
ஸ்ரீ ஸ்ரீ மிருணாளினி மாதா, சங்கமாதா மற்றும் யோகதா சத்சங்க சொசைடி ஆஃப் இந்தியா / செல்ஃப் ரியலைசெஷன் ஃபெலோஷிப் தலைவர், அவர்களின் 2014 ஆம் ஆண்டு புத்தாண்டு செய்தியிலிருந்து:
“இந்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி நமது அன்புக்குரிய ஸ்ரீ ஸ்ரீ தயா மாதாவின் நூறாவது பிறந்த தின ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. அவர்களுடைய தெய்வீக வாழ்க்கை நம் அனைவரையும் ஈர்த்துள்ளது, இந்த உலகத்திற்கு அப்பால் ஒளி மற்றும் ஆனந்தத்தின் பேரின்ப மண்டலங்களில் அவரது ஆன்மா சுதந்திரமாக இருந்தாலும், கீழை மற்றும் மேலை ஆகிய இரு நாடுகளிலும் பரமஹம்ஸ யோகானந்தரின் ஆன்மீகக் குடும்பத்தின் மீது அவர் பொழிந்த அன்பும் அக்கறையும் இன்னும் நம்முடன் உள்ளது. குருதேவரின் வார்த்தைகள், ‘அன்பால் மட்டுமே என் இடத்தை நிரப்ப முடியும்,’ அவர்களிடம் முழு வெளிப்பாட்டைக் கண்டது மேலும் அவர்களின் அழகான உதாரணத்தின் மூலம் எப்போதும் நம் உணர்வு நிலையில் அதிர்வை உண்டாக்கும்.”
அன்பு, பணிவு, இறைவனிடத்து அர்ப்பணிப்புடன் சேவை செய்தல் ஆகியவற்றுடனான வாழ்க்கை
ஸ்ரீ தயா மாதா ஒரு வியக்கத்தக்க வாழ்க்கையை வாழ்ந்தார் — வாழ்வில் கிட்டத்தட்ட எண்பது ஆண்டுகள் அவரது குருவின் ஆசிரமங்களில் சன்னியாசிச் சீடராக கழிந்தன, அவரது எண்ணங்கள் எப்போதும் இறையன்பினால் ஊடுருவப்பட்டிருந்தன, செயல்பாடுகள், அவனுடைய சேவைக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தன
பரமஹம்ஸ யோகானந்தரைப் பற்றிய ஸ்ரீ தயா மாதாவின் நினைவலைகள்
“ஆன்மாவைத் தொடும் நிகழ்வுகள் ஒருபோதும் மங்குவதில்லை; அவை நம் இருப்பில் நித்திய, துடிப்புடனான பாகமாக மாறுகின்றன. என்னுடைய குரு பரமஹம்ஸ யோகானந்தருடனான சந்திப்பும் அப்படிப் பட்டது தான்…..”
மகாவதார பாபாஜியிடமிருந்து ஓர் அருளாசி: ஸ்ரீ தயா மாதாவின் தனிப்பட்ட அனுபவ விவரங்கள்
இந்தியாவிலுள்ள பரமஹம்ஸ யோகானந்தரின் ஆசிரமங்களுக்கு (அக்டோபர் 1963 – மே 1964) விஜயம் செய்தபொழுது, மகாவதார பாபாஜியின் திருமேனியின் இருப்பால் புனிதமடைந்த ஒரு இமாலய குகைக்கு ஸ்ரீ தயா மாதா புனித யாத்திரை மேற்கொண்டார்.
ஸ்ரீ தயா மாதாவின் செய்திகள்
தயா மாதா அவர்கள் ஆண்டு முழுவதும் மற்றும் நெருக்கடியான நேரங்களில் சிறப்புச் செய்திகளைப் பகிர்ந்து கொண்டார். அவை, உலகெங்கிலும் உள்ள உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வழிகாட்டல், உத்வேகம், ஆன்மீக ஊக்கம் ஆகியவற்றின் ஒரு நிலையான ஆதாரமாக இருந்தன.
உலகளாவிய பிரார்த்தனை வட்டம் — ஸ்ரீ தயா மாதாவிடமிருந்து ஓர் அழைப்பு
ஸ்ரீ தயா மாதாவிடமிருந்து ஓர் அழைப்பு: “பிரார்த்தனையின் ஆற்றல்மிக்க சக்தி மூலம் மற்றவர்களுக்கு சேவை செய்வதில் எங்களுடன் இணைய உங்களை அழைக்க விரும்புகிறேன்…”
- Paramahansa Yogananda’s Immortal Message: Celebrating a Beloved World Teacher
- Fulfilling the Soul’s Deepest Needs
- How Can My Prayers Help Others?
- Experiencing the Unconditional Love of God
- When I Am Only a Dream | A Poem by Paramahansa Yogananda Read by Sri Daya Mata
- Scripture Of Love
- A True Guru Guides Us From Experience
ஸ்ரீ தயா மாதாவின் புத்தகங்கள் மற்றும் பதிவுகள்
நினைவஞ்சலி : ஸ்ரீ தயா மாதா
பசடேனா சிவிக் ஆடிட்டோரியத்தில் நடத்தப்பட்ட பொது நினைவஞ்சலிச் சேவையின் முழு நீளக் காணொலி, உலகெங்கிலும் இருந்து செய்திகள் மற்றும் அஞ்சலிகள், ஊடக செய்திகள் மற்றும் பல.