புதிய வருகையாளர்களுக்கான தகவல்

Main building, Ranchi.

ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர் நிறுவிய இலாப-நோக்கற்ற ஆன்மீக அமைப்பான யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா (ஒய் எஸ் எஸ்), விற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.  ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர். ஆன்மீக நிறைவேற்றத்திற்கான உங்கள் தேடலில் உங்களுக்கு சேவை செய்வது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடியதாகும்.

பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளுக்கு நீங்கள் புதியவர் என்றால், நீங்கள் தொடங்குவதற்கு சில பரிந்துரைகள் இதோ:

யோகா மற்றும் அதன் கருத்துப் படிவங்களுக்கு புதியவரா? யோக பாரம்பரியத்தின் கோட்பாடுகள் மற்றும் சொற்களைப் பற்றி அறிமுகம் இல்லாதவர்கள் எங்கள் இணைய தளத்தில் பயன்படுத்தப்படும் சொற்களின் சுருக்கமான பயனுள்ள விளக்கங்களை எங்கள் ஆன்லைன்  சொற்களஞ்சியத்தில் காணலாம்.

தியானம் செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்

யோகதா சத்சங்கப் பாடங்கள்

 யோகதா சத்சங்கப் பாடங்கள், கிரியா யோகத்தின் விஞ்ஞானப்பூர்வமான உத்திகளில் யோகானந்தரின் விரிவான அறிவுறுத்தலை— அத்துடன் சமச்சீர் ஆன்மீக வாழ்க்கைக் கலை குறித்த அவரது ஆழமான வழிகாட்டுதலையும்— கொண்ட ஒரு விரிவான வீட்டு-படிப்பு தொடராகும்.

ஆரம்ப சாதகருக்கானத் தியான அறிவுறுத்தல்கள்

நீங்கள் இப்போது தியானம் செய்வதைத் தொடங்க விரும்பினால், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு காணொலித் தொகுப்பைக் காண எங்களது  தியானம் செய்யக் கற்றுக்கொள்ளுங்கள் என்ற பக்கத்தைப் பார்வையிடுங்கள். 

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியாவின் ஆசிரமம், ஏகாந்தவாசத்தலம் அல்லது மையத்திற்கு வருகை தாருங்கள்

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா நாடு முழுவதும் 180 க்கும் மேற்பட்ட  ஆசிரமங்கள்ஏகாந்த வாசத்தலங்கள், மற்றும் தியான மையங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது – ஆர்வமுள்ள சாதகர் அனைவரும் ஒன்றுகூடி கூட்டுத் தியானம், ஒருமுகப்பட்ட ஏகாந்தவாச நிகழ்ச்சிகள், உத்வேகம் தரும் பிரார்த்தனைகள் ஆகியவற்றின் வலிமையை அனுபவிக்கவும் மற்றும் ஆன்மீகத் தோழமையைப் பரிமாறிக் கொள்ளவும் வாய்ப்புகளை வழங்குகிறது. செயல்பாடுகள் பின்வருமாறு:

Girl child meditating.

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியாவின் ஷரத் சங்கம்

ஒவ்வொர் ஆண்டும், ஒருவாரம் ஆன்மீகப்  புதுப்பித்தல், தோழமை மற்றும் ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகள் பற்றிய ஆழமான ஆய்வு ஆகியவற்றை நாங்கள் வழங்குகிறோம். கீழே உள்ளவை அதில் அடக்கம்:

YSS devotees meditating in a group

ஏகாந்தவாச தியான மையங்கள்

ஆன்மீகப் புதுப்பித்தலுக்காக சில நாட்கள் வர விரும்பும் ஒய் எஸ் எஸ் உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஏகாந்தவாச மையங்கள் ஆண்டு முழுவதும் (ஷரத் சங்கத்தின் போது தவிர) திறந்திருக்கும். ஆண்டு முழுவதும் அவ்வப்போது சன்னியாசிகளால் பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகள் குறித்து சிறப்பு நிகழ்வுகளும் நடத்தப்படுகின்றன. போதனைகளை அறிந்தவர்களுக்காக இந்த நிகழ்வுகள் கட்டமைக்கப் பட்டிருந்தாலும், ஆர்வமுள்ள எவரும் வரவேற்பறையில் விவரங்கள் பெற வரவேற்கப்படுகிறார்கள்.

பரமஹம்ஸ யோகானந்தரின் கூற்றுப்படி, ஒய்.எஸ்.எஸ் ஏகாந்தவாச மையங்கள் “அமைதி எனும் டைனமோவை வழங்குகின்றன, அங்கு (நீங்கள்) எல்லையற்றவனால் மறுசெறிவூட்டப்படும் பிரத்யேக நோக்கத்திற்காகச் செல்லலாம்.” எங்கள் ஏகாந்தவாச நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்:

The Noida ashram of Yogoda Satsanga Society of India

வாசிக்கப் பரிந்துரைக்கப்படும் புத்தகங்கள்:

பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகள் பற்றிய உங்கள் ஆய்வுப் பயணத்தை தொடங்க ஒரு நல்ல இடமாக பின்வரும் புத்தகங்களைப் பரிந்துரைக்க விரும்புகிறோம்.

ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர் எழுதிய “ஒரு யோகியின் சுயசரிதம்”

அதிகம் விற்பனையாகும் ஆன்மீக இலக்கியமான இது யோகானந்தரின் வாழ்க்கை மற்றும் போதனைகளுக்கு ஒரு சிறந்த அறிமுகமாக விளங்குகிறது.  மனதை ஈர்க்கும் ஒரு பொழுதுபோக்கு கதையாக இது, இருப்புநிலை, யோகம், உயர் உணர்வு நிலை, மதம், இறைவன் மற்றும் அன்றாட ஆன்மீக வாழ்வின் சவால்கள் பற்றிய கேள்விகளுக்கும் பதிலளிக்கிறது. இது எல்லா மதத்தினருக்கும் ஆன, வாழ்க்கை உண்மையிலேயே என்னவென்று தெரிந்து கொள்ள விரும்பும் எவருக்குமான ஒரு புத்தகம்.

ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தரின் “ஒளி உள்ள இடத்தினில்”

பரமஹம்ஸ யோகானந்தரின் கட்டுரைகள் மற்றும் சொற்பொழிவுகளிலிருந்து தொகுக்கப்பட்ட இந்த ஆன்மீகக் கையேடு ஆர்வமுள்ள பல தலைப்புகளில் சுருக்கமான வழிகாட்டுதலையும் ஆன்மீகக் கண்ணோட்டத்தையும் வழங்குகிறது, அவை: மனித உறவுகளை முழுநிறைவாக்குவது; தோல்வியை வெற்றியாக உருமாற்றுவது; இறைவனுடன் ஒரு தனிப்பட்ட உறவைப் பேணி வளர்ப்பது; மரணத்தைப் புரிந்துகொள்வது; மன அழுத்தம், கவலை, பயம் ஆகியவற்றைக் கடந்துசெல்வது; பிரார்த்தனையை பயனுள்ளதாக்குவது; மற்றும் வாழ்க்கையின் முடிவுகளை எடுக்க ஞானத்தையும் பலத்தையும் கண்டறிவது.

ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் விரிவுரைகள் மற்றும் கட்டுரைகளின் மூன்று திரட்டுகள்

Man's Eternal Quest explains aspects of meditation, life after death etc.

ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் “மனிதனின் நிரந்தரத் தேடல்”

பரமஹம்ஸரின் சேகரிக்கப்பட்ட சொற்பொழிவுகள் மற்றும் கட்டுரைகளின் இந்த முதல் தொகுதி, சிறிதே-அறியப்பட்ட மற்றும் அரிதாக விளக்கப்பட்ட அம்சங்களான தியானம், மரணத்திற்குப் பின் வாழ்க்கை, படைப்பின் தன்மை, ஆரோக்கியம் மற்றும் குணப்படுத்துதல், மற்றும் மனித மனத்தின் வரம்பற்ற சக்திகள் ஆகியவற்றை ஆராய்கிறது.

The Divine Romance deals with topics like habits, memory, karma and reincarnation.

ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின்  “தெய்வீகக் காதல்”

சேகரிக்கப்பட்ட சொற்பொழிவுகள் மற்றும் கட்டுரைகளின் இந்த இரண்டாவது தொகுதியில், நமது தெய்வீகத் தன்மையை விழிப்படையச் செய்வதன் மூலம் உடல், உளவியல், உணர்வு மற்றும் ஆன்மீக நலனுக்கான அன்றாட சவால்களை எவ்வாறு எதிர்கொள்ள முடியும் என்பதை யோகானந்தர் காட்டுகிறார். அவர் நமது நெருங்கிய உறவுகளின் ஆழமான பரதத்துவ வேர்களை வெளிப்படுத்துகிறார், மேலும் இந்த உறவுகளை ஒன்றிணைக்கும் கண்ணுக்குத் தெரியாத, உலகளாவிய அன்பின் நூல் எல்லா அன்பும் எங்கிருந்து வருகிறதோ அந்த மூலத்திற்கு நம்மைத் திரும்ப எவ்வாறு இழுக்கிறது என்பதை விளக்குகிறார். பிற தலைப்புகளின் உள்ளடக்கம்: பழக்கவழக்கங்கள், நினைவகம், கர்மவினை மற்றும் மறுபிறவி, யோகம் மற்றும் தியானம், ஒருவர் தனக்கு, தன் வீட்டிற்கு, தன் சமூகத்திற்கு மற்றும் உலகிற்கு எவ்வாறு அதிக இணக்கத்தை ஏற்படுத்துவது போன்றவை.

Journey to Self Realization: topics include: how to express lasting youthfulness; acquiring attunement with the Source of success; balancing business and spiritual life; overcoming nervousness etc.

ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் “ஜர்னி டு ஸெல்ஃப்-ரியலைசேஷன்” (ஆங்கிலத்தில்)

சேகரிக்கப்பட்ட சொற்பொழிவுகள் மற்றும் கட்டுரைகளின் இந்த மூன்றாவது தொகுதி தங்களை மற்றும் தங்கள் வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தை நன்கு புரிந்து கொள்ள விரும்புவோருக்கு ஆலோசனைகளை வழங்குகிறது. மனித அனுபவத்தின் எண்ணற்ற சிக்கல்களுக்கு யோகானந்தர் ஒரு உலகளாவிய மற்றும் தொலைநோக்குப் பார்வையை கொண்டுவருகிறார் – ஆபத்துகளையும், தடைகளையும் கூட வாழ்க்கை-சாகசத்தின் ஒரு நோக்கமாக எப்படிப் பார்ப்பது என்பதைக் காட்டுகிறது. உள்ளடங்கிய பிற தலைப்புகள்: நீடித்த இளமையை எவ்வாறு வெளிப்படுத்துவது; வெற்றியின் ஆதாரத்துடன் ஆன இசைவை முயன்றடைவது; செய்தொழில் மற்றும் ஆன்மீக வாழ்க்கையைச் சமநிலைப்படுத்துவது; பதற்றத்தை வெற்றிகொள்வது; மற்றவர்களுடன் பழகும் கலை; அன்றாட வாழ்க்கையில் இறைவனை உணர்ந்தறிவது.

ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் பிற புத்தகங்கள்:

Inner Peace: How to Be Calmly Active and Actively Calm.

இன்னர் பீஸ் (அக அமைதி) – ஆங்கிலத்தில்: ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர் எழுதிய, இயக்கத்தில் அமைதியுடனும் அமைதியில் விழிப்புணர்வின் இயக்கத்துடனும் இருப்பது எப்படி

யோகானந்தாவின் கட்டுரைகளில் மற்றும் நூல்களில் இருந்து எழுச்சியூட்டும் இந்தத் தேர்வுகள் உலக நிலைமைகள் எப்படி இருந்தபோதிலும், ஒருவர் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும், சம மனநிலையுடனும் இருக்க உதவும் நடைமுறைப் பயன்பாடுகளை வழங்குகின்றன. பதற்றத்தையும் மன அழுத்தத்தையும், மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் உருமாற்ற வாசகருக்குச் சக்தியளிக்கும் இந்தச் சிறிய புத்தகம் நமது வேகமான உலகிற்கு ஒரு சக்திவாய்ந்த மருந்தை வழங்குகிறது.

The Law of Success: Topics include: creativity and initiative, positive thinking, dynamic will, self-analysis, the power of meditation etc.

ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின்  “வெற்றியின் விதிமுறை”

இந்தச் சக்திவாய்ந்த சிறிய புத்தகம் எவ்வாறு வெற்றியின் ஆதாரத்துடன் இணைவது, தகுதியான குறிக்கோள்களைத் தேர்ந்தெடுப்பது, தடைகள் மற்றும் அச்சங்களை வெல்வது மற்றும் நம் வாழ்வில் வெற்றியை வரவழைக்கும் தெய்வீக விதிமுறைகளை எவ்வாறு செயல்படுத்துவது என்பதை விவரிக்கிறது. தலைப்புகள் பின்வருமாறு: படைப்பாற்றல் மற்றும் முன்முயற்சி, நேர்மறை சிந்தனை, ஆற்றல்மிக்க விருப்பம், சுய பகுப்பாய்வு, தியானத்தின் சக்தி மற்றும் பல.

பரதத்துவ தியானங்கள்: 300 க்கும் மேற்பட்ட தியானங்கள், பிரார்த்தனைகள், சங்கல்பங்கள், மற்றும் மனக்காட்சிகள்.

ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் பரதத்துவ தியானங்கள்

பாக்கெட் அளவிலான இந்த புத்தகம் 300 க்கும் மேற்பட்ட தியானங்கள், பிரார்த்தனைகள், சங்கல்பங்கள் மற்றும் அகக்காட்சியாக உருவகப்படுத்துதல் மற்றும் எவ்வாறு தியானம் செய்வது என்பது குறித்த அறிமுக வழிமுறைகளை வழங்குகிறது. தியானம் செய்வதில் ஆரம்பநிலையில் இருப்பவர்களும் அதுபோன்றே அனுபவம் வாய்ந்தவர்களும் ஆன்மாவின் எல்லையற்ற மகிழ்ச்சி, அமைதி மற்றும் அகச் சுதந்திரத்தை விழித்தெழச் செய்ய, இந்த சிறிய புத்தகத்தை ஒரு பயனுள்ள கருவியாகக் காணலாம்.

ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளை நீங்கள் மிகவும் ஆழ்ந்தறிய விரும்பினால்,  ஒய் எஸ் எஸ் புக் ஸ்டோரில் எங்கள் முழுமையான புத்தகங்கள் மற்றும் பதிவுகளின் பட்டியலைப் பாருங்கள். .

யோகப் பாரம்பரியத்தின் கோட்பாடுகள் மற்றும் சொற்களைப் பற்றி அறிமுகம் இல்லாதவர்கள் எங்கள் இணையதளத்தில்  ஆன்லைன் சொற்களஞ்சியத்தில் பயன்படுத்தப்படும் சொற்களின் சுருக்கமான பயனுள்ள விளக்கங்களைக் காணலாம்.

இதைப் பகிர