தினமும் உங்களுடைய தவறாத ஆன்மீக முன்னேற்றத்தைத் தவிர வேறு எதுவும் அவசியமில்லை. அதற்கு கிரியா யோகத்தை விடாது பழகி வாருங்கள்
— ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் கிரி
நமது அன்பிற்குரிய குருதேவர் பரமஹம்ஸ யோகானந்தரின் மகாசமாதி தினம் மற்றும் YSS/SRF பக்தர்களின் பரம குருவான ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வரின் மகாசமாதி தினம் ஆகிய விசேஷ நாட்களை நினைவுகூரும் வகையில், மார்ச் 8 சனிக்கிழமை அன்று YSS சன்னியாசிகள் ஆறு மணி நேர ஆன்லைன் தியான நிகழ்ச்சியை நடத்தினர்.
இந்த தியான நிகழ்ச்சி சக்தியூட்டும் உடற்பயிற்சிகளுடன் தொடங்கியது, அதைத் தொடர்ந்து பிரார்த்தனை, உத்வேகம் அளிக்கும் வாசிப்பு, கீதம் இசைத்தல் மற்றும் தியானம் ஆகியவை நடைபெற்றன. பரமஹம்ஸ யோகானந்தரின் குணப்படுத்தும் உத்திப் பயிற்சி மற்றும் நிறைவு பிரார்த்தனையுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது.
மார்ச் 8, சனிக்கிழமை அன்று நடைபெற்ற தியான நிகழ்ச்சியின் நிரல் பின்வருமாறு:
- சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் – காலை 7:40 மணி முதல் 8:00 மணி வரை (IST)
- முதல் பகுதி – காலை 8:00 மணி முதல் 11:00 மணி வரை (IST)
- இரண்டாவது பகுதி – காலை 11:30 மணி முதல் மதியம் 2:00 மணி வரை (IST)
இந்த விசேஷ நாளில், பல்வேறு ஆசிரமங்கள், , கேந்திரங்கள் மற்றும் மண்டலிகளும் பக்தர்களுக்கு நேரில் நிகழ்ச்சிகளை நடத்தின.
நீங்கள் இவற்றையும் படிக்க விரும்பலாம்:
இந்த விசேஷ நாளில், நீங்கள் நன்கொடை அளிக்க விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைப் பயன்படுத்தி எங்கள் வலைத்தளத்தின் மூலம் அவ்வாறு செய்யலாம். உங்கள் பங்களிப்பு, பல மனிதநலப் பணிகளை மேற்கொள்ள எங்களுக்கு உதவுவது மட்டுமல்லாமல், மகா குருமார்களுக்கான உங்கள் நித்திய அன்பையும், தளராத பக்தியையும் காட்டுகிறது.