல் ஒரு யோக முறையாக

1920 ஆம் ஆண்டில் அமெரிக்கா வந்த பரமஹம்ஸ யோகானந்தர் இந்தியாவின் உலகளாவிய பக்தியூட்டும் கீதமிசைத்தல் கலையை மேற்கத்திய நாடுகளுக்கு எடுத்துச் சென்றார், ஆயிரக்கணக்கானவர்களுக்கு இறை பக்தியுடன் ஒன்றாக கீதம் இசைக்கும் அனுபவத்தை அறிமுகப்படுத்தினார்.

உங்கள் தியானப் பயிற்சியில் பக்தியூட்டும் கீதம் இசைத்தலை சேர்ப்பதற்கு ஆதாரமாக இந்தப் பக்கத்தைப் பயன்படுத்தலாம் என்று நாங்கள் நம்புகிறோம். நீங்கள் தனியாகவோ அல்லது ஒரு குழுவிலோ கீதம் இசைக்கும் போது, ஒரு யோகியின் சுயசரிதத்தில் பரமஹம்ஸ யோகானந்தர், “கீதமிசைத்தல் பலன் தரும் ஒரு யோக முறை அல்லது ஆன்மீக பயிற்சி ” என்று விவரித்தார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வெறும் உணர்ச்சிப் பெருக்கைக் காட்டிலும், ஒருமுகப்பாட்டுடனும் உண்மையான பக்தியுடனும், அற்புதமான பலன்களைக் கொண்டுள்ளது என்று பரமஹம்ஸர் உறுதியளித்த ஒன்றான இந்த தெய்வீக கலை முறைக்கு, நீங்கள் உங்களை பயிற்சிக்கு உட்படுத்திக் கொள்ளலாம். “பிரார்த்திக்கும்போது அல்லது கீதங்கள் இசைக்கும் போது, வார்த்தைகளைப் பற்றியல்லாமல் அவற்றின் அர்த்தத்தைப் பற்றி சிந்தியுங்கள், மேலும் மனதளவில் அவற்றின் பின்னால் உள்ள எண்ணத்தை இறைவனிடம் சமர்ப்பித்துவிடுங்கள்,” என்று யோகதா சத்சங்க பாடங்களில், அவர் கூறுகிறார், “பின்னர் உங்கள் பிரார்த்தனையானது இறை உணர்வுநிலை எனும் கடலின் ஆழத்தில் ஒரு ஆழம் காணும் கருவியைப் போல நேராக விழும்.”

இறை ஞானத்திற்கான ஒரு கதவு

பரமஹம்ஸர் மேலே கூறியது போல, ஒரு கீதத்தின் சொற்களின் அர்த்தத்துடன் ஆழமாக இசைவித்திருப்பது முக்கியம். இதற்கான ஒரு முயற்சியாக, ஒய் எஸ் எஸ் / எஸ் ஆர் எஃப் தலைவர் ஸ்வாமி சிதானந்த கிரி நடத்தும் வழிகாட்டப்பட்ட தியானத்தில் பங்கேற்க உங்களை அழைக்கிறோம். இது பரமஹம்ஸ யோகானந்தரின் கீதமான “அமைதி கோவிலில்” குறிப்பிட்டுள்ள அமைதி மற்றும் பேரின்பத்தையும் மற்றும் தரிசன அனுபவத்தையும் – ஒரு உண்மையான குரு அல்லது சன்னியாசியின் இருப்பின் மூலம் ஒருவர் பெறும் அருளாசிகள்– காட்சிப்படுத்துவதிலும் உணர்வதிலும் கவனம் செலுத்துகிறது, இந்த உதாரணநிகழ்வில் உண்மையான குரு பரமஹம்ஸரே.

Play Video

குருதேவரின் பிரபஞ்ச கீதங்கள் அனைத்தின் மகிமையையும் போற்றி, இறைவனுக்கு அந்த பாடலை இயற்றும் போது பரமஹம்ஸ யோகானந்தரே அனுபவித்த “அந்த உணர்தலுக்குள் நம்மை நாமே ஈர்த்துக் கொள்ளும் ஒரு வாசலாக” நாம் ஒவ்வொருவரும் இருக்க முடியும் என்ற ஸ்வாமி சிதானந்த கிரியின் உரையுடன் மேலே கூறிய வழிகாட்டப்பட்ட தியானம், தொடங்குகிறது.

ஸ்வாமி சிதானந்த கிரி, குருதேவர் அருளிய பயிற்சிகள் (ஆன்மீக ஒழுக்கம்) ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் உத்திகளான ஹாங்-ஸா உத்தி, ஓம் உத்தி மற்றும் கிரியா யோகம் ஆகியவற்றைப் பயிற்சி செய்து, பக்தியோடு இருப்பதன் மூலம், எவ்வாறு ஒருவர் எல்லையற்ற அன்பருடன் அகத்துள் தொடர்பு கொள்கிறார் என்பதைப் பற்றியும் பேசுகிறார். அந்த உத்திகள் ஒய் எஸ் எஸ் பாடங்களில்.கற்பிக்கப்படுகின்றன.

பரமஹம்ஸ யோகானந்தரின் “அமைதி கோவிலில்”

அமைதிக் கோவிலில், அமைதிக் குடிலில்,
உன்னைக் காண்பேன், உன்னைத் தொடுவேன்,
அன்பு செய்வேன்,
உன்னைக் கொணர்வேன் இதய பீடத்தில்.

சமாதிக் கோவிலில், சமாதிக் குடிலில், உன்னைக் காண்பேன், உன்னைத் தொடுவேன், அன்பு செய்வேன், உன்னைக் கொணர்வேன் சமாதி பீடத்தில்.
para-ornament

மேலும் ஆய்வுக்கு:

இதைப் பகிர

Facebook
X
WhatsApp