குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினருக்கான YSS முகாம் — 2026

19 ஏப்ரல், 2026

இளம் நெஞ்சங்களில் இறை அன்பை வளர்த்தல்

ஷூலினி வளாகத்தின் ஒரு அழகிய காட்சி

இமயமலை அடிவாரத்தில் நடத்தவுள்ள குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினருக்கான புதிய அகில இந்திய கோடைக்கால முகாமை அறிவிப்பதில் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா (YSS) மகிழ்ச்சி அடைகிறது.

இடம்: ஷூலினி பல்கலைக்கழகம், சோலன், இமாச்சலப் பிரதேசம்

தேதிகள்: மே 31 முதல் ஜூன் 6, 2026 வரை (ஞாயிறு முதல் சனிக்கிழமை வரை).

12 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்களும் சிறுமிகளும் இதில் பங்கேற்க வரவேற்கப்படுகிறார்கள்.

முக்கியத் தகவல்

  1. மே 30, சனிக்கிழமை மதியத்திற்குள் குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினர் முகாம் நடைபெறும் இடத்திற்கு வந்து சேர வேண்டும் என்பதையும், ஜூன் 6, சனிக்கிழமை அன்று மாலை அவர்கள் அங்கிருந்து புறப்படலாம் என்பதையும் பெற்றோர் தங்கள் காலண்டரில் குறித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
  2. அனைத்து வகுப்புகளும் தியானங்களும் ஆங்கிலத்தில் நடத்தப்படும்.
  3. முகாமில் கலந்துகொள்ள பெற்றோர்களும் பதின்ம வயதினரும் பூர்த்தி செய்ய வேண்டிய விண்ணப்பப் படிவம் தற்போது கிடைக்கிறது. படிவத்தை நிரப்புவதற்கு முன் அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை கவனமாகப் படிக்கவும்.
  4. படிவத்தைப் பூர்த்தி செய்வதில் உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், முகாம் விண்ணப்பத்தின் ஒரு கண்ணோட்டத்தை (ஆங்கிலம் மற்றும் இந்தியில்) வழங்கும் இந்த வீடியோக்களை நீங்கள் காணலாம். முகாம் அல்லது விண்ணப்பிக்கும் செயல்முறை தொடர்பான கூடுதல் உதவிகள் அல்லது கேள்விகளுக்கு, அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பகுதியைப் பார்க்கவும்: அல்லது YSS உதவி மையத்தை (0651) 6655 555 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் / [email protected] என்ற முகவரிக்கு எழுதவும்.
  5. விண்ணப்பத்திற்கு ஒப்புதல் கிடைத்தவுடன் பதிவுக் கட்டணமாக 5,000 ரூபாய் செலுத்த வேண்டும். ஒரு வார கால முகாமின் போது தங்குமிடம், உணவு மற்றும் சிற்றுண்டிகள், கலை/கைவினைப் பொருட்கள், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பிற ஏற்பாடுகளுக்கான செலவுகளை இது உள்ளடக்கியது.
  6. பெற்றோர்களுக்கான முக்கியத் தகவல்கள் கொண்ட ஆவணத்தைப் பெற, இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்:
    • முகாம் பதிவுக் கட்டணம் செலுத்துவதற்கு நிதி உதவி
    • YSS நொய்டா ஆசிரமம் மற்றும் YSS சண்டிகர் கேந்திராவிலிருந்து ஷூலினி பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் குழந்தைகளுக்கு இலவசப் போக்குவரத்து வசதி
    • இந்த இரண்டு இடங்களிலும், ஏற்றிச் செல்லும் மற்றும் இறக்கி விடும் தேதிகள் மற்றும் நேரங்கள்
    • குழந்தைகள் முகாமில் இருக்கும்போது, பெற்றோர்கள் ஏகாந்த வாசம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள்

முகாமைப் பற்றி

இது ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் எப்படி வாழ்வது என்ற போதனைகளை அடிப்படையாகக் கொண்டது; இது உடல், மனம் மற்றும் ஆன்மாவின் சமச்சீரான வளர்ச்சியை மேம்படுத்துகிறது.

இது YSS சன்னியாசிகளின் வழிகாட்டுதலின் கீழும், அனுபவம் வாய்ந்த இல்லறச் சீடர்கள் மற்றும் நன்கு பயிற்சி பெற்ற தன்னார்வலர்களின் ஆதரவுடனும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஷூலினி முகாம் குழுவில் இடம்பெற்றுள்ள சன்னியாசிகள் மற்றும் பக்தர்களுடன் சுவாமி ஈஸ்வரானந்தா.

முகாம் மற்றும் வளாகத்தின் சிறப்பம்சங்கள்

  • இந்த முகாம் இமாச்சலப் பிரதேசத்தின் சோலனில் உள்ள 25 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஷூலினி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும்.
  • இந்த முகாமிற்கு இந்தியாவின் மிகச்சிறந்த, ஆராய்ச்சி சார்ந்த தனியார் பல்கலைக்கழகமான ஷூலினி பல்கலைக்கழகம் முழு ஆதரவை வழங்குகிறது.
  • விடுதி அறைகள், வகுப்பறைகள், உணவு வசதிகள், விளையாட்டுத் திடல்கள் மற்றும் கலையரங்கங்கள் போன்ற அதிநவீன வளாக வசதிகள் YSS முகாமிற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
  • சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கான முகாம்கள் ஒரே வளாகத்திற்குள் ஒரே வாரத்தில் ஆனால் தனித்தனியாக நடத்தப்படும். இது ஒரு சிறுவன் மற்றும் ஒரு சிறுமியைக் கொண்டுள்ள குடும்பங்கள், இருவரையும் ஒரே நேரத்தில் முகாமிற்கு அனுப்ப வழிவகை செய்யும்.
  • முகாமின் போது, குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினர் ஒரே வயதுப் பிரிவினருடன் ஆன்மீக நண்பர்களின் சமூகமாக, அக்கறையுள்ள பெரியவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இணைந்து இருப்பார்கள்.
உள்ளேயும் வெளியேயும் நடக்கும் செயல்பாடுகளை சரிசமமாக்கும் வகையில், முகாமில் பங்கேற்பவர்கள் இயற்கை சூழப்பட்ட வசதியான தங்குமிடங்களில் தங்க வைக்கப்படுவார்கள்.

தினசரி நிகழ்ச்சி

முகாமின் ஒரு நாள் என்பது பொதுவாக, பல்வேறு விதமான செயல்பாடுகளால் நிறைந்து குழந்தைகளுக்கும் பதின்ம வயதினருக்கும் வேடிக்கையான முறையில் இருக்கும் அதேசமயம் அவர்களுக்குள்ளே ஒழுக்கத்தையும் சிந்திக்கும் ஆற்றலையும் வளர்க்கும்:

  • தினசரி கூட்டுத் தியானங்கள்
  • எப்படி வாழ்வது வகுப்புகள் இச்சா சக்தி, நட்பு மற்றும் அச்சமின்மை போன்ற தலைப்புகளில் அமையும்
  • சன்னியாசிகள் வழிநடத்தும் சத்சங்கங்கள் மற்றும் தியான உத்தி மறு ஆய்வு வகுப்புகள்
  • விளையாட்டுகள் மற்றும் போட்டிகள்
  • கீதை சுலோகங்கள் இசைத்தல்
  • கீர்த்தனை
  • திரைப்பட இரவு
  • கலை மற்றும் கைவினைத் திட்டங்கள்
  • இயற்கை சூழலில் மலையேறுதல்
  • ஆன்மீக மேளா
  • கலாச்சார மாலை நேர நிகழ்ச்சி
  • குழு விவாதங்கள் மற்றும் தமக்கு அளிக்கப்பட்ட பாகத்தை நடித்தல்

பெற்றோரின் கருத்துரைகள்

கடந்த காலங்களில் நடைபெற்ற YSS குழந்தைகள் முகாம்களைப் பற்றிப் பெற்றோர்கள் பகிர்ந்துகொண்ட சில கருத்துரைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

அடுத்த படிநிலைகள்

  • வழிமுறைகளைப் படித்து, படிவத்தைப் பூர்த்தி செய்ய, இங்கே கிளிக் செய்யவும். நீங்கள் படிவத்தைச் சமர்ப்பித்ததும், அடுத்தகட்ட வழிமுறைகள் தோன்றும்; மேலும், படிவத்தில் நீங்கள் வழங்கிய மின்னஞ்சல் முகவரிக்கும் அவை அனுப்பி வைக்கப்படும்
  • சில பெற்றோர்கள் முகாம் நடைபெறும் காலத்தில் டெல்லி, நொய்டா, சண்டிகர், சிம்லா, சோலன் அல்லது அருகிலுள்ள இடங்களுக்கு தனிப்பட்ட ஏகாந்தவாசம், புனிதப் பயணம் அல்லது விடுமுறைச் சுற்றுலாவிற்குத் திட்டமிட விரும்பலாம்.

யோகதா குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினர், இந்தத் தனித்துவமான மற்றும் செறிவூட்டும் YSS முகாமில் பங்கேற்பதை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். இதன் மூலம் அவர்கள் ஆன்மீக நட்புகள், வேடிக்கை செயல்பாடுகள், சுய ஒழுக்கம் மற்றும் வகுப்புகள் ஆகியவற்றால் பயனடைவதோடு, கடவுளுடனான தங்களது தனிப்பட்ட உறவை மீண்டும் விழிப்படையச் செய்வார்கள்.

இதைப் பகிர