சன்னியாச வாழ்க்கையின் நான்கு நிலைகள்

இங்கே நான் உமது அடிகளில் சமர்ப்பிக்கிறேன்,
எனது உயிர், எனது உறுப்புகள், எனது எண்ணங்கள் மற்றும் எனது வாக்கு
ஏனெனில் அவை உம்முடையவை; ஏனெனில் அவை உம்முடையவை.

— பரமஹம்ஸ யோகானந்தர்

ஒய் எஸ் எஸ் ஆசிரமங்களில் சன்னியாச வாழ்க்கையில் நான்கு நிலைகள் உள்ளன, இது துறவற வாழ்க்கை மற்றும் சன்னியாச சபதங்களுக்கான ஒருவரின் உறுதிப்பாடு படிப்படியாக ஆழமடைவதைக் குறிக்கிறது. இந்த நிலைகளுக்கு எந்த குறிப்பிட்ட கால அளவு இல்லை. மாறாக, ஒவ்வொரு சன்னியாசியின் ஆன்மீக வளர்ச்சியும், அந்த சன்னியாசி இந்த வாழ்க்கைக்கு தன்னை முழுமையாக அர்ப்பணிக்கத் தயாராக இருப்பதையும் எப்போதும் ஒரு தனிப்பட்ட அடிப்படையில் கருதப்படுகிறது.

ஜூனியர் பிரவேஷார்த்தி:
முதல் நிலை, ஜூனியர் பிரவேஷார்த்தி என பெயரிடப்பட்டது, வழக்கமாக மூன்று ஆண்டுகள் நீடிக்கும். ஜூனியர் பிரவேஷார்த்திகள், கூட்டு மற்றும் தனிப்பட்ட தியானம், பிரார்த்தனை கோருபவர் களுக்காக பிரார்த்தித்தல், பக்தியுடனான கீதம் பாடுதல், ஆன்மீக கற்றல், சுயபரிசோதனை, பொழுதுபோக்கு மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட எந்தப் பகுதிகளிலும் சேவை செய்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு சன்னியாச வழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள்.

பிரவேஷார்த்திகளுக்கான சன்னியாசத் திட்டம், துறவு மேற்கொள்பவர்களுக்கு சன்னியாச குறிக்கோள்கள் மற்றும் வாழ்க்கை முறை பற்றிய முழுமையான புரிதலை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் முக்கியத்துவம் பிரவேஷார்த்தி தனது ஆன்மீக வாழ்க்கையை ஆழப்படுத்துவதற்கும், இறைவன் மற்றும் குருதேவருடன் இசைவித்திருப்பதற்கும் உதவக்கூடிய மனப்பாங்குகள் மற்றும் பழக்கங்களை வளர்த்துக் கொள்ள உதவுவதாகும். சன்னியாச வாழ்வின் இந்த முதல் நிலை, சன்னியாசத்தின் பாதையைத் தழுவுவதற்கான அவரது விருப்பத்தின் ஆழத்தை அளவிட உதவுகிறது, அதே நேரத்தில் அந்த பிரவேஷார்த்தியின் ஆன்மீக நலனுக்கு பொறுப்பானவர்கள் அவரை சன்னியாச வாழ்க்கையைப் பற்றிய ஆழமான புரிதலுக்கு வழிகாட்ட அனுமதிக்கிறது.

Postulants in a Spiritual Study Session

மூத்த பிரவேஷார்த்தி

ஜூனியர் பிரவேஷார்த்தி நிலையின் முடிவில், பிரவேஷார்த்தி மற்றும் அவரது ஆலோசகர்கள் இருவரும் அவர் ஆசிரம வாழ்க்கைக்கு மிகவும் பொருத்தமானவர் என்று உறுதியாக நம்பினால், பிரவேஷார்த்தி மூத்த பிரவேஷார்த்தி திட்டத்தில் சேர அழைக்கப்படுவார். மூத்த பிரவேஷார்த்தி கால கட்டத்தில், அவர் ஜூனியர் பிரவேஷார்த்தி நிலையில் கற்றுக்கொண்ட கோட்பாடுகளைப் பயன்படுத்துவதன் மூலம் சன்னியாச சீடத்துவத்தைப் பற்றிய அவரது மேம்பட்டு வரும் புரிதலை வெளிப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறார். நிறுவனத்திற்கான அவரது சேவையில் அதிக பொறுப்பை ஏற்கும் வாய்ப்பும் அவருக்கு வழங்கப்படுகிறது.

பிரம்மச்சரியம்

Brahmacharya Stage of YSS Monastic Lifeபல ஆண்டுகளுக்குப் பிறகு, மூத்த பிரவேஷார்த்தி, ஒரு ஒய் எஸ் எஸ் சன்னியாசியாக இறைவனை நாடுவதற்கும் சேவை செய்வதற்கும் தனது வாழ்க்கையை முழுவதுமாக அர்ப்பணிக்கும் விருப்பத்தையும் திறனையும் வெளிப்படுத்தியிருந்தால், அவர் பிரம்மச்சர்ய சபதம் எடுக்க அழைக்கப்படுகிறார். (பிரம்மச்சர்யம் என்பது இறை ஐக்கியத்தை அடைவதற்கான ஒருவரின் எண்ணங்கள் மற்றும் செயல்களின் ஒழுக்கம் மற்றும் சுயக் கட்டுப்பாட்டைக் குறிப்பிடும் ஒரு சமஸ்கிருத வார்த்தையாகும்.) இந்த சபதம், எளிமை, பிரம்மச்சரியம், கீழ்ப்படிதல் மற்றும் வாழ்க்கையின் இறுதிவரை விசுவாசம் ஆகிய சபதங்களின்படி வாழும் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா ஆசிரமங்களில் சன்னியாசியாக இருக்க வேண்டும் என்ற சீடரின் ஆழமான எண்ணத்தை குறிக்கிறது.

இந்த சபதம் எடுத்த பிறகு, அந்த பிரவேஷார்த்தி பிரம்மச்சாரி என்று குறிப்பிடப்படுகிறார். சட்டப்பூர்வ பெயரின் பயன்பாடு கைவிடப்பட்டு அவருக்கு ஒரு சமஸ்கிருத பெயர் வழங்கப்படுகிறது, இது ஒரு குறிப்பிட்ட ஆன்மீக இலட்சியத்தை அல்லது அவர் எடுத்துக்காட்ட அல்லது அடைய விரும்பும் பண்பைக் குறிக்கிறது. ஒரு பிரம்மச்சாரி, ஆசிரமத்தில் அதிக பொறுப்பை ஏற்கும்படி கேட்கப்படலாம் என்று புரிந்துகொள்கிறார் – ஒருவேளை பக்தி நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான பயிற்சி, சிறப்புப் பணிகளை மேற்கொள்வது அல்லது அவரை ஆன்மீக ரீதியாக வழிநடத்தும் பொறுப்பில் உள்ளவர்களின் வழிகாட்டுதலின்படி பிற திறன்களில் பணியாற்றுவது போன்றவைகள்.

சன்னியாசம்

சன்னியாசத்தின் சன்னியாசத்தின் இறுதி சபதம், இறைவன், குருதேவர், பரமகுருமார்கள் மற்றும் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா மீதான சன்னியாசியின், வாழ்நாள் முழுதூடுமான அர்ப்பணிப்பைக் குறிக்கிறது; மேலும் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியாவின் ஒரு சன்னியாசியாக விசுவாசத்துடன் கடைப்பிடிப்பதாக அவர் உறுதியளித்த, ஒய் எஸ் எஸ் சன்னியாச சபதம் மற்றும் குறிக்கோள்களுக்கான அர்ப்பணிப்பைக் குறிக்கிறது. இது இறைவனுக்காக மட்டுமே வாழ்வதற்காக அனைத்து குறைந்த ஆசைகளையும் ஒதுக்கி வைக்கும் உறுதி மற்றும், நிபந்தனையற்ற அர்ப்பணிப்பு மற்றும் விசுவாசத்துடன் யோகதா சத்சங்க பாதை மூலமாக அவனுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற சன்னியாசியின் உள்ளார்ந்த உறுதியையும் குறிக்கிறது. பல ஆண்டு சன்னியாச வாழ்க்கைக்குப் பிறகும், பிரம்மச்சாரிகள் இந்த இறுதி யான அர்ப்பணிப்பை செய்யத் தயாராக இருக்கிறார்கள் என்பதை தங்களுக்கும் தங்கள் மூத்த சன்னியாசிகளுக்கும் நிரூபித்த பிறகும் தான் சன்னியாசி சபதம் எடுக்கப்படுகிறது. இந்த சபதம் இந்தியாவில் உள்ள பண்டைய சுவாமி பரம்பரையில் சன்னியாசிகளால் எடுக்கப்பட்ட சபதத்தை ஒத்திருக்கிறது.

தனது வாழ்க்கை மற்றும் இருப்பின் முழுமையான அர்ப்பணிப்புடன், அந்த சன்னியாசி, குணாம்சம், சேவை, எல்லாவற்றிற்கும் மேலாக இறை அன்பு இவற்றின் பரிபூரணத்திற்காக இன்னும் தளாரத ஊக்கத்துடனும் பெருமுயற்சி செய்கிறார். பரமஹம்ச யோகானந்தரின் போதனைகள் மற்றும் சொஸைடியின் உயர்ந்த குறிக்கோள்களை எடுத்துக்காட்டும் புனிதப் பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்கிறார்; மற்றும், அந்த உதாரணத்தின் மூலம், மற்றவர்களின் இறைத் தேடலில் அவர்களுக்கு எழுச்சியூட்டவும் ஊக்குவிக்கவும் பொறுப்பேற்கிறார்.

மேலிருந்து கடிகார திசையில் சுவாமிகள் ஷ்ரத்தானந்தர், சுத்தானந்தர், லலிதானந்தர், ஸ்மரணானந்தர், மாதவானந்தர் மற்றும் ஈஸ்வரானந்தர் ஆகியோர் புதிய நிர்வாகக் கட்டிடமான “சேவாலயா”, ராஞ்சி, மார்ச் 2015 அர்ப்பணிப்பில்
இடமிருந்து: சுவாமிகள் சந்தோஷானந்தர் (SRF), மாதவானந்தர் (YSS), ஷ்ரத்தானந்தர் (YSS) மற்றும் பூமானந்தர் (SRF)
சுவாமிகள் ஷ்ரத்தானந்தர் (வலமிருந்து இரண்டாவது) மற்றும் மாதவானந்தர் (இடமிருந்து இரண்டாவது) சுவாமிகள் சந்தோஷானந்தர் (இடது) மற்றும் பூமானந்தர் (வலது) ஆகியோருடன், அமெரிக்காவில் உள்ள SRF ஆசிரமங்களிலிருந்து வருகை தந்தவர்கள்

பரமஹம்ஸ யோகானந்தரின் ஆசிரமங்களில் சுயமுன்னேற்றம், தியானம் மற்றும் மனித குல சேவை ஆகியவற்றிற்காக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்வதற்கான வாய்ப்பைப் பற்றி மேலும் அறிய, எங்களைத் தொடர்பு கொள்ள உங்களை அழைக்கிறோம்.

இதைப் பகிர

Facebook
X
WhatsApp