-
- இடையறாத உண்மை உங்கள் மனத்தில் பாயவும்… இடைவிடாத மகிழ்ச்சி உங்கள் ஆன்மாவில் பாயவும் பிரார்த்தனை செய்யுங்கள்.
-
- உண்மையான ஆன்மாக்களில் அன்புத் துளிகள் பிரகாசிக்கின்றன, ஆனால் ஆன்மாவில் மட்டுமே அன்புக் கடல் காணப்படுகிறது.
-
- இயற்கையில் உள்ள அனைத்து நன்மையையும் நாம் பார்க்கும்போது, நமக்குள் ஒரு மென்மை உணர்வை அனுபவிக்கிறோம்.
-
- படைப்பின் ஒரே நோக்கம், அதன் புதிரைத் தீர்க்கவும், எல்லாவற்றிற்கும் பின்னாலுள்ள கடவுளை உணரவும் உங்களை கட்டாயப்படுத்துவதாகும்.
-
- அன்பு என்பது படைப்பில் ஈர்க்கும் தெய்வீக சக்தியாகும், இது இணக்கமாக்குகிறது, ஒன்றாக்குகிறது, ஒன்றுசேர்த்திணைக்கிறது.
-
- நன்மையைத் தேடுதல், நல்லவனாக இருத்தல் மற்றும் நல்லதை சங்கல்பித்துக் கொள்ளுதல் மூலம், நீங்கள் இந்த உலகத்தை ஓர் அழகுப் பூங்காவாகக் காண்கிறீர்கள்.