Yogoda Satsanga Dhyana Kendra – Nimpura
Behind Ram Mandir, Nimpura Bazar
Pashchim Midnapore - 721304
West Bengal
India
கூட்டுத் தியானம் என்பது புதிய ஆன்மீக ஆர்வலர்களையும் மூத்த சாதகர்களையும் பாதுகாக்கும் ஒரு கோட்டை. சேர்ந்து தியானம் செய்வது கூட்டுக் காந்தவிசையின் கண்ணுக்குத் தெரியாத அதிர்வுப் பரிமாற்ற விதிமுறையின் மூலம் குழுவின் ஒவ்வொரு உறுப்பினரின் ஆன்ம-அனுபூதியின் அளவையும் அதிகரிக்கிறது.
— ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர்
யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா வின் (YSS) Nimpura Meditation Centre உங்களை வரவேற்கிறோம். பன்முக வெற்றி, நல்வாழ்வு, மற்றும் நேரடி தனிப்பட்ட இறையானுபவம் பெறுவதற்கு, பண்டைய விஞ்ஞானபூர்வ கிரியா யோக போதனைகளையும் தியான உத்திகளையும் கிடைக்கச் செய்வதற்காக, பரமஹம்ஸ யோகானந்தர் 1917-ல் YSS-ஐ நிறுவினார்.
மெய்ப்பொருள் நாடும் அனைவரும் கூட்டுத் தியானங்களின் சக்தியை உணரவும், ஆன்மீகத் தோழமையைப் பகிர்ந்துகொள்ளவும் உதவும் வகையில், இந்தியா முழுவதும் YSS 200-க்கும் மேற்பட்ட மையங்களைக் கொண்டுள்ளது.
ஆன்மீகச் சிறந்த விற்பனை நூலான ஒரு யோகியின் சுயசரிதம் உட்பட, YSS வெளியீடுகளாகிய பரமஹம்ஸ யோகானந்தரின் ஞான இரத்தினங்கள், நம் மையங்களிலும் ஆன்லைன் புக் ஸ்டோர் இலும் கிடைக்கின்றன.
YSS-க்கு புதியவரா?
வீட்டிலிருந்தே பயிலக்கூடிய பாடத்திட்டமான YSS பாடங்கள், நீங்கள் கற்பனை செய்து கூடப் பார்த்திராத வகையில் உங்கள் வாழ்க்கையை எவ்வாறு மாற்றியமைக்கின்றன என்பதையும், சமச்சீரான மற்றும் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ அவை எவ்வாறு உதவுகின்றன என்பதையும் பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்.
நாங்கள் வழக்கமான தியானங்கள் மற்றும் சத்சங்கங்கள் வழங்குகிறோம். இவற்றில் பொதுமக்கள் கலந்துகொள்ளலாம். இந்த அமர்வுகள் மௌன தியானக் காலங்கள், பக்தி பூர்வபாடல்கள் மற்றும் அகத்தூண்டும் வாசிப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளன.
YSS நினைவு தினங்கள், நீண்ட நேர தியானங்கள் மற்றும் பிற சிறப்பு நிகழ்வுகள் ஆண்டு முழுவதும் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
சில நினைவுகூரும் நிகழ்ச்சிகள் பின்வருமாறு:
நிகழ்ச்சி நிரலைத் தெரிந்துகொள்ள, Yogoda Satsanga Dhyana Kendra – Nimpura-ஐத் தொடர்பு கொள்ளுங்கள்.
இதைப் பகிர