இந்நிகழ்ச்சி இத்துடன் முடிவடைந்தது.
வரவிருக்கும் நிகழ்வில் எங்களுடன் சேர விரும்பினால், நிகழ்வுகள் பக்கத்தைப் பார்வையிடவும்.

தமிழில் சொற்பொழிவு

22 ஜூலை, 2022

6:30 p.m.

– 8:00 p.m.

(இந்திய நேரப்படி)

நிகழ்வு பற்றி

சன்னியாசிகள் சுற்றுப்பயண நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, சென்னையில் ஜூலை 22, வெள்ளிக்கிழமை அன்று ஒரு பொது சொற்பொழிவு மற்றும் வழிகாட்டப்பட்ட தியானம் ஒரு YSS சன்னியாசியால் தமிழில் நடத்தப்பட்து. இந்த உரையின் கருப்பொருள்: “கிரியா யோகம் மூலம் இனிய வெற்றிகர வாழ்வு.”

சென்னையில் ஒய் எஸ் எஸ் சன்னியாசிகள் சுற்றுப்பயணத்தைப் பற்றி மேலும் அறிய, தயவுசெய்து இங்கே கிளிக் செய்யவும்.

ஒய் எஸ் எஸ் பாடங்களின் தமிழ் பதிப்பு இப்போது கிடைக்கிறது!

யோகதா சத்சங்க ஆன்ம-அனுபூதிக்கான பாடங்கள் இப்போது தமிழில் கிடைக்கின்றன என்பதையும், இந்த தமிழ் அடிப்படைப் பாடத் தொடருக்கான சேர்க்கை இப்போது தொடங்கப்பட்டுள்ளது என்பதையும் அறிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

பரமஹம்ஸ யோகானந்தர், வரவிருக்கும் உலகளாவிய நாகரீகத்திற்கான ஒரு சிறப்பு ஆன்மீக அருட்பேறாக உலகிற்கு கொண்டு வருவதற்கென அவருக்கு விதிக்கப்பட்டிருந்த போதனைகளின் மையமாக யோகதா சத்சங்கப் பாடங்களைக் கருதினார்.

ஜூலை 22 முதல், எங்கள் பக்தர் போர்டல் மூலம் ஆன்லைனில் இந்தப் பாடங்களுக்கு நீங்கள் சேரலாம். உங்களிடம் பக்தர் போர்டல் கணக்கு இல்லையென்றால், இப்போதே கணக்கை உருவாக்கவும். பாடங்கள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, இங்கே கிளிக் செய்யவும்.

உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், திங்கள் முதல் சனிக்கிழமைவரை 9:00 a.m. to 4.30 p.m வரை (IST), YSS உதவி மையத்தை தொலைபேசியில் (0651) 6655 555 தொடர்பு கொள்ளவும். ஏதேனும் கேள்விகள் அல்லது மின்னஞ்சலுக்கு:[email protected].

புதிய வருகையாளர்

நீங்கள் YSS மற்றும் பரமஹம்ஸ யோகானந்தரின் போதனைகளுக்கு புதியவர் என்றால், பின்வரும் இணைப்புகளை நீங்கள் படிக்க விரும்பலாம்:

ஒரு யோகியின் சுயசரிதம்

உலகளவில் ஆன்மீக தலைசிறந்த படைப்பாகக் போற்றப்படும் இந்நூலை பரமஹம்ஸர் அடிக்கடி, “நான் மறைந்துவிட்ட பிறகு, இந்தப் புத்தகம் எனது தூதுவனாக இருக்கும்.” என்று குறிப்பிட்டு வந்தார்.

YSS பாடங்கள்

நீங்கள் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத வகையில் உங்கள் வாழ்க்கையை மாற்றும் மற்றும் ஒரு சமநிலையுடனும் வெற்றிகரமாகவும் வாழ உதவும் ஒரு வீட்டுக் கல்வித் தொடர்.

இதைப் பகிர