மிகுந்த மகிழ்ச்சியுடன், 2025 ஆம் ஆண்டிற்கு திட்டமிடப்பட்டுள்ள சங்கங்கள், ஏகாந்தவாசங்கள் மற்றும் YSS சன்னியாசிகளின் சுற்றுப்பயண நிகழ்ச்சிகளைப் பற்றி நாங்கள் உங்களுக்குத் தெரிவிக்கிறோம். முழுமையான அட்டவணையை இங்கே காண்க.
பரமஹம்ஸ யோகானந்தரின் ஆன்ம அனுபூதி போதனைகளுக்கான அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா சன்னியாசிகள் நாடு முழுவதும் உள்ள நகரங்களுக்கு வருகை தருகின்றனர். பரமஹம்ஸரின் “எப்படி-வாழ-வேண்டும்” போதனைகள், ஒய் எஸ் எஸ் யோக உத்திகளை மறுஆய்வு செய்தல், கூட்டுத் தியானங்கள், கீதம் இசைத்தல், ஆடியோ-விஷுவல் விளக்கக்காட்சிகள் மற்றும் கிரியா யோக தீட்சை நிகழ்வுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய உத்வேகமூட்டும் நிகழ்ச்சிகள் மற்றும் வார இறுதி ஏகாந்தவாச தியான நிகழ்வுகளை அவர்கள் நடத்துகிறார்கள்.
சொற்பொழிவு சுற்றுப்பயணங்கள், புதியவர்களுக்கு பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளுக்கு ஒரு அறிமுகத்தையும், பாட மாணவர்களுக்கு ஒய் எஸ் எஸ் தியான உத்திகளில் ஆழமான வழிகாட்டுதலையும் வழங்குகின்றன. உறுப்பினர்களுக்கான நிகழ்ச்சிகள் மற்றும் பிராந்திய ஏகாந்தவாச தியான நிகழ்வுகள் ஒய் எஸ் எஸ் தியான உத்திகள் குறித்த வகுப்புகள் மற்றும் கூட்டுத் தியானம் மற்றும் சத்சங்கத்திற்கான வாய்ப்புகளை வழங்குகின்றன. பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளின் பல முக்கிய அம்சங்கள் இந்த நிகழ்ச்சிகளில் உள்ளடங்கியுள்ளன, அவையாவன:
- அன்றாட வாழ்வில் தியானத்தின் முக்கியத்துவம்
- மேலும் இணக்கமானதொரு வாழ்க்கையை வாழ்வது எப்படி
- வெளிப்புறத் தேவைகளுடன் உள் தேவைகளை சமநிலைப்படுத்தக் கற்றுக் கொள்ளுதல்


அமைதியின் உள் கோவிலைக் கட்டுவதற்கு நம்மை ஊக்குவித்து, நமது அன்புக்குரிய குருதேவர் கூறினார்: “உங்கள் மனதின் நுழைவாயில்களுக்குப் பின்னால் உள்ள அமைதியின் கண்டுபிடிப்புக்கு என்ன மகிழ்ச்சி காத்திருக்கிறது என்று, எந்த மனித நாவினாலும் சொல்ல முடியாது. ஆனால் நீங்கள் தியானம் செய்து அந்த சூழலை உருவாக்க வேண்டும். ஆழ்ந்த தியானம் செய்பவர்கள் அற்புதமான உள் அமைதியை உணர்கிறார்கள்.” இந்த நிகழ்ச்சிகள், உண்மையான சாதகர்களுக்கு அன்றாட வாழ்க்கையின் இடைவிடாத செயல்பாட்டிலிருந்து தங்கள் கவனத்தை விலக்கி, அக அமைதியின் மீது கவனம் செலுத்தி, அதன் மூலம் இறைவனின் அமைதி மற்றும் பேரின்பத்தின் அமிர்தத்தை பருக ஒரு அற்புதமான வாய்ப்பை வழங்குகின்றன.
சன்னியாசிகளின் சுற்றுப்பயணங்கள் மற்றும் ஏகாந்தவாசங்கள், ஜனவரி – டிசம்பர் 2025
ஜனவரி – டிசம்பர் 2025 வரையிலான சன்னியாசிகள் சுற்றுப்பயண விவரங்களைக் காண இங்கே கிளிக் செய்யவும்.
மாநிலம் | தேதி | இடம் | நிகழ்ச்சி வகை |
---|---|---|---|
ஆந்திரப் பிரதேசம் | ஜனவரி 19 | ஒரு நாள் நிகழ்ச்சி | |
ஜனவரி 22 | ஒரு நாள் நிகழ்ச்சி | ||
ஜனவரி 26 | ஒரு நாள் நிகழ்ச்சி | ||
ஜூலை 26-27 | இரண்டு நாள் நிகழ்ச்சி | ||
செப்டம்பர் 2 | ஒரு நாள் நிகழ்ச்சி | ||
செப்டம்பர் 5-7 | கிரியா யோக தீட்சை உள்ளடக்கியது | ||
நவம்பர் 26 | ஒரு நாள் நிகழ்ச்சி | ||
பீகார் | மார்ச் 19 | ஒரு நாள் நிகழ்ச்சி | |
மார்ச் 21-23 | கிரியா யோக தீட்சை உள்ளடக்கியது | ||
சண்டிகர் | அக்டோபர் 31-நவம்பர் 2 | கிரியா யோக தீட்சை உள்ளடக்கியது | |
சத்தீஸ்கர் | ஜனவரி 12 | ஒரு நாள் நிகழ்ச்சி | |
ஜனவரி 16 | ஒரு நாள் நிகழ்ச்சி | ||
குஜராத் | பிப்ரவரி 23 | YSS/SRF தலைவர் சுற்றுப் பயண நிகழ்ச்சிகள் | |
நவம்பர் 28-30 | கிரியா யோக தீட்சை உள்ளடக்கியது | ||
இமாச்சலப் பிரதேசம் | ஏப்ரல் 12-13 | இரண்டு நாள் நிகழ்ச்சி | |
ஏப்ரல் 16 | ஒரு நாள் நிகழ்ச்சி | ||
ஜூலை 4-6 | கிரியா யோக தீட்சை உள்ளடக்கியது | ||
கர்நாடகா | பிப்ரவரி 2 | YSS/SRF தலைவர் சுற்றுப் பயண நிகழ்ச்சிகள் | |
மார்ச் 30 | ஒரு நாள் நிகழ்ச்சி | ||
ஏப்ரல் 4-6 | கிரியா யோக தீட்சை உள்ளடக்கியது | ||
செப்டம்பர் 26-28 | கிரியா யோக தீட்சை உள்ளடக்கியது | ||
கேரளா | செப்டம்பர் 19-21 | கிரியா யோக தீட்சை உள்ளடக்கியது | |
மத்தியப் பிரதேசம் | செப்டம்பர் 6 | ஒரு நாள் நிகழ்ச்சி | |
நவம்பர் 21-23 | கிரியா யோக தீட்சை உள்ளடக்கியது | ||
மகாராஷ்டிரா | நவம்பர் 20 | ஒரு நாள் நிகழ்ச்சி | |
நவம்பர் 23 | ஒரு நாள் நிகழ்ச்சி | ||
டிசம்பர் 12-14 | கிரியா யோக தீட்சை உள்ளடக்கியது | ||
நேபாளம் | மார்ச் 1 | YSS/SRF தலைவர் சுற்றுப் பயண நிகழ்ச்சிகள் | |
மே 4 | ஒரு நாள் நிகழ்ச்சி | ||
மே 8-10 | கிரியா யோக தீட்சை உள்ளடக்கியது | ||
ஒடிசா | ஜனவரி 12 | ஒரு நாள் நிகழ்ச்சி | |
ஜனவரி 15 | ஒரு நாள் நிகழ்ச்சி | ||
ஜனவரி 19 | ஒரு நாள் நிகழ்ச்சி | ||
நவம்பர் 21-23 | ஏகாந்த வாசம் (ஒடியா) | ||
நவம்பர் 28-30 | ஏகாந்த வாசம் (ஆங்கிலம்) | ||
புதுச்சேரி | மார்ச் 16 | ஒரு நாள் நிகழ்ச்சி | |
பஞ்சாப் | மார்ச் 26 | ஒரு நாள் நிகழ்ச்சி | |
செப்டம்பர் 13 | ஒரு நாள் நிகழ்ச்சி | ||
ராஜஸ்தான் | செப்டம்பர் 9 | ஒரு நாள் நிகழ்ச்சி | |
செப்டம்பர் 12-14 | கிரியா யோக தீட்சை உள்ளடக்கியது | ||
தமிழ்நாடு | ஜனவரி 8 | ஒரு நாள் நிகழ்ச்சி | |
ஜனவரி 12 | ஒரு நாள் நிகழ்ச்சி | ||
பிப்ரவரி 9 | YSS/SRF தலைவர் சுற்றுப் பயண நிகழ்ச்சிகள் | ||
மார்ச் 19 | ஒரு நாள் நிகழ்ச்சி | ||
ஆகஸ்ட் 1-3 | கிரியா யோக தீட்சை உள்ளடக்கியது | ||
ஆகஸ்ட் 8-10 | கிரியா யோக தீட்சை உள்ளடக்கியது | ||
ஆகஸ்ட் 16 | ஒரு நாள் நிகழ்ச்சி | ||
உத்தரப் பிரதேசம் | பிப்ரவரி 27 | YSS/SRF தலைவர் சுற்றுப் பயண நிகழ்ச்சிகள் | |
மார்ச் 20 | ஒரு நாள் நிகழ்ச்சி | ||
நவம்பர் 13 | ஒரு நாள் நிகழ்ச்சி | ||
நவம்பர் 16 | ஒரு நாள் நிகழ்ச்சி | ||
உத்தரகண்ட் | மார்ச் 22-23 | இரண்டு நாள் நிகழ்ச்சி | |
ஏப்ரல் 4-6 | ஏகாந்த வாசம் (இந்தி) | ||
செப்டம்பர் 28-30 | ஏகாந்த வாச நிகழ்ச்சி (இந்தி) கிரியா தீட்சையுடன் | ||
நவம்பர் 14-16 | ஏகாந்த வாசம் (ஆங்கிலம்) | ||
மேற்கு வங்காளம் | நவம்பர் 28-30 | ஏகாந்த வாசம் (இந்தி) | |
டிசம்பர் 12-14 | ஏகாந்த வாசம் (பெங்காலி) |