பகவான் கிருஷ்ணர்

பகவான் கிருஷ்ணன்

பகவான் கிருஷ்ணர் இந்தியா முழுவதும் ஒரு அவதாரமாக (இறைவனின் அவதாரம்) போற்றப்படுகிறார். பகவான் கிருஷ்ணரின் உன்னதமான போதனைகள் பகவத் கீதையில் பொதிந்துள்ளன.

மிகவும் போற்றப்படும் இரண்டு தொகுதி கீதை விளக்கவுரையில் பரமஹம்ஸ யோகானந்தர் பின்வருமாறு எழுதியுள்ளார்:

“பகவத் கீதை இந்தியாவின் மிகவும் நேசிக்கப்படும் மறை நூல், சாத்திரங்களின் சாத்திரம். இது இந்துக்களின் புனித ஏற்பாடு அல்லது பைபிள், அனைத்து ஆசான்களும் சாத்திரங்களின் நம்பகத்தன்மைக்கு ஒரு உன்னத ஆதாரமாக சார்ந்திருக்கும் ஒரே புத்தகம். . . .

“ஒரு ஆன்மீக வழிகாட்டியாக கீதை எவ்வளவு விரிவானது என்றால், அது நான்கு வேதங்கள், 108 உபநிடதங்கள் மற்றும் இந்து தத்துவத்தின் ஆறு அமைப்புகளின் சாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. . . . பிரபஞ்சத்தைப் பற்றிய முழு அறிவும் கீதையில் நிரம்பியுள்ளது. மிக ஆழமான, ஆனால் இனிமை மற்றும் எளிமையின் வெளிப்பாடான மொழியில் அமைந்திருக்கும் கீதை, மனித முயற்சி மற்றும் ஆன்மீக முயற்சியின் அனைத்து நிலைகளிலும் புரிந்து கொள்ளப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.

 — மாறுபட்ட இயல்புகள் மற்றும் தேவைகள் கொண்ட பரந்த அளவிலான மனிதர்களுக்கு பாதுகாப்பு வழங்குகிறது. இறைவனிடம் திரும்பும் வழியில் ஒருவர் எங்கிருந்தாலும், பயணத்தின் அந்தப் பகுதிக்கு கீதை அதன் ஒளியைப் பாய்ச்சும். . . .

“கிருஷ்ணர் கிழக்கில் யோகத்தின் தெய்வீக முன்மாதிரி; மேலைநாடுகளுக்கான இறை ஐக்கியத்தின் முன்மாதிரியாக கிறிஸ்து இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டார். . . கிருஷ்ணர் அர்ஜுனனுக்குக் கற்பித்த கிரியா யோக உத்தி, கீதை அத்தியாயங்கள் 4:29 மற்றும் 5:27-28ல் குறிப்பிடப்பட்டுள்ளது, இது யோக தியானத்தின் உன்னத ஆன்மீக விஞ்ஞானமாகும். பொருள்சார் யுகங்களில் இரகசியமாக வைக்கப்பட்ட இந்த அழிக்க முடியாத யோகம், மகாவதார் பாபாஜி யால் புத்துயிர் பெற்று, யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ ஸெல்ஃப் ரியலைசேஷன் ஃபெலோஷிப் குருமார்களால் நவீனகால மனிதனுக்கு கற்பிக்கப்பட்டது.”

இதைப் பகிர