ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை காலையில் ஆங்கிலத்தில் ஒரு ஒய் எஸ் எஸ் சன்னியாசியால் வழி நடத்தப்படும் மூன்று மணி நேர தியானத்தில் கலந்துகொள்ள உங்களை அழைக்கிறோம். பதிவுசெய்யப்பட்ட வீடியோவுடன் இணைந்து, சக்தியூட்டும் உடற்பயிற்சிகள் செய்வதோடு அமர்வு தொடங்குகிறது, அதைத் தொடர்ந்து ஒரு ஒய் எஸ் எஸ் சன்னியாசி வழிநடத்தும் தியானம்.
தியானம் ஒரு தொடக்க பிரார்த்தனையுடன் தொடங்குகிறது, அதைத் தொடர்ந்து ஒரு உத்வேகம் அளிக்கும் வாசிப்பு, கீதமிசைக்கும் காலங்கள், மற்றும் ஒரு மெளன தியானத்திற்கான காலங்கள். மௌன தியானத்தின் காலங்கள் மாறுபடலாம், ஆனால் பொதுவாக 45 நிமிடங்களாக இருக்கும். பரமஹம்ஸ யோகானந்தரின் குணமளிக்கும் உத்தி மற்றும் ஒரு நிறைவு பிரார்த்தனையுடன் முடிவடையும்.
அட்டவணை
ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை
ஆங்கிலம்
காலை மணி 6:10 முதல் – 9:30 வரை
ஆன்லைன் தியானங்கள் அனைவருக்கும் திறந்திருக்கும். இந்த தியானங்களில் கலந்துகொள்ள, கீழே கொடுக்கப்பட்டுள்ள யூடியூப் இணைப்பைக் கிளிக் செய்யுங்கள்.
தயவுசெய்து கவனிக்கவும்:
- ஜூன் 1, 2025 ஞாயிற்றுக்கிழமைக்கு திட்டமிடப்பட்டுள்ள நீண்ட தியானம் யூடியூப் வழியாக மட்டுமே நேரடியாக ஒளிபரப்பப்படும்.
- இந்த தியானங்களின் பதிவு இப்போது அடுத்த நாள் (திங்கட்கிழமை இரவு 10:00 மணி வரை யூடியூப் இல் கிடைக்கும். (IST) ).
- இந்த ஆன்லைன் தியானங்கள் சன்னியாசிகள் தலைமையிலான சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் நாட்களில் நடத்தப்படாது.

நீங்கள் இவை பற்றி மேலும் அறிய விரும்பலாம்: