நன்கொடை அளிக்க

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா-வின் (ஒய் எஸ் எஸ்) ஆன்மீக மற்றும் மனித நேயப் பணிகளுக்கு ஆதரவளித்து உதவி புரியும் அன்புள்ளம் கொண்ட அனேகருக்கு நாங்கள் ஆழ்ந்த நன்றிக்கடன் பட்டுள்ளோம்.

சொஸைடிக்கு அளிக்கப்படும் நன்கொடையானது, அச்சடிக்கப்பட்ட ஒய் எஸ் எஸ் பாடங்கள், புத்தகங்கள், இதர வெளியீடுகள், ஒலி-காணொலிப் பதிவுகள், சொற்பொழிவுப் பயணங்கள், ஏகாந்த வாச நிகழ்ச்சிகள், தனி மனிதருக்கான அறிவுரைகள் ஆகியவற்றின் மூலமாக பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளை பரப்புவதற்கு உறுதுணையாக உள்ளது. நன்கொடைகள், ஆசிரம வசதிகளைப் பராமரிக்கவும் இந்தியாவின் அனேக பாகங்களில் ஒய் எஸ் எஸ்-ன் பல்வேறு தொண்டு, கல்வி மற்றும் மருத்துவ ரீதியான சேவைகளில் உதவிசெய்யவும் கூட வாய்ப்பளிக்கிறது.

ஆன்லைன்

நன்கொடைகள் மற்றும் பங்களிப்புகள், இந்திய மற்றும் அன்னிய நாட்டவரிடமிருந்து ஆன்லைனில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

அஞ்சல்

இந்திய நாட்டவர்  நன்கொடை அளிக்க இங்கே படிவத்தை க்ளிக் செய்து  நன்கொடை இரசீதைப் பதிவிறக்கம் செய்யவும்; அறிவிப்பு படிவத்தைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அஞ்சலில் அனுப்பவும்:

Yogoda Satsanga Sakha Math,
Paramahansa Yogananda Path
Ranchi 834001, Jharkhand.

நன்கொடைகள்  YOGODA SATSANGA SOCIETY OF INDIA என்ற பெயருக்கு வங்கிக் கணக்கு வைத்துள்ள பணம் பெறுவோர் காசோலை அல்லது ராஞ்சி வங்கியில் பணம் எடுக்கப்படக் கூடிய வங்கி வரைவோலை மூலமாக (by A/c Payee Cheque or Bank Draft drawn on a Ranchi Bank) அளிக்கப்படுதல் வேண்டும்

வெளி நாட்டவர் நன்கொடை அளிக்க இங்கே படிவத்தை  க்ளிக் செய்து  பதிவிறக்கம் செய்யவும்; அறிவிப்பு படிவத்தைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அஞ்சலில் அனுப்பவும்:

Yogoda Satsanga Society of India
21, U.N. Mukherjee Road, Dakshineswar
Kolkata 700 076, West Bengal, INDIA.

நன்கொடைகள்  YOGODA SATSANGA SOCIETY OF INDIA என்ற பெயருக்கு வங்கிக் கணக்கு வைத்துள்ள பணம் பெறுவோர் காசோலை அல்லது கொல்கத்தா வங்கியில் பணம் எடுக்கப்படக் கூடிய வங்கி வரைவோலை மூலமாக (by A/c Payee Cheque or Bank Draft drawn on a Ranchi Bank) அளிக்கப்படுதல் வேண்டும்

கேள்விகள்

உங்களுக்கு ஏதேனும் ஐயங்கள் இருந்தால்  எங்களைத் தொடர்பு கொள்ளவும்.  உங்களுக்கு உதவுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்!

ஆன்லைன் நன்கொடைகள் பற்றிய முக்கியமான தகவல்:

அன்பார்ந்த நன்றி. உங்களது உதவி தேவைப்படுகிறது மற்றும் அது மிகவும் மதிப்பு வாய்ந்தது.

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா, வருமான வரி சட்டம், 1961-ன் பிரிவுகளின் கீழ் ஒரு தொண்டு நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த சொஸைடிக்கான (PAN: AAATY0283H) நன்கொடைகள் வருமான வரி சட்டத்தின் பிரிவு 80-G-ன் கீழ் வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டவை.

இதைப் பகிர

Facebook
X
WhatsApp