யோகானந்தர், “இறைவனை அறிந்தவர்களின் முழுமையான இயல்பை உங்களால் ஆழம் காண முடியாது, ஏனென்றால் அவர்கள் அளவில்லா ஆழம் உடையவர்கள். என்னுடைய குருதேவர் ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் அப்படிப்பட்டவரே. அவர் அனைத்திலிருந்தும் தனிப்பட்டு இருந்தார். இறைவனுடன் ஒன்றிணைந்திருத்தல் மற்றும் அதனால் வேறு அனைத்திலும் பற்றற்று இருப்பது பற்றிய போதனையே, யோகம்.” என்று கூறினார்.
YSS/SRF பக்தர்களின் பரமகுருவான ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வரின் அவதார தினத்தை (பிறந்த நாள்) கௌரவிக்கும் வகையில் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா சன்னியாசி ஒருவர் மே 10, சனிக்கிழமையன்று ஒரு சிறப்பு தியானம் நடத்தினார். இந்த ஆன்லைன் நிகழ்ச்சியில் கீதமிசைத்தல், தியானம் மற்றும் உத்வேகமளிக்கும் வாசிப்பு ஆகியவை இடம்பெற்றிருந்தன.
இந்த நாளில், YSS ஆசிரமங்கள், கேந்திரங்கள், மற்றும் மண்டலிகளும் நேரில் நினைவு கூரும் நிகழ்ச்சிகள் நடத்தினார்கள்.
நீங்கள் இவற்றையும் படிக்க விரும்பலாம்:
ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர கிரி அவர்களின் அவதார தின இந்த சிறப்பு சந்தர்ப்பம், பக்தர்கள் குரு- காணிக்கை செலுத்துவதன் மூலம் தங்களுக்கு கிடைக்கபெற்ற பல அருளாசிகளுக்கு நன்றி தெரிவிக்க ஒரு வாய்ப்பாகும். YSS/SRF குருமார்களின் ஆன்ம-அனுபூதிக்கான போதனைகளை பரப்புவதற்கு உங்களது மதிப்புமிக்க நன்கொடை பயன்படுத்தப்படும்.
நீங்கள் விரும்பினால், கீழே உள்ள பட்டனைக் கிளிக் செய்வதன் மூலம் இந்த நன்கொடையை ஆன்லைனில் செய்யலாம்.