எஸ் ஆர் எஃப்/ஒய் எஸ் எஸ் செயலி — அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

YSS-SRF-App-Responsive-Devices-July29-2022 (1)

ஸ் ஆர் எஃப் / ஒய் எஸ் எஸ் செயலி அனைவருக்குமானது — நீங்கள் பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளுக்கு புதியவராக இருந்தாலும் சரி அல்லது பல வருடங்களாக இந்த மகத்தான ஆசானின் ஞானத்தில் மூழ்கி இருப்பவராக இருந்தாலும் சரி. தியானம், கிரியா யோக விஞ்ஞானம் மற்றும் ஆன்மீக ரீதியில் சமநிலை வாழ்க்கையை வாழ்வதற்கான நடைமுறை வழிகளைப் பற்றி மேலும் அறிய விரும்பும் எவருக்கும் இது பொருந்தும்.

YSS பற்றிய ஒரு பொதுவான அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளைத் (FAQ) தேடுகிறீர்களா?

கீழே உள்ள அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ) குறிப்பாக ஒய் எஸ் எஸ் செயலியுடன் தொடர்புடையது, நீங்கள் ஒய் எஸ் எஸ் மற்றும் இந்த போதனைகளுக்கான பொதுவான அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளைத் தேடுகிறீர்களானால், தயவுசெய்து இங்கே கிளிக் செய்யவும்.

செயலியின் முக்கிய அம்சங்கள் மற்றும் உதவி சாதனங்களின் கண்ணோட்டம்

SRF/YSS செயலி YSS பாட மாணவர்கள் அந்தந்த பக்தர் இணைய முகப்பு சான்றுகளுடன் உள்நுழையவும், அவர்கள் சந்தா செலுத்திய மொழியில் (கள்) தங்கள் பாடங்களை அணுகவும் அனுமதிக்கிறது. அனைத்து பயனர்களும், அவர்கள் ஒரு பாட மாணவராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஆன்லைன் தியானங்கள், வழிகாட்டப்படும் தியானங்கள், YSS செய்திகள் மற்றும் வலைப்பதிவு இடுகைகள் போன்ற பிற டிஜிட்டல் வழிமுறைகளை அணுகலாம்.

பாடங்களின் டிஜிட்டல் வடிவம் கூடுதல் ஆதாரமாக வழங்கப்படுகிறது, அச்சிடப்பட்ட பாடங்களுக்கு மாற்றாக அல்ல. பாடங்களின் டிஜிட்டல் பதிப்பை அச்சிடப்பட்ட பதிப்புடன் இணைத்து விவேகமாகப் பயன்படுத்தப்படும்போது மாணவருக்கு பல நன்மைகளை வழங்குகிறது. நீங்கள் கற்கவும், கிரகிக்கவும், YSS பாடங்களில் உள்ளார்ந்துள்ள உண்மைகள் மற்றும் இறை உணர்வுநிலை மூலம் ஆன்மீக ரீதியாக மாற்றமடையவும் உங்களுக்கு சிறந்த முறையில் உதவும் அணுகுமுறையைக் கண்டறிவதில் பகுத்தறிவை பயன்படுத்த நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம்.

செயலியின் சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

 • எங்கள் புதிய eReader உடன் பாடங்களைப் படியுங்கள், இதில் பல மேம்பாடுகள் உள்ளன: உரை-இலிருந்து-பேச்சு வடிவ செயல்பாடு, (text-to-speech) லேண்ட்ஸ்கேப் பயன்முறையில் வாசிப்பு, பல வண்ண சிறப்புகுறிப்புகள், வார்த்தை தேடல்கள், ஃபிளாஷ்கார்டு உருவாக்கம் மற்றும் பல!
 • உங்கள் குறிப்பிட்ட தேவைகள் மற்றும் ஆர்வங்கள் குறித்த வழிகாட்டுதலை எளிதாக அணுக தலைப்பு மூலம் துணை பாடங்களை பிரௌஸ் (தேடுதல்) செய்யுங்கள்.
 • எங்கள் டெஸ்க்டாப் பிரௌஸர் ரீடரை study.yssofindia.org இல் பயன்படுத்தவும், இது மொபைல் செயலியிலிருந்து உங்கள் வாசிப்பு இடம், புக்மார்க்குகள் மற்றும் சிறப்புகுறிப்புகளுடன் தானாகவே ஒத்திசைத்துக்கொள்ளும்.
 • YSS இன் சமீபத்திய செய்திகள் மற்றும் வலைப்பதிவு உள்ளீடுகள் குறித்த புதுப்பித்தல்களை அறிந்துகொள்ளுங்கள்.
 • செயலியிலிருந்து நேரடியாக தினசரி ஆன்லைன் தியானங்களில் கலந்துகொள்ளுங்கள்.
 • பல்வேறு தலைப்புகளில் வழிகாட்டப்படும் தியானங்களில் அனுபவப்படுங்கள், இப்போது உங்கள் திட்டங்களுக்கு பொருந்தக்கூடிய வகையில் பல்வேறு காலங்களிலும் வழங்கப்படுகிறது.

இந்த செயலி தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் iOS தளங்களுக்கு வழங்கப்படுகிறது, மேலும் பாடங்கள் டெஸ்க்டாப் உலாவிகளிலும் (browsers) கிடைக்கின்றன.

 • ஆண்ட்ராய்டு செயலிக்குத் தேவைப்படுபவை:
  • அண்ட்ராய்டு பதிப்பு 6.0 மற்றும் அதற்கு மேல்
  • கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே சேவைகள் நிறுவப்பட்ட சாதனம்
 • iOS செயலிக்குத் தேவைப்படுபவை:
  • iOS பதிப்பு 13.0 மற்றும் அதற்கு மேல்
  • ஐபோன்: ஐபோன் 6S மற்றும் அதற்கு மேல் புதியது
  • ஐபாட்: அனைத்து அளவுகள்
 • டெஸ்க்டாப் உலாவி (browser) தேவைகள்:
  • அனைத்து முக்கிய உலாவிகளும் (browsers): க்ரோம், சஃபாரி, ஃபைர்ஃபாக்ஸ், மைக்ரோஎட்ஜ் (Chrome, Safari, Firefox, Microsoft Edge)

இந்த பின்வரும் சாதனங்கள் தற்சமயம் ஆதரிக்கப்படவில்லை:

 • அமேசான் ஃபயர் டேப்லெட்டுகள்
 • அண்ட்ராய்டு இன்ஸ்டன்ட் செயலிகள்
 • கூகுள் க்ரோம் புக் செயலிகள்

ஆம்! மாணவர்கள் இப்போது study.yssofindia.org சென்று தங்கள் பக்தர் இணைய முகப்பு சான்றுகளுடன் உள்நுழைவதன் மூலம் தங்கள் பாடங்களை கணினியில் அணுகலாம்.

செயலி மொழி: SRF/YSS செயலி தற்போது ஆங்கிலம் மற்றும் தமிழில் கிடைக்கிறது. யூஸர் இன்டர்ஃபேஸ் மற்றும் நீங்கள் விரும்பிய மொழியில் பாடங்கள் அல்லாத அனைத்து உள்ளடக்கத்தையும் காண, சாதன அமைப்புகளில் (device settings) உங்கள் சாதன மொழியை (device language) மாற்றவும். பாடங்கள் அல்லாத உள்ளடக்கத்தில் செய்தி இடுகைகள், மொழி சார்ந்த ஆன்லைன் தியான அட்டவணைகள் மற்றும் வழிகாட்டப்பட்ட தியானங்கள் ஆகியவை உள்ளன.

பாடங்கள் மொழி: ஒய் எஸ் எஸ் செயலி தற்போது ஆங்கிலம் மற்றும் தமிழில் வழங்கப்படுகின்றன. எந்தவொரு மொழியிலும் பார்க்க, ஒருவர் முதலில் ஒரு பாட மாணவராக சேர வேண்டும் (மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும்). 'ஃபார் மி' என்ற பகுதிக்குச் சென்று, 'பாடங்கள் மொழி' என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் ‘பாடங்கள் மொழியை’ செயலியில் மாற்றலாம்.

 

para-ornament

பாடங்கள் சந்தாக்கள், உள்நுழைதல் மற்றும் கெஸ்ட் மோட்

 • உள்நுழைவதற்கும் உள்ளடக்கத்தை அணுகுவதற்கும் நீங்கள் ஆன்லைனில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
 • நீங்கள் அணுக முயற்சிக்கும் குறிப்பிட்ட தொடருக்கு நீங்கள் பதிவுசெய்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அடிப்படைத் தொடர்கள் மற்றும் துணைப் பாடத் தொடர்களுக்கு தனித்தனி பதிவுகள் உள்ளன.
 • செயலி, பாடங்களின் புதிய பதிப்பிற்கான அணுகலை மட்டுமே வழங்குகிறது. பாடங்களின் புதிய பதிப்பிற்கு நீங்கள் பதியவில்லை என்றால், மேலும் அறிய இங்கே வருகை தரவும்.
 • உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டால், உங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க உள்நுழைவுத் திரையில் ‘கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?’ (‘Forgot Password?’) என்பதைக் கிளிக் செய்யவும்.
 • உங்களுக்கு இன்னும் சிக்கல் இருந்தால், எங்கள் உதவி மையத்தைத் தொடர்பு கொள்ள செயலியின் ‘ஃபார் மி (‘For Me’ ) அருகில் உள்ள ‘உதவி’ (support) பொத்தானைப் பயன்படுத்தவும். இது உங்களுக்கு சிறப்பாக உதவ எங்களை அனுமதிக்கும். உங்களால் செயலியை நிறுவ முடியவில்லை எனில், [email protected] ஐ மின்னஞ்சல் செய்து உங்கள் சிக்கலை விரிவாக எழுதுங்கள், உங்கள் பெயர் மற்றும் உங்கள் கணக்குடன் தொடர்புடைய மின்னஞ்சல் முகவரியைச் சேர்க்க நினைவில் கொள்ளுங்கள்.

செயலியில் ஒரு குறிப்பிட்ட பாடம் இன்னும் கிடைக்கவில்லை என்றால், கிடைக்கும் தேதி காண்பிக்கப்படும்.

பாடங்கள் மொழிப் (anchor) பிரிவைப் பார்க்கவும்.

para-ornament

பல்வேறு அம்சங்களைப் புரிந்துகொண்டு சரிசெய்தல்

பாடங்கள் eReader

4 வெவ்வேறு வண்ணங்களில் சிறப்புகுறிப்பு செய்ய, பாடம் உரையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சொற்களைத் தேர்ந்தெடுக்கவும். இரண்டு வார்த்தைகளுக்கு மேல் தேர்ந்தெடுக்கப்பட்டால், செயலி தானாகவே உங்கள் கடைசியாகப் பயன்படுத்தப்பட்ட வண்ணத்துடன் தேர்வை சிறப்புகுறிப்பு செய்யும். உங்கள் தற்போதைய பாட த்தின் புக்மார்க்குகள் மற்றும் சிறப்புகுறிப்புகள் இன்-ரீடர் மெனுவில் தோன்றும் (மேல் வலதுபுறத்தில் உள்ள மெனு ஐகானைக் கிளிக் செய்யவும்). அனைத்து பாடங்களிலிருந்தும் உங்கள் புக்மார்க்குகள் மற்றும் சிறப்புகுறிப்புளைப் பார்க்க, ‘ஃபார் மி’ பகுதிக்குச் சென்று, ‘புக்மார்க்குகள் மற்றும் சிறப்புகுறிப்பு’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் பல்வேறு சாதனங்களின் அனைத்து புக்மார்க்குகளும் சிறப்புகுறிப்புகளும் ஒத்திசைக்கப்படும்.

ஒரு குறிப்பிட்ட பாடத்தின் இறங்கும் பக்கத்தில் (Lesson’s landing) உள்ள ‘துணை சாதனங்கள்’ பொத்தானைக் கிளிக் செய்யவும். “கண்ணோட்டம்”, “ ஆன்ம-அனுபூதியின் மூலம் அதி உன்னத சாதனைகள்” (“Highest Achievements Through Self-Realization,”) மற்றும் “முகவுரை” (“Preface.”) ஆகியவற்றில் துணை சாதனங்கள் எதுவும் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். பாடம் 1 இல் தொடங்கி துணை சாதனங்கள் கிடைக்கப் பெறும்.

ஈ ரீடரில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சொற்களைத் தேர்ந்தெடுத்து, கீழ் மெனுவில் உள்ள ‘மேலும் அறிக’ (‘Learn More’) என்பதைக் கிளிக் செய்யவும். இது YSS சொல்லகராதி மற்றும் ஒரு பொது அகராதி இரண்டிலிருந்தும் ஒரு வரையறையை ஏற்ற முயற்சிக்கும். பல சொற்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால், தேர்வில் உள்ள அனைத்து சொல்லகராதி சொற்களையும் செயலி வழங்கும். அகராதி முடிவுகளுக்கு, ஒரு நேரத்தில் ஒரு வார்த்தையை மட்டும் தேர்ந்தெடுக்கவும்.

ஃப்ளாஷ்கார்டுகளின் உருவாக்கம் இப்போது புதிய கருத்துகளைக் கற்றுக்கொள்வதற்கான ஒரு கருவியாக கிடைக்கிறது. ஃபிளாஷ்கார்டை உருவாக்க, eReader இலிருந்து ஒரு சொற்றொடரைத் தேர்ந்தெடுக்கவும் (இது சொற்றொடரை சிறப்புகுறிப்பு செய்யும்). சிறப்புகுறிப்பு செய்யப்பட்ட பகுதியை மீண்டும் கிளிக் செய்து, கீழ் மெனுவில் உள்ள ‘ஃபிளாஷ் கார்டை உருவாக்கு’ ( Create flashcard) என்பதைக் கிளிக் செய்யவும். இது உங்கள் ஃபிளாஷ்கார்டின் “வரையறையை” அமைக்கிறது. உருவாக்கத்தை முடிக்க ஒரு ‘தலைப்பு’ வழங்கி ஒரு வண்ணத்தைத் தேர்ந்தெடுக்கவும். சேமிக்கப்பட்ட அனைத்து ஃபிளாஷ்கார்டுகளும் செயலியின் ‘ஃபார் மி’ பிரிவில் தோன்றும்.

இணக்கமான சாதனங்களில் மட்டுமே உரை-இலிருந்து-பேச்சு வடிவம் (TTS) ஆதரிக்கப்படுகிறது. ஆதரவும் மொழிக்கு ஏற்ப மாறுபடும், எடுத்துக்காட்டாக, தமிழில் TTS, iOS இல் ஆதரிக்கப்படுவதில்லை.

சில ஆண்ட்ராய்டு சாதனங்களில் (சாம்சங் சாதனங்கள் போன்றவை), டிஃபால்ட் (அல்லது விருப்பமான, (preferred) பேச்சு வடிவ எஞ்சினை ‘ஸ்பீச் சர்வீசஸ் பை கூகுள்’ என அமைப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

கேட்கும் பயன்முறையில் இருக்கும்போது, ஆடியோ பிளேயர் மெனுவின் கீழ் இடது மூலையில் உள்ள பேச்சு ஐகானைக் கிளிக் செய்க. இது உங்கள் சாதனத்தில் கிடைக்கக்கூடிய அனைத்து குரல்களையும் பட்டியலிடும்.

அடிப்படை பாடம் தொடர் (பாடங்கள் 1-18) முடித்த மாணவர்கள் துணைப் பாடத்தொடருக்கு சேர தகுதியுடையவர்கள் ஆகிறார்கள். ‘துணை பாடங்கள்’ டேபை தேர்ந்தெடுத்து, தலைப்பு மூலம் துணை பாடங்களை பிரௌஸ் செய்ய ‘மாட்யூல்ஸ்’ (‘Modules’) என்பதைக் கிளிக் செய்யுங்கள். நீங்கள் சப்ளிமெண்ட் தொடரைத் தொடங்கியவுடன், புதிய பாடங்கள் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை கிடைக்கப் பெறும்.

ஆன்லைன் தியானங்கள்

‘தியானம் | ஆன்லைன் செயலியின் பிரிவில், வரவிருக்கும் தியானங்கள் பட்டியலிடப்படும். திட்டமிடப்பட்ட தொடக்க நேரம் வந்ததும், நீங்கள் ஜூம் அல்லது YouTube வழியாக தியானத்தில் கலந்து கொள்ளலாம். ‘சேரவும்’ ( ‘Join on’) பொத்தானைக் கிளிக் செய்தால், பொருத்தமான செயலியைத் தொடங்கும் (முன் நிறுவல் தேவைப்படுகிறது).

நம் ஆன்லைன் தியான மையம் பல்வேறு வகையான நிகழ்வுகளை வழங்குகிறது. குறிப்பிட்ட வகைகளைப் பார்ப்பதில் / கலந்து கொள்வதில் மட்டுமே நீங்கள் ஆர்வமாக இருந்தால், மேல் வலதுபுறத்தில் உள்ள ‘ஃபில்டர்’ (‘Filter’) ஐகானைக் கிளிக் செய்து, காண்பிப்பதில் நீங்கள் ஆர்வமாக உள்ள வகைகளை மட்டுமே பார்வையிடலாம். உங்கள் மாற்றங்களைச் சேமிக்க ‘அப்ளை’ (‘Apply’) என்பதைக் கிளிக் செய்யுங்கள்.

உங்கள் சாதன மொழி (device language) விரும்பிய மொழிக்கு அமைக்கப்படும்போது செயலி அந்த மொழி சார்ந்த அதிக நிகழ்வுகளைக் காண்பிக்கும். தற்சமயம் இது தமிழுக்கு மட்டுமே துணைபுரிகிறது.

வழிகாட்டப்படும் தியானங்கள்

செயலியின் ‘தியானம் |வழிகாட்டுதல்’ (Meditate/Guided’) பிரிவில், நம் சன்னியாசிகள் நடத்தும் வழிகாட்டப்படும் தியானங்களை நீங்கள் பின்பற்றலாம். முதலில் ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுக்கவும், பின்னர் தொடங்குவதற்கு விரும்பிய கால அளவைத் தேர்ந்தெடுங்கள். YSS பீடத்தைக் காண, உங்கள் மொபைல் சாதனத்தை லேண்ட்ஸ்கேப் பயன்முறையில் திருப்புங்கள்.

ஆஃப்லைன் அல்லது மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதற்கு ஒரு குறிப்பிட்ட தியானத்தைப் பதிவிறக்க விரும்பினால், பிளேயரின் கீழ் வலதுபுறத்தில் உள்ள ‘பதிவிறக்கு’ (‘download’) ஐகானைக் கிளிக் செய்க. நீங்கள் எதிர்காலத்தில் அதே தியானத்திற்குத் திரும்பும்போது, பதிவிறக்கம் செய்யப்பட்ட கோப்பு பயன்படுத்தப்படும்.

வழிகாட்டப்படும் தியானங்கள் தமிழிலும் கிடைக்கின்றன. இவற்றை இயக்க, அத்துடன் செய்தி இடுகைகள் மற்றும் மொழி சார்ந்த ஆன்லைன் தியான அட்டவணைகள் போன்ற அனைத்து பாடம் அல்லாத உள்ளடக்கத்தையும் அணுக, உங்கள் சாதன மொழியை (device language) தமிழில் அமைக்கவும்.

para-ornament

மேலும் உதவி தேவையா?

உங்கள் கேள்விக்கான பதிலை கண்டறிய முடியவில்லையா? உதவிக்கு எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

எங்கள் சர்வதேச தன்னார்வ உதவி மையத்தின் மூலம் உதவி பெறுங்கள்:

செயலியின் ‘ஃபார் மி’ பிரிவில், தயவுசெய்து ‘உதவி’ என்பதைக் கிளிக் செய்யுங்கள். எங்கள் உதவி மையத்துடன் ஒரு குறிப்பை உருவாக்க கோரப்படும் தகவலை நிரப்புங்கள். சிக்கலைப் பற்றிய கூடுதல் தகவல்களை நீங்கள் வழங்கினால், விரைவாகவும் திறமையாகவும் பதிலளிப்பது எங்களுக்கு எளிதாக இருக்கும்.

உதவி (support screen) திரையை அணுக உங்களால் செயலியைத் திறக்க முடியவில்லை எனில், சிக்கலை விரிவாக விவரித்து, உங்கள் சாதனம் பற்றிய தகவல் மற்றும் உங்கள் மாணவர் (பக்தர்) கணக்குடன் தொடர்புடைய மின்னஞ்சல் முகவரியுடன். [email protected] க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.

para-ornament

எஸ் ஆர் எஃப்/ ஒய் எஸ் எஸ் செயலியை அமைக்கவும்

கூகுள் பிளே அல்லது ஏப்பல் ஸ்டோர் இலிருந்து செயலியை பதிவிறக்கம் செய்யவும்:

ஒய் எஸ் எஸ் பாட மாணவர்கள் டெஸ்க்டாப் செயலியில் ஒய் எஸ் எஸ் பாடங்கள் மற்றும் துணை சாதனங்களை காணலாம்:

இதைப் பகிர