பிரயாக்ராஜ் (அலகாபாத்) இல் கும்பமேளா — 2025


இந்த நிகழ்வுக்கான பதிவு தற்போது முடிவடைந்துள்ளது.
நிகழ்வு பற்றி
கும்ப மேளாக்கள் என்பவை காலங்காலமாக பாரதத்தில் நடைபெற்று வரும் சமயத் திருவிழாக்களாகும். அவை ஆன்மீகக் குறிக்கோள்களை மக்களின் பார்வையில் தொடர்ந்து வைத்திருக்கின்றன.
— பரமஹம்ஸ யோகானந்தர்
நமது அன்பிற்குரிய குருதேவரின் இந்த வார்த்தைகளால் ஈர்க்கப்பட்டு, யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா (YSS) கும்பமேளாக்களின் போது முகாம்களை ஏற்பாடு செய்து வருகிறது. அதேபோல், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பிரயாக்ராஜ் (அலகாபாத்) இல் நடைபெறவுள்ள கும்பாவில் YSS முகாமை அமைக்க திட்டமிட்டுள்ளோம். இந்த முகாமில் கலந்து கொள்ள YSS/SRF பக்தர்களை வரவேற்கிறோம்.
இந்த முகாம் ஜனவரி 10 முதல் பிப்ரவரி 15, 2025 வரை கும்பமேளா மைதானத்தில் செயல்படும். பௌஷ் பூர்ணிமா (ஜனவரி 13, திங்கள்), மகர சங்கராந்தி (ஜனவரி 14, செவ்வாய்க்கிழமை), மவுனி அமாவாசை (ஜனவரி 29, புதன்கிழமை), வசந்த் பஞ்சமி (பிப்ரவரி 3, திங்கள்கிழமை) மற்றும் மகா பௌர்ணமி (பிப்ரவரி 12, புதன்கிழமை) ஆகிய குளியல் நாட்களை உள்ளடக்கியது.
கும்பமேளாவில் முகாம் காலம் முழுவதும், கலந்து கொள்ளும் பக்தர்களை ஆன்மீகரீதியாக வளப்படுத்த YSS சன்னியாசிகளால் பல்வேறு ஆன்மீக நிகழ்ச்சிகள் நடத்தப்படும். தினசரி காலை மற்றும் மாலை கூட்டு தியானங்கள், கீர்த்தனைகள், (பக்தி பூர்வமாக பாடுதல்) மற்றும் சத்சங்கங்கள் ஆகியவை இவற்றில் நடைபெறும்.
முழு அறிவிப்பையும் படிக்க, இங்கே கிளிக் செய்யவும்.
நிகழ்ச்சி விபரங்கள்
இந்த நிகழ்வுக்கான பதிவு தற்போது முடிவடைந்துள்ளது.
முக்கிய குறிப்பு:
- பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே முகாமில் தங்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
- உங்கள் திட்டமிடப்பட்ட தேதிகளில் வந்து செல்லுங்கள்.
- உங்கள் பதிவு உறுதிசெய்யப்பட்டு, சில காரணங்களால் உங்களால் கலந்துகொள்ள முடியாவிட்டால், தயவுசெய்து விரைவில் எங்களுக்குத் தெரிவிக்கவும். ரத்துசெய்யப்பட்டவைகள் திரும்பப்பெறவோ மாற்றவோ முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நீராடல் மற்றும் பிற அனுசரிப்புகளுக்கு, இருக்கும் குறைந்தபட்ச வசதிகளை, அதிகபட்ச எண்ணிக்கையிலான பக்தர்கள் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்காக, பதிவு செய்தவர்களுக்கு, YSS முகாமில் தங்கும் வசதி, வருகை மற்றும் புறப்படும் நாட்கள் உட்பட நான்கு பகல் மற்றும் மூன்று இரவுகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
முக்கிய குறிப்பு:
- முகாமில் வசதிகள் குறைவாக இருப்பதால், YSS -ஆல் தங்குமிடம் உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள் மட்டுமே முகாமில் தங்க அனுமதிக்கப்படுவார்கள். அத்தகைய உறுதிப்படுத்தல் இல்லாத நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை அழைத்து வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
- ஆண்களும் பெண்களும் தனித்தனி கூடாரங்களில் தங்க வைக்கப்படுவார்கள், எனவே குடும்பங்கள் அதற்கேற்ப பேக் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தங்குமிட வசதி
முகாமில் தங்குமிடம் மணலில் அமைக்கப்பட்ட கூடாரங்களினாலும், தரைகள் வைக்கோலால் மூடப்பட்டு அதன் மேல் தார்பால் விரிக்கப்பட்டும் இருக்கும்.
- படுக்கைகள், தலையணைகள் மற்றும் போர்வைகள் வழங்கப்படும், ஆனால் உங்கள் சொந்த படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் மற்றும் ஸ்லீப்பிங் பேக்ஸ் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
- ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் வானிலை மிகவும் குளிராக இருக்கும் என்பதால், க்வில்ட், ஸ்லீப்பிங் பேக், ஸ்வெட்டர், தொப்பி மற்றும் சாக்ஸ் போன்ற முழு குளிர்கால ஆடைகளை கொண்டு வர மறக்காதீர்கள். வெப்பநிலை அறிகுறிகள் பின்வருமாறு:
- பகல் நேரம்: 15°C–22°C (58°F–72°F)
- இரவு நேரம்: 6°C–12°C (43°F–54°F)
- இந்த மாதங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்பதால், நீங்கள் ஒரு ரெயின்கோட் அல்லது குடை, கொசு விரட்டும் கிரீம், டார்ச், ஆசனம் மற்றும் தனிப்பட்ட பயன்பாட்டிற்கான பிற பொருட்களையும் எடுத்து வரலாம்.
அருகிலுள்ள ஹோட்டல்கள்
கும்பமேளாவின் போது தங்குமிடம் அல்லது உணவுக்கு சிறப்புத் தேவை உள்ள பக்தர்கள் தயவுசெய்து தங்கள் சொந்த ஏற்பாடுகளை செய்து கொள்ளுங்கள். அருகிலுள்ள ஹோட்டல்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தங்குமிடத் தேவைக்கான உங்கள் முன்பதிவுகளுக்கு நேரடியாக ஹோட்டலைத் தொடர்பு கொள்ளுங்கள்.
உணவு
கூடுதல் கட்டணம் ஏதுமின்றி பக்தர்களுக்கு எளிமையான உணவு வழங்கப்படும்.
பிரயாக்ராஜ் சென்றடைதல்:
- விமானம் மூலம்: பிரயாக்ராஜ் பம்ரௌலி விமான நிலையம் (IXD) முகாமிலிருந்து சுமார் 20 கிமீ தொலைவில் உள்ளது.
- ரயில் வழி: பிரதான ரயில் நிலையம், பிரயாக்ராஜ் சந்திப்பு (PRYJ), முகாமிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது. அருகிலுள்ள நிலையம் பிரயாக்ராஜ் சங்கம், சுமார் 2 கிமீ தொலைவில் உள்ளது. நீங்கள் எந்த நிலையத்திலும் இறங்கி முகாமிற்கு வந்து சேர போக்குவரத்து ஏற்பாடு செய்து கொள்ளலாம்.
விமான நிலையம் / ரயில் நிலையத்திலிருந்து போக்குவரத்து ஏற்பாடு:
நீங்கள் தனிப்பட்ட முறையில் ஏற்பாடுகள் செய்து கொள்ளலாம் அல்லது உதவிக்கு ஸ்ரீ தர்மேந்திர ஜெய்ஸ்வாலை (+91) 93076 66851 அல்லது (+91) 95981 32021 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். வழக்கமாக விதிக்கப்படும் பயணக் கட்டணங்கள் பக்தர்கள் செலுத்த வேண்டியதிருக்கும்.
விசேஷ நீராடல் தேதிகளின் போது:
அதிக கூட்டம் காரணமாக, வாகனம் கிடைப்பது அரிதாக இருக்கலாம். நீங்கள் முகாமிற்கு நடந்து செல்ல வேண்டியிருக்கும் என்பதால் இலகுவாக பேக் செய்திருங்கள்.

கும்பா மேளாவில் YSS முகாம் அமைவிட முகவரி
பிளாட் எண்கள் 1092 மற்றும் 1093
சங்கராச்சார்யா மார்க், செக்டார் 19
கும்பமேளா க்ஷேத்ரா, பிரயாக்ராஜ்
கூகுள் மேப்ஸ் இணைப்பு: இங்கே கிளிக் செய்யவும்
யோகதா சத்சங்க தியான கேந்திரா, பிரயாக்ராஜ்
468/270, நய் பாஸ்தி சோபாட்டியா பாக்,
பிரயாக்ராஜ் (அலகாபாத்),
உத்தரபிரதேசம் – 211006
தொலைபேசி: 9454066330, 9415369314, 9936691302
மின்னஞ்சல்: prayagraj@ysscenters.org

விசாரணைகளுக்கான தொடர்பு விபரங்கள்
யோகதா சத்சங்க கிளை மடம் – ராஞ்சி
பரமஹம்ஸ யோகானந்தா பாதை
ராஞ்சி – 834001
ஜார்கண்ட்
தொலைபேசி: (0651) 6655 506
(திங்கள்-சனி, காலை 09:30 – மாலை 04:30)
மின்னஞ்சல்: kumbha@yssi.org