இறைவனை நம் வாழ்க்கையில் துணைவன் ஆக்குதல்

சுவாமி பவித்ரானந்த கிரி

விவரங்கள்

ஒவ்வொரு செயலின்போதும்‌, செயற்படுவதற்கு முன்பும்‌, செயற்படும்‌ பொழுதும்‌, அதை முடித்த பின்னரும்‌ அவனை நீங்கள்‌ நினைவில்‌ வைத்தால்‌, அவன்‌ தன்னை உங்களுக்கு வெளிப்படுத்துவான்‌…. நீங்கள்‌ இடைவிடாமல்‌, அவன்தான்‌ உங்கள்‌ கால்கள்‌ மூலம்‌ நடக்கிறான்‌, உங்கள்‌ கைகள்‌ மூலம்‌ பணிபுரிகிறான்‌, உங்கள்‌ மனத்திட்பம்‌ மூலம்‌ சாதிக்கிறான்‌ என சிந்தித்துக்‌ கொண்டிருந்தால்‌, அவனை நீங்கள்‌ அறிவீர்கள்‌.

— பரமஹம்ஸ யோகானந்தர்

யோகானந்தரின் எப்படி-வாழ-வேண்டும் போதனைகளின் அடிப்படையில், “இறைவனை நம் வாழ்க்கையில் துணைவன் ஆக்குதல்” என்ற தலைப்பிலான இந்த உரையில், YSS சன்னியாசி சுவாமி பவித்ரானந்த கிரி, நமது ஒவ்வொரு எண்ணத்திலும் அவன் நம்முடைய நிரந்தரத் தோழனாக மாறும் அளவுக்கு இறைவன் மீது அன்பை வளர்த்துக் கொள்ள ஊக்குவிக்கிறார்.

நம்முடைய தியானங்களிலும், நமது பணி, மற்றும் தனிப்பட்ட வேலைகள், தினசரி பயணம், உணவு போன்ற நமது அன்றாட நடவடிக்கைகளிலும் இறைவனை ஒரு தோழனாகப் பார்க்கும் பழக்கத்தை எவ்வாறு வளர்த்துக் கொள்ளலாம் என்பதற்கான நடைமுறை வழிகாட்டுதல்களையும் ஆலோசனைகளையும் சுவாமி பவித்ரானந்தா வழங்குகிறார்.

யோகானந்தர் கூறியபடி, இறைவனை நம் எண்ணங்களிலும் நம் வாழ்விலும கொண்டு வருவதற்கான வழிகளில் ஒன்றையும் அவர் குறிப்பிடுகிறார்: “நீங்கள் மானசீகமாக ‘இறைவா’ என்ற சொல்லை உச்சரிக்கும் பொழுதும் அந்த எண்ணத்தையே திரும்பத் திரும்ப உள்ளுக்குள் தொடர்ந்து சொல்லும் போதும் அது இறைவனின் சான்னித்தியத்தை வரவழைக்கும் ஓர் அதிர்வை உண்டாக்குகிறது.” இறைவனின் தோழமையை வளர்ப்பதன் மூலம், நம் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒப்பற்ற மகிழ்ச்சியைப் பெறுகிறோம், அது நம் வாழ்க்கையை மாற்றி, அதன் பல்வேறு சவால்களை சமாளிக்கவும், மகிழ்ச்சியாகவும் வெற்றிகரமாகவும் இருக்கவும் உதவுகிறது.

para-ornament

பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் பரமஹம்ஸ யோகானந்தரால் நிறுவப்பட்ட அமைப்பான யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா வின் ஆன்மீக மற்றும் மனிதநலப் பணிகளுக்கு உதவ விரும்பினால், கீழே உள்ள பட்டனைக் கிளிக் செய்து நன்கொடை அளிக்கலாம்:

புதிய வருகையாளர்

பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் அவரது போதனைகளைப் பற்றி மேலும் அறிய பின்வரும் இணைப்புகளை நீங்கள் ஆய்வு செய்யலாம்.

இதைப் பகிர