யோகத்தின் இதயம் எது?

ஆத்மாவை பரமாத்மாவுடன் ஒன்றிணைப்பதுவே யோகம் - எல்லோரும் தேடிக்கொண்டிருக்கும் பேரின்பத்துடன் மீண்டும் இணைவது. இது ஒரு அருமையான விளக்கமல்லவா? பரம்பொருளின் என்றும் புதிய இன்பத்தில் நீங்கள் அடையும் ஆனந்தம் வேறெந்த மகிழ்ச்சியைவிடவும் உயர்வானது, எதனாலும் உங்களை வீழ்த்த முடியாது.

—பரமஹம்ஸ யோகானந்தர்

புராதன காலம் முதலே தியானம் என்பது இந்தியத் தத்துவத்தின் இதயமாக இருந்து வருகின்றது.

யோகம்: “யோகம்”  என்ற சொல்லின் நேரடியான விளக்கத்திலேயே அதன் குறிக் கோள் தெரியவரும்; நமது தனிப்பட்ட உணர்வு நிலை அல்லது ஆன்மா எல்லையற்ற என்றும் உள்ள ஆனந்தம் அல்லது பரமாத்மாவுடன் ஐக்கிமாதல்.

பரம் பொருளின் பேரின்ப உணர்வுநிலையுடன் ஐக்கியமாகும் இந்தக் குறிக்கோளை சாத்தியமாக்கி – நம்மை அனைத்துவிதமான துன்பங்களிலிருந்தும் விடுவித்துக் கொள்வதற்கு காலத்தால் நிரூபிக்கப்பட்ட முறையான பயிற்சிகளைப் பின் பற்றி பொறுமையுடன் தியானம் செய்ய வேண்டும். அதாவது நாம் அறிவியலை பயன்படுத்த வேண்டும்.

இராஜயோகம் என்பது ஆத்ம தரிசனத்திற்கான முழுமையான அறிவியல் – யோக சாத் திரங்களில் குறிப்படப்பட்டுள்ள படிப்டியான தியான முறைகள் மற்றும் ஒழுக்க விதிகள், இந்திய சனாதன தர்மத்தின்  (என்றும் வாழும் சமயம்) இன்றியமையாத விதிகளாக பல்லாயிரம் ஆண்டுகளாக பின்பற்றப்பட்டுவரும் பாரம்பரியப் பழக்கங்களாகும். இந்த கால வரையரைக்கு கட்டுப்படாத உலகலாவிய யோக அறிவியல் தான், அனைத்து உண்மையான சமயங்களிலும் புதைந்திருக்கும் மறைப்பொருளான போதனைகளாகும்.

யோகதா சத்சங்க இராஜயோக போதனைகள் உடல், மனம், ஆன்மா ஆகியவை முழுமையாக கட்டவிழ்ந்து மலர்ச்சியடைய செய்யும் கிரியா யோகம் என்ற அடித்தளத்தில் அமைந்த வாழ்க்கை முறையை விளக்குகின்றன. இக்கிரியா யோகம் பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையிலும், பதஞ்சலி முனிவர் தமது யோக சூத்திரங்களிலும் குறிப்பிட்டுள்ள ஆனால் விளக்கியுரைக்காத பிராணாயாமம் (உயிர்சக்தியை கட்டுப்படுத்தும்) உத்தியை உள்ளடக்கியது. பல நூறு ஆண்டுகளான மனித குலம் இழந்துவிட்டிருந்த கிரியா யோகம், மகாவதார பாபாஜி, லாஹிரி மகாசயர், ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஷ்வர், பரமஹம்ஸ யோகானந்தர் ஆகிய குருமார்களால். இப்புதுயுகத்தில் மீட்டெடுக்கப்பட்டது.

கிரியா யோக விஞ்ஞானத்தை மேற்கத்திய நாடுகளுக்கு கொண்டு சென்று, உலகம் முழுவதும் பரப்புவதற்கென போற்றுதற்குரிய குருமார்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பரமஹம்ஸ யோகானந்தர்; இந்தக் குறிக் கோளுக்காகதான் 1920 – ல் அவர் செல்ஃப் ரியலைசேஷன் ஃபெலோஷிப் – ஐ தோற்றுவித்தார்.

யோகதா சத்சங்க பாடங்களில் பரமஹம்ஸ யோகானந்தர் கற்றுத்தரும் தியான உத்திகளை நாள்தோறும் பயிற்சி செய்வதுதான் சீரான கிரியாயோக பாதையின் மையமாக விளங்குகின்றது. தியானம் செய்வதன் மூலம், உடலையும் மனதையும்          அமைதியின்மையிலிருந்து அமைதிக்கு கொண்டுவருவது எப்படி என்பதை நாம் கற்றுக் கொள்கிறோம். இதன் மூலம் நமது ஆன்மாவின் தன்னியல்புகளான நிலைத்த அமைதி, அன்பு, அறிவு, ஆனந்தம் ஆகியவற்றை அனுபவிக்க முடியும் – நம்மை சுற்றியுள்ள உலகத்தில் என்ன நடந்தாலும்.

"அதிகமாக தியானம் செய்யுங்கள். அது எவ்வளவு அற்புதமானது என்பது உங்களுக்கு தெரியவில்லை. பணம், மனிதரின் அன்பு என நீங்கள் விரும்பும் எதையும் தேடுவதில் பலமணி நேரங்களை செலவிடுவதைவிட தியானம் செய்வது மிகவும் உயர்வானது. நீங்கள் அதிகமாக தியானம் செய்தால் செயலில் ஈடுபடும்போது உங்கள் மனம் ஆன்மாவில் அதிகமாக ஈடுபடும், அப்போது உங்களால் அதிகமாக புன்னகைக்க முடியும். நான் இறைவனின் பேரின்ப உணர்வில்தான் எப்போதும் இருக்கின்றேன். என்னை எதுவும் பாதிப்பதில்லை; தனியாக இருந்தாலும், மக்களுடன் இருந்தாலும், இறைவனின் பேரின்பம் எப்போதும் இருந்துக்கொண்டே இருக்கின்றது. நான் புன்னகையை தக்க வைத்தக் கொண்டிருக்கின்றேன் - ஆனால் அதை நிரந்தரமாக்கிக் கொள்வதற்கு கடுமையாக உழைக்க வேண்டி இருக்கிறது! அதே புன்னகை உங்களுக்குள்ளும் உள்ளது; ஆன்மாவின் ஆனந்தமும் பேரின்பமும் அங்கே உள்ளன. நீங்கள் அவற்றை புதியதாக அடைய வேண்டாம். மீட்டெடுக்க வேண்டும். அவ்வளவே!.

—பரமஹம்ஸ யோகானந்தர்

இதைப் பகிர