YSS சன்னியாசிகள் வழிநடத்தும் பக்திமயமான கீதம் பாடுதல் (தமிழில்)

விவரங்கள்

உண்மையான பக்தியுடன் இந்த ஆன்மீகமயமாக்கப்பட்ட பாடல்களான, பிரபஞ்ச கீதங்களை ஒருவர் பாடுவாரேயானால், அவர் இறைத் தொடர்பையும் பேரானந்த நிலையையும் அடைவார்; இதன் மூலம் உடல், மனம் மற்றும் ஆன்ம நலத்தையும் பெறுவார்.

— ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர்

இறைத் தொடர்பை அனுபவிக்கும் ஒரு வழி முறையாக, பக்திமயமான கீதம் இசைத்தலின் ஆனந்தத்தை, YSS சன்னியாசிகள் கீர்த்தனைக் குழுவுடன் இணைந்து உணர உங்களை வரவேற்கிறோம். கீழே உள்ள இசைப் பட்டியல் பரமஹம்ஸரின் பிரபஞ்ச கீதங்கள் நூலில் உள்ள நான்கு கீர்த்தனைகளை, ஆங்கிலம் மற்றும் தமிழில் கொண்டுள்ளது.

பரமஹம்ஸ யோகானந்தர் கூறினார்: “…இறைவன் மீதான ஆழ்ந்த உண்மையான பக்தி காரணமாக பிறக்கும் பாடலானது, எல்லையற்ற பேரானந்த வடிவமாக அவனிடமிருந்து உணர்வுப்பூர்வமாக மறுமொழி பெறும் வரையில் உரக்கவோ அல்லது மனத்தளவிலோ மீண்டும் மீண்டும் பாடப்படும்பொழுது, அது ஓர் ஆன்மீகமயமாக்கப்பட்ட பாடல் ஆகிறது.
இத்தகைய பாடல்கள், உண்மையான தீக்குச்சிகள் போல, பக்தியாகிய அடித்தளக் கல்லில் உரசப்படும்போதெல்லாம், இறை-விழிப்புணர்வு எனும் நெருப்பை உற்பத்தி செய்கின்றன.”

இசைப் பட்டியல்

4 Videos

கீதம் இசைத்தலின் நிலைகள்

பெருகி வரும் பக்தியினாலும், உள்முகப்படுதலாலும் வகைப்படுத்தப்பட்ட கீதம் இசைத்தலை, பரமஹம்ஸாஜி பின்வரும் ஐந்து நிலைகளாகப் பிரிக்கிறார்:

  • உரத்த குரலில் பாடுதல்
  • மென் குரலில் பாடுதல்
  • மனத்தளவில் பாடுதல்
  • அடிமனதில் ஒலிக்கும் இசை: மிகுந்த பக்தியுடன் பாடப்படும்போது, ​​அந்த பாடல்கள் அன்றாட வாழ்க்கைப் போராட்டங்களின் மும்முரத்திலும் பக்தரின் ஆழ்மன பின்புலத்தில் தானாகவே மீண்டும் மீண்டும் ஒலித்து ஒரு விவரிக்க முடியாத பேரின்பத்தை அளிப்பதை அவர் உணர்கிறார்.
  • உயர் உணர்வு நிலையில் பாடுதல்:
    படிப்படியாக, மேலும் ஆழ்ந்த கவனத்துடன், அடிமன உணர்வில் மீண்டும் மீண்டும் ஒலிக்கப்படும் இசை, உயர் உணர்வுநிலை சார்ந்த மெய்ஞான அனுபவமாக மாறி, உண்மையான இறை உணர்தலை அளிக்கிறது.

இறைவனின் மறுமொழியைப் பெறுதல்

யோகானந்தாஜி அறிவுறுத்துகிறார்: “இந்தக் கீதங்களைப் பாடுபவர்கள், சிறந்த பலன்களை விரும்பினால், அவற்றை தனியாகவோ அல்லது இறைவனின் உண்மையான பக்தர்களுடனோ, பெருகிவரும் பக்தியுடனும் ஆர்வத்துடனும் பாட வேண்டும். பாடல் குறிப்புகளைக் கற்றுக்கொண்ட பிறகு, பாடும் பேரின்பத்தில் ஒருவர் மூழ்கும் வரை, ஆழ்ந்த பக்தியுடன் மீண்டும் மீண்டும் பாடுவதிலும், பாடலில் உள்ள சொற்களின் பொருளை முழுமையாகப் புரிந்துகொள்ளப் பெருமுயற்சி செய்வதிலும், ஒருமுனைப்பட்ட கவனம் செலுத்த வேண்டும்.”

இந்த ஆனந்தம் உணரப்படும்பொழுது, இறைவன் பாடுபவருக்கு பதிலளித்துள்ளார் என்பதற்கும், அவரது பக்தி சரியான ஒத்திசைவில் உள்ளது என்பதற்கும், அவரது உற்சாகமான இசை உண்மையானதாகவும் ஆழ்ந்ததாகவும் ஒலிபரப்பப்பட்டுள்ளது என்பதற்கும் அதுவே சான்றாகும்.

para-ornament

பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் பரமஹம்ஸ யோகானந்தரால் நிறுவப்பட்ட அமைப்பான யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா வின் ஆன்மீக மற்றும் மனிதநலப் பணிகளுக்கு உதவ விரும்பினால், கீழே உள்ள பட்டனைக் கிளிக் செய்து நன்கொடை அளிக்கலாம்:

புதிய வருகையாளர்

பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் அவரது போதனைகளைப் பற்றி மேலும் அறிய பின்வரும் இணைப்புகளை நீங்கள் ஆய்வு செய்யலாம்.

இதைப் பகிர