YSS

ஸ்ரீ ஸ்ரீ மிருணாளினி மாதாவின் புத்தாண்டுச் செய்திமடல்

"நம்முடைய ஒவ்வோர் எண்ணத்திற்கும் இச்சாசக்திக்கும் பின்னால் இறைவனின் எல்லையற்ற உணர்வு இருக்கிறது. அவனை நாடுங்கள், நீங்கள் முழுமையான வெற்றியை அடைவீர்கள்."

— Sri Sri Paramahansa Yogananda

விடுமுறைக் காலத்தின் அரவணைப்பும் ஆனந்தமும் ஒரு புதிய ஆண்டிற்குச் செல்லும் பாதையில் ஒளிவீசும் போது, குருதேவர் பரமஹம்ஸ யோகானந்தரின் ஆசிரமங்களில் உள்ள நாங்கள் அனைவரும் உலகெங்கிலும் உள்ள நம் அன்பான ஆன்மீகக் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரையும் அந்த ஒளிவீச்சு தழுவுவதை மனத்தில் காட்சிப்படுத்துகிறோம். கிறிஸ்துமஸ் நேரத்தில் உங்களுடைய அன்பும் பரிவும் கொண்ட பல வெளிப்பாடுகளுக்காக, மற்றும் ஆண்டு முழுவதும் தொடரும் உங்களுடைய தெய்வீக நட்பு மற்றும் ஆதரவுக்காக, எங்களுடைய இதயப்பூர்வமான நன்றியை உங்களுக்குத் தெரிவிக்கிறோம். புதிய தொடக்கங்களுக்கான இந்த நேரத்தில், இறைவன் உங்களது ஆன்மீக இலக்குகளை நீங்கள் அடைவதற்காகவும் ஒவ்வொரு உன்னதமான பேரார்வம் மற்றும் முயற்சியின் பின்னால் இருக்கும் நிறைவேற்றும் மகாசக்தியான அவனுடன் உணர்வுப்பூர்வமாக ஒத்திசைந்து வாழ்வதற்காகவும், ஒரு புத்துயிரூட்டப்பட்ட தீர்மானத்தை உங்கள் இதயங்களிலும் மனங்களிலும் அவன் உட்புகுத்த வேண்டும் என்பதே எங்கள் சிறப்பு பிரார்த்தனை ஆகும்.

வரவிருக்கும் ஆண்டு நமது ஆன்மாவின் தெய்வீக ஆற்றலை வெளிக்கொணர புதிய வாய்ப்புகளுடன் நம்மை அழைக்கிறது, மேலும் நமக்கு உதவ இறைவனை விட ஆனந்தமாக ஆர்வம் காட்டுபவர் வேறு யாரும் இல்லை. வருத்தங்கள் மற்றும் கவலைகள், கடந்த கால பிழைகள், நம்மை நாமே தோற்கடித்துக்கொள்ளும் பழக்கங்கள் ஆகிய சுமைகளை விட்டுவிட்டு, புதிய ஆண்டிற்கு நீங்கள் பாரமின்றிப் பயணம் செய்தால், உயர்த்தும் வாய்ப்புகளெனும் அவனுடைய கொடைக்கான உங்களுடைய ஏற்புத்தன்மை அதிகரிக்கும். அந்தச் சுமைகளுக்குப் பதிலாக, உங்கள் உள்ளார்ந்த வெல்ல முடியாத தன்மையை வெளிப்படுத்த உங்களை ஊக்குவிக்கும் ஆற்றல்மிக்க, மேம்பட்ட எண்ணங்களை மட்டுமே எடுத்துச் செல்ல நீங்கள் தீர்மானிக்கும் போது நீங்கள் எவ்வளவு சுதந்திரமாக உணர்வீர்கள். குருதேவர் நம்மை வலியுறுத்தினார்: “பொருள் மற்றும் ஆன்மீக ரீதியாக முன்னேறும் மனங்களிலிருந்து உயிர்ச்சக்தியையும் மன ஊட்டத்தையும் பருகுங்கள். உங்களிடமும் பிறரிடமும் உள்ள படைப்புச் சிந்தனைகளை அளவில்லாமல் கிரகித்துக் கொள்ளுங்கள். தன்னம்பிக்கைப் பாதையில் நீண்ட மன நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். நியாயம், சுயபரிசோதனை மற்றும் செயல்-முனைப்பு எனும் கருவிகளைப் பயன்படுத்துங்கள்.”அந்த ஆலோசனையைப் பின்பற்றுவது, என்றும் இளமையுடனிருக்கும் உங்கள் ஆன்மாவிற்கு இயல்பாக உள்ள உற்சாகம் மற்றும் நம்பிக்கையுடன், வருங்காலத்தை எதிர்கொள்ள உதவியவாறு, உங்கள் உளவியல் மற்றும் ஆன்மீக வீரியத்தை முழுமையாக மீள்நிரப்பு செய்யும். இச்சா சக்தி எனும் ஆற்றலை வளர்த்துக் கொள்வதும் விரும்பிய முன்னேற்றங்களை நிறைவேற்றுவதற்கு இன்றியமையாததாகும், ஏனென்றால் ஒரு வலுவான இச்சாசக்தி உடலையும் மனத்தையும் கட்டுப்படுத்த, மனத்திற்கு உகந்ததை விட சரியானதைச் செய்ய, மற்றும் அதைரியப்படுத்த முடியாத பொறுமையுடன் இறைவனை நாடச் செய்ய உதவுகிறது. குறிப்பாக அவநம்பிக்கை அல்லது தற்காலிக தோல்வியால் தாக்கப்படும் போது வெற்றி பெற, உங்களுக்கு இறைவன் வழங்கிய திறனை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துங்கள்; ஏனென்றால் அவன் மேல் கொண்ட அன்பு மற்றும் நம்பிக்கையினால் பிறக்கும் விடாமுயற்சி உங்களது வெற்றியை-உருவாக்கும் இச்சாசக்தியை அவனது பிரபஞ்சத்தை-உருவாக்கும் இச்சாசக்தியுடன் இணைக்கிறது.

மனதின் ஆக்கப்பூர்வமான பயன்பாடு, சாதிப்பதற்கான அனைத்துச் சக்தியின் மூலத்துடனும் ஆன ஒத்திசைவை அதிகரிக்கிறது; ஆனால் தியானத்தில் நாம் அமைதியின்மையின் தெளிவற்ற அலைவுகளை அசைவற்று இருக்கச் செய்து, இறைவனின் அன்பு மற்றும் ஒளியின் காத்திருக்கும் அரவணைப்பிற்கு நம் உணர்வுநிலையை ஒப்படைக்கத் தொடங்கும்போது, மிகவும் ஆழ்ந்த மாற்றங்கள் வருகின்றன. நாம் அவரிடம் ஆழ்ந்து பிரார்த்தனை செய்து, நமது மூளையின் உயிரணுக்களில் ஊடுருவக்கூடிய சுதந்திரம் மற்றும் ஆக்கப்பூர்வமான சாத்தியக்கூறுகளின் காரண ஒளியைக் கற்பனைசெய்து பார்க்கும் போது, நமது உணர்வுநிலையைத் தெய்வீகத்துடனும் நமது சொந்த மிக உயர்ந்த நலனுடனும் ஆன இணக்கத்தில் புதிதாக சங்கல்பம் செய்து கொண்ட எண்ணங்கள் மற்றும் நடத்தையின் தீர்மானங்களுக்கு இசையச் செய்தவாறு, அந்த ஒளியால் தேவையற்ற பழக்கங்களின் நிலையான “பள்ளங்களை” அழிக்க முடியும். உங்கள் பக்தியாலும், மாற்றத்திற்கான உள்ளார்ந்த விருப்பத்தாலும் ஈர்க்கப்படும் இறைவனின் அருளாசிகள் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் மகிழ்ச்சியின் புதிய விடியலைக் கொண்டுவரும் வழிகளில் உங்கள் வாழ்க்கையைப் பெருமளவில் மாற்றும் என்ற தளறாத நம்பிக்கையுடன் நீங்கள் வரவிருக்கும் ஆண்டில் நுழைவீர்களாக.

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் நிறைவளிக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்,

ஸ்ரீ ஸ்ரீ மிருணாளினி மாதா

இதைப் பகிர

Share on facebook
Share on twitter
Share on whatsapp