சுவாமி சிதானந்தஜியின் ராஞ்சி ஆசிரம வருகை

11 நவம்பர், 2019

எங்கள் மதிப்பிற்குரிய தலைவரும் ஆன்மீக முதல்வருமான ஸ்ரீ ஸ்ரீ சுவாமி சிதானந்த கிரி, இந்தியாவில் மூன்று முக்கிய நகரங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்குத் தலைமை தாங்குவதற்காக அக்டோபர் மத்தியிலிருந்து நவம்பர் 2019 நடுப்பகுதி வரை இந்தியாவில் இருந்தார்.

நொய்டாவில் தனது முதல் நிகழ்ச்சியை முடித்துவிட்டு, அவர் தங்கியிருந்த அடுத்த 10 நாட்களைக் கழிக்க YSS ராஞ்சி ஆசிரமத்திற்கு வந்தார். பின்னர் அவர் ஹைதராபாத் மற்றும் மும்பைக்கு விஜயம் செய்தார், அங்கு அவர் தனது சுற்றுப்பயணத்தை முடித்தார்.

சுவாமிஜியை ஒய் எஸ் எஸ் சன்னியாசிகளும் மற்றும் பக்தர்களும் ராஞ்சி ஆசிரமத்தில் மரியாதையுடனும், பக்தியுடனும், அன்புடனும் வரவேற்றனர்.

ராஞ்சியில் தங்கியிருந்த போது அவர் பக்தர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்களை சந்தித்தார். இரண்டு ஒய் எஸ் எஸ் சன்னியாசிகளுக்கு சன்னியாச தீட்சையயை நடத்தினார்.

அக்டோபர் 27ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு சுவாமி சிதானந்தாஜி அவர்கள் நமது வாழ்வில் இறைவனின் ஒளியைக் கொண்டுவருவது என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து பிரசாத வினியோகம் நடந்தது.

அவரது பிரசன்னத்தாலும், அனைவரிடமும் அவர் கொண்ட அன்பாலும் பக்தர்கள் ஆன்மீக நல உயர்வை உணர்ந்தனர். ஒரு பக்தர் எழுதினார், “இந்தியாவின் மீதும், இந்தியாவிலிருந்தோ அல்லது பிற நாடுகளிலிருந்தோ வந்திருக்கும் பக்தர்களின் ஒட்டுமொத்த குழுவின் மீதும் அவர் கொண்டிருந்த அன்பு, அவரால் அதை மறைக்க முடியாத அளவுக்கு தெளிவாக இருந்தது. பாதையில் நாங்கள் காத்திருந்தபோது ஒவ்வொரு முறையும் அவர் எங்களைக் கடக்கும்போது அல்லது எங்களைப் பார்த்து புன்னகைத்தபோது அவருடைய கண்கள் மினுமினுத்து, நாங்கள் அவராலும் நமது குருதேவராலும் நேசிக்கப்படுகிறோம் என்று எங்களிடம் கூறின.

ராஞ்சியில் அவர் தங்கியிருந்த போது எடுத்த சில புகைப்படங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.

இதைப் பகிர

Facebook
X
WhatsApp