ஒரு யோகியின் சுயசரிதம் ஒலிநூல் பதிப்பு (MP3)

ஒலிவளம் குறையாத ஒலிநூல் பதிப்பு (MP3)

ஓர் ஆன்மீகப் பொக்கிஷமாக உலகம் முழுவதும் போற்றப்பட்டு, மிகவும் சிறப்பாக விற்பனையாகும் இந்த இலக்கியம், இலட்சக்கணக்கானோரை, ஒரு புதிய மற்றும் மிக ஆழ்ந்து முழுமையாக்கும் வாழ்க்கை முறையை நோக்கி, அவர்களையே மாற்றுகின்ற பயணத்தை மேற்கொள்ள எழுச்சியூட்டியுள்ளது. பரமஹம்ஸ யோகானந்தரது வியக்கத்தக்க வாழ்க்கை வரலாற்றிலுள்ள அனைத்து ஞானமும் நகைச்சுவையும் அகவெழுச்சியும் பேசும் வார்த்தையின் அருகாமையில் கட்டவிழ்க்கப்படுகின்றன.

புத்தகத்திற்கு புதியவர்களும், அதே போல் அதை ஒரு நீண்டகால பொக்கிஷத் துணையாக கொண்டிருப்பவர்களும், ஒரு தொழில்முறை விவரிப்பாளரின் இந்த உணர்திறன் மற்றும் ஈர்க்கும் வாசிப்பை வரவேற்பார்கள். பரமஹம்ஸ யோகானந்தரின் பல வண்ணமயமான நிகழ்வுகளின் வசீகரத்தை அவரது நுட்பமான சித்தரிப்பு படம்பிடித்துக் காட்டுகிறது, மக்கள், அனுபவங்கள் மற்றும் நிகழ்வுகள் பற்றிய ஆசிரியரின் செழுமையான கோர்வைகளையும் வாழ்க்கையின் இறுதி புதிர்கள் குறித்த அவரது ஒளியூட்டும் ஆய்வுகளையும் உயிரோட்டமாக விவரிக்கிறது.

இதைப் பகிர