பிப்ரவரி 1 ஆம் தேதி ஸ்வாமி சிதானந்த கிரியுடன் YSS பாடங்கள் தொடக்க நிகழ்வு நேரடி ஒளிபரப்பு

15 ஜனவரி, 2019

பிப்ரவரி 1, வெள்ளிக்கிழமை காலை 8:00 மணிக்கு, யோகதா சத்சங்க / ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் பாடங்களின் புதிய பதிப்பு தொடக்க நிகழ்வின் நேரடி ஒளிபரப்பு , யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா / ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் தலைவரும் ஆன்மீக முதல்வருமான ஸ்வாமி சிதானந்த கிரி அவர்களால் எங்கள் வலைத்தளத்தில் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். முதன் முறையாக அறிமுகப்படுத்தப்படவுள்ள பல அற்புதமான அம்சங்கள் பற்றிய விவரங்களையும், பதிவு செய்வது எப்படி என்பது பற்றிய தகவல்களையும் அவர் பகிர்ந்து கொள்வார்.

நம் வலைத்தளத்திலிருந்து இந்த நேரடி ஒளிபரப்பு விளக்கக்காட்சிக்கு நீங்கள் எங்களுடன் கலந்து கொள்வீர்கள் என்று நம்புகிறோம். நமது பல ஆசிரமங்கள், மையங்கள் மற்றும் மண்டலிகள் தங்கள் வளாகத்தில் தொடக்க நிகழ்வினை குழுவாகக் காண ஏற்பாடு செய்வார்கள், நீங்கள் இவற்றினருகிலுள்ள இடங்களில் இருந்தால், இந்த ஊக்கமளிக்கும் விளக்கக்காட்சியில் சேர உங்களை ஊக்குவிக்கிறோம். நீங்கள் நேரடி ஒளிபரப்பில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் கூட, விரைவில் எங்கள் வலைத்தளத்திலும், SRF யூடியூப் சேனலிலும் கிடைக்கப் பெறும் வீடியோவை, உங்கள் வசதிக்கேற்ப பார்க்க முடியும்.

கூடுதலாக, நீங்கள் ஏற்கனவே செய்திருக்கவில்லை என்றால், இப்பொழுது உங்கள் பக்தர் இணைய தள கணக்கை சரிபார்க்குமாறும் அல்லது சேர்க்கை செயல்முறையை எளிதாக்கும் கணக்கு தற்போது இல்லையென்றால் ஒன்றை உருவாக்குமாறும் உங்களை கேட்டுகொள்கிறோம்.

யோகதா சத்சங்க/ஸெல்ஃப்-ரியலைசேஷன் ஃபெலோஷிப் பாடங்களின் புதிய பதிப்பின் வெளியீடு, நமது அன்புக்குரிய குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் ஆன்மீகப் பணிக்கான ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறிக்கிறது, மேலும் இந்த நிகழ்வை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

இந்த நிகழ்வை எனது காலெண்டரில் சேர்க்கவும்

லைவ் ஸ்ட்ரீம்: YSS பாடங்களின் புதிய பதிப்பு தொடக்க நிகழ்வு
ஸ்வாமி சிதானந்த கிரியால் நிகழ்த்தப்பட்டது
1 பிப்ரவரி, 2019

 

இதைப் பகிர