This event has now concluded.
If you would like to join us for an upcoming event, please visit the events page.

சன்னியாசிகள் சுற்றுப் பயணம், முசாஃபர்பூர்

ஒரு நாள் நிகழ்ச்சி

ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 9, 2023

கூடுதல் தகவல்

நிகழ்வு இடம்:

கவுரவ் எம்பேரியல், பார்ட்டி டோலா,
ஆண்டி கோலா சாலை (கரிபஸ்தான் மந்திர் அருகில்),
முசாஃபர்பூர், பீகார்

தொடர்பு விபரங்கள்:

தொலைபேசி:

9334901700, 9304416041
8987215558, 9470818004

மின்னஞ்சல்:

முகவரி:

யோகதா சத்சங்க தியான கேந்திரா — முசாஃபர்பூர்
ஸ்ரீ ராஜீவ் அகர்வால், பிரபு குஞ்ச்,
பரமஹம்ஸ யோகானந்த பாத், ராதா நகர்,
முஷாரி ஃபார்ம், முசாஃபர்பூர் – 842002, பீகார்

நிகழ்வு பற்றி

இந்த பிரபஞ்சத்தின் பாதுகாவலர் உங்கள் இதயக் கதவுகளைத் தட்டுகிறார், மௌனத்தின் வாயில்கள் வழியாக நுழைந்து உங்களுக்குள் மகிழ்ச்சியின் தோட்டத்தை உருவாக்க முயற்சிக்கிறார்.

— ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர்

ஒவ்வோர் ஆண்டும் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா சன்னியாசிகள், பரமஹம்ஸ யோகானந்தரின் ஆன்ம-அனுபூதி போதனைகளுக்கான அதிகரித்து வரும் தேவையை நிறைவேற்ற நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு வருகை புரிகின்றனர். இந்த சன்னியாசிகள் வருகை நிகழ்வு, பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளை அறிய விரும்பும் புதியவர்களுக்கும், YSS பாடத்திட்ட மாணவர்களுக்குத் தியான உத்திகள் குறித்த ஆழமான வழிகாட்டுதலைப் பெறுவதற்கும் ஒரு பேறுபெற்ற வாய்ப்பை வழங்குகிறது.

ஒவ்வொரு ஆன்மீக நிகழ்வும் ஒருவரின் ஆன்மீகப் பயிற்சிக்குப் புதிய உத்வேகத்தை அளிப்பதைப் போலவே, இந்நிகழ்ச்சிகளில் நீங்கள் பங்கேற்பது உங்கள் ஆன்மீக ஆர்வத்தை தூண்டும்; அத்துடன், தீவிர ஆன்மீகத் தேடல் கொண்ட மற்றவர்களுடன் இணைந்து தியானிப்பதன் மூலம் அவர்களின் தோழமையில் கிடைக்கும் மகிழ்ச்சியையும் ஆசிகளையும் அனுபவிக்க இது உதவும்.

இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, அன்றாட வாழ்க்கையின் இடைவிடாத செயல்பாடுகளிலிருந்து உங்கள் கவனத்தை விலக்கி, அதை அக அமைதி’யின் மீது ஒருமுகப்படுத்தி, அதன் மூலம் இறைவனின் அமைதி மற்றும் பேரின்பம் எனும் அமுதத்தைப் பருக உங்களை அழைக்கிறோம். இதில் பங்கேற்கும் போது, குருதேவரின் போதனைகளை உங்கள் அன்றாட வாழ்வில் கடைப்பிடிப்பது குறித்த YSS சன்னியாசிகளின் வழிகாட்டுதலையும் நீங்கள் பெறலாம்.

நிகழ்ச்சி அட்டவணை இடத்திற்கு இடம் மாறுபடலாம் என்றாலும், ஒரு மாதிரிச் சுருக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

அட்டவணை

காலை, 8:00 மணி முதல் 9:15 மணி வரை

சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் மற்றும் தியானம்

காலை, 10:00 மணி முதல், 11:00 மணி வரை

ஹாங்-ஸா உத்தி மறுஆய்வு
(YSS பாட மாணவர்கள் மட்டும்)

காலை, 11:00 மணி முதல் மதியம், 12:30 மணி வரை

சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் மறுஆய்வு
(YSS பாட மாணவர்கள் மட்டும்)

மதியம் 12:30 மணி முதல் 02:30 மணி வரை

சன்னியாசிகளுடனான தனிப்பட்ட நேர்காணல்கள்
(வேண்டுகோளின் பேரில் சந்திக்கலாம்)

மதியம் 02:30 மணி முதல் 03:30 மணி வரை

ஓம் உத்தி மறுஆய்வு
(YSS பாட மாணவர்கள் மட்டும்)

மாலை 04:30 மணி முதல் 06:30 மணி வரை

சக்தியூட்டும் உடற்பயிற்சிகள், தியானம்,
மற்றும் நிறைவு சத்சங்கம்

புதிய வருகையாளர்

பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் அவரது போதனைகளைப் பற்றி மேலும் அறிய பின்வரும் இணைப்புகளை நீங்கள் ஆய்வு செய்யலாம்.

இதைப் பகிர