தமிழில் சொற்பொழிவு

வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 14, 2023

மாலை 6:00 மணி

– மாலை 8:00 மணி

(IST)

நிகழ்வு பற்றி

நன்றியும் புகழும் உங்கள் நனவில் ஆன்மீக வளர்ச்சிக்கும் வழங்கலுக்கும் வழியைத் திறக்கின்றன. அது பாயக்கூடிய ஒரு வாயில் திறக்கப்பட்டவுடன் பரம்பொருள் தன்னைக் கண்ணுக்குத் தெரியும் தோற்றத்திற்குத் தள்ளுகிறது. நீங்கள் எல்லா நேரங்களிலும் எல்லாவற்றிற்கும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். சிந்திக்கவும், பேசவும், செயல்படவும் எல்லா சக்தியும்இறைவனிடமிருந்து வருகிறது என்பதையும், அவர் இப்போது உங்களுடன் இருக்கிறார், உங்களை வழிநடத்துகிறார், ஊக்கப்படுத்துகிறார் என்பதையும் உணருங்கள்.

— பரமஹம்ஸ யோகானந்தர்

“நமது வாழ்வின் அருளாசிகளுக்கு நன்றியுடன் இருத்தல்” என்ற தலைப்பில் தமிழில் ஆன்மீக சொற்பொழிவு ஒரு YSS சன்னியாசியால்  வழங்கப்பட்டது.

இந்த கருப்பொருளில் பரமஹம்ஸ யோகானந்தரின் “எப்படி வாழ்வது” ஞானத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில், ஏப்ரல் 14, வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை (இந்திய நேரப்படி) எங்கள் வலைத்தளம் மற்றும் யூடியூப்சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

தியானத்துடன் நிகழ்ச்சி துவங்கியது மற்றும் அதனைத் தொடர்ந்து சொற்பொழிவும் நடந்தது.

புதிய வருகையாளர்

நீங்கள் YSS மற்றும் பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளுக்கு புதியவர் என்றால், பின்வரும் இணைப்புகளை நீங்கள் படிக்க விரும்பலாம்:

ஒரு யோகியின் சுயசரிதம்

உலகளவில் ஆன்மீக தலைசிறந்த படைப்பாகக் போற்றப்படும் இந்நூலை பரமஹம்ஸர் அடிக்கடி, “நான் மறைந்துவிட்ட பிறகு, இந்தப் புத்தகம் எனது தூதுவனாக இருக்கும்.” என்று குறிப்பிட்டு வந்தார்.

YSS பாடங்கள்

நீங்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத வகையில் உங்கள் வாழ்க்கையை மாற்றும் மற்றும் ஒரு சமநிலையுடனும் வெற்றிகரமாகவும் வாழ உதவும் ஒரு வீட்டுக் கல்வித் தொடர்.

இதைப் பகிர