சேவை வாய்ப்புகள்

முழுநேர வேலை வாய்ப்புகள்
சேவகர் வாய்ப்புகள்
தன்னார்வ பணி வாய்ப்புகள்

YSS-Service-Opportunities-Featured-Image

மற்றவர்களுக்குச் சேவை செய்வதில் நீங்கள் தன்னையே மறக்கும் பொழுது, நீங்கள் நாடாமலேயே உங்கள் மகிழ்ச்சிக் கோப்பை நிரம்பி விடுவதைக் காண்பீர்கள்.

— பரமஹம்ஸ யோகானந்தர்

நவம்பர் 2025

இறைவன் மற்றும் மகா குருமார்களின் அருளால், யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா (YSS) இந்திய துணைக்கண்டம் முழுவதும் வேகமாக வளர்ந்து வருகிறது, எண்ணற்ற உண்மை நாடுபவர்களை மாற்றம் மற்றும் விடுதலை அளிக்கும் கிரியா யோகப் பாதைக்கு கொண்டு வருகிறது.

இந்த வளர்ச்சிக்கு உதவ, குழுக்களை வழிநடத்துதல், மேற்பார்வை, ஒருங்கிணைப்பு மற்றும் திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளை வெற்றிகரமாக செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணி நிலைகளுக்கு அர்ப்பணிப்புள்ள மற்றும் திறமையான தனிநபர்களை நாங்கள் தீவிரமாக தேடுகிறோம்.

சேவையில் ஆர்வமுள்ளவர்களை ஊழியர்களாகவோ, எங்கள் ஆசிரமங்களில் வசிக்கும் சேவகர்களாகவோ, வசிப்பிடத்திலிருந்து பணிபுரியும் தன்னார்வலர்களாகவோ பல்வேறு நிலைகளில் பணியாற்ற அன்புடன் அழைக்கிறோம். இந்த வாய்ப்புகளை பற்றி எங்களுடன் கலந்து ஆலோசனை செய்ய அழைக்கிறோம்.

தற்போதைய காலி பணியிடங்கள்

கீழே குறிப்பிடப்பட்டுள்ள வகைகளுக்கு திறமையான நிபுணர்களை எதிர்பார்க்கிறோம்:

முழுநேர வேலை வாய்ப்புகள்

YSS இல் பணியிடங்கள் ஒவ்வொன்றும் இழப்பீடு மற்றும் சலுகைகளின் வசீகரமான தொகுப்புடன் உள்ளது.

YSS ஆசிரமங்களில் பணியாளர்கள், ஆசிரமத்தின் புனிதமான வளாகத்திற்குள் பணிபுரிவதன் பலன்களை அனுபவிக்க முடியும், அத்துடன் சாதனா மற்றும் சேவையின் சமநிலை வாழ்க்கைக்கான வாய்ப்பையும் அனுபவிக்க முடியும். அவர்கள் கூட்டு தியானம் மற்றும் ஆன்மீக செயல்பாடுகளில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெறலாம், இணக்கமான சூழலில் பணியாற்றலாம், குருதேவரின் தெய்வீக இருப்பால் நிரம்பிய புனித ஆசிரம பகுதிகளை அனுபவிக்கலாம்.

para-ornament

வெளியீடுகள் விநியோகத் தலைவர்

ஜாப் கோட்: J19
இடம்: ராஞ்சி
துறை:
புத்தகங்கள்
பொது பதவி(கள்) எண்ணிக்கை: 1
ரோல்: முழு நேரம்

பதவி குறித்த விளக்கம்:
வெளியீடுகள் விநியோகத் தலைவர், புத்தகத் துறையின் கீழ் செயல்பட்டு, YSS வெளியீடுகளின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதலை வழிநடத்தும் பொறுப்பை வகிப்பார். இந்தப் பொறுப்பின் பணி, அணுகலை விரிவுபடுத்துதல், சந்தை இருப்பை வலுப்படுத்துதல் மற்றும் நிலையான வளர்ச்சியை உறுதி செய்தல் ஆகிய உத்திகளை, YSS-இன் ஒட்டுமொத்த YSS மரபு மற்றும் மதிப்புகளுக்கு இணக்கமாக செயல்படுத்துவதாகும்.


இந்த பணியின் முக்கிய செயல்பாடுகள்:

  • செயல்பாட்டு மேற்பார்வை மற்றும் குழுவை வழிநடத்துதல்:
    • அனைத்து துணை செயல்பாடுகளும் பணியாளர்களும் ஒத்திசைவுடனும், திறம்படவும் இயங்குவதை உறுதிசெய்ய அன்றாட நடவடிக்கைகளை மேற்பார்வையிடுதல்
    • குடோன் மேலாண்மை
    • ஒத்துழைப்பு மற்றும் மேன்மை நிறைந்த ஒரு பண்பாட்டை வளர்த்து, உயர் செயல்திறன் கொண்ட குழுவை உருவாக்கி வழிநடத்துதல்
    • அனைத்து சட்ட மற்றும் ஒழுங்குமுறை தேவைகளுக்கும் (ஜிஎஸ்டி, சுங்கம், முதலியன) இணங்குவதை உறுதி செய்தல்
  • இ-காமர்ஸ் தளங்களில் ஆன்மீகத் தாக்கத்தை விருத்தி செய்தல்:
    • புதிய மற்றும் பேக்லிஸ்ட் டைடல்ஸ்க்கான மல்டி-சேனல் சந்தைப்படுத்தல் பிரச்சாரங்களைத் திட்டமிடுவதற்கும் செயல்படுத்துவதற்கும் உதவுதல்
    • அமேசான், ஃபிளிப்கார்ட் மற்றும் பிற இ-காமர்ஸ் தளங்களில் பட்டியல்களை மேம்படுத்துவதன் மூலம் YSS இன் ஆன்லைன் இருப்பை வலுப்படுத்துதல்
    • இ-காமர்ஸ் மற்றும் ஆடியோபுக் விநியோகத்தை விரிவுபடுத்த டிஜிட்டல் விற்பனை கூட்டாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களுடன் ஒத்துழைத்தல்
  • நிதி மேலாண்மை:
    • YSS வெளியீடுகளின் அவுட்ரீச் வளர்ச்சி, நிதி ஆரோக்கியம் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்வதற்காக, வருடாந்திர விற்பனை முன்னறிவிப்பை விருத்தி செய்து நிர்வகித்தல்
    • செயல்திறனை மதிப்பிடுவதற்கு முக்கிய செயல்திறன் குறியீடுகள் (KPIs) மற்றும் நிதி அளவீடுகளைக் கண்காணித்தல்
  • சந்தை மற்றும் தொழில்துறை ஈடுபாடு:
    • விநியோகஸ்தர்கள், புக்ஸ்டோர்ஸ் (சுயாதீன மற்றும் சங்கிலி), ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் YSS மையங்களுடன் வலுவான உறவுகளை வளர்த்துப் பேணுதல்
    • புத்தகக் கண்காட்சிகள், மாநாடுகள் மற்றும் தொழில்துறை நிகழ்வுகளில் YSS வெளியீடுகளைப் காட்சிப்படுத்துதல்
  • சிஸ்டம்ஸ் உள்கட்டமைப்பு மற்றும் தரவு நுண்ணறிவு மேலாண்மை:
    • புத்தக விற்பனை மென்பொருள் மற்றும் தகவல் அமைப்புகளின் நிறுவல், பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளை முன்னெடுத்தல்
    • மூத்த நிர்வாகத்திற்கான பயனுள்ள தரவு சார்ந்த முடிவெடுக்கும் செயல்முறைகளுக்கு ஏற்பாடு செய்தல்


தகுதிகள்:

  • கல்வி மற்றும் அனுபவம்:
    • வணிக நிர்வாகம், மேலாண்மை அல்லது தொடர்புடைய துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது
    • பதிப்பகத் துறையில் 7 முதல் 10 வருட தொடர்புடைய தலைமைத்துவ அனுபவம்
  • திறன்கள் மற்றும் திறமைகள்:
    • வணிக மேம்பாடு மற்றும் வியூகத் திட்டமிடலில் நிரூபிக்கப்பட்ட சாதனைப்
    • பதிப்பகத் துறையின் இயக்கவியலைப் பற்றிய வலுவான புரிதல்
    • நிதி நுண்ணறிவுடன், வரவு செலவு திட்டமிடல் மற்றும் செயல்திறன் மேலாண்மை ஆகியவற்றில் அனுபவம்
    • சிறந்த தலைமைத்துவ, தொடர்பு மற்றும் குழு உருவாக்கும் திறன்கள்
    • புதுமைக்கான உந்துதலுடன் கூடிய வியூகத்திறன் கொண்ட சிந்தனையாளர்

வெப் கன்டென்ட் மேனேஜர் (ஐடி)

ஜாப் கோட்: J15
இடம்: தொலைநிலை
துறை:
ஐடி
பொது பதவி(கள்) எண்ணிக்கை: 1
ரோல்: முழு நேரம்

பதவி குறித்த விளக்கம்:
வலைத்தள மேலாண்மை, மின்னஞ்சல் பிரச்சாரங்கள், மற்றும் பிற டிஜிட்டல் திட்டங்களுக்கு உதவ ஒரு முழுநேர வெப் கன்டென்ட் மேனேஜர் ஐ YSS எதிர்ப்பார்க்கிறது. கன்டென்ட் மேலாண்மை (வேர்ட்பிரஸ்/இதைப் போன்றவற்றைப் பயன்படுத்துதல்) அல்லது பிற டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறைகளில் அனுபவம் தவிர, YSS கொள்கைகள் மற்றும் தரங்களைப் பற்றிய நல்ல புரிதல் எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த பணியின் முக்கிய செயல்பாடுகள்:

  • YSS இணையதள உள்ளடக்கத்தை புதுப்பித்தல் மற்றும் நிர்வகித்தல்
  • மொழிபெயர்ப்புகளைப் பதிவேற்றுதல்/திருத்துதல்
  • மின்னஞ்சல்/SMS பிரச்சாரங்களை உருவாக்கி, பட்டியல்கள் மற்றும் பார்வையாளர்கள் பிரிவுகளை நிர்வகித்தல்
  • பகுப்பாய்வுகள், போக்குகளைக் கண்காணித்தல், செயல்படக்கூடிய நுண்ணறிவுகள்/பரிந்துரைகளைப் பகிர்தல்
  • டிஜிட்டல் குழு தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்து, சிறந்த நடைமுறைகள் மற்றும் தொடர்ச்சியான ஆதரவுக்கான மூல வளமாக செயல்படுதல்

 

தகுதிகள்:

  • கல்வி மற்றும் அனுபவம்:
    • கணினி அறிவியலில் BSc அல்லது மார்க்கெட்டிங் MBA விரும்பப்படுகிறது, ஆனால் கட்டாயமில்லை
    • கன்டென்ட் மேனேஜ்மென்ட் அல்லது டிஜிட்டல் மார்க்கெட்டிங் அல்லது வலை தொழில்நுட்பத்தில் பணிபுரிந்த 2+ ஆண்டுகள் முந்தைய பணி அனுபவம்
    • அடிப்படை HTML/CSS அறிவு
  • திறன்கள் மற்றும் திறமைகள்:
    • ஆங்கில எழுத்து மற்றும் வாய்மொழி தொடர்பு திறனில் சிறந்து விளங்குதல்
    • புதிய தளங்கள் மற்றும் மென்பொருள் தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ளும் திறன்
    • கற்றுக்கொள்ள விருப்பம்
சேவகர் வாய்ப்புகள்

ஆசிரம சேவகராக இருப்பதன் சில நன்மைகளாவன: ஆன்மீக ரீதியில் உயர்த்தும் ஆசிரம சூழலில் வாழ்வது, சன்னியாசிகள் வழி நடத்தும் காலை மாலை கூட்டு தியானங்கள், சன்னியாசிகள் குறிப்பாக சேவகர்களுக்காக நடத்தும் வழக்கமான ஆன்மீக சொற்பொழிவுகள் மற்றும் வகுப்புகள், சன்னியாசிகள் மற்றும் பிற சேவகர்களுடனான ஆன்மீகத் தோழமை, புத்துணர்ச்சிக்காக மற்ற சேவகர்களுடன் அவ்வப்போது பயணங்கள் ஆன்மீக ரீதியில் சமநிலை வாழ்க்கைக்கான ஒரு வாய்ப்பு.

பக்தர்கள் விலையில்லா உணவு மற்றும் தங்குமிடத்தைத் தவிர வேறு எந்த ஊதியத்தையும் நாடாமல் தங்கள் சேவையை வழங்கினாலும், YSS சில சேவகர்களுக்கு ஒரு வெகுமானத்தை வழங்கக்கூடும்.

para-ornament

பள்ளிச் செயலாளர்

இடம்: ராஞ்சி
துறை:
கல்வி
பொது பதவி(கள்) எண்ணிக்கை: 1
ரோல்: சேவக், முழுநேரம்

பதவி குறித்த விளக்கம்:

யோகதா சத்சங்கப் பள்ளிகளின் செயலாளர், பள்ளியின் நிர்வாகக் குழுவின் ஒட்டுமொத்த அதிகாரத்தின் கீழ் செயல்படுகிறார். பள்ளியின் செயல்திறன் மற்றும் நிர்வாகத்திற்கு அவர் பொறுப்பேற்கிறார். கமிட்டியின் சார்பில் செயல்பட்டு, அதன் தீர்மானங்களைச் செயல்படுத்துவதற்குத் தேவையான அங்கீகரிக்கப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்கிறார் மற்றும் தகுதிவாய்ந்த அதிகாரிகளாலும் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா (YSS) நிறுவனத்தாலும் வெளியிடப்பட்ட அனைத்து சட்டபூர்வமான உத்தரவுகள், விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு இணங்குவதை உறுதிசெய்கிறார்.

இந்த பணியின் முக்கிய செயல்பாடுகள்:

  • வியூகம் வகுத்தல் மற்றும் மேலாண்மைப் பொறுப்புகள்:
    • வியூகத் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்துதல், நிர்வாகக் குழு கூட்டங்களுக்கான நிகழ்ச்சி நிரலைத் தீர்மானித்தல், மற்றும் கூட்ட அறிக்கையைப் பதிவு செய்தல்
    • மேலும், நிர்வாகக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட தொடக்க முயற்சிகளைத் தெரிவிப்பதற்கும், செயல்படுத்துவதற்குமான பொறுப்பு
  • உடன்படுதல்: அனைத்து பொருந்தக்கூடிய கல்வி சார்ந்த விதிமுறைகள் மற்றும் சட்டரீதியான தேவைகளை கடைப்பிடிப்பதை உறுதி செய்தல்
  • கல்வி மற்றும் இணை பாடத்திட்ட மேற்பார்வை
  • பள்ளியின் மனித வள (HR) கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை செயல்படுத்துதல்:
    • பணியாளர் ஆட்சேர்ப்பை கண்காணித்தல், பணிப் பொறுப்புகளை வரையறுத்தல், மற்றும் ஆசிரியர்களின் பயிற்சி மற்றும் மேம்பாட்டிற்கு ஆதரவளித்தல்
  • தகவல் தொடர்பு மற்றும் மக்கள் தொடர்பு:
    • ஜார்க்கண்ட் கல்வி கவுன்சில், அரசு அமைப்புகள் மற்றும் பிற வெளி நிறுவனங்களுடன் அதிகாரப்பூர்வ கடிதப் போக்குவரத்தை நிர்வகித்தல்
  • உள்கட்டமைப்பு மற்றும் வள மேலாண்மை: பள்ளி வசதிகளைப் பராமரித்தல் மற்றும் பராமரித்தல் ஆகியவற்றிற்குப் பொறுப்பு
  • மறுஆய்வு, அறிக்கையிடல் மற்றும் மதிப்பீடு செய்தல்:
    • அவ்வப்போது முன்னேற்ற அறிக்கைகளைத் தயாரித்தல் மற்றும் அவற்றை நிர்வாகக் குழு மற்றும் YSS கல்வித் துறையிடம் மறுஆய்வு மற்றும் திட்டமிடலுக்காக சமர்ப்பித்தல்


தகுதிகள்:

  • கல்வி மற்றும் அனுபவம்:
    • இளங்கலை அல்லது முதுகலை பட்டம்
    • குறைந்தது 15 ஆண்டுகள் பள்ளி அமைப்பில் நிர்வாக அனுபவம், தலைமை ஆசிரியர், முதல்வர் அல்லது நிர்வாகத் தலைவர் பொறுப்பில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
  • திறன்கள் மற்றும் திறமைகள்:
    • வலுவான நிறுவன, தலைமை மற்றும் தகவல்தொடர்பு திறன்கள்
    • பள்ளி ஒழுங்குமுறை மற்றும் இணக்கத் தேவைகள் குறித்த ஆழ்ந்த புரிதல்
    • கணினி பயன்பாடுகள் மற்றும் ஐடி அமைப்புகளில் தேர்ச்சி
    • பணியாளர்கள் மற்றும் நிறுவன வளர்ச்சியைத் திறம்பட நிர்வகிக்கும் ஆற்றல்

கண் மருத்துவர்

இடம்: யோகதா சத்சங்க கிளை மடம், ராஞ்சி
துறை:
மருத்துவம்
பொது பதவி(கள்) எண்ணிக்கை): 1
ரோல்: சேவக், முழு நேரம்

இந்த பணியின் முக்கிய செயல்பாடுகள்:

  • ஒரு நாளைக்கு 100 நோயாளிகள் வரை வெளி நோயாளிகள் பிரிவை தனியாக நிர்வகிக்கக்கூடியவராக இருத்தல் வேண்டும்
  • வாரத்திற்கு 60-70 வரை அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருத்தல்
  • அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய சிக்கல்களைக் கண்டறிந்து கையாளுதல்
  • மருத்துவ நுணுக்கங்களுக்கு ஏற்ப அறுவை சிகிச்சைகளை அட்டவணைப்படுத்துதல்
  • மின்னணு கியர்ஸ் மற்றும் இயந்திரங்கள் பராமரிப்பு


தகுதிகள்:

  • கல்வி மற்றும் அனுபவம்:
    • M.D. / M.S. (Oph) அல்லது DNB (Oph)
    • 3 ஆண்டுகள் கண்புரை அறுவை சிகிச்சை அனுபவம் (Phaco மற்றும் SICS): அவசியம்
    • க்ளாகோமா மற்றும் அட்னெக்சா அறுவை சிகிச்சைகள் அனுபவம்: கூடுதல் திறன்
  • திறன்கள் மற்றும் திறமைகள்:
    • கையிருப்பு சாதனங்களுடன் வேலை செய்யும் திறன்
    • நோயாளிகளுடன் இந்தியில் உரையாடுதல்
    • பணிச்சூழலில் நல்லிணக்கம் பேணுதல்

உதவியாளர், சட்டம் & சொத்துக்கள் துறை

இடம்: யோகதா சத்சங்க கிளை மடம், ராஞ்சி
துறை: சட்டம் மற்றும் சொத்துக்கள்
பொது பதவி(கள்) எண்ணிக்கை: 1
பணி: சேவகர், முழு-நேரம்

பதவி குறித்த விளக்கம்:
நிறுவனத்திற்குள் சுமூகமான செயல்பாடுகள் மற்றும் சட்டரீதியில் நேர்மை மற்றும் கேந்திரங்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் ஒருங்கிணைப்புக்கு முக்கியமானதுமான, சட்ட ஆவணங்கள் தயாரித்தல், தொடர்புடைய சட்டங்களுக்கு இணங்குதல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட பதிவுகளை பேணுதல்.

இந்த பணியின் முக்கிய செயல்பாடுகள்:

  • விற்பனை/பரிசுப் பத்திரங்கள், பவர் ஆஃப் அட்டார்னி மற்றும் உயில்கள் போன்ற உள் ஒப்புதல் ஆவணங்கள் மற்றும் சட்ட ஆவணங்களைத் தயாரித்து நிர்வகித்தல், சட்டத் தரங்களுடன் துல்லியம் மற்றும் இணக்கத்தை உறுதி செய்தல்
  • வருமான வரி, மனிதவளங்கள், தகவல் தொழில்நுட்பம், மற்றும் சொத்து போன்ற YSS செயல்பாட்டுடன் தொடர்புடைய சட்டங்களை புரிந்து கொள்ளவும், பொருத்தமான சட்டங்களை செயல்படுத்தவும், நிறுவனம் சட்டத் தேவைகளுக்கு இணங்குவதை உறுதிப்படுத்துதல்
  • தகவல் பரிமாற்றத்தை எளிதாக்குவதற்கும் எந்தவொரு விசனத்தையும் நிவர்த்தி செய்வதற்கும் கேந்திரங்கள் மற்றும் பக்தர்களுடன் திறம்பட தொடர்பு கொள்ளுதல்
  • கடிதங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் செய்திகள் உள்ளிட்ட அனைத்து தகவல் பரிமாற்றங்களையும் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பான முறையில் சேமித்து வைப்பதுடன், இரகசியத்தன்மையைப் பேணுதல், மற்றும் எளிதாக மீட்டெடுத்தல்
  • பல்வேறு சட்டம் மற்றும் சொத்து தொடர்பான விஷயங்களுக்கு வழக்கறிஞர்கள், ஆலோசகர்கள் போன்றவர்களுடன் தொடர்பு கொள்ளுதல்
  • பல்வேறு சட்டப் பிரச்சினைகள் தொடர்பான சட்ட திட்டங்கள், விதிமுறைகள், தீர்ப்பு வழி வழக்குகள் போன்றவற்றை ஆராய்ச்சி செய்து, ஆராய்ச்சியின் முடிவுகளை அர்த்தபூர்வமாக முன்வைத்தல்


தகுதிகள்:

  • கல்வி மற்றும் அனுபவம்:
    • சார்டர்ட் அக்கவுன்டன்ட் (இறுதி அல்லது இடை நிலை) அல்லது கம்பனி செக்ரட்டரி அல்லது சட்டத்தில் பட்டம் அல்லது சட்ட ஆவணங்கள் மற்றும் சட்டம் தொடர்பான விஷயங்களில் அனுபவம் உள்ள பட்டதாரி
    • குறைந்தது 3 வருட பணி அனுபவம் (கட்டாயமில்லை)

  • திறன்கள் மற்றும் திறமைகள்:
    • ஆங்கில மொழியில் வலுவான தொடர்புத் திறன் (எழுத்து மற்றும் பேச்சு இரண்டும்)
    • இந்தி மொழி நடைமுறை அறிவு (எழுத்து மற்றும் பேச்சு இரண்டும்)

ரிஸப்ஷன் மற்றும் புக் ஸ்டோர் மேனேஜர்

இடம்: யோகதா சத்சங்க கிளை ஆசிரமம், சென்னை
துறை:
ரிஸப்ஷன்
பொது பதவி(கள்) எண்ணிக்கை): பல
ரோல்: தங்கி பணிபுரியும் சேவக் (2-4 மாதங்கள் அல்லது அதற்கு மேல்)

பதவி குறித்த விளக்கம்:

வருகையாளர்கள், பக்தர்கள் மற்றும் தங்குவோர்களுக்கு அன்பான மற்றும் வரவேற்கும் விதமாக உதவி வழங்குதல், ஆசிரமத்தில் அவர்களுக்கு தடையற்ற அனுபவத்தை உறுதி செய்தல்.

இந்த பணியின் முக்கிய செயல்பாடுகள்:

  • வருகையாளர்களை/பக்தர்களை அன்பாகவும் மரியாதையுடனும் வரவேற்று உதவுதல்
  • வரவேற்பு செயல்பாடுகளை நிர்வகித்தல்: அழைப்புகள், மின்னஞ்சல்கள் மற்றும் விசாரணைகள்
  • புத்தக அறையை மேற்பார்வையிடுதல்: விற்பனை, கையிருப்பு, தூய்மை மற்றும் ஒழுங்கு
  • தங்குமிட முன்பதிவு மற்றும் செக்-இன் ஐ ஒருங்கிணைத்தல்
  • நன்கொடைகள், YSS வெளியீடுகளின் விற்பனை, மற்றும் பிற பரிமாற்றங்களை கையாளுதல்
  • ஆசிரம நிகழ்ச்சிகள், நிகழ்வுகள் மற்றும் சேவைகள் பற்றிய பொதுவான தகவல்களை வழங்குதல்
  • பதிவுகளைப் பராமரித்தல்: வருகையாளர் பதிவுகள், நன்கொடைகள், விற்பனை மற்றும் பொருள் விவரப் பட்டியல்
  • ஹாஸ்பிடாலிடி, பராமரிப்பு மற்றும் பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல்
  • அடிப்படை பணிகள் செய்தல் (கோப்புப்பதிவு, நகல் எடுத்தல், டேட்டா என்ட்ரி போன்றவை)


திறன்கள் மற்றும் திறமைகள்:

  • தெளிவான மற்றும் மரியாதையானத் தகவல் தொடர்பு (பேச மற்றும் எழுத)
  • ஆங்கிலம் மற்றும் தமிழில் சரளமாகப் பேசத் தெரிந்திருக்க வேண்டும்; கூடுதல் தென்னிந்திய மொழிகள் அறிந்திருத்தல் ஒரு கூடுதல் தகுதியாகும்
  • அடிப்படை கணினி தேர்ச்சி (MS Office, மின்னஞ்சல், டேட்டா என்ட்ரி)
  • அனைத்து விஷயங்களிலும் இரகசியத்தன்மையைப் பேணுதல் மற்றும் முக்கியமான தகவல்களைக் கையாளும் திறன்
  • மென்மையான, சேவை மனப்பான்மையுடன் மற்றவர்களின் தேவைகளை உணர்தல்
  • YSS பணி கலாச்சாரத்துடன் அறிமுகம், YSS இல் தன்னார்வலராக முன் அனுபவம் விரும்பத்தக்கது

உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் மேனேஜர்

இடம்: யோகதா சத்சங்க கிளை ஆசிரமம், சென்னை
துறை: பராமரிப்பு
பொது பதவி(கள்) எண்ணிக்கை: பல
ரோல்: தங்கி பணிபுரியும் சேவக் (3-6 மாதங்கள் அல்லது அதற்கு மேல்)

பதவி குறித்த விளக்கம்:

ஆசிரமத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை திறம்பட பராமரித்தல் மற்றும் சீரான இயக்கத்தை உறுதி செய்ய, அனைத்து மின், இயந்திர, சிவில் மற்றும் தொடர்புடைய அமைப்புகளையும் அர்ப்பணிப்புடன் கூடிய சேவை மனப்பான்மையுடன் மேற்பார்வையிடுதல்.

இந்த பணியின் முக்கிய செயல்பாடுகள்:

  • மின்சாரம், இயந்திரம், சிவில், பிளம்பிங் மற்றும் சுகாதார அமைப்புகளின் பராமரிப்பை மேற்பார்வையிடுதல்
  • பராமரிப்புத் தேவைகளை அடையாளம் காண தவறாமல் ஆய்வுகள் மேற்கொள்ளுதல்
  • பராமரிப்பு பணியாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் பணிகளை ஒருங்கிணைத்து மேற்பார்வையிடுதல்
  • அடிப்படை பழுதுபார்ப்பு மற்றும் நடைமுறைகள் குறித்து பணியாளர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்குதல்
  • கருவிகள், உதிரி பாகங்கள் மற்றும் அத்தியாவசிய உபகரணங்களின் இருப்புக் கணக்கை பராமரித்தல்
  • நம்பகமான பழுதுபார்ப்பு பணியாளர்களின் தகவல் தளத்தை உருவாக்கி நிர்வகித்தல்
  • தேவையான பொருட்கள், வழங்கீடுகள் மற்றும் சேவைகளை சரியான நேரத்தில் வாங்குதல்
  • தடையில்லா சேவைகளை உறுதிப்படுத்த ஹாஸ்பிடாலிடி துறையுடன் ஒத்துழைத்தல்
  • தேவையான புதுப்பித்தல்கள் அல்லது மேம்பாடுகள் குறித்து வசதிகளை அவ்வப்போது மதிப்பீடு செய்தல்
  • தடுப்பு பராமரிப்பு அட்டவணைகளைத் திட்டமிட்டு செயல்படுத்தி செயலிழப்புகளைத் தவிர்த்தல்


தகுதிகள்:

  • கல்வி மற்றும் அனுபவம்:
    • பொறியியல் பட்டம்/டிப்ளமோ (சம்பந்தப்பட்ட துறையில் பி.இ. / பி.டெக் / டிப்ளமோ) அல்லது அதற்கு சமமான அனுபவம் (எ.கா., 10–15 ஆண்டுகள் பணி அனுபவங்களுடன் கூடிய முன்னாள் கடற்படை ஊழியர்கள்)
    • எலக்ட்ரிக்கல்/ மெக்கானிக்கல்/ சிவில் போன்ற ஏதேனும் ஒரு துறையில் தொழில்நுட்ப அறிவு
  • திறன்கள் மற்றும் திறமைகள்:
    • ஆங்கிலத்தில் சரளமாகப் பேசக்கூடியவராகவும் (பேசவும் எழுதவும்); இந்தி பேசத் தெரிந்திருப்பவராகவும் இருக்க வேண்டும்; தமிழ் அறிந்திருத்தல் கூடுதல் தகுதியாக இருக்கும்
    • வலுவான தலைமை, ஒருங்கிணைப்பு மற்றும் குழு மேலாண்மை திறன்கள்
    • சிக்கல் தீர்ப்பதில் சிறப்புத் திறன்
    • அடிப்படை கணினி கருவிகளில் நிபுணத்துவம் (MS Office, மின்னஞ்சல், ரெகார்ட் கீபிங்)
    • வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்கள் உட்பட நெகிழ்வான நேரங்களில் வேலை செய்ய விருப்பம்
    • தளம் வருகை, ஆய்வுகள் மற்றும் அவசரநிலை எதிர்கொள்ளுதல் ஆகிய சூழ்நிலைகளுக்கு உடல்ரீதியாக தகுதியானவராயிருத்தல்
    • அவசரநிலைகளைக் கையாளும் திறன் மற்றும் விரைவான முடிவுகளை எடுக்கும் திறன்

ஹவுஸ்கீப்பிங் மற்றும் ஹாஸ்பிடாலிடி மேனேஜர்

இடம்: யோகதா சத்சங்க கிளை ஆசிரமம், சென்னை
துறை:
ஹாஸ்பிடாலிடி
பொது பதவி(கள்) எண்ணிக்கை: பல
ரோல்: தங்கி பணிபுரியும் சேவக் (2-4 மாதங்கள் அல்லது அதற்கு மேல்)

பதவி குறித்த விளக்கம்:

ஆசிரமத்தின் வசதிகள் பராமரிக்கப்பட்டுப் பேணுதலை உறுதிசெய்து, தங்குபவர்களுக்கும் வருகையாளர்களுக்கும் சுத்தமான, வசதியான மற்றும் அமைதியான சூழலை வழங்குதல்.

இந்த பணியின் முக்கிய செயல்பாடுகள்:

  • சுத்தம் செய்தல், துணி சலவை செய்தல் மற்றும் கழிவுகளை அகற்றுதல் போன்ற அன்றாட பராமரிப்பு வேலைகளை மேற்பார்வையிடுதல்
  • பராமரிப்பு ஊழியர்கள் மற்றும் உதவிப் பணியாளர்களை மேற்பார்வை செய்தல் மற்றும் ஒருங்கிணைத்தல்
  • அறைகள், வசதிகள் மற்றும் பொதுவான பகுதிகளைத் தவறாமல் வழக்கப்படி ஆய்வு செய்தல்
  • நம்பகமான பழுதுபார்க்கும் பணியாளர்களின் தொடர்பு பட்டியலைப் பராமரித்து தேவைக்கேற்ப ஒருங்கிணைத்தல்
  • வசதி தொடர்பான பிரச்சினைகளை பராமரிப்புத் துறைக்கு தெரிவித்தல்
  • பழுதுபார்ப்புகள், மாற்றுப் பணிகள் மற்றும் சிறிய புனரமைப்புப் பணிகளைத் திட்டமிடுதல் மற்றும் பின்தொடர்தல்
  • பராமரிப்பு வழங்கீடுகள் மற்றும் உபகரணங்களின் இருப்பு மற்றும் பயன்பாட்டை நிர்வகித்தல்
  • பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் தூய்மை நெறிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதி செய்தல்


திறன்கள் மற்றும் திறமைகள்:

  • வலுவான தலைமைப் பண்பு மற்றும் குழு ஒருங்கிணைப்பு திறன்கள்
  • சிறந்த நிர்வாக மற்றும் நேர மேலாண்மை திறன்கள்
  • சிறந்த தகவல்தொடர்பு மற்றும் மனித உறவுத் திறமைகள் கொண்டிருத்தல்
  • தமிழ் மற்றும்/அல்லது பிற தென்னிந்திய மொழிகள் அறிந்திருத்தல்; இந்தி அறிந்திருத்தல் விரும்பத்தக்கது
  • அடிப்படை கணினி தேர்ச்சி (மின்னஞ்சல், கையிருப்புப் பதிவுகள், MS Office)
  • YSS பணி கலாச்சாரத்துடன் அறிமுகம், YSS இல் தன்னார்வலராக முன் அனுபவம் விரும்பத்தக்கது

சமையலறை மேனேஜர்

இடம்: யோகதா சத்சங்க கிளை ஆசிரமம், சென்னை
துறை:
மத்திய சமையலறை
பொது பதவி(கள்) எண்ணிக்கை: பல
ரோல்: தங்கி பணிபுரியும் சேவக் (2-4 மாதங்கள் அல்லது அதற்கு மேல்)

பதவி குறித்த விளக்கம்:

ஆசிரமத்தின் ஆன்மீக சமூகத்திற்கு ஏற்ற வகையில், உணவு தயாரிப்பு, சேவை மற்றும் சுத்தமான மற்றும் ஒழுங்கான சமையலறை சூழல் பராமரிப்பு ஆகியவற்றை மேற்பார்வையிடுதல் மற்றும் உதவுதல்.

இந்த பணியின் முக்கிய செயல்பாடுகள்:

  • வாராந்திர மெனுவைத் திட்டமிட சமையல்காரருடன் ஒருங்கிணைந்து செயல்படுதல்
  • தேவைகளின் அடிப்படையில் உணவு அளவுகளை மாற்றுதல்
  • வாராந்திர பொருள் கொள்முதலை ஒழுங்கமைக்க கொள்முதல் மேலாண்மை குழுவுடன் இணைந்து பணியாற்றுதல்
  • உணவுகளை சரியான நேரத்தில் தயாரித்து வழங்குவதை உறுதி செய்தல்
  • சமையலறை சுகாதாரத்தை பராமரித்தல் மற்றும் சமையலறை பொருட்களை திறம்பட ஒழுங்கமைத்தல்


திறன்கள் மற்றும் திறமைகள்:

  • சமையலறை செயல்பாடுகள் குறித்த அடிப்படை அறிவு
  • கால அட்டவணைகளை பின்பற்றும் திறன்
  • கருத்துக்களை மதிப்பீடு செய்து தேவையான மாற்றங்களைச் செய்தல்
  • நிலையான நடைமுறைகள் மூலம் உணவு வீணடிப்பைக் குறைப்பதில் திறமையுடனும் உறுதிபூண்டும் இருத்தல்
  • அறிவுறுத்தல்களை கவனமாகவும் துல்லியமாகவும் பின்பற்றும் திறன்
  • வலுவான குழுப்பணி மற்றும் தகவல் தொடர்புத் திறன்
  • உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதார நடைமுறைகள் பற்றிய அடிப்படை அறிவு
  • தமிழ் மற்றும்/அல்லது பிற தென்னிந்திய மொழிகளில் பேசும் திறன்; இந்தி அறிந்திருத்தல் விரும்பத்தக்கது

சப்போர்ட் சர்விசஸ் மேனேஜர்

இடம்: யோகதா சத்சங்க கிளை ஆசிரமம், சென்னை
துறை:
தியான மந்திர்
பொது பதவி(கள்) எண்ணிக்கை: பல
ரோல்: தங்கி பணிபுரியும் சேவக் (2-4 மாதங்கள் அல்லது அதற்கு மேல்)

பதவி குறித்த விளக்கம்:

ஆசிரமத்தின் சீரான செயல்பாட்டை உறுதி செய்வதிலும், ஆன்மீக நடைமுறைகள் மற்றும் சமூக சேவைகளுக்கான சூழலை பராமரிப்பதிலும் சப்போர்ட் சர்விசஸ் மேனேஜர் முக்கிய பங்கு வகிப்பார்.

இந்த பணியின் முக்கிய செயல்பாடுகள்:

  • தியான மந்திர் மற்றும் பிற தியானப் பகுதிகளை காலை மற்றும் மாலை தியான அமர்வுகளுக்கு தயார் செய்தல்
  • சிறப்பு நிகழ்வுகள் மற்றும் சத்சங்கங்களுக்கு, பீடம் உட்பட தியான அரங்கை தயார் செய்தல்
  • தேவைக்கேற்ப பொருட்கள் கொள்முதல் செய்வதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் உதவுதல்
  • இருப்புக் கணக்கு துல்லியமாக இருத்தலை உறுதிசெய்தும், இருப்பு மேலாண்மையை மேற்பார்வையிட்டும் ஸ்டோர் ஐ நிர்வகித்தல்


திறன்கள் மற்றும் திறமைகள்:

  • கால அட்டவணைகளை பின்பற்றும் திறன்
  • சிறந்த நிர்வாக மற்றும் ஒருங்கிணைப்பு திறன்கள்
  • பேச்சுத் தமிழில் தேர்ச்சி கூடுதல் நன்மையாக இருக்கும்
  • ஒரு புனிதமான மற்றும் ஆன்மீக சூழலில் உணர்திறன் மற்றும் கண்ணியத்துடன் பணியாற்றும் திறமை
  • சிறந்த நிர்வாகம் மற்றும் பொருள் இருப்புக் கணக்கு மேலாண்மை திறன்கள்
தன்னார்வ பணி வாய்ப்புகள்

பல்வேறு திறன்களில் தன்னார்வலர்களாக வேறு இடத்திலிருந்து பணியாற்ற தயாராக இருக்கும் சிறப்பு திறமைகள் கொண்ட பக்தர்களை YSS எதிர்பார்க்கிறது.

para-ornament

சைபர் செக்யூரிடி ஸ்பெஷலிஸ்ட்

இடம்: தொலைநிலை
துறை: ஐ.டி.
பொது பதவி(கள்) எண்ணிக்கை: 1
பணி: தன்னார்வலர், வாரத்திற்கு 12 மணிநேரம்

பதவி குறித்த விளக்கம்:
சைபர் அச்சுறுத்தல்களுக்கு எதிராக இணையதளங்கள் மற்றும் பிற IT உள்கட்டமைப்புகளை பாதுகாக்கவும், அச்சுறுத்தல் பகுதிகளை அடையாளம் காணவும் YSS தன்னார்வலர்களைத் தேடுகிறது.

இந்த பணியின் முக்கிய செயல்பாடுகள்:

  • சிஸ்டம்ஸ், டேட்டா, நெட்வொர்க்குகள் மற்றும் புரோகிராம்களைப் பாதுகாப்பதற்கான தொழில்நுட்பங்கள், செயல்முறைகள் மற்றும் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்துதல்
  • பயனர் தரவைப் பாதுகாக்கவும் அங்கீகரிக்கப்படாத பயனர்கள் நம் IT அமைப்புகள் மற்றும் பயன்பாடுகளை அணுகுதல், சேதப்படுத்துதல் அல்லது சீர்குலைத்தல் ஆகியவற்றைத் தடுப்பதற்காகவும் சைபர் தாக்குதல்களின் அபாயத்தைக் குறைத்தல்


தகுதிகள்:

  • கல்வி மற்றும் அனுபவம்:
    • வெப்/வேர்ட்பிரஸ் தளங்களில் சைபர் செக்யூரிடி அனுபவம்
    • YSS/SRF கிரியாபன்
  • திறன்கள் மற்றும் தகுதிகள்:
    • தற்போதைய சைபர் செக்யூரிடி அச்சுறுத்தல்கள் மற்றும் அபாயங்களை குறைப்பதற்கான வழிகள் பற்றிய விழிப்புணர்வு

இமெயில் மார்க்கெட்டிங் ஸ்பெஷலிஸ்ட்

இடம்: தொலைநிலை
துறை: ஐ.டி.
பொது பதவி(கள்) எண்ணிக்கை: 1
பணி: தன்னார்வலர், வாரத்திற்கு 12 மணிநேரம்

பதவி குறித்த விளக்கம்:
YSS மல்டி-மாடல் டிஜிட்டல் பிரச்சாரங்களை அமைத்து நிர்வகிக்க ஒரு தன்னார்வலரை தேடுகிறது. ஆட்டோமேஷன் ஃப்ளோஸ் மற்றும் பர்சனலைசேஷன் உருவாக்கி பராமரிப்பதில் அனுபவம் உள்ள ஒருவரை எதிர்பார்க்கிறது.

இந்த பணியின் முக்கிய செயல்பாடுகள்:

  • YSS வலைத்தளங்கள், மின்னஞ்சல், எஸ்எம்எஸ், வாட்ஸ்அப் மற்றும் பிற தளங்களில் மார்க்கெட்டிங் ஆட்டோமேஷன் யோசனை, திட்டமிடல் மற்றும் அமைப்பிற்கு ஆதரவு அளித்தல்
  • எண்ட்-டு-எண்ட் பிரச்சார உருவாக்கல் மற்றும் பயன்பாட்டை நிர்வகித்தல்
  • YSS முன்முயற்சிகளுக்குத் தேவையானபடி பார்வையாளர் பிரிவுகள்/பட்டியல்களை உருவாக்கி பராமரிக்கவும்
  • மார்க்கெட்டிங் ஆட்டோமேஷன் தளங்களைப் பயன்படுத்தி லீட் ஜெனரேஷன், பதிவு, வரவேற்பு மற்றும் ட்ரிப் கேம்பைன்ஸ் க்கு ஆட்டோமேஷன் டிப்ளாய் செய்தல்
  • ட்ரேக் பர்ஃபார்மன்ஸ், மானிடர் ட்ரெண்ட்ஸ், செயல்படக்கூடிய நுண்ணறிவுகளைப் பகிர்தல் மற்றும் முடிவுகளின் அடிப்படையில் பரிந்துரைகளை வழங்குதல்


தகுதிகள்:

  • கல்வி மற்றும் அனுபவம்:
    • இமெயில் மார்க்கெட்டிங், மார்க்கெட்டிங் ஆட்டோமேஷன், லீட் ஜெனரேஷன் அல்லது பர்ஃபார்மன்ஸ் மார்கெடிங் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க அனுபவம்
  • திறன்கள் மற்றும் தகுதிகள்:
    • ActiveCampaign, HubSpot, Zoho போன்ற வலை CRM/மார்க்கெட்டிங் ஆட்டோமேஷன் தளங்களில் அதிக திறன்
    • மின்னஞ்சல் வடிவமைப்பு கருவிகள் மற்றும் அடிப்படை HTML/CSS பற்றிய அறிவு
    • புதிய தளங்கள் மற்றும் மென்பொருள் தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ளும் திறன்
    • ஆங்கில எழுத்து மற்றும் வாய்மொழி தொடர்பு திறனில் சிறந்து விளங்குதல்

வெப் அனலிடிக்ஸ் ஸ்பெஷலிஸ்ட்

இடம்: தொலைநிலை
துறை: ஐ.டி.
பொது பதவி(கள்) எண்ணிக்கை: 1
பணி: தன்னார்வலர், வாரத்திற்கு 10 மணிநேரம்

பதவி குறித்த விளக்கம்:
பல்வேறு YSS இணையதளங்களுக்கான வெப் அனலிடிக்ஸ் ஐ கண்காணிக்கவும் மறுஆய்வு செய்யவும் உதவக்கூடிய தன்னார்வலர்களை YSS எதிர்பார்க்கிறது.

இந்த பணியின் முக்கிய செயல்பாடுகள்:

  • YSS வலைத்தளங்களின் பயன்பாட்டைப் புரிந்துகொள்வதற்கும் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கும் நோக்கம் கொண்ட YSS வலைத்தளத் தரவை அளவிடுதல், சேகரித்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் அறிக்கையிடுதல்
  • இன்டியூடிவ் சர்ச் ஃபீசர்ஸ் வழங்குவதற்கான மேம்பாட்டு நடவடிக்கைகளைப் பரிந்துரைத்தல் மற்றும் அதிகரிக்கும் வலைத்தள நெரிசலுக்கு உதவுதல்


தகுதிகள்:

  • கல்வி மற்றும் அனுபவம்:
    • கூகுள் அனலிடிக்ஸ் இல் குறிப்பிடத்தக்க அனுபவம் தேவை
    • YSS/SRF கிரியாபன்
  • திறன்கள் மற்றும் தகுதிகள்:
    • Google Data Studio, Microsoft Clarity போன்ற தொழில்நுட்பங்களை சிரமமின்றி கையாள்வது கூடுதல் ஊக்கமாக இருக்கும்
    • டேடா அனலிடிக்ஸ் மற்றும் காட்சிப்படுத்தல் திறன்கள் விரும்பப்படுகின்றன

சர்ச் இஞ்சின் ஆப்டிமைசேஷன் (SEO) ஸ்பெஷலிஸ்ட்

இடம்: தொலைநிலை
துறை: ஐ.டி.
பொது பதவி(கள்) எண்ணிக்கை: 1
பணி: தன்னார்வலர், வாரத்திற்கு 10 மணிநேரம்

பதவி குறித்த விளக்கம்:
YSS இணையதளங்களுக்கான சர்ச் இஞ்சின் ஆப்டிமைசேஷன் (SEO) செயல்பாடுகளை நிர்வகிப்பதில் ஆர்வமுள்ள தன்னார்வலர்களை YSS எதிர்பார்க்கிறது.

இந்த பணியின் முக்கிய செயல்பாடுகள்:

  • சர்ச் இஞ்சின் ரிசல்ட் பக்கங்களில் தெரிவுநிலையை மேம்படுத்துவதற்கும், YSS வலைத்தளங்களுக்கு ஆர்கானிக் நெரிசல் சர்ச் ஐ அதிகரிப்பதற்கும் உத்திகளை அடையாளம் கண்டு செயல்படுத்துதல்

தகுதிகள்:

  • கல்வி மற்றும் அனுபவம்:
    • ஆன்-பேஜ் SEO இல் குறிப்பிடத்தக்க அனுபவம்
    • YSS/SRF கிரியாபன்
  • திறன்கள் மற்றும் தகுதிகள்:
    • ரிபோர்டிங் அண்ட் அனலிடிகல் இல் தேர்ச்சி விரும்பத்தக்கது
    • Google சர்ச் கன்சோல் மற்றும் Yoast plugin இல் தேர்ச்சி தேவைப்படுகிறது
    • கட்டாயம் இல்லாவிட்டாலும், பிற SEO கருவிகளை அறிந்திருப்பது உதவியாக இருக்கும்
para-ornament

இப்பொழுது விண்ணப்பியுங்கள்

மேற்கூறிய வாய்ப்புகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் விரும்பினால், அல்லது அவற்றைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் உங்கள் விவரங்களை பூர்த்தி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

para-ornament

உங்களிடமிருந்து தகவல்களைப் பெறவும், குருஜியின் பணியில் இணைந்து பணியாற்றும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளவும் ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.