ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் பிரார்த்தனைகள்

ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் “பரதத்துவத் தியானங்கள்” -ல் இருந்து பிரார்த்தனைகள்

பரம்பொருளே, என் ஆன்மாவை உன் ஆலயமாக்குவாய், ஆனால் என் இதயத்தை, நீ என்னுடன் அமைதியாகவும் நிரந்தரமான புரிதலுடனும் வசிக்கக்கூடிய உன் பிரியமான இல்லமாக ஆக்குவாய்.

தெய்வத் தாயே, என் ஆன்மாவின் மொழியில் நான் உன் இருப்பின் அனுபூதியைக் கோருகிறேன். நீதான் எல்லாவற்றின் சாரம். என் இருப்பின் ஒவ்வோர் இழையிலும், ஒவ்வொரு சிந்தனைச் சிறகிலும் உன்னைக் காணச் செய்வாய். என் இதயத்தை விழித்தெழச் செய்வாய்!

இடைவிடாத பேரின்பத்தை அருள்பவனே! நீ எனக்கு அளித்த தெய்வீக ஆனந்தத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மற்றவர்களை உண்மையிலேயே சந்தோஷப்படுத்த நான் முயற்சி செய்வேன். என் ஆன்மீக மகிழ்ச்சியின் வாயிலாக நான் அனைவருக்கும் சேவை செய்வேன்.

தெய்வத் தந்தையே, வறுமையிலும் வளமையிலும், சுகவீனத்திலும் ஆரோக்கியத்திலும், அறியாமையிலும் ஞானத்திலும் உன்னை நினைவுகூர எனக்குக் கற்றுக்கொடுப்பாய். என் அவநம்பிக்கை எனும் மூடிய கண்களைத் திறந்து உன் உடனடியாகக் குணப்படுத்தும் ஒளியைத் தரிசிக்க எனக்கு கற்றுக்கொடுப்பாய்.

தகிக்கும் பேரொளியே! என் இதயத்தை விழித்தெழச் செய்வாய், என் ஆன்மாவை விழித்தெழச் செய்வாய், என் இருளைக் கொளுத்துவாய், மெளனமெனும் திரையைக் கிழிப்பாய், மற்றும் என் ஆலயத்தை உமது மகிமையால் நிரப்புவாய்.

தெய்வத் தந்தையே, என் உடலை உன் உயிராற்றலால் நிரப்புவாய், என் மனத்தை உன் ஆன்மீக சக்தியால் நிரப்புவாய், என் ஆன்மாவை உன் ஆனந்தத்தால், உன் அமரத்துவத்தால் நிரப்புவாய்.

தெய்வத் தந்தையே, உன் வரம்பற்ற மற்றும் அனைத்தையும் குணப்படுத்தும் சக்தி என்னில் உள்ளது. என் அறியாமை எனும் இருளின் ஊடாக உன் ஒளியை வெளிப்படுத்துவாய்.

நிரந்தரமான மகாசக்தியே, உணர்வுப்பூர்வமான இச்சாசக்தியை, உணர்வுப்பூர்வமான உயிராற்றலை, உணர்வுப்பூர்வமான உடல்நலத்தை, உணர்வுப்பூர்வமான அனுபூதியை என்னுள் விழித்தெழச் செய்வாய்.

தெய்வப் பரம்பொருளே, ஒவ்வொரு சோதனையிலும் இன்னலிலும் கவலைப்படுவதை விட்டு எளிதாக மகிழ்ச்சியைக் காணும்படி எனக்கு அருள்புரிவாய்.

தெய்வத் தந்தையே, நான் என் சொந்த வளத்தை அடையும் முயற்சியில் மற்றவர்களின் வளத்தையும் சேர்த்துக் கொள்ள எனக்குக் கற்றுக்கொடுப்பாய்.

எல்லாச் செல்வங்களுக்கும் பின்னால் உள்ள வல்லமையும், எல்லாவற்றினுள்ளும் இருக்கும் மதிப்பும் நீயே என்று உணர எனக்குக் கற்றுக் கொடுப்பாய். முதலில் உன்னைக் கண்டு, மற்ற எல்லாவற்றையும் உன்னில் காண்பேன்.

எவராலும் வெல்ல முடியாத இறைவா, என் இச்சா சக்தியின் சிற்றொளி உன் எல்லாம்-வல்ல இச்சா சக்தியின் பேரண்ட ஒளி வீச்சாக எரிகிற வரை, நற்செயல்களை ஆற்றுவதில் இடைவிடாமல் என் இச்சா சக்தியைப் பயன்படுத்த எனக்குக் கற்றுக் கொடுப்பாய்.

Metaphysical Meditations book cover

மெடஃபிஸிகல் மெடிடேஷன்ஸ் (பரதத்துவத் தியானங்கள்) – ஆங்கிலத்தில்

300-க்கும் மேற்பட்ட அனைவருக்கும் பொதுவான பிரார்த்தனைகள், சங்கல்பங்கள் மற்றும் மனக்காட்சிப்படுத்தல்களின் ஒரு தொகுப்பான இப் புத்தகம் ஆரம்ப சாதகர்கள், தியானம் செய்வதில் அனுபவம் வாய்ந்தவர்கள் ஆகிய இருசாராருக்கும் உரியது — ஆன்மாவின் எல்லையற்ற ஆனந்தம், அமைதி மற்றும் அக விடுதலையை விழித்தெழச் செய்யும் ஓர் இன்றியமையாத வழிகாட்டி. தியானம் செய்வது எப்படி என்பது பற்றிய அறிமுக அறிவுறுத்தல்களும் இதில் அடங்கும். மெடஃபிஸிகல் மெடிடேஷன்ஸ் பற்றி மேலும் படியுங்கள்.

Whispers from Eternity-soul awakening prayers and affirmations

விஸ்பர்ஸ் ஃப்ரம் இடர்னிடி (சாசுவதத்திலிருந்து வரும் மென்குரல்கள்)ஆங்கிலத்தில்

கவிதையழகுமிக்க தெய்வீகப் பிரார்த்தனைகள்

எல்லா மதங்களின் மாபெரும் இசைக் கவி — ஞானிகளின் பாரம்பரியத்தில், பரமஹம்ஸ யோகானந்தரின் விஸ்பர்ஸ் ஃப்ரம் இடர்னிடி, மெய்மறந்த பரவசத்தின் பக்திமயமான அனுபவத்திற்கு ஒரு தெய்வீக சாளரத்தைத் திறக்கிறது.

தன் உயர்ந்த தனிப்பட்ட இறை –தோழமை நிலையிலிருந்து நேரடியாகப் பிறந்த ஆன்ம-விழிப்பூட்டும் பிரார்த்தனை களையும் சங்கல்பங்களையும் பகிர்ந்தவாறு, அவர் தற்கால சாதகர்களுக்கு இறைவனைப் பற்றிய அவர்களுடைய சொந்த பரவசமான உணர்வை எவ்வாறு அடைவது என்பதைக் காட்டுகிறார்.

இதைப் பகிர