
"ஓ குருவே, குழப்பமான பூமியிலிருந்து என்னை அமைதியின் சொர்க்கத்திற்கு உயர்த்தினீர். என் துக்கத்தின் உறக்கம் முடிவுற்றது, நான் ஆனந்தத்தில் விழித்திருக்கிறேன்.”~ பரமஹம்ஸ யோகானந்தர்
அன்பர்களே,
அன்பான வாழ்த்துக்களும் வணக்கங்களும். மகிழ்ச்சிமிக்க இனிய குரு பூர்ணிமா வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புனித நாளில், இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள லட்சக் கணக்கான மக்களுடன் இணைந்து, பல யுகங்களாக மனிதகுலத்தில் ஆன்மீக தீப்பொறியைத் தூண்டி வந்த அந்த தெய்வீக ஆசான்களை போற்றுகிறோம். அத்தகையவர் தான் நமது ஸ்தாபகர் பரமஹம்ஸ யோகானந்தர். ஒரு சத்குரு, இறைவனின் அருளாசிகள் மற்றும் வழிகாட்டுதலின் மிக உயர்ந்த ஊடகமாக இருக்கும் அவர் தமது பாதையில் கடந்து சென்ற அனைவரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தினார். இருப்பினும், அவரது போதனைகளை பயிற்சி செய்து, அவரது இலட்சியங்களை பிரதிபலிக்கும் ஆயிரக்கணக்கான சீடர்களில் அவரது சிறப்பு அருள் இன்று நிலை கொண்டுள்ளது.
இந்த புனித சந்தர்ப்பத்தில் எனது ஆழ்ந்த மனமார்ந்த நல்வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் உங்களுக்கு அமைதி, அன்பு, மற்றும் எப்போதும் விரிவடையும் தெய்வீக பேரானந்த “குரு தினமாக” இருக்கட்டும்.
இறைவன் உங்களை ஆசிர்வதிப்பானாக,
ஸ்வாமி சிதானந்த கிரி