நம்பிக்கை உள்ளது: உலக நிலைமை குறித்த ஒரு ஆன்மீக கண்ணோட்டம்

இந்த உலகம், ஓர் உயரிய, அதி ஆன்மீகமான யுகத்திற்கு உட்படும் மாறுதலின் ஒரு பகுதியாக அது கடந்து செல்ல வேண்டிய மாற்றங்களை பற்றி, அரை நூற்றாண்டிற்கு முன்பே பரமஹம்ஸ யோகானந்தர் விவரித்துள்ளார். ஒரு துல்லியமான(மாற்றங்களின்) கால அட்டவணையை அவர் அளிக்காவிட்டாலும், இந்த சவாலான காலங்களைக் கையாளுவதற்கு வேண்டிய ஆன்மீக ஆலோசனை மற்றும் நடைமுறை அறிவுரை ஆகியவற்றை பேரளவில் வழங்கியுள்ளார். பரமஹம்ஸருடைய குருதேவர் சுவாமி ஸ்ரீயுக்தேஸ்வர் தனது நூல் கைவல்ய தரிசனம் , நம் பூமியின் வாழ்க்கையில் இந்த அணுயுகம்(துவாபரயுகம்) ஒரு புதிய ஏறுமுகநிலை என்று தெரிவித்துள்ளார். எனினும் மிகவும் சமீபத்தில் கடந்த இரண்டுயுகத்தின் (கலியுகம்) தாக்கம் இன்னும் தற்போதைய சமூகத்தை வாட்டிக் கொண்டிருக்கிறது. லௌகீக அக்கறைகள் சார்ந்த ஆயிரக்கணக்கான வருடங்களின் ஊடே உருவாக்கப்பட்ட எண்ணப்படிவங்கள், மனிதனை மனிதனிடமிருந்தும், நாட்டை நாட்டிடமிருந்தும் பிரிக்கும் பலதரப்பட்ட பழக்கவழக்கங்கள், மரபுகள் மற்றும் மூடநம்பிக்கைகளில், பிரதிபலிக்கின்றன. மனித இனம், இந்த யுககால அளவு பழைய மாயைகள் மற்றும் இணக்கமின்மைகளைத் தூக்கி எறியும் போது, சமூகங்கள் மற்றும் நாடுகளின் வளங்களில் மலரும் ஏற்றத்தாழ்வுகளை, பரமஹம்ஸர் தீர்க்கதரிசனமாக முன்னுரைத்தார் – அதன்பிறகு உலகம் முழுவதிலும் ஒரு இணையற்ற முன்னேற்றம் சார்ந்த காலம் நிலவும்.

இத்தலைப்பின் மீதான பரமஹம்ஸரின் அறிவுரைகளைச் சுருக்கி, குருதேவரின் ஆரம்பகால மற்றும் மிக நெருங்கிய சீடர்களில் ஒருவரும் நமது மரியாதைக்குரிய மூன்றாவது சங்கத்தலைவியுமான ஶ்ரீ தயாமாதா கூறினார்:

” உலக நிலைமைகள் அல்லது நாகரிகங்கள் கணிசமான மாற்றங்களுக்குள்ளாகும் போது, எப்பொழுதுமே அங்கு ஒரு அடிப்படையான நுட்பமான காரணம் உள்ளது – அதாவது தனிநபர்கள் வாழ்க்கையின் மீதும், மிகப்பெரிய அளவில் சர்வதேச விவகாரங்கள் மீதும் செயலாற்றும் கர்ம வினை விதிமுறையின் செயல்பாடு என்ற ஞானத்தை பரமஹம்ஸர் எங்கள் மனதில் பதிய வைத்தார். நமது தனிப்பட்ட வாழ்க்கையின் சவால்களின் போது மேற்கொள்வது போல் சரியான மனப்பான்மையானது, நான் இதிலிருந்து என்ன கற்க வேண்டும்?, எனவே, மொத்தத்தில், நமது பரிணாம வளர்ச்சியின் இந்தக் கட்டத்தில், இறைவன் நாம் கிரகிக்க வேண்டும் என்ற உத்தேசிக்கும் படிப்பினைகளை உலகம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

“மனித இனம், சமநிலைப்பட்ட ஆன்மீக வாழ்க்கைக் கலையைப்பின்பற்றி ஒரு பிரபஞ்சக் குடும்பமாக ஒத்துப்போவதற்குக் கற்க வேண்டும். அசுர தொழில்நுட்ப வளர்ச்சிகள் மிக்க இக்காலகட்டத்தில் நாம் உணரும் துன்பங்கள் மற்றும் நம்மை வருத்தும் கவலைகள் விரைவிலோ அல்லது காலம் தாழ்ந்தோ இந்தப் பாடங்களைக் கற்க நம்மைக் கட்டாயப்படுத்தும்.

பல வருடங்களுக்கு முன்பே பரமஹம்ஸர் இதை முன்னறிந்து எங்களிடம் பலதடவைகள் கூறினார்:” எளிமையான வாழ்க்கைக்கு இவ்வுலகம் திரும்ப வேண்டிய காலம் வரவிருக்கிறது. இறைவனுக்கு நேரம் ஒதுக்க நாம் நமது வாழ்க்கைகளை எளிமைப்படுத்த வேண்டும். நான் சகோதரத்துவ உணர்வுநிலையுடன் அதிகம் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும், ஏனெனில் நாகரீகம் உயர் யுகத்திற்கு பரிணாம வளர்ச்சியடையும் போது, உலகம் மிகவும் சிறியதாக மாறி விடுவதை நாம் காண்போம். பாரபட்சம், சகிப்புத் தன்மை இன்மை முதலியவை ஒழிய வேண்டும்

“நாம் உண்மையான அமைதி மற்றும் ஆன்மீகப்புரிதலுக்கு சாதகமான அந்த இலக்குகள் மற்றும் பண்புகளுக்கு ஊட்டம் அளிக்க நேரம் ஒதுக்கினால் தனிநபர் குடும்பங்களுக்கும், பிரபஞ்ச குடும்ப நாடுகளிடையே நல்ல உறவுகளுக்கும், நம்பிக்கை உள்ளது.”

– ஶ்ரீதயா மாதா.

 

” இயேசு கூறினார்: ‘தனக்குத் தானே விரோதமாய் பிரிந்திருக்கிற எந்த வீடும் நிலைநிற்க மாட்டாது’. ஒரு காலத்தில் பரந்தகன்ற உலகமாக இருந்த ஒன்று, இப்பொழுது ஒரு குடும்பம் போன்று ஆகி, ஒவ்வொரு உறுப்பினரும் பரஸ்பரமாக இணைக்கப்பட்டு, மற்றவர்கள் மீது சார்ந்திருக்கும் வகையில், நாடுகளை விஞ்ஞானம் மிக நெருக்கமாகக் கொணர்ந்துள்ளது. நம் காலங்களின் ஒற்றுமையின்மை போக்குகளின் மத்தியில் ஒரு சிறு குடும்பம் கூட ஒன்றாக சேர்ந்து இருப்பது எவ்வளவு கடினம் என்பதை கருத்தில்கொண்டு பொதுவாக உலகில் ஒற்றுமைக்கு நம்பிக்கை உள்ளதா?

இதைப் பகிர

Facebook
X
WhatsApp