அவதார தின நீண்ட தியானம்

ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வரை போற்றும் விதமாக

சனிக்கிழமை, மே 4, 2024

காலை 6:40 மணி

– காலை 10:00 மணி

(IST)

நிகழ்வு பற்றி

இறைவனை அறிய, எதையும் எதிர்பார்க்காதீர்கள். அகத்துள் உறையும் அவனது பேரின்ப இருப்பில் நம்பிக்கையுடன் உங்களை ஆழ்த்திக் கொள்ளுங்கள்.

— ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் கிரி

பரமஹம்ஸ யோகானந்தர் தனது குரு ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் கிரி பற்றி, “அன்புடன் இருக்க வேண்டிய விஷயங்களில் மலரை விட மென்மையாகவும், கொள்கைகள் தவறும் சமயங்களில் இடியை விட வலிமையாகவும்” இருந்தார் என்று விவரிக்கிறார்.

ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் கிரி-இன் அவதார தினத்தை (மே 10) போற்றும் விதமாக, YSS சன்னியாசியால் ஆன்லைன் நினைவுதின நீண்ட தியானம் வழி நடத்தப்பட்டது.

இந்த ஆன்மீக ரீதியில் வளப்படுத்தும் நிகழ்ச்சியில் கீதம் இசைத்தல், உத்வேகம் தரும் வாசிப்பு, தியானம் ஆகியவையிருந்தன.

YSS ஆசிரமங்கள் கேந்திரங்கள் மற்றும் மண்டலிகள் இந்த நிகழ்வை முன்னிட்டு நேரில் நிகழ்ச்சிகள் நடத்தினார்கள்.

ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர கிரி அவர்களின் அவதார தினமாகிய இந்த சிறப்பு நாளில், பக்தர்கள் குரு காணிக்கை செலுத்துவதன் மூலம் தங்களுக்கு கிடைக்கபெற்ற பல அருளாசிகளுக்கு நன்றி தெரிவிப்பது பாரம்பரியமாக இருந்து வருகிறது. YSS/SRF குருமார்களின் ஆன்ம-அனுபூதிக்கான போதனைகளை பரப்புவதற்கு உங்களது மதிப்புமிக்க நன்கொடை பயன்படுத்தப்படும்.

நீங்கள் நன்கொடை அளிக்க விரும்பினால், கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

புதிய வருகையாளர்

நீங்கள் YSS மற்றும் பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளுக்கு புதியவர் என்றால், பின்வரும் இணைப்புகளை நீங்கள் படிக்க விரும்பலாம்:

ஒரு யோகியின் சுயசரிதம்

உலகளவில் ஆன்மீக தலைசிறந்த படைப்பாகக் போற்றப்படும் இந்நூலை பரமஹம்ஸர் அடிக்கடி, “நான் மறைந்துவிட்ட பிறகு, இந்தப் புத்தகம் எனது தூதுவனாக இருக்கும்.” என்று குறிப்பிட்டு வந்தார்.

YSS பாடங்கள்

நீங்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத வகையில் உங்கள் வாழ்க்கையை மாற்றும் மற்றும் ஒரு சமநிலையுடனும் வெற்றிகரமாகவும் வாழ உதவும் ஒரு வீட்டுக் கல்வித் தொடர்.

இதைப் பகிர